• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆயத்தம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
காலை ஏழு மணி என்பதை கீழ் வீட்டு மாமாவின் சுப்ரபாதம் நினைவூட்ட எழுந்து கொண்டாள் காயத்ரி. ஏதேனும் தடயம் கிடைக்குமா என ஆராய வந்தவள் அவளுக்கே தெரியாமல் தூங்கிப் போயிருந்தாள். அவள் கண் திறக்கையில் அந்த அறையே மவுன்ட்ரோடு ட்ராபிக்கை போல பரபரப்பாக இருந்தது. அனைவரும் ஏதாவது ஒரு திசையில் தேடிய வண்ணம் இருந்தனர். மேரியும் நிசாவும் நூர்வுடன் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். இவங்க உண்மைலேயே டிடெக்டிவ்வா மாறிட்டாங்களா இல்லை சீன் போடுறாங்களா என்ற குழப்பத்தில் எழுந்து மெல்ல அவர்கள் பக்கம் சென்றாள்.


"இதோ ஆபிசர் எழுந்தாச்சு.." மேரி உற்சாகமாக வரவேற்றாள்.
எப்போதும் எரிமலையாய் பொங்குபவள் இன்றென்ன அன்பாக அழைக்கிறாளே என் நினைத்துக் கொண்டே அவளிடம் சென்றாள் காயத்ரி.


"வாங்க மாமி .. நீங்க ரொம்ப லக்கி தெரியுமா..!" நிசா முகத்திலும் மலர்ச்சி.



என்னவென தெரியாமல் அசட்டு சிரிப்பு சிரித்தாள் காயதரி. திரு திரு வென விழித்தவள் கண்களில் கேள்வியுடன் நூரை பார்க்க, அதனை புரிந்து கொண்டவளாய் நூர் அவள் அருகில் வந்து அவள் கரங்களை பற்றினாள்.



"மாமி இப்போ நீங்க பண்ண போற ஹெல்ப்ல தான் நம்ம சக்ஸெஸ் இருக்கு.."



காயத்ரியின் முகம் மேலும் குழப்பத்தில் கோண,, அதை பார்க்க சகிக்காதவளாய் மேரி தொடர்ந்தாள்.



"நீங்க என்ன மேடம் பில்டப் லாம் கொடுத்துட்டு.. மாமி பத்தி உங்களுக்கு தெரியாது.. மாமி நீங்க எப்போவாச்சும் சிபிஐ ஆபிசரா இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்திருக்கீங்களா..?"



"இல்லையேடி.. ஏன் கேக்குற.."



"இப்போ நினைங்களேன் .. " காயத்ரி மலங்க விழிப்பதை கண்டு "கண்ணை மூடி நினைங்க இப்போ .. அட நினைங்க மாமி.."



மேரியின் உந்துதலால் வேறு வழியின்றி கண்களை மூடிக் கொண்டாள் காயத்ரி, அவளை மெல்ல நகர்த்தி ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு,



"இப்போ கண்ண திறங்க.. சிபிஐ ஆபிசர் தெரிவார் பாருங்க" என மேரி முடிப்பதற்குள் ஆர்வம் தாளாமல் திறந்து பார்த்தாள் காயத்ரி, அங்கு தெரிந்ததோ அவள் முன்பிருந்த கண்ணாடியில் இவள் பிம்பம் மட்டுமே, தூக்கத்தில் கலைந்த லேசான சுருள் தலை, அழுததால் கரைந்து ஒழுகிய கண் மை, ஒரு கிலோ கோதுமை மாவை ஒன்றாய் பிசைந்து போல கொழு கொழு வட்ட முகம். அனைவருக்கும் குண்டாகவும், இவளுக்கு மட்டும் ஆவரேஜ் ஆகவும் தெரியும் உடல் , என் எல்லாம் அப்படியே இருந்தது. நெற்றியில் பொட்டு மட்டுமே மிஸ்ஸிங். இதில் எங்கிருந்து ஆபிசர் தெரிகிறார். ஆறு மணி சீரியலில் அழுதவாறே வரும் அப்பாவி மருமகள் தான் தெரிகிறாள் என மனதுக்குள் அவள் நினைத்ததை, எல்லாரும் யூகித்து விட்டனர் போலும். எல்லோரும் ஏதோ சொல்ல முன் வர நூர் முந்திக் கொண்டாள்.



