• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.18.(பேராண்மை)final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Hi friends ❣
எனது முதல் கதையின் இறுதி அத்தியாயத்தை தங்களின் அன்பான ஆதரவோடு இன்று பதிவிடுகிறேன் நட்புகளே! கதைக்கு முற்றும் போட்டு‌விட்டு நமது நட்பிற்கு தொடரும் போட்டுக் கொள்கிறேன் தங்களின் அனுமதியோடு. என்றென்றும் அன்புடன் உங்கள் @அனாமிகா46🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰

*18*

"அம்மை!"

"ம்ம்ம்…"என நிமிர்ந்து பார்த்தவளிடம்,

"என்னை உனக்குப் பிடிக்குமா?"என்று கேட்பவனை,
என்னதிது முட்டாள் தனமான கேள்வி என்பது போல் பார்க்க… சிரித்தவன்,

"இல்ல… நம்ம கல்யாணம் விபத்தா தானே நடந்துச்சு? அதான் கேட்டேன்?"

"என்னமோ நீங்க மட்டும் ஆசைப் பட்டு கட்டிக்கிட்ட மாதிரி என்னைய கேக்கறீங்க!"அவள்‌ சற்றே சிடுசிடுக்க, அவள் கோபம் கண்டு வாய்விட்டுச் சிரித்தான்.

"ஆசை இருந்துச்சானு தெரியாது. ஆனா உன்னைய முதன்முதலா தாவணியில பொங்கல் அன்னைக்குப் பாத்தப்பவே புடிச்சது. அன்னைக்கே உன்னைய‌ பொண்ணு கேக்குறாங்கனு உங்க அப்பா வந்து சொல்லவும், எவன் வந்து பொண்ணு கேக்குறானு பாக்குறேன்... வீடு புகுந்து தூக்கணும்னு கோபம் தான் வந்துச்சு. அது தான் காதலானு தெரியாது!"என்று அவன் கூறியதைக் கேட்டு‌ இவளும் சிரித்து விட்டாள்.

தன்னவனுக்கு தன் மீது மயக்கம் என்பதைத் தெரிந்து கொண்டவளுக்கும் மனதில் சிறு மழைச்சாரல்.

"இப்ப சொல்லு! என்னைய... புடிக்குமா?"
அவனுக்கு அவள் மனதில் தன் இடம் எது என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. பயம் மட்டும் தானா? தன்மீது கூடவே வெறுப்பும் இருக்கிறதா? என அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவன் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.

"எங்க அப்பாவுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா… அன்னைக்கி நான் சொன்னதுக்காக அந்த முத்துச்சாமிய விபரீதமா எதுவும் பண்ணாம விட்டீங்க பாருங்க! அப்பவே உங்களைப் புடிச்சது. ஏன்னா எனக்கே அவன் பேசுனதைக் கேட்டப்ப வெட்டிப் போடணும்ங்கற அளவுக்கு ஆத்திரம் வந்துச்சு. அதுக்கப்புறம் நம்ம ஈசன் பொறந்தப்ப எனக்காக உங்க கண்ணுல கண்ணீரை பாத்தப்ப இன்னும் அதிகமா பிடிச்சது."அவன் கை அணைப்பில் இருந்து கொண்டே அவள் கூற,

"அப்ப... என்னைய... உனக்கு... பிடிக்கும்! அப்படிதானே!"அவன் நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாக புன்னகையோடு கேட்க,
அட‌ மக்கே! என்பது போல் பார்த்து‌ வைத்தாள்.

ஆண்களுக்கு எப்பொழுதும் தோற்ற மயக்கம் தான் முதலில். ஆனால் ஒரு பெண் தனக்காக தன்னவன் என்ன செய்கிறான் என்பதைத் தான் முதலில் பார்ப்பாள். பிடித்தே இருந்தாலும் ஆண்களை கொஞ்ச நாள் பெண்கள் சுற்றலில் விடுவதன் காரணமும் அதுவே.

அதனால் தான் அக்காலத்தில் அரசனாலும் வெல்ல முடியாத பெண்களின் மனதை தன்னவளுக்ககாக மாட்டை அடக்குபவனும், எடைக்கல் தூக்குபவர்களும் எளிதில் வென்று உள்ளனர்.

இருவருக்குமே இது விபத்தான திருமணம் எனத் தெரியும். ஆனால் இப்பொழுது தங்கள் இணையின் மனதில் தங்களுக்கான இடம் எதுவென‌ அறிய ஆவல் கொண்டவன்,‌ அதை அவள் குரல் வழியும் கேட்க ஆசைப்பட்டவன்,

"சொல்லுடீ..!"என்றான் காதலை கண்களில் தேக்கி,

"ரொம்ப..!"என்றாள் அவளும் ஆசையோடு.

மெதுவாக அவளை அணைத்து உச்சி முத்தம் வைத்தவன், காரிகையைக் கையில் ஏந்திக் கொண்டான். மெத்தையில் கிடத்தியவன், விளக்குகளை அணைத்து இருளாக்கினான். பயம் கொடுக்கும் இருள் தான் சில விஷயங்களுக்கு தைரியமும் கொடுக்கிறது. எனவே அவள் பயம் அகற்ற,‌ இருளைத் துணைக்கு வைத்துக் கொண்டான்.

(சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் ஒன்று‌ உண்டு. பயம் கொள்பவர்களை அதிலிருந்து விலக்காமலும், பயத்தை விரட்டாமலும், அதே சூழலில் வைத்திருந்து பயத்தைப் பழக்கப் படுத்தி, பயம் என்பதும் சாதாரண ஒரு உணர்வு என அவர்களையே உணர வைத்து பயத்தை கடக்க வைப்பது.
(CBT))

முதல் முத்தம் நெற்றியில்,
"சாரி அம்மை?,"என ஆரம்பித்தவன், அடுத்த ஒவ்வொரு முத்தத்தையும் மன்னிப்புக் கடிதமாகவே அவளுக்கு அனுப்பினான். ஒவ்வொரு முத்தமும் அவளிடம் மன்னிப்போடு சேர்த்து அவனது காதலையும் அவளுக்குக் கடத்த, வன்மையாக ஆரம்பித்த முதல் அனுபவத்திற்கு முற்றிலும் மாறாக மென்மைக்கே மென்மையை அறிமுகப்படுத்தும் விதமாக இருந்தது அவனது அணுகுமுறை. அவளைக் கண்ணாடிப் பொருள் எனக் கையாண்டான். உடைந்தால் காயம் இருவருக்குமே என்பதை உணர்ந்தவன். நெற்றியில் துவங்கிய முத்த முற்றுகை கண்கள், கன்னம்,‌ கழுத்து என தன் பயணத்தைத் துவங்க, தன்னவனின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்க எண்ணியவளும், பழைய நினைவுகளில் அலைப்புற்ற மனதை இழுத்துப் பிடித்து அவளவன் முத்தப் புள்ளியில் குவியம் செய்தாள். அவன் உதடுகள் செல்லும் இடமெங்கும் அவளது உள்ளமும் செல்ல, மெது மெதுவாக தன் வசம் இழந்தவள் தன்னவன் வசமாகிக் கொண்டிருந்தாள். நிதானமாக அவன் முத்தத்தீ பற்ற வைத்த மோகத்தீயில்,‌ பழைய நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக எரித்தவளது கரம் தானாக மேலெழுந்து தன்னவனை அணைத்துக் கொண்டது. அவன் முகத்திலும் புன்னகைக் கீற்று மெலிதாக.

தன்னவளின் தயக்கம் களைந்தவன், தடை களைய, தனக்கே உரித்தான தன்னவளின் தனிப்பட்ட தரிசனம்.
ஹோவென இரைச்சல் மூளைக்குள் ஓம்காரமாக!

கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம். மறுப்பானா என்ன? புண்ணியம் வேண்டி தரிசனம் செய்தவன், கூடவே கற்பகிரக ஆராதனையும் செய்து பாபவிமோசனமும் பெற்றான்.
காதல் ஒரு கரம், காமம் ஒரு கரம் என குவியும் பொழுது, கூடலும் முக்தி தரும். இருவருக்கும்.

வெகு நேரம் கழித்து கண் விழித்தவள், மெதுவாக கம்பளி விலக்கிப் பார்த்தாள். அச்சம் விலகி இப்பொழுது வெட்கம் வந்திருக்கிறது அவளுக்கு. அருகில் இருந்த கைபேசி எடுத்து நேரம் பார்க்க மணி காலை பதினொன்றைக் காட்டியது.
தன்னவன் முகம் பார்க்க, நாணம் கொண்டவளாக மெதுவாக அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்ட,‌ அவன் இருப்பதற்கான அறிகுறி இல்லை.

வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்து வெளியே வந்தாள்.
முதலில் அவனைப் பார்க்க சங்கோஜப்பட்டவள், இப்பொழுது அவனைக் காணாமல் தவித்தாள்.

கைபேசி எடுத்து பார்க்க,'ஃப்ரென்ட பாக்க போறேன். எழுந்ததும் ஃபோன் பண்ணு. ஹாட்பேக்ல டிஃபன்‌இருக்கு. சாப்பிடு." என வாட்ஸ்அப் மெஸேஜ்.

தன்னவன் முகம் பார்க்க ஆசைப்பட்டவளுக்கு, அவன் வெளியே சென்றிருக்கிறான் எனத் தெரிந்ததும் மனம் சுணங்கியது.

பசி எடுக்க, ஹாட் பேக்கை திறந்து பார்த்தாள். இட்லி, இடியாப்பம்‌ என இருந்தது. இரவில் சரியாக உறங்காததால் ஆவியில் வெந்த உணவுகளையே தருவித்திருந்தான்.

சாப்பிட்டு முடித்தவள் அவனுக்கு அலைபேசியில், தகவல் அனுப்பினாள்.

'எங்க இருக்கீங்க!'

சில கணங்கள் தாமதித்து தகவல் வந்தது.

'ஹாய் பொண்டாட்டி! எந்திருச்சிட்டியா? என்ன இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்டே?' அவன்‌ கேலி பண்ணி சிரிப்பது தெரிந்தது.

'சீக்கிரம் எந்திரிக்கணும்னா சீக்கிரமா துங்கணும். அதுக்கு சீக்கிரமா தூங்க விடணும்.'

'நான் என்ன பண்ணினேன்? நீதானே பயமா இருக்குதுனு விடிய விடிய தூங்காம இருந்தே! நான் பயத்தை தெளிய வச்சேன்,'

'சரி! எப்ப வருவீங்க!'
அவனது மெஸேஜைப் படித்தவள் முந்தைய நாள் நினைவில் முகம் சிவந்து பேச்சை மாற்றினாள்.

'ஏன்? பயமா இருக்கா?'

சிவப்பு வண்ண மூஞ்சிகளை தட்டிவிட்டாள்.

அதைப்பார்த்து சிரித்தான்.
'சின்ன பிஸினஸ் டீலிங். ஃப்ரென்டு கூட பேசிக்கிட்டு இருக்கேன்,'

அதைப் பார்த்தவள் உடனே கைபேசியில் அழைப்பு விடுத்தாள்.
அழைப்பை ஏற்றவன், பதில் பேசும் முன்,"பொண்டாட்டிய ஹனிமூனுக்குனு கூட்டி வந்துட்டு, பிசினஸ்‌ பேச போயிட்டிங்களா,"என அவனைப் பார்க்காத கோபத்தில் பொறிய,

"ஏன்டி? ஆரம்பத்துல பொறுப்பில்லாம இருக்கேன்னு சொன்னீங்க. சரி வந்த இடத்துல ஒரு ஆர்டர் கிடைக்குதேனு பேச வந்தா அதுக்கும் குறை சொல்றீங்க. என்ன டிசைன்டி நீங்க எல்லாம்?"எனக் கேட்க, அவளும் சிரித்து விட்டாள்.

"சரி...சரி… முடிச்சுட்டு வாங்க?"என்றவள்,‌ தனியே விட்டுச் சென்றதில்,‌ அவனை சீண்டிப் பார்க்க ஆசை கொண்டு, அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸ்அப் ல் அனுப்பி விட்டு, ஃபோனை வைக்க கதவும் திறக்கப்பட்டது. பால்கனியில் நின்று கொண்டிருந்தவள் ஆர்வமாகக் திரும்பினாள் தன்னவன் முகம் காண, என்னமோ மாதக் கணக்கில் பிரிந்து இருந்து பசலை கண்ட தலைவி போல.

அவள் கண்களில் தெரிந்த ஆர்வமும், தன்னைக் கண்டவுடன் வந்த நாணமும், இதுவரை அவன் காணாதது. அவளது சோர்வு கலந்த முகத்திலும் தனி மிளிர்வைக் கண்டவனுக்கும் உள்ளுக்குள் ஒரு நிறைவு.

அவனது கைபேசியில் மெஸேஜ் டோன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தவன், புன்னகையோடு அவளை ஏறிட்டான்.

அவன் வெளியே சென்று இருக்கிறான். வர தாமதமாகும் என நினைத்தே அவள் அனுப்பினாள். ஆனால் அவன் சென்றிருந்ததோ இதே ஹோட்டலின் அலுவலக அறைக்கு. இது அவனது நண்பனின் ஹோட்டல் தான்.

ஒன்பது மணி வாக்கில் கண் விழித்தவன், தன்னவள் முகம் பார்க்க, நிர்மல்யமான முகத்தோடு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது முகசோபை அவளது நிறைவை அவனுக்குக் கடத்த, சிரித்துக்கொண்டே எழுந்தவன்,‌ காஃபியும், உணவும் ஆர்டர் செய்து விட்டு குளிக்க சென்றான். குளித்துவிட்டு வரவும் உணவும்‌ வந்தது. சாப்பிட்டு விட்டு பால்கனி பக்கமாக வந்தான். நடுவில் இருந்த கார்டன் ஏரியா தாண்டி எதிர்ப்புறம் தான் அலுவலக அறை. நண்பன் அங்கிருந்து கைகாட்டினான். அவனும் கைகாட்டியவன், இன்னும் அவள் உறங்கிக் கொண்டிருக்க, நண்பனை பார்த்துவிட்டு வந்து விடலாம் எனக் கிளம்பியவன், கைபேசியில் தகவலை அவளது கைபேசிக்கு அனுப்பி விட்டு நண்பனைப் பார்க்க சென்றான்.

நண்பன் இன்னொரு ஹோட்டல் ஆரம்பிக்க போவதாகக் கூறினான். அதற்கான கிரானைட்ஸ், டைல்ஸ் ஆர்டர் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். வள்ளியின் குறுஞ்செய்தி யைப் பார்த்து சிரித்துக் கொண்டே கல்லூரி மாணவன் போல பதில் அனுப்பும் நண்பனைப் பார்த்தவன்,
"டேய் தேவா! நீ மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் எனக்கு மெயில் அனுப்பு. அடுத்த வாரம் நேர்ல வந்து செலக்ட் பண்ணிக்கிறேன். இப்ப நீ கிளம்பு ராசா! உன்னைப் பார்த்தா என்னமோ இப்ப தான் கல்யாணம் முடிச்சு ஹனிமூன் வந்தவனாட்டம் இருக்குடா!"என்றான் நண்பனின்‌ முக மலர்ச்சியைப் பார்த்தவன்.

"எத்தனை வருஷம் ஆனாலும் நமக்கு எப்பவும் ஹனிமூன்‌ தான்டா!"என்று
நண்பனிடம் கூறிவிட்டு எழுந்து வெளியே வந்தவனைத்தான் மீண்டும் அலைபேசியில் அழைத்திருந்தாள் வள்ளி. அவளிடம்‌ பேசிக்கொண்டே கதவைத் திறக்க, அவளது மெஸேஜ்‌ டோன் மீண்டும்.

எடுத்துப் பார்த்தவன் புன்னகையோடு,"என்னதிது?"எனக் கேட்க,

"தனியா இருக்கவும்... போரடிக்குதேனு...சும்மா... சீண்டிப்‌ பாக்கலாமேனு…"என இழுக்க,

"ஏன்டி..! ஒருதடவை சீண்டிப்‌பாத்ததுக்கு அடையாளமாத்தானே ஒன்னு வீட்ல விட்டுட்டு வந்திருக்கோம். அப்ப... பயம் போயிருச்சு! இதைப் பாத்தா, சீண்டிப்பாத்த மாதிரி தெரியலயே! சீக்கிரமா வந்து சீண்டுங்கோனு கூப்பிட்ட மாதிரில இருக்கு!"என்று கேட்டு கண் சிமிட்டியவனிடம்,

"ஏங்க…!"என்றாள் கெஞ்சலாக அவனது பேச்சின்‌ உள்அர்த்தம் கண்டு.

"என்னாங்கோ!"என்று அவளைப் போலவே இழுத்தவன்,
"ஆமா! அதென்ன கோபம் வந்தா மட்டும் தேவானு பேரு சொல்லி கூப்பிடுறே! மத்த நேரமெல்லாம் ஏங்க! என்னங்கேனு! டிபிக்கல் பொண்டாட்டியா ஆகிடுறே! ஆசையா எப்ப பேர் சொல்லி கூப்புடுவே!"

"ஆசை வந்தா கூப்பிடுவோம்!"என்றாள் வீம்பு காட்டி.

"அப்ப இன்னும் ஆசை வரலையா?"என்று கேட்டுக் கொண்டே அவள் அருகே நெருங்க,

"ஏங்க… ப்ளீஸ்!"என சிணுங்கவும்,

"சரி! பொழச்சுப் போ! மறுபடியும் ராத்திரி வரும். அப்ப கவனிச்சுக்கிறேன்,"என்றவன், "சாப்பிட்டியா,"எனக் கேட்டுக் கொண்டு உள்ளே திரும்பினான். அவன் சற்று நகர்ந்ததும்,

"தேவ்வ்வ்..….வா!"என்ற அவனவளிள் குறும்பான அழைப்பு.
பொங்கிய சிரிப்பை அடக்கியவனாகத் திரும்ப,

"ஆசை வந்தா எப்படி கூப்பிடறதுனு, சும்மா கூப்பிட்டுப் பாத்தேன்,"என்றவளது கண்களில் டன்‌ கணக்கில் காதலும்,‌ ஆசையும்.

கிட்டே நெருங்கி அவளை இடையொடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,‌"நீ ஆசையா இப்படி கூப்பிட்டா,‌ நானும் என்ன பண்ணுவேனு காமிக்க வேண்டாமா?,"எனக் கிறக்கமாகக் கேட்டு கண்சிமிட்டியவன்,
அவள் அனுப்பிய பாடலை கைபேசி எடுத்து ஒலிக்கவிட்டு, அவளைக் கையில் ஏந்திக் கொண்டான்.

தன்னை விட்டுச் சென்ற கோபத்தில் அவனுக்கு அனுப்பிய பாடல், ஸ்ரேயாகோஷல் குரலில் காதலோடு அறையெங்கும் இழைய ஆரம்பித்தது.

கழுத்தோடு கை சேர்த்துக் கட்டிக் கொண்டாள், அவன் கண்ணோடு கண் கோர்த்தவளாக.

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே கண்புகும்
கள்வரே கை கொண்டு
பாரீரோ கண் கொண்டு
சேரீரோ கலை சொல்லி
தாரீரோ,
என பாடல் தொடர

தன்னவளிள் கண்களில் தெரிந்த நாணமும் தனக்கான தாபமும் தெரிய, கை கொண்டு அள்ளிக் கொண்டவன் ஆயத்தமானான், ஆயக்கலை அறுபத்தி மூன்றில் அதிமுக்கிய கலையாம் மன்மதக்கலையை சொல்லித்தர.

உம்மை எண்ணி
உம்மை எண்ணி ஊமைக்
கண்கள் தூங்காது தலைவா
என் தலைவா அகம் அறிவீரோ
அருள் புரிவீரோ


அகம் நிறைந்தவளின் அகம் அறிய அகத்திணை ஐந்தில் குறிஞ்சித்திணையை கையில் எடுத்துக் கொண்டான் கூடல்
நகரத்துக்காரன்.

வாரந்தோறும்
அழகின் பாரம் கூடும் கூடும்
குறையாது உறவே என் உறவே
உடை களைவீரோ உடல்
அணிவீரோ


களைந்தான்!அணிந்தான்!

என் ஆசை
என் ஆசை நானா
சொல்வேன் என்
ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம்
என்பேனே

எங்கெங்கே
உதடு போகும் அங்கெங்கே
உயிரும் போகும் அன்பாலே
ஆளச் சொல்வேனே வலிமிகும்
இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா
இடங்கள் தங்களுக்குத்
தெரிகின்றதா


சங்கத்தமிழ் கற்றுக் கொடுத்ததை மீண்டும் சங்கமத்தில் கற்றுக் கொள்கிறான் தன்னவளிடம் சளைக்காமல்.

பெண்மையின் மென்மையில் மூழ்கி முத்தெடுத்த பாண்டிய தேசத்துக்காரன், சில நேரங்களில் அவளின் வன்மையிலும் மூச்சு முட்டியவனாக திக்குமுக்காடிப் போனான்.

சொத்துக் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் தணிக்கைக்காரனுக்கு தன்னவளின் சொத்துக்களை தணிக்கை செய்ய இயலாமல், தணிக்கைக் காட்சிகளையே மீண்டும் மீண்டும் அரங்கேற்றிக் கொண்டிருந்தான் தன்னவளிடம்.

*****************

"இங்க பாரு வள்ளி! நீங்க எத்தனை பிள்ளைய வேணும்னாலும் பெத்துக்கோங்க! வேண்டாங்கல! ஆனா முதல்ல இதுக மூனுக்கும் முடி எடுக்கற வேலையைப் பாருங்க! வயித்துல புள்ள இருக்கும் போது மொத பிள்ளைக்கு முடியெடுக்கக் கூடாதுனே தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு!"

சகுந்தலாதேவி ஈசனை டைனிங் டேபிள் மீது அமரவைத்து அவனுக்கு இட்லியை ஊட்டிக் கொண்டே வள்ளியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

"ஏன் அத்தே? இதை உங்க புள்ளைகிட்ட சொல்ல வேண்டியது தானே?"என்றவள்,
'ராஜமாதாக்கு நம்மனா மட்டும் இளக்காரம்,'என்று அவருக்கும் கேட்க வேண்டுமென முனகிக் கொண்டே, தோட்டத்தில் தன் தந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கும் மகளுக்கு உணவை எடுத்துச் சென்றவளைப் பார்த்து சகுந்தலாதேவி சிரித்தார். மகனிடம் நேரிடையாக கூற முடியாமல் தானே‌ மருமகள்‌ மூலமாக ஜாடையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.

"என்ன தேவா! கேட்டுச்சா?" சோஃபாவில் அமர்ந்திருந்த கதிரேசன் கேட்க,

"கேட்கணும்னு தானே இவ்வளவு சத்தமா சொல்றாங்க. இப்ப என்ன? மொத்தமா போய் எடுக்கறதால மூனு செலவும் ஒரே செலவா போகுதுல்ல."

"டேய்! அநியாயத்துக்கு கணக்கனா இருக்காதடா?"என்று கூறிவிட்டு சிரித்தார் ஒன்பதுமாத பேரனை மடியில் வைத்திருந்தவர்.

அவன் ஆசைப்பட்ட மாதிரியே இரண்டாவது பெண்குழந்தை. அதற்கு மாமனாரின் பெயர் விளங்க கண்ணம்மா என பெயர் வைத்தான். முத்துக்கண்ணனுக்கும் பேரன்களைவிட பேத்தி தான் செல்லம். அதுவும் அப்பனும் தாத்தனும் என்றால் சலுகை கொஞ்சும்.

மூன்றாவது ஆண் குழந்தை. தனது தாத்தாவின் நினைவாக வீரபாண்டி எனும் வீரா.

"இன்னும் என் கணக்குல ஒன்னு மிச்சமிருக்கு… வேணும்னா..."என இழுக்க,

"டேய்! இத்தனை வயசுக்கு அப்புறம் அப்பன் கையால அடி வாங்காதே! முதல்ல கோவிலுக்கு போக ஏற்பாட்டைப் பாரு!"என்றார் கதிரேசனும் கண்டிப்புடன்.

"சரி...‌சரி...ஒரு நல்ல‌நாளைப் பாருங்க! நான் மத்த ஏற்பாட்டைப் பாக்குறேன். யாரை எல்லாம் அழைக்கணுமோ அழைச்சுருங்க ப்பா!"

முடியெடுக்க முடிவானதும், முத்துக்கண்ணன்,"காதும் சேரக் குத்திரலாம்மா!"எனக் கூற,

டி.எஸ்.பி.கிரானைட்ஸ் மற்றும் இ.எஸ்.பி.டைல்ஸ் குடும்பத்தாரின் காதணிவிழா ஊரே அல்லோகலப்பட்டது.

கோவிலை அடைத்து பந்தல் போட்டு பந்தலின் முன்பாக குழந்தைகளின் நிழற்படங்கள் போட்டு பெரிய பெரிய கட்அவுட்கள் வைக்கப் பெற்றிருந்தன. உபயம் பாலமுருகன். முத்துக்கண்ணனின் பங்காளி முறை ஆதலால் தாய்மாமன் முறை‌ எடுத்துக் கொண்டவன் இதைச் செய்தான்.

இப்பொழுதெல்லாம் கிராமத்திற்கு வரும்பொழுது தேவாவின் சோட்டாளி பாலமுருகன் தான்‌.

தேவா மறுப்புத் தெரிவிக்க,"மாப்ளே!
இதெல்லாம் வச்சா தான்யா நம்மளும் இந்த ஊருதான்னு தெரியும். இல்லைனா வெளியூரு போனவங்கள மறந்துருவாய்ங்க!"என்று கூறிவிட்டான் உரிமையாக.

கிடா விருந்து ஒருபக்கம்‌ தயாராகிக்
கொண்டிருந்தது பெரிய பெரிய தேக்ஸாக்களில்.
பிள்ளைகளுக்கு முத்துக்கண்ணன் மடியிலேயே வைத்து முடியிறக்கி காது குத்தப்பட்டது. அவரும் பிள்ளைகளுக்கு தன்னாலான சீர்வரிசைளை சிறப்பாக செய்ய,

பாலனும்‌ அவன் சார்பாக மூன்று குழந்தைகளுக்கும் செயின் அணிவித்தான்.

பந்தி ஆரம்பம் ஆகியது. கறிக்கு சோறா, சோத்துக்கு கறியா எனத் தெரியாத அளவிற்கு அனைவரது இலைகளிலும் விருந்து அமர்க்களப்பட்டது. மதுரைக்காரன் குடும்ப விழாவில் கறிவிருந்து எந்த அளவிற்கு முக்கியமோ கவனிப்பும் அந்த அளவிற்கு முக்கியம். கூட குறைய இருந்தால் வெட்டு குத்தே நடக்கும். தகராறு இல்லாத கிடாவிருந்தே இருக்காது.

அட சோத்துக்கு இத்தனை அக்கப்போரா என்று இருக்கும் பார்ப்பவர்களுக்கு. ஆனால் கூர்ந்து கவனித்தால் அது,'உனக்கு நான்‌ முக்கியமா? அவன் முக்கியமா?'எனக் கேட்கும்‌ உரிமைப் போராக இருக்கும்.
மாமன் மச்சான்,‌அங்காளி பங்காளி என கலந்து கொள்ளும்‌ குடும்ப விழாக்களில் இது போன்ற அன்புத் தொல்லைகள் தவிர்க்க முடியாத ஒன்று.

விழா மற்றும் விருந்து முடித்து, மூன்று பிள்ளைகளையும் குலதெய்வம் மதுரைவீரன் காலடியில் போட்டு தூக்கிக் கொண்டனர்.

கிராமத்து வீட்டிற்குத் திரும்பினர்.
பிள்ளைகள் மூன்றிற்கும், மகன் மருமகளோடு சேர்த்து திருஷ்டி கழித்தார் சகுந்தலாதேவி.

சிறிது நேரம் கூடத்தில் அமர்ந்து ஊர் விவகாரங்கள் எல்லாம் பேசிக் கொண்டு இருந்தனர். ஈஸ்வரன் கதிரேசன் மடியிலேயே தூங்கி விட்டான். பெற்றதோடு இவர்கள் கடமை முடிந்தது என்பது போல எப்பவும் அவன் தாத்தா அப்பத்தாவோடு தான்.

மற்ற இரண்டையும் தூங்க வைக்க உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் மகளை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

"இந்தாங்க உங்க புள்ள. இதுக்கு மட்டும் அப்பா இல்லாம கண் அடையாது,"என்றவள் அவனது மடியில் தள்ளினாள். அதுவும் தகப்பனது பனியனை ஒருகையில் பிடித்துக் கொண்டு, மறுகையை வாயில் வைத்துக் கொண்டு வாகாக அப்பனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவளைப் பார்த்து சிரித்தது.

கதிரேசனும் ஈசனைத் தூக்கிக்கொண்டு எழுந்து கொண்டார். இப்பொழுது அவர்களுக்கு தனது தாத்தாவின் அறையை ஒதுக்கிவிட்டு, பொற்றோர்களின் அறையை அவன் எடுத்துக் கொண்டான்.

முத்துக்கண்ணனும்,"வள்ளி! பழைய ஆளுகளை எல்லாம் பாத்தேன். சாவடியில இருப்பாங்க. நான் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வர்ரேம்மா,"எனக் கிளம்ப,

"கொஞ்ச நேரம் எங்க! இன்னைக்கு விடியவிடிய அங்கே தானே அரட்டைக் கச்சேரி,"என்று சிரித்தவள்,
"சீக்கிரம் வந்துறுங்க ப்பா!"என சொல்லவும் மறக்கவில்லை.

மகளைத் தூங்க வைத்துவிட்டு வந்தவன் சமையல்கட்டின் நிலையில் சாய்ந்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு தன்னவள் மீது பார்வையை ஓட்டினான்.

பிள்ளைகளுக்குத் தேவையான பாலைக் காய்ச்ச‌ அடுப்பில் வைத்துவிட்டு ஃப்ளாஸ்க் மற்றும் டம்ளர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

இடுப்பில் இழுத்துச் சொறுகிய புடவை முந்தானை, அவளது இடுப்பு மடிப்பை அவனுக்கு பார்வையாக்க, தூக்கிக் கட்டிய கொண்டையில் இருந்து தொங்கிய மல்லிகைச் சரம் ஒன்று அவளது பளிங்கு முதுகில் அவள்‌ திரும்பும் பொழுதெல்லாம் தட்டி உரசி, அவனை வெறுப்பேற்றியது.

திரும்பிப் பார்க்காமலேயே சற்று நேரம் வேலையாக இருந்தவள்,‌ அவனது பார்வையை உணர்ந்தவளாக, நமட்டுச் சிரிப்போடு இடுப்பு சேலையை ஏற்றிவிட,

"அடிங்க..!"என்றவாறு வேகமாக உள்ளே வந்தவன்,‌ பின்னோடு அணைத்து இடுப்பைக் கிள்ள,

அவள் கத்தும் முன் அவன் பிள்ளை கத்தினான்‌ பாலுக்காக.

"இவனுகளுக்கு எப்படி தான் மூக்கு வேர்க்குமோ? உன்கிட்ட வந்தாலே ஆரம்பிச்சுர்றானுங்க! என்னமோ அவனுக ஆத்தாளை‌ கடத்திட்டு போற மாதிரி. என் கணக்கை முடிக்க விட மாட்டானுக போலயே?"என்று புலம்பலோடு அலுத்துக் கொண்டவனைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவள்,

"ஏங்க... பையனுக மேலேயே பொறாமையா?"எனக் கேட்டாள்.

"நீ மட்டும் என்னவாம்? அம்மு குட்டிய அவ்வளவு வேகமாக வந்து என்கிட்ட தள்ளுற. என்னமோ விடியவிடிய எம்புள்ள தான் என் நெஞ்சு மேல தூங்கற மாதிரி. கொஞ்ச நேரத்துல எம்பொண்ண தள்ளிட்டு நீதானே வந்து படுத்துக்கறே,"என்று அவளைக் கேலி பேச,

"சம்சாரி வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா!,"என்று கூறிவிட்டு பிள்ளையைக் கவனிக்க சென்று விட்டாள்.

மகனுக்கு பசியாற்றி தூங்க வைத்துவிட்டு வந்தவள், கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஃபோட்டோக்களின் மீது பார்வையைப் பதித்திருந்த தன்னவனை நோக்கி‌ புன்னகைத்தபடியே வந்தாள். பழைய படங்கள்‌ எதுவும் அங்கு இல்லை. கதிரேசன், சகுந்தலாதேவி நடுநாயகமாக அமர்ந்து பேரன் பேத்திகளோடு மகனும் மருமகளும் என முத்துக்கண்ணனோடு சேர்ந்து‌ எடுத்த நிழற்படம் பெரிதாக சட்டம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பேரன் பேத்திகளின் தவழும், நடை பயிலும் படங்களே.

சேனாபதி மற்றும் தனது தாத்தாவின் படங்களை பூஜை அறையோடு நிறுத்தி விட்டான்.

இப்பொழுது அவன் கண்களில் காதலும் குறும்பும் கடந்து அமைதி தவழ்ந்தது. தன்னருகே வந்தவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் அமைதியை அவளுக்கும்‌ கடத்தும்‌ விதமாக. சிறிது நேரம் பேச்சற்ற அமைதியான மனநிலை இருவருக்கும். அவனை அண்ணாந்து பார்த்தவளின் நெற்றியில், குனிந்து அழுந்த முத்தம் பதித்தான்,

"நல்ல உயிர் நீ எனக்கு
நாடியடி நான் உனக்கு,"
எனச் சொல்பவன் போல்.

இது கதைக்கான நிறைவுப் பகுதியாக இருக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு நிறைவுப் பகுதி என்பதே கிடையாது. என்றுமே முடிவு தெரியாத தொடரும் தான். இன்று கட்டிக் கொண்டு நிற்பவர்கள் எப்பொழுது முட்டிக் கொள்வார்கள் என கூற முடியாது. இனிப்பும் கசப்பும் கலந்தது தான் வாழ்க்கை. அதிக இனிப்பும் திகட்டி விடும். அதிக கசப்பும் வெறுத்து விடும். வாழ்க்கையில் கசப்பு வரும்பொழுது, இனிப்பு எனும் சேகரித்த பழைய நினைவுகளை சுவைத்துக் கொள்ள வேண்டியது தான்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 




Last edited:

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
@Mrs beenaloganathan@Padmamohan @Vasaki @Rajiprabha @Raman @Manju mohan @Shasmi @Chittijayaraman @Selena @Silvia @Sai deepa @JULIET @Priyakutty @PAPPU PAPPU @Venigovind @Vijayabharathi @Vijayasanthi @kalaivanisendhil @Nuvali @Shaniff @Surya*** @Sasi @RevathiS @rshakthi @Umathirupathi @Ammu Manikandan @Mathumathi @Vaishuu @laksh @Sharmila Babu @KalaiVishwa @Saki B @DhruvAathavi @vapoorani @Suman @Guhapriya @Sugaaa @Anamika 1 @அழகி @ப்ரியசகி @தீபஷ்வினி @srinavee @Geethazhagan and all readers.

அன்புடையீர்!
நிகழும் கிடா விருந்திற்கு தாங்கள் தங்கள் சுற்றம் சூழ‌ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு சேனாபதி குடும்பத்தின் சார்பாக தங்களை வரவேற்பது தேவசேனாபதியுடன் வள்ளியம்மை.🙏🏻🙏🏻🙏🏻


அவ்வண்ணமே கோரும்
அனாமிகா46🙏🏻🙏🏻🙏🏻

முக்கிய குறிப்பு😋
மொய் சிறப்பாக எதிர்பார்க்கப் படுகிறது.🤩🤩🤩🤩🤩
 




Last edited:

Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
😍😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
@Mrs beenaloganathan @Vasaki @Rajiprabha @Raman @Manju mohan @Shasmi @Chittijayaraman @Selena @Silvia @Sai deepa @JULIET @Priyakutty @PAPPU PAPPU @Venigovind @Vijayabharathi @Vijayasanthi @kalaivanisendhil @Nuvali @Shaniff @Surya*** @Sasi @RevathiS @rshakthi @Umathirupathi @Ammu Manikandan @Mathumathi @Vaishuu @laksh @Sharmila Babu @KalaiVishwa @Saki B @DhruvAathavi @vapoorani @Suman @Guhapriya @Sugaaa @Anamika 1 @அழகி @ப்ரியசகி @தீபஷ்வினி @srinavee @Geethazhagan and all readers.

அன்புடையீர்!
நிகழும் கிடா விருந்திற்கு தாங்கள் தங்கள் சுற்றம் சூழ‌ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு சேனாபதி குடும்பத்தின் சார்பாக தங்களை வரவேற்பது தேவசேனாபதியோடு வள்ளியம்மை.🙏🏻🙏🏻🙏🏻


அவ்வண்ணமே கோரும்
அனாமிகா46🙏🏻🙏🏻🙏🏻

முக்கிய குறிப்பு😋
மொய் சிறப்பாக எதிர்பார்க்கப் படுகிறது.🤩🤩🤩🤩🤩
மொய் தான கொடுத்தடலாம் டியர்.... 😆😁🤗🥰
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
909
Reaction score
1,365
Location
Chennai
@Mrs beenaloganathan@Padmamohan @Vasaki @Rajiprabha @Raman @Manju mohan @Shasmi @Chittijayaraman @Selena @Silvia @Sai deepa @JULIET @Priyakutty @PAPPU PAPPU @Venigovind @Vijayabharathi @Vijayasanthi @kalaivanisendhil @Nuvali @Shaniff @Surya*** @Sasi @RevathiS @rshakthi @Umathirupathi @Ammu Manikandan @Mathumathi @Vaishuu @laksh @Sharmila Babu @KalaiVishwa @Saki B @DhruvAathavi @vapoorani @Suman @Guhapriya @Sugaaa @Anamika 1 @அழகி @ப்ரியசகி @தீபஷ்வினி @srinavee @Geethazhagan and all readers.

அன்புடையீர்!
நிகழும் கிடா விருந்திற்கு தாங்கள் தங்கள் சுற்றம் சூழ‌ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு சேனாபதி குடும்பத்தின் சார்பாக தங்களை வரவேற்பது தேவசேனாபதியுடன் வள்ளியம்மை.🙏🏻🙏🏻🙏🏻


அவ்வண்ணமே கோரும்
அனாமிகா46🙏🏻🙏🏻🙏🏻

முக்கிய குறிப்பு😋
மொய் சிறப்பாக எதிர்பார்க்கப் படுகிறது.🤩🤩🤩🤩🤩
Vanduthen
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
909
Reaction score
1,365
Location
Chennai
Romba Nala kadhaiya kondu poneenga.unga kadai solum pangu excellent.deva vslliyin mattram azhaga itunduchi. Neraiylva mudichiteenga.first kadai Mari Ilaye...neengal vetri pera en vazhuthukal...
Pin kuripu: epilogue podrathanda sutotodu suda potrunga .neengalum 2 madam kaxhichi podatheenga
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
வள்ளி கிட்ட பேசி அவங்க மனசுல அவர் இருக்கார் னும் அவர் மனசுல அவங்க இருக்கார் னும் புரிய வெச்சிட்டாரு..... ❤

3 குழந்தைகள் ஆஹ்.... 😍🤗

எப்பவும் இதே போல தேவா அண்ட் வள்ளி அவங்க குழந்தைங்க அண்ட் பேமிலி கூட சந்தோஷமா இருக்கட்டும்.... 🥰

உங்கள் முதல் கதை ஆஹ்....
இதே போல நெறய கதைகள் எழுத ஆல் த பெஸ்ட் டியர்.... 🤝😇

கதை ரொம்ப எதார்த்தமா இருந்தது....❤

அழகான கதை.... நிறைவான முடிவு..... 😊

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆத்தர் ஜி.... 🤝🥰
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top