• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆயுட்காரகனே 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 76

புதிய முகம்
Author
Joined
Nov 15, 2021
Messages
14
Reaction score
39
மறைக்கப்பட்ட காதலும்
புதைக்கப்பட்ட புதையலும்
புலப்படும் தருணம்
புலனங்கள்
புலகாகிதம்
அடைந்திடுமே...

மருத்துவமனையிருந்த அதிரனோ மருத்துவமனை வாசத்தை விடுமுறை நாட்களாக மாற்றியிருந்தான்.

அவன் இடதுபுறத்தை மறைத்திருந்த பேண்டேஜ் மட்டும் இல்லையென்றால் யாரும் அவன் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவனென்று நம்பமாட்டார்கள்.

சிலநேரங்களில் சஹஸ்ராவிற்கு கூட அந்த சந்தேகம் எழாமலில்லை. ஆனால் ஒரு மருத்துவ குழாமே அவனின் உடல் நலக்குறைவை பற்றி வாக்குமூலம் கொடுத்தபின் அவளுக்கு நம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
அன்று சஹஸ்ராவின் அன்னை நிவேதிதாவின் நினைவு நாள்.

கடந்த பத்து வருடங்களாக அன்னையின் நினைவு தினத்தில் அவள் யாரையும் பார்க்க விரும்புவதில்லை. அந்நாளில் தன் அன்னையின் கல்லறைக்கு செல்பவள் அங்கு சில மணி நேரம் இருந்துவிட்டு அதற்கு பின் தன் அறையில் வந்து அடைந்து கொள்பவள் அன்று முழுநாளும் அறையே கதியென்று கிடப்பாள்.

அந்நாளில் அவள் உணவை கூட அனுமதிப்பதில்லை. அர்ஜூனனும் அந்நாளில் மாயமாகியிருப்பார். அந்நாளில் எங்கு போகின்றார்... என்ன செய்கின்றாரென யாருக்கும் தெரியாது.

தந்தையும் மகளும் வெவ்வேறு திசைகளில் தம்மை மறைத்து கொள்வதால் ஆதீபனின் குடும்பமே நிவியின் நினைவு தினத்திற்கான ஏற்பாடுகளை செய்வர். இருவரின் பிடிவாதத்தை பற்றி நன்கு அறிந்ததால் ஆதீபனின் அன்னையும் நினைவு நாள் பற்றி தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்வார்.

இன்றும் அவ்வாறே அன்னையின் நினைவினில் அறையினுள் அடைந்துகொள்ள முயன்றவளை தெருத்தெருவாக அலைய வைத்தது மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பு.

வழமையாக இந்நாளில் போனை அணைத்து வைத்திருப்பவள் அதிரன் மருத்துவமனையில் இருப்பதால் அணைக்காமல் விட்டிருந்தாள். அவளின் இந்த கரிசனமே இவளை இப்படி அலைக்கழிக்குமென்று அவள் எண்ணியிருக்கவில்லை.

அவள் அறையில் அடைந்து கிடக்கும் போது அவளின் அலைபேசி அழைக்க அதை எடுத்து பேசியவளுக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை.

“இது எப்படி சாத்தியம்? செக்யூரிட்டி அவ்வளவு வீக்காவா இருக்கு? சரி நான் உடனே அங்க வரேன்.” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.

அங்கே மருத்துவர்கள் செவிலியர்கள் முதற்கொண்டு அனைவரும் கையை பிசைந்துகொண்டு நிற்பதை பார்த்தவளுக்கு எரிச்சலும் கோபமும் ஒரு சேர எகிறியது.

தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு என்ன நடந்ததென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தாள்.

அப்போது தான் தான்வியும் அங்கு இல்லை என்பதை உணர்ந்த சஹஸ்ரா
“தான்வி சிஸ்டர் எங்க?” என்று கேட்க அன்று அவள் விடுமுறையிலிருக்கிறாளென மற்றவர்கள் கூற அவளின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டவள் அவளின் எண்ணிற்கு அழைத்தாள்.
இருமுறை அழைப்பு முழுதாக சென்று துண்டிக்கப்பட்டிட மூன்றாவது முறை அழைப்பு விடுக்கும் போது மறுபுறம் எடுக்கப்பட்டது.

மறுபுறம் ஒரு ஆண்குரல் பேசிட அதை கேட்ட கணமே அது யாரென்று சஹஸ்ரா கண்டுகொண்டாள்.

அழைப்பை துண்டித்தவள் தான்வியின் விலாசத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

இங்கு தான்வியின் வீட்டிலிருந்த அதிரனோ அந்த போனையே யோசனையோடு பார்த்திருந்தான்.

