• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.17.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Hi friends ❣
இதுவரை தாங்கள் அளித்த அன்பான ஆதரவிற்கு நன்றிகள் பல. அடுத்த அத்தியாயத்தோடு கதை நிறைவு பெறும் என தெரிவித்துக் கொள்கிறேன் நட்புகளே. என்றும் போல் தங்கள் ஆதரவுடன், என்றென்றும் ‌அன்புடன் உங்கள் அனாமிகா 46 🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*17*

"இத்தோடு பத்தாவது தடவை,"என்று கூறியவனை கேள்வியாக ஏறிட்டுப் பார்த்தாள் வள்ளி.

"நீ அந்த பில்லோவை இங்கிட்டும் அங்கிட்டும் மாத்தி வைக்கிறது இதோட பத்தாவது தடவை,"என்றான்.

கால் மேல் கால் போட்டுக் கொண்டு, கைகளை மார்பு குறுக்காக கட்டியவாறு, சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனும் வந்ததில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஏதாவது ஒன்றை ஒதுங்க வைப்பதும், மாற்றியவற்றையே திரும்ப திரும்ப மாற்றி வைப்பதும் என ஒருவகையான அமைதியற்ற நிலையில் தான் காணப்படுகிறாள்.

"இதெல்லாம் நாம போன பின்னாடி ஹோட்டல்காரன் பாத்துப்பான். என்னமோ சொந்த வீட்டை ஒதுங்க வைக்கிற மாதிரியே வேலை பாக்குறியே,"என கேலி பேச,
கட்டிலில் ஆயாசமாக பொத்தென்று அமர்ந்தாள்.

"எதுக்கு இவ்ளோ டென்ஷன்?"

"எனக்கா… இல்லியே… நான் எங்கே டென்ஷனா இருக்கே? எதுக்கு டென்ஷனாகணும்?"என்று அவன் தன் படபடப்பை தெரிந்து கொண்டானே என்ற எண்ணத்தில் அவள் தடுமாற, அவளின் பதட்டம் பார்த்தவன் வாய்விட்டு சிரித்தான்.

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

சோஃபாவை விட்டு எழுந்தவன்,கையை உயர்த்தி நெட்டி முறித்தான்.
அவளை நோக்கி அடிகள் எடுத்து வைக்க, ஒவ்வொரு அடியும் இவளது இதய துடிப்பை அதிகப் படுத்த, அவன் அருகில் வருவதற்குள் பட்டென்று கட்டிலை விட்டு எழுந்து‌ கொண்டாள்.

கிட்டே‌ நெருங்கியவன் அவளது மேலுதட்டில் பூத்திருந்த வியர்வையை ஆட்காட்டி விரலால் துடைத்துக் காட்டியவன்,"மார்கழி மாசம். இருக்கிறது கொடைக்கானல்ல. ஆனா உனக்கு இவ்வளவு வேர்க்குது. கேட்டா டென்ஷன் இல்லைங்கிற.‌ இதை நான்‌ நம்பணும்! ம்ம்ம்..."என்றான்.

இது இன்று வந்த படபடப்பு இல்லை.‌ இருவரும் கொடைக்கானல் போகிறோம் என்று எப்பொழுது கூறினானோ அப்பொழுதே வந்து விட்டது.

பிள்ளையின் முதல்வருட பிறந்த நாளை குலதெய்வ‌ கோவிலுக்கு சென்று கிடா விருந்து என சொந்த பந்தங்களோடு கொண்டாட்டம் முடித்து வீடு வந்து சேர இரவாகி விட்டது. அனைவரும் ஹாலில் வந்து அசதியாக உட்கார்ந்தவர்கள், இரவு சாப்பாடு வேண்டாமென கூறிவிட, வள்ளி அனைவருக்கும் பாலைக் காய்ச்சி எடுத்து வந்து கொடுத்தாள். கதிரேசன் மடியில் ஈஸ்வரன் உறங்கிக் கொண்டிருந்தான்.

"அம்மா! நானும் வள்ளியும் கொடைக்கானல் போறோம்,"என்றான் பாலைக் குடித்துக் கொண்டே.

