ஆமாம் எனக்கு திமிர்தான்

#1
"என்னை அடக்கிட நினைப்பவர்களுக்கு
என் அடங்காமை எடுத்துரைக்கும்
ஆமாம் எனக்கு திமிர்தான் என்று"


"கட்டுபாடுகள் போட்டு
என்னை கைது செய்ய நினைப்பவர்களின்
கையை உடைத்து விட்டு கூறுவேன்
ஆமாம் எனக்கு திமிர் தான் என்று"


"பெண் என்று கூறி
பூவாய் என்னை பூட்டிவைக்க நினைத்தால்
புயலாய் மாறி அவர்களை புரட்டி போட்டு விட்டு கூறுவேன்
ஆமாம் எனக்கு திமிர் தான் என்று"


"திட்டம் போட்டு கவிழ்த்திட நினைப்பவர்களின் முன்
தீ கங்காய் மாறி நின்று கூறுவேன்
ஆமாம் எனக்கு திமிர்தான் என்று"


"என் தன்மானத்தை இழந்து
எவன் தயவையும் வேண்டி நிற்கும் அவசியம் எனக்கில்லை"


"என் சுயமரியாதை இழந்து
சோறு திங்கும் நிலையும் தேவையில்லை"


"இப்படியெல்லாம் நான் இருப்பதில்
உனக்கு இடர்பாடு இருக்கிறது என்றால்
அதில் எனக்கு இன்பமே"


"உனக்கு எவ்வளவு திமிர் என்று
ஏளனம் செய்பவர்களே
என் திமிரின் அளவு
எவரெஸ்ட் சிகரத்தையும் எளிதில் எட்டிடும் அளவு"


"அவமானப்படுத்திட நினைத்த அனைவரின் முன்னும்
அறிக்கை விடுகிறேன்
ஆமாம் எனக்கு திமிர் தான் என்று"


"ஆமாம் எனக்கு திமிர் தான்"
 

Advertisements

Latest updates

Top