வாஷ்ரூம் சென்றுவிட்டு வந்த தான்வி அதிரனிடம்
“யாரு போன்ல?” என்று கேட்க

“அதை தாங்க நானும் யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று கூற அவனை குழப்பமாக பார்த்தபடியே போனை வாங்கினாள் தான்வி.

நம்பரை பார்த்தவளுக்கு அது பரீட்சயமில்லாததாயிருக்க யாருடையதாக இருக்குமென்ற யோசனையுடனேயே அவ்விலக்கத்திற்கு அழைக்க முயல அவளை அதிரன் தடுத்துவிட்டான்.

“ஏங்க எடுத்தவங்க அர்ஜென்டுனா பேசியிருக்கமாட்டாங்களா? இது ஏதோ ராக் கால் போலங்க. அவசியம்னா அவங்களே எடுப்பாங்க.” என்றவன்

“ஆமா இன்னும் சாப்பாடு வர எவ்வளவு நேரமாகும்?” என்று அதிரன் கேட்க

“தெரியல... ஏன் பசிக்குதா உங்களுக்கு?” என்று தான்வி கேட்க

“லைட்டா இப்போ தான் ஆரம்பிக்குதுங்க.” என்ற அதிரனை முறைத்தாள் தான்வி.

“இதுக்கு தான் நானே சமைக்கிறேன்னு சொன்னேன்.” என்றவளிடம்

“நீங்களே உடம்புக்கு முடியலைனு லீவு போட்டிருக்கீங்க. ரெஸ்ட் எடுக்காமல் சமைச்சால் உடம்பு என்னத்துக்கு ஆகுறது?” என்று கரிசனம் காட்டியவனின் அன்பில் நெகிழ்ந்தவள்

“ஒரு விஷயம் கேட்குறேன். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..” என்று தான்வி கேட்க அவளை சந்தேகமாக பார்த்தவன்

“சாப்பாட்டுல பங்கு கேட்குறதை தவிர நீங்க என்ன கேட்டாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேங்க” என்று சீரியஸாக கூற சிரித்துவிட்டாள் தான்வி.

“அதெல்லாம் கேட்க மாட்டேன். பயப்படாதீங்க...என்றவள்
“நான் உங்களை அண்ணானு கூப்பிடட்டுமா?” என்று கேட்டவளிடம்

“அச்சச்சோ.... அபச்சாரம்.. அபச்சாரம்... இந்த வார்த்தை ரொம்ப தப்புங்க... வேணும்னா தம்பினு கூப்பிடுங்க.. பிடிக்கலையா அங்கிள்னு கூட கூப்பிட்டுக்கோங்க.. அதுவும் பிடிக்கலையா அனிமல்ஸ் நேம் வச்சி கூட கூப்பிடுங்க. ஆனா இந்த அண்ணா மட்டும் நோ..” என்றவனை தான்வி விசித்திரமாக பார்க்க

“இல்லைனா இந்த சாஹி மாதிரி மாமூனு கூட கூப்பிடுங்க. கூப்பிட்ட மாதிரியும் ஆச்சு. என் காதுக்கு இனிமையாக இருந்த மாதிரியும் ஆச்சு.” என்றவனின் பேச்சை கேட்டு சிரித்தவள்

“ஏங்க அந்த அண்ணா மேல் உங்களுக்கு என்ன அவ்வளவு வெறுப்பு?” என்று கேட்டவளிடம் சீரியஸாக கதை சொல்லத் தொடங்கினான் அதிரன்.

“அது ஒரு 15 வருஷ கதைங்க... எங்க ஸ்கூல்லயே நான் தாங்க ரொம்ப அழகு. எந்த அளவுக்கு அழகுனா ப்ரின்சிபலையே கரெக்ட் பண்ணுற அளவுக்கு அழகு.” என்றவனை அதிர்ச்சியாக பார்த்த தான்வி

“வாட் நீங்க ஆண்டி ஹீரோவா?” என்று கேட்டவளை முறைத்த அதிரன்

“ஏங்க ஏன் இவ்வளவு வில்லங்கமா யோசிக்கிறீங்க? நான் என்ன சொல்ல வந்தேன்னா எங்க ஸ்கூல்ல என்னை தெரியாதவங்க யாருமே இல்லை. பசங்கள்ள இருந்து பொண்ணுங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் என்னை தெரியும். சீனியர் பசங்க தீரன்னா தீரன்னானு கூப்பிட்டு நம்மளை பேமஸ் ஆக்கிவிட்டுட்டான்க. கடைசில தீரன்னாகிறதே என்னோட பேரா மாறிடுச்சு. ஸ்கூல்ல அதிரன்னு சொன்னா யாருக்கும் தெரியாது. தீரன்னா னு சொன்னா தான் தெரியும். என் பேரையே டேமேஜ் பண்ண அந்த அண்ணாங்கிற வார்த்தை என் வாழ்க்கையிலேயே இருக்கக்கூடாதுனு தான் யாரும் என்னை அண்ணானு கூப்பிட விடக்கூடாதுனு முடிவெடுத்தேன்.”என்று கதை கூறி முடித்தவன் எதிரிலிருந்தவளை பார்க்க

“இருந்தாலும் இவ்வளவு மொக்கையா ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்திருக்க வேண்டாம்.” என்று சீரியஸாக கூறியவளை போலியாக முறைத்தான் அதிரன்.