"தேவா! மார்கழி மாசத்துல பச்சப்புள்ளய தூக்கிட்டு யாராவது கொடைக்கானல் போவாங்களா?"என்று கேட்க,

"அவனைத் தூக்கிட்டு யாரு போறது? நானும் அம்மையும் மட்டும் தான்‌ போறோம்னு‌ சொன்னேன்!"என்று அவன் முடிப்பதற்குள்,

"ஐயையோ! புள்ளய‌ விட்டுட்டு நான் வர மாட்டேன். நீங்க வேணா போங்க,"என்று வள்ளி அவசரமாக மறுக்க,

"நான் மட்டும்‌ போயி…,"என அவன் இழுத்த இழுவையில் கதிரேசன் சிரித்து விட்டார்.

"என்ன தேவா ஹனிமூனா,"என்று கதிரேசன் கேட்க,

"அப்படியும் வச்சுக்கலாம். பெட்ரொல் விக்கிற விலைக்கு ஒரு பிள்ளைக்காக கார் போட்டு ஸ்கூல்ல கொண்டு போய் விட முடியுமா? நாலு சீட்டுக்கு நாலு பிள்ளையாவது வேண்டாம்,"எனக்கூற வள்ளிக்கு தான் எங்கு போய் முட்டுவது என்று தெரியவில்லை.

அவன் போட்ட கணக்கைப் பார்த்து கதிரேசனும் சகுந்தலாவும் சிரிக்க,
"இனிமேல் நீங்க வேற‌ டிரைவர் பாத்துக்கோங்க. என் மாமனார் இனிமேல் என்‌ பிள்ளைகளுக்கு மட்டும் தான் கார்‌ ஓட்டுவார்.‌"

"டேய்… டேய்… ரொம்ப ஓவரா போற. இன்னும் ஒன்னே நடக்க ஆரம்பிக்கல. நீ என்னடான்னா நாலுக்கு சேத்து கணக்கு போடுற."

"ஆமாப்பா! எதுவா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும். நீங்களும் இப்ப ட்ரென்ட்ல இருக்குற கேம்ஸ்‌ எல்லாம் கத்து வச்சுக்கங்க. என்கிட்ட வீடியோ கேம்ல தோத்த‌ மாதிரி உங்க பேரம்பேத்திக கிட்டயும் தோத்து‌ மானத்தை வாங்கிறாதிங்க,"

"கேட்க நல்லாதான்டா இருக்கு. ஆனா நாலு கொஞ்சம் ஒவரா இல்ல?"

"இல்லப்பா! உங்க கணக்கையும் சேத்து‌ டேலி பண்ணலாம்னு நினச்சேன்,"என்றவன்,
அவரது காதருகில் குனிந்து,"இல்ல... நானே பாத்துக்கிறேன்னாலும் எனக்கு நோ ப்ராப்ளம்,"என்று ரகசியமாக கூற,

"டேய்! மானத்தை வாங்காதே! வேணும்னா இதை இப்பவே உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லவா?"என்றவரிடம்,

"எதுக்கு? என் பொண்டாட்டி விவஸ்த்தை கெட்ட மனுஷான்னு என்னைய அடிக்கவா?"

"அதெல்லாம் கூட நடக்குதாடா!"

"அப்பா எவ்வழியோ, பிள்ளை அவ்வழிப்பா. பேரு வச்ச அன்னிக்கி நீங்க வாங்கல. இனி மேல் அடிவாங்கும் போது கதவை சாத்திக்கோங்க! நான் பாத்த மாதிரி பேரன் பாத்தா மானம் போயிரும்!"

"மானம் போகாதுடா! அவனும் அடுத்து தயாராகிக்குவான்ல,"

"ஏம்ப்பா… வெட்கமே இல்ல…?"

"ஏன்டா? உன்கிட்டே இருக்கா?"

"கல்யாணம் ஆனவனுக்கு எதுக்குப்பா அதெல்லாம். வேஸ்ட் லக்கேஜ்!"
என்று இருவரும்‌ மாரி மாரி ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டிருந்தனர்.

"என்ன ரெண்டு பேர்‌மட்டும் ரகசியம் பேசிக்கிட்டு, எங்களுக்கும் சொல்லாம்ல,"
எனக் கேட்டுக் கொண்டே முத்துக்கண்ணனும் வந்தார்.

"நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க முத்து. நீங்க எஸ்கேப் ஆகி பல வருஷமாச்சு!"என்று அவரையும் விடவில்லை இருவரும்.

சகுந்தலாதேவி எதையும் கண்டு கொள்ளவில்லை. சேனாபதியும் கதிரேசனும் சேர்ந்தால் எப்படி கலாய்த்துக் கொள்வார்கள் என்று அவருக்கு தெரியும். பழைய கதிரேசன் மீண்டு வந்தது போல் இருந்தது.

கலாட்டாவாக பேசிக்கொண்டு அனைவரும் படுக்க செல்லும் முன்பு, சகுந்தலாதேவி பேரனோடு அனைவரையும்‌ நிற்க வைத்து திருஷ்டி கழித்தார்.

பிள்ளையைத் தூக்கிக் கொண்டு படுக்கைக்கு வந்தவள், ஈஸ்வரனை மெத்தையில் படுக்க வைத்தாள்.

"கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா? பெரியவங்க முன்னாடி இப்படியா‌ பேசி வைப்பீங்க,"என கடிந்து கொள்ள,

"என்னத்தை பேசிட்டேன். பொண்டாட்டிய கூட்டிட்டு கொடைக்கானல்‌ போறேன்னு சொன்னது தப்பா?"

"பிள்ளைய விட்டுட்டுப் போறோம்னு சொன்னா என்ன‌ நினைப்பாங்க."

"பையன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க நினைக்கிறான்னு நினைப்பாங்க,"என்று பேசிக் கொண்டே, மகனுக்கு இரவுக்கு தேவையானவற்றை கட்டிலுக்கு அருகில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை பின்னாலிருந்து அணைக்க, அவன் பிள்ளை சிணுங்கினான்.

"இந்தா ஆரம்பிச்சுட்டான்ல. ஒருவேளை‌ இவன் உருவான நேரம்னு நினைக்கிறேன். என்னைய வில்லனாட்டமே பாக்குறான். எப்ப உன்கிட்ட வந்தாலும் சிணுங்குறான்,"என்று கூற அவன் புலம்பலைப் பார்த்து சிரித்தவள் சிணுங்கிய மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

"அம்மாவும் பையனும் சேந்து என்னைய பழி வாங்குறீங்கள்ல? அதான் உன் பாடிகார்ட் கிட்ட இருந்து உன்னைய கடத்திட்டு போகப்போறேன். ஃபுல் அன்ட் ஃபுல் லவ்‌ மூடோட எனக்கு சப்போர்ட் பண்ண ஒரு பொண்ணு பெத்துக்க ஏற்பாடு பண்ண போறேன்!"என்று ஆசையாக கூறியவனை அலைக்கழிப்போடு பார்த்தாள்.

அவளுக்கும் கொஞ்ச நாட்களாக அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து தான் இருக்கிறது. இவ்வளவு நாட்களாக டைல்ஸ் ஷோரூம், டைல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை ஆரம்பித்தல், அதற்கான மெனக்கெடல், இவற்றோடு கம்பெனி ஆடிட்டிங் என தன்னுடைய கவனத்தை அதில் செலுத்தி இருந்தவன், குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் அவனது பார்வை இப்பொழுது மனைவியின் பக்கம் திரும்பியுள்ளது. அவன் கண்ணில் தெரியும் ஆசையும், தாபமும் அவளையும் வெகுவாக சுடுகிறது. ஆனால் அவளால் தான் இயல்பாக இருக்க முடியவில்லை. பிள்ளையைக் கொஞ்சுவதற்காக அவன் அருகில் வந்தால் கூட சட்டென்று இவளுக்கு உடல் இறுகி விடுகிறது.

சற்றுமுன் அணைத்த பொழுதும் அவளால் இணக்கம் காட்ட முடியவில்லை. அவளது மனநிலை அவளுக்கே புரியாமல் ஆட்டம் காட்டுகிறது.

இதோ இன்று காலையில், ஒரு வழியாக பிரிய மனமில்லாமல் பிள்ளையை விட்டுவிட்டு கொடைக்கானலும் கிளம்பியாகி விட்டது.

மதுரையிலிருந்து வத்தலக்குண்டு வழியாக பெரியகுளம் சாலையிலிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் திரும்பினால் கொடைக்கானல் மலையேறும் சாலை. கிட்டத்தட்ட மூன்று மணிநேர பயணம்.

ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவாக சுற்றி வளைத்து ஏற ஏற, அவளுக்கு குளிரும் ஏறியது. உள்ளும் புறமும்.

ஹோட்டல் புக் செய்திருந்தான். சாவி வாங்கிக் கொண்டு வந்தான். திறந்து உள்ளே வந்தவன், இவ்வளவு‌ நேரமாக காரோட்டி வந்த அலுப்பில் விசிராந்தையாக கைகால் பரப்பி கட்டிலில் படுத்து விட்டான். சிறிது நேரத்தில் தலைக்கு கை கொடுத்து ஒருக்களித்து படுத்தவன், சோஃபாவில் அமர்ந்து இருந்தவளை பார்க்க, குளிருக்கு கைகளை இறுகக் கட்டி அமர்ந்திருந்தாள். சுடிதாரில் தான் வந்திருந்தாள்.

"அம்மை!"
சாதாரணமாகத்தான் அழைத்தான்.

"ஆஹ்…!"பட்டென்று திரும்பினாள்.

"கிளம்பு! கோயிலுக்கு போகலாம். குறிஞ்சி ஆண்டவர் கோயில். நல்லாயிருக்கும்,"என்றான்.

"சரிங்க!"என்று கிளம்ப தயாரானாள்.
அவள் வித்யாசமாக இருப்பதாகப் பட்டது அவனுக்கு.

கோயிலுக்கு என்று சொல்லவும் சேலையில் கிளம்பி வந்தாள். பின்க் நிற ஷிஃபான் சேலை. வரும் வழியில் சிலுக்குவார்பட்டியைக் கடக்கும் பொழுது காரை மறித்து பூ வியாபாரம் செய்த பெண்ணிடம் வாங்கிய குண்டு மல்லிச் சரம் தலையில்.

சேலைச்சோலையாய் அவள். சொக்கிப் போனான் சொக்க நாட்டான்.

குறிஞ்சி ஆண்டவர் கோயில். பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு‌முறை பூக்கும் மலரின் அடையாளமாக, முருகப்பெருமான் கோவில். இங்கிருந்து பார்க்கப் பழனி தண்டாயுதபாணி கோவில் மலையும் தெரியும்.

வெளியே வந்தவர்களை மலைகளின் இளவரசி தனது அழகால் ஆலிங்கனம் செய்து கொள்ள... அவளுக்கும் இதமான மனநிலை, குறிஞ்சி அழகனையும் தரிசித்த பிறகு.

அவனுக்கு இந்த இடம் புதிதல்ல. படித்ததெல்லாம் இங்கு தான். ஆனால் இன்று தன்னவளோடு வந்திருப்பது புது அனுபவம்.

டிசம்பர் மாதம். பனிமூட்டமாகவே பெரும்பாலும் எல்லா இடங்களும் காணப்பட, ஸ்வெட்டரையும் மீறி குளிர் ஊடுருவியது.

கோடை வாசஸ்தலத்திற்கு குளிர் காலத்தில் வந்தால் எப்படி இருக்கும்.
குளிருக்கு கைகளை இறுகக் கட்டிக்கொண்டு நடந்தவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடந்தவனின் நெருக்கம் வேறு கதை சொன்னது அவளுக்கு.

இதோ மாலையும் வந்து விட்டது.
அவனோ மலர்க்கணை ஏந்தி நிற்க, அவளுக்கோ பயம் கேடயம் தாங்கி நிற்கிறது.

அவன் நெருங்கி வரவும் எழுந்து கொண்டவளை கைபிடித்து அமர வைத்தவன் தானும் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

"அம்மை…"
தாபமாய் அவன்.

"ம்ம்ம்…"தவிப்பாய் அவள்.

தோள் பற்றி தன்னை நோக்கி இழுத்தவனை முகம் நிமிர்த்தி பார்க்க, அவன் கண்களில் தெரிந்த ஆசையும், அதைத் தாண்டிய தாபமும்‌ அவளை என்னவோ செய்ய பார்வையை தாழ்த்திக் கொண்டாள்

கிட்டே நெருங்கி அமர்ந்தவன், தோள் பற்றி அணைக்க, அவளுக்கு சட்டென்று உடல் இறுக, ஆரம்ப கட்ட பயம் என நினைத்தவன், அடுத்த அடி எடுத்து வைத்தான்… இதழ் ஒற்றல் கொண்டு அவள் நடுக்கம் தணிக்க எண்ணியவனாக! பிறை நெற்றியில் மென்மையான ஒற்றல். சிப்பி இமைகளுக்கும் ஒன்று. அடுத்து அவள் இதழ் நோக்கி குனிந்தவனுக்கு ஏதோ வித்யாசமாகப்‌பட, அவள் முகம் பார்க்க, அவளோ கண்களையும், கைகளையும் ஒரு சேர இறுக மூடி, எதையோ கடக்க முனைபவள் போல் சிரத்தை எடுத்துக்‌ கொண்டிருந்தாள்.

அவளால் ஒன்ற முடியவில்லை எனத் தெரிய,மெதுவாக அவள் கண்ணம் தட்டி,"அம்மை…"என்றான்.

அவள் கண்களைத் திறக்க, கடகடவென கண்களில் கண்ணீர். புருவம் முடிச்சிட அவன் புரியாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க,
"என்னால முடியல,"என்றாள் கேவலாக.

உடலும் உள்ளமும் ஒரு‌ புள்ளியில் இணங்க முடியாமல் தவிக்கிறாள். அவனுக்கு வேண்டுமானால் அன்று இருந்த நிலையில் எதுவும் நினைவில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவளுக்கு பச்சை ரணமாய் இன்னும் முதல் சம்பவம் அவள்‌ நினைவடுக்குகளில் விட்டு நீங்க மறுக்கிறது. தொட்டவனுக்கே கணவன் என்றும் உரிமை கொடுத்து, குழந்தையும் பிறந்து விட்டது. அவனது காதலும் கண்களில் தெரிகிறது. அவளால் தான் ஒன்ற முடியாமல் தவித்துப் போகிறாள்.

"நீங்க கிட்ட வந்தாலே அன்னைக்கு நடந்தது தான் ஞாபகம் வருது," என்று கண்ணீரோடு சொல்ல, படக்கென எழுந்து கொண்டான்.

அவளுக்கு முதல் அனுபவம் தந்த கசப்பான உணர்வுகளின் தாக்கம் தாம்பத்யம் என்றதும் பயமும், அறுவறுப்பும் தான் தோன்றுகிறது. அவனது காதல் பிடிக்கிறது. புரிகிறது. ஆனால் கூடல் என்றவுடன் மனம்‌ சண்டித்தனம் செய்கிறது.

அவள்‌ சொன்னதைக் கேட்டவன், தன் மீதே வெறுப்பு கொண்டவனாக,‌ வெளியே பால்கனிக்கு வந்து விட்டான். ஊசியெனத் துளைக்கும் டிசம்பர் மாத குளிர்‌ அவனுக்கு உணர்வில் உறைக்கவில்லை. மனதில் அவ்வளவு வெப்பம். ஒரு ஆணாக தான் செய்த செயல் ஒரு பெண்ணின் இயற்கை உணர்ச்சிகளைக் கூட கொன்றிருக்கிறது என உணர்ந்தவனுக்கு அவமானமும், வெறுமையும் சூழ்ந்து கொண்டது.

வள்ளியும் எழுந்து வெளியே வர,‌ கைகளைக் கட்டிக் கொண்டு அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது,‌ அவளுக்கும் மனதைப் பிசைய, பின்னாலிருந்து முதுகோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

"உயிர் கொலையை விட உணர்ச்சிக் கொலை கொடுமையானது. இல்ல… அம்மை!" ஆயாசமாகக் கேட்பவனிடம்,
'பரவாயில்லை… விடுங்க!' என்றா சொல்ல முடியும்.

அவனும் குற்ற உணர்வில்‌ குமைகிறான் என்பதை உணர்ந்தவள்,
ஏதோ அவனுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டுமே என்பதற்காக,

"இதுவே கல்யாணத்துக்கு பின்னாடி நீங்க அப்படி நடந்து இருந்தீங்கன்னா என்ன பண்ணியிருக்க முடியும்? நம்ம புருஷன் தானேனு போயிருப்பேன்,"என ஆறுதல் கூறுவதாக நினைத்து அவள் கூற, அதுவும் அவன் மனதை அறுத்தது.

முன் பக்கமாகத் திரும்பி அவளை அணைத்துக் கொண்டவன்,
"அப்ப... கல்யாணம் பண்ணிட்டா எப்படி வேணா நடந்துக்கலாமா?"என்றான்.

இதற்கு அவள் மட்டுமே என்ன பதில் சொல்லி விட முடியும்? அவனுடைய தவறுமே திருமணம் என்ற ஒற்றைச் சம்பவத்தால் சரி செய்யப்பட்டு விட்டதாகத் தானே அர்த்தம் பெற்றிருக்கிறது. திருமணம் அவனது தவறை சரி செய்துவிட்டது
எனில், திருமணம் என்பது எதற்கான அங்கீகாரம்.‌ தாம்பத்தியத்தின் அர்த்தம் தான் என்ன?

நம் நாட்டில் பெரும்பாலும் தாம்பத்யம் என்பது சடங்காககத்தானே துவங்கப் படுகிறது. 'திருமணம் ஆகி விட்டது. அடுத்து நடக்க வேண்டிய சடங்கு இது!'என உறவுகளும்,

'நான் உனக்கு தாலி கட்டியவன், உன்னிடம் எல்லா உரிமையும் எனக்கிருக்கிறது!'என ஆணும்,

'கல்யாணம் முடிந்து விட்டது... இனி எல்லாம் இப்படி தான்!'என பெண்ணும்.
இப்படி தான் தாம்பத்யம் சம்பிரதாயமாக தொடங்கப்படுகிறது. குழந்தை வந்தவுடன் சம்பிரதாய வாழ்க்கை கடமைக்காக என மாறுகிறது. இது கடைசி வரைக்கும் சம்பிரதாயமாகவே நீட்டிக்கும் பட்சத்தில் பிரச்சினைகள் வருவதில்லை. எப்பொழுது சம்பிரதாயம் சலிப்புத்தட்ட ஆரம்பிக்ககறதோ அப்பொழுது தான்
பிரச்சினையும் ஆரம்பம் ஆகிறது. இத்தகைய சலிப்பு தட்டல் இன்றைய தலைமுறையினரிடம் அதிமாக காணப்படுகிறது என்பதை நீதிமன்றங்களில் அதிகரிக்கும் விவகாரத்து வழக்குகளின் எண்ணிக்கை காட்டுகிறது.

மனித வாழ்க்கையை அகம், புறம் என பிரித்து காதலை செய்வது எப்படி? வீரத்தை எங்கே காட்ட வேண்டும்? என உலகிற்கே சூத்திரம் வகுத்துக் கொடுத்தவர்கள் நாம்.

இதிலென்ன அவலம் என்றால், ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துகிறோம் என்பது ஆணுக்கும், பலவந்தப்படுத்தப் படுகிறோம் என்பது பெண்ணுக்குமே தெரிவதில்லை. அதனால் தான் சம்பிரதாய வாழ்க்கை சலிப்பு தட்டுகிறது.

அவன் கேட்ட கேள்வியில்,‌ தன்னவனை ஏறிட்டுப் பார்த்தவளை, சிறிது நேரம் அமைதியாக அணைத்துக் கொண்டு நின்றான். இப்பொழுது எல்லாம் இயல்பாக கட்டிக் கொண்டு நிற்கிறாள். அடுத்த கட்ட நகர்வு தான் அவளை பயமுறுத்துகிறது. நிதானமாக யோசித்தான். காயத்திற்கு மருந்து போடாமல் மேலாக கட்டுக் கட்ட நினைத்திருப்பது புரிந்தது. இப்படியே விட்டால் அவளது பயமும், தன்னுடைய குற்ற உணர்வும் தங்களை உள்ளுக்குள்ளேயே அழுத்தி விடும் என உணர்ந்தான். தண்ணீரின் ஆழம் பார்த்து பயம் கொள்பவளை உள்ளே இழுத்து நீச்சல் பழக்குவது என்று முடிவெடுத்தான்.
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தேவா வும் கதிரேசன் ப்பா வும் நல்லா பேசிக்கிட்டாங்க.... 🤭

வள்ளி ஓட உணர்வை புரிஞ்சிக்க முடியுது..... 😔

தேவா.... பீல் பண்ணாதீங்க....😔

சீக்ரம் எல்லாம் சரி ஆகிடும்....😊

நீங்க சொன்ன கருத்து நைஸ்....

நைஸ் எபி dear.... ❤
 
laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
568
Reaction score
624
Location
chennai

Touchy yet appealing
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top