"மாமி சின்ன விசயம் தான் , நீங்க சிபிஐ ஆபிசரா நடிக்கனும் .. எனக்காக .. ஐ மீன் நமக்காக.."



இதை கேட்டதும் காயத்ரியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன். ஐந்து வயதில் படிப்பதை போல நடித்தற்காக அவள் அப்பா அடித்தெல்லாம் கண் முன் வந்து சென்றது.
"நடிக்கிறதா?? .. எனக்கு பொய் சொல்றது கூட வறாது மேடம்.. நீங்க இவாள செலக்ட் பண்ண கூடாதா.. ரெண்டும் நடிப்புல கில்லாடி.." மேரி நிசா பக்கம் திருப்பினாள் காயத்ரி.



" இல்ல மாமி.. சிபிஐ ஆபிசர்னு நம்பனும்னா.. நல்ல ராயல் லுக் இருக்கனும் , அது உங்கட்ட தான் இருக்கு.."



இதை கேட்டதும் காயத்ரிக்கு றெக்கை முளைக்க மேலே பறந்து போனாள் காயத்ரி , சீலிங் இடிக்கவும் மீண்டும் தரைக்கு வந்தாள்.



"நீங்க சொல்றது எனக்கு புரியறது.. என் பக்கதாத்துல உள்ளவா கூட ஶ்ரீதேவி மாதிரி இருக்கேனு சொல்லுவா.." மேரி நிசாவை ஏறிட்டுப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"இருந்தாலும் நீங்களே சிபிஐ ஆபிசர் தானே .. நீங்களே ஏன் போக கூடாது .."



காயத்ரி இப்படி ஒரு கேள்வி கேட்பால் என நூர் எதிர்பார்க்கவில்லை.



"மாமி நான் இப்போ சஸ்பென்ஸன்ல இருக்கேன். நான் இந்த கேஸ விசாரிக்குறேனு தெரிஞ்சதால ஜெர்ரி மேல இருக்குற பர்சனல் வென்ஜன்ஸ்ல தான் அவன டார்கெட் பண்றேனு சீனியர் ஆபிசர்ஸ கன்வென்ஸ் பண்ணி எனக்கு சஸ்பென்சன் வாங்கி கொடுத்துட்டான். " நூரின் குரலில் இருந்த அழுத்தமும் , அவளது கண்கள் அங்கிருந்த அனைவரின் பார்வையை சந்திக்க மறுத்ததையும் கண்டு , என்ன பர்சனல் வென்ஜன்ஸ் என கேட்க மறந்தாள் காயத்ரி.



"அது மட்டுமில்ல மாமி, மித்ரன் சிக்கிட்டானாம், அவன அடையாளம் காட்ட நாங்கள்லாம் ரெடினு தான் சொன்னோம்.. ஆனா மேடம் தான் நீங்க போனா தான் கரெக்டா இருக்கும்னு சொல்லிட்டாங்க.." என்ற மேரியின் கண்களை காயத்ரிக்கு தெரியாமல் நூரின் கண்கள் சிறு அதிர்ச்சியுடன் சந்தித்து விலகின.



"கரெக்டா தான் சொல்லிருக்காங்க.. என் மேல வச்ச நம்பிக்கைக்காக பண்றேன் மேடம்.. " பெருமிதத்துடன் மேரியை ஏறிட்டாள் காயத்ரி.



"வெரி குட்.. நீங்க இப்போவே கிளம்புங்க, கான்ஸ்டபுள் செந்தில் உங்களோட வறாரு .. அவரு மத்ததெல்லாம் பாத்துப்பாரு.."



மனதுக்கு வெளியே சந்தோச முலாம் பூசியிருந்தாலும் காயத்ரிக்கு மனதினுள் அச்சமே படர்ந்திருந்தது.



நிசாவை தன் அருகே மெல்ல இழுத்து அவள் காதில் கிசுகிசுத்தாள்,
"ஏன்டி எக்குதப்பா மாட்டின்டா என்னடி பண்றது நீங்க வேற நொச்சிக் குப்பம் போறேளே.."



"அப்டிலாம் ஒன்னும் ஆகாது மாமி.." சிறுது யோசித்து விட்டு " பிராப்ளம்னா இங்கிலீஷ் ல பேசிறுங்க நம்பிருவாங்க .. நிறைய போலீஸ்க்கு இங்கிலிஷ் தெரியாது.."



"சரிதான் ஆனா நேக்கும் இங்கலிஷ் பேச வராதேடி .. நான் வேணா எழுதி காட்டட்டுமா..?"



"மாமி எழுதி காட்டுனா நல்லாவா இருக்கும்.."



"பேச முடியாது ஊமைனு சொல்லிடறேன்.. எப்படி" என்றாள் காயத்ரி கண்களில் ஐடியாவுடன்



அதற்கு பதில் சொல்லவோ கலாந்க்கவோ நேரமின்றி தலையில் அடித்தவாறு நகன்றாள் நிசா.



சில மைல்களுக்கு அப்பால்..



"மித்ரன் பாடிய இப்போ டிஸ்போஸ் பண்ணது எனக்கு சரியா படல.. நாம தான் கொன்னோம்னு ஒரு க்ளு கிடைச்சாலும், நூர் விடமாட்டா.." தன் நண்பனை பார்த்து கேட்டான் ரவி.



"அதே தான் என் பிளான்.. நூர் கண்டிப்பா மித்ரன் பாடிலயாச்சும் க்ளு கிடைக்கும் நம்மள மாட்டி விடலாம்னு வருவா.. அந்த பெய்ட்ட மட்டுமல அவ கேட்ச் பண்ணிட்டானா இனி அவ தொல்ல நமக்கில்ல .. அவ வரனும்னு தான் நானும் வெய்ட் பண்றேன்.. எப்போவோ செஞ்சிருக்கனும்.." ஜெர்ரி முடிப்பதற்குள் அவன் மொபைல் கரகரக்க அதை அட்டன்ட் செய்தான்



"ரியலி .. ஸிட்.. சரிய்யா நான் வந்துடறேன்.."



ஜெர்ரி முகத்தில் படர்ந்த கலக்கம் ரவியை பாதிக்க,
"என்னடா ஆச்சு"



"லாஸ்ட் மன்ந்த் ஒரு லாக்அப் டெத் நடந்துதுல அது சம்பந்தமா பேச கமிஷ்னர் ஸ்டேசன் வராறாம். நான் போகனும் இப்பவே.." ஏமாற்றத்தில் தலை அசைத்தான் ஜெர்ரி.



"இதுதானா.. இஙக நாங்க பாத்துக்றோம் நீ போய்ட்டு வா.."



ஜெர்ரி பதிலளிக்கவில்லை அவன் எண்ணமெங்கும் ஓர் உணர்வு இந்த நொச்சிக் குப்பம் ஒரு முக்கியமான பயணம், இதை விட்டு விடாதே என அவனை வதைத்தது. சில நிமிட மவுனத்திற்கு பின்,
மனதை அங்கேயே விட்டு விட்டு உடலால் மட்டும் நகர்ந்தான் ஸ்டேசனை நோக்கி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அண்ணா...அப்ப நூர்கிட்ட பாஸ்வேர்டு கிடைச்சுடுமா.....நூர் ஜெர்ரி இரண்டு பேருக்கும் இடையில் என்ன?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top