“வர வர உங்களுக்கு நையாண்டி தனம் ஜாஸ்தியாகிட்டே போகுது... கவனிச்சிக்கிறேன்.” என்றவனிடம்

“சரி சரி நான் போய் சாப்பாடு வந்திடுச்சானு விசாரிச்சிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள் தான்வி.

சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க தான்வி தான் சென்று பார்ப்பதாக கூறியவள் கதவை சென்று திறந்தாள்.

வெளியே சஹஸ்ரா நின்றிருக்க அவளை பார்த்த தான்வி திரும்பி உள்ளே பார்த்துவிட்டு அவளை உள்ளே வரச்சொன்னாள்.

சஹஸ்ரா வந்ததை அறியாத அதிரன்
“யாருமா வந்தது?” என்று குரல் கொடுத்தபடியே வாசல் நோக்கி வர உள்ளே வந்துக்கொண்டிருந்த சஹஸ்ராவை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டான்.

“ஆத்தி இப்படி சிக்கிடடோமே. குடுமியை பிடிச்சு குச்சு முட்டாயா மாத்தவரைக்கும் ஓயமாட்டாளே..” என்று எண்ணியவன் மனதின் பதட்டத்தை சிறிது மறைத்து சிறிது காண்பித்தபடியே

“மேடம்... நீங்க...” என்று அவன் கூறுவதற்கும் அவள் அருகில் வந்து அவனின் கன்னத்தில் அறைவதற்கும் சரியாக இருந்தது.

அவளின் அறையில் அதிர்ந்து நின்றவனுக்கு சற்று நேரம் ஏதும் புரியவில்லை.

சஹஸ்ராவை தடுக்க வந்தாள் தான்வி.
“மேடம் என்ன பண்ணுறீங்க?” என்றவளை கடுமையாக முறைத்தாள் சஹஸ்ரா.

அவளின் முறைப்பு அச்சுறுத்தும் வகையிலிருந்த போதும் முழுதாக குணமடையாதவனை அடிப்பதை ஒரு செவிலியராய் அவளால் அனுமதிக்கமுடியாது.

“மேடம் அவர் இன்னும் முழுதாக குணமாகல”என்று தான்வி கூற கேலியாய் இதழை வளைத்தவள்

“ஆஸ்பிடல் எப்போ உங்க வீட்டுக்கு ஷிப்ட் ஆச்சு?” என்று கேட்க தான்விக்கோ அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

அதிரனை பார்த்த சஹஸ்ரா
“கிளம்பலாம்.” என்று கூறிவிட்டு வாயிலை நோக்கி நடக்க அதிரனும் தான்வியிடம் கூறிவிட்டு சஹஸ்ராவோடு கிளம்பினான்.

சஹஸ்ரா நேரே காரை வீட்டிற்கு விடச்சொல்ல அதிரனோ
“மேடம் எனக்கு இன்னும் ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்கு.” என்று கூற அவனை பார்த்து கடுமையாக முறைத்தவள்

“இந்த அறிவு அங்க போகும் போது எங்க இருந்துச்சு?” என்று கேட்க

“அது தான்விக்கு உடம்புக்கு முடியலனு சொன்னாங்க. எனக்கும் ஆஸ்பிடலையே நாற்பது தடவை சுத்தி வந்து போரடிச்சுப்போச்சு. அதான் யாருக்கும் சொல்லாமல் தாவிக் குதிச்சு தப்பிச்சு வந்தேன்.” என்றவனை இப்போது முன்பை விட அதிகமாக முறைத்தாள் சஹஸ்ரா.

அப்போது தான் அதிரனுக்கு தான் முழுதாய் உளறியது புரிந்தது.
திருதிருத்தபடியே திக்கித்திணறியவன் அவளிடம் ஏதோ கூற வரும் முன் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்து
“வீட்டுல செக்யூரிட்டியை அதிகப்படுத்துங்க. சுவரேறி குதிக்கிறவங்க வாழ்க்கையில இனி சுவரில் கைவைக்கவே பயப்படுற அளவுக்கு செக்யூரிட்டி டைட்டாக இருக்கனும்.” என்றவள் திரும்பி அருகில் அமர்ந்திருந்த அதிரனை பார்த்தாள்.

அவளின் பார்வையே இது உனக்கான எச்சரிக்கையென்று சொல்லாமல் சொல்லியது.

அதிரன் மனதினுள்ளே
“இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சக்கிறதா? வேற ஏதாவது பிளான் போட்டிருந்திருக்கலாமோ? இப்படி வகைதொகையில்லாமல் சிக்கியிருக்கோம். இனி டிசைன் டிசைனா டார்ச்சர் பண்ணுவாளே... பண்ணட்டும் பண்ணட்டும். இதெல்லாம் சமாளிச்சா தான் வாழ்க்கை பூரா இவ பின்னாடி ஓட நமக்கு தெம்பு இருக்கும். இவ கெத்து கூட இவளுக்கு தனி அழகை கொடுக்குது. இப்படி உர்ருனு இருக்கும் போதே இவளை இப்படி சைட்டடிக்கிறோமே.. இவ ரொமேண்டிக்கா இருந்தா நம்ம நிலைமை ரொம்ப மோசமாகிடும்.டேய் அதிரா ரொம்ப ஓவரா தான் போய்கிட்டிருக்க. ஓவர் ஸ்பீடுல போய் ஸ்பீட் ப்ரேக்கரை மறந்துடாத.” என்று தனக்குள் பேசிக்கொண்டவன் வேறு எண்ணங்களில் மூழ்கினான்.

கார் வீட்டை அடைந்ததும் காரிலிருந்து இறங்கிய சஹஸ்ரா விடுவிடுவென உள்ளே சென்று அறையில் அடைந்து கொண்டாள்.

தன்னை பொருட்டாக மதிக்காது உள்ளே சென்றவளை பார்த்தவன்
“என்ன இறக்கிவிட்டுட்டு இரக்கமே இல்லாமல் உள்ள போயிட்டா... இப்போ நான் எங்க போறது... பேசாமல் அவ ரூமுலயே டேரா போட்டுடுவோமா? ஆத்தி அப்படி மட்டும் ஒரு விஷயம் நடந்துச்சு ஆளை விட்டு துண்டு துண்டாக அறுத்துருவா.” என்று தனக்குள் பேசியபடியிருந்தவனை இருவர் வந்து உள்ளே அழைத்து சென்றனர்.

அவன் அவளின் வீட்டிற்கு வந்த சற்று நேரத்திலேயே மருத்துவர் வந்து சேர்ந்தார்.

அவரை பார்த்ததும் கண்களில் சைகை செய்த அதிரனின் சைகை புரிந்து கொண்ட அவரும் அவன் வீட்டிலேயே இருந்து மருத்துவம் பார்க்கலாம் என்று கூறினார்.

அவனுக்கு உதவியாக ஒரு நர்ஸை அனுப்பி வைப்பதாக அவர் கூற அப்போது திடிரென உள்ளே நுழைந்த சஹஸ்ரா
“அது பொண்ணா இருக்கக்கூடாது.” என்று கூற அனைவரும் அவளை கேள்வியாக பார்த்திருக்க அதிரனோ

“ஏன் மேடம் வேணாங்கிறீங்க? அங்கு உள்ள எல்லா நர்சையும் எனக்கு நல்லாவே தெரியும். எல்லாரும் நல்லா பேசுவாங்க மேடம். நம்ம தான்வி சிஸ்டர் கூட எனக்கு ஓகே தான்.” என்றவன் மேலும் ஏதோ கூற வருவதற்குள்

“டூ வாட் ஐ சே...” என்றவள் விடுவிடுவென வெளியேறிவிட்டாள்.

அதிரனோ உள்ளுக்குள் சிரித்தபடியே மருத்துவரிடம் தான்வியை அனுப்பி வைக்க சொன்னான்.

அவரோ மறுக்க அதிரன் ஏதும் பிரச்சினை வராமல் தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தான்.

அதிரனின் அறையிலிருந்து வெளியே வந்த சஹஸ்ராவிற்கு மூச்சு முட்டுவது போலிருக்க கார்டன் ஏரியாவிற்கு வந்தாள்.

அங்கு அமைந்திருந்த கல்பெஞ்சில் அமர்ந்தவளுக்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்தது.

காலையிலேயே தன்னை அங்குமிங்கும் அலைக்கழித்ததோடு இப்போது அவள் முன்னே தான்வி வரவேண்டுமென்று தைரியமாக கூறியவனை என்ன செய்வதென்று புரியாது அமர்ந்திருந்தாள்.

தன்னுடைய நிலையை பற்றி சிறு கவலையுமின்றி தன்னை வார்த்தைகளாலும் செயல்களாலும் அலைக்கழித்துவனின் செயல் ஒரு புறம் கோபத்தையும் மறுபுறம் வருத்தத்தையும் கொடுத்தது.

அவள் அன்னையின் இறப்பிற்கு பிறகு அவள் பல சோதனைகளை சந்தