• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின் கதை நாவல் போட்டி திருவிழா Anamika 41 உண்மை (உன்னை) அறியாமல்.. அத்தியாயம் 10-b

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின் கதை நாவல் போட்டி திருவிழா
Anamika 41
உண்மை (உன்னை) அறியாமல்..
அத்தியாயம் 10-b

அதன் பின் சூர்யாவைப் பற்றி நினைக்கவோ பேசவோ வேண்டாம் ..யாரோ ஒருத்திக்காக தம் பிள்ளைகளைப் பகைக்கத் தேவை இல்லை என்றிருந்தார் கணவர் பாலன்..

பார்வதியும் அமைதியாக ஒதுங்கிப் போனார் .. மகளிடம் கூட முகம் கொடுப்பதில்லை..விக்ரமனும் தங்கை திருமணத்தை வெகு விமர்சையாக செய்ய நினைத்திருந்தான்..

அதற்காக ஓய்வின்றி ஓடியாடி வேலை செய்தான் ..திருமண நாளும் வந்தது ..மேடையில் மாப்பிள்ளை இல வட்டங்கள் கூடி கலாய்த்தனர்..

அன்று விக்ரமனுக் பல கேள்விகளுக்குக் கதை சொல்கிற நாள்..

எல்லாமே சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது.. மணமகன் மண்டபத்தில் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தான் ..பொன்னையும் அழைத்து வரச் சொன்னார் ஐயர் பொன்னும் அழைக்கப் பட அவளை அழைத்து வந்தனர்..அவள் மண வரை நெருங்கயில் எங்கிருந்த வந்தவன் திடுமாய் ஆழமாய் அவளது வயிற்றில் கூறான கத்தியைத் திரும்பத் திரும்ப ஏற்றிருந்தான்..

அதே இடத்தில் அவள் வலியில் துடித்து வீழ விக்ரமனோ துடித்துப் போனான் டேய் என அலறிக் கொண்டு தங்கையை மடி தாங்கினான்...

குத்தியவனோ அனைவரையும் பிச்சுக் கொண்டு ஓடி விட்டான்..பாலனோ அதிர்ந்து போனார் பார்வதியோ மயங்கிச் சரிந்தார்..

திருமண மண்டபம் அலங்கோலமாகிப் போனது ..யாருக்கும் அடுத்துச் செய்வது என்ன என்று தெரிய வில்லை.

விக்ரமனோ தர்ஷிமா கண்ண திறந்து பாரடி என அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்..

ஆனால் வைத்தியம் பார்க்கும் முன்னே உயிரை விட்டு இருந்தாள்.அவளோடு தவறும் புதைந்ததோ..
இல்லை தர்ஷிக்கு காரியங்கள் முடிந்து ..பல நாட்கள் கழிந்த பின்
அன்று விக்கிரமனைக் காணத் தோழன் ரவி வந்தான்.. இவனைத் தான் தங்கைக்குக் கணவனாக்கிட நினைத்தான் விக்கிரமன்..ஆனால் கனவாகித் தான் போனது என்றதுமே மச்சி நான் ஒரு கவர் கொடுக்கிறேன் ..இதை பிரித்துப் பார்க்க முன் இந்த டயரியை படி என்று கொடுத்துச் சென்றிருந்தான்..

விக்கிரமனும் அதை எடுத்துக் கொண்டு அறை வந்தவன் டயரியை புரட்டினான் ..

அதில் முன் பக்கத்தில்

இது வெறும் காகிதமல்ல என் உணர்வு என்றும் கீழ் முலையில் அன்புடன் சூர்யசிறி என்றிருந்தது..

விக்கிரமனுக்கு மனதில் சிறு அச்சம் ஒட்டிக்கொண்டது .. அதை புரட்டினான்..

அம்மா என்று தலைப்பிட்டு எழுதிருந்தால் ..அம்மா தான் எனக்கு எல்லாம் அப்பாவைப் பார்த்த நினைவுகூட இல்லை
எனக்காக நிறைய கஷ்டப்படும் போது நான் ஏன் பிறந்தேன் என்று தோனுது..
நல்லா படித்து நல்ல நிலைக்கு வரனும் அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அம்மா அம்மா என எழுதிருந்தாள்..

அடுத்தடுத்து பக்கங்கள் அம்மா பிடித்தது பிடிக்காதவை இருந்தது..அதில் ஓர் பக்கத்தில் தர்ஷினியை வரைந்து வைத்திருந்தாள்..என் உயிர்த் தோழி என்ற கிறுக்கலுடன்..விக்ரமுக்கு வலி நெஞ்சத்தின் துடிப்பை அதிகரித்தது.. அதன் பின்னனா பக்கங்கள். அவள் தர்ஷினியை தான் புகழ்ந்து கிறுக்கிருந்தாள்..

அதன் பக்கங்களைக் கடந்த போது தர்ஷியின் நடவடிக்கை மாற்றங்களையும்..விக்ரமன் தாயிடம் இவளைச் சொல்லிய போது அடித்துச் சூடு இட்டதையும் பெறும் வலியோடு வரைந்திருந்தாள்..

விக்ரமன் அறியாதவை அவை அத்தனையும் படிக்கப் படிக்க நெஞ்சம் செதறி விடும் போலத் தான் இருந்தது..


அதன் பின் பகுதிகள் தாயின் இறப்பையும் அதன் வலிகளையும் கண்ணீர் தடயத்துடன் எழுதிருந்தாள்..

விக்ரமனுக்கு அழுகை தான் வந்தது ..

அதை அத்துடன் மூடி வைத்தவன்..

அந்த கவறைப் பிரிக்க மனமின்றி கிடந்தான்..
யோசனைகள் பல அவனை தாக்கியது ..

அந்த கவறை பார்த்த விடலாம் என்று பிரித்தான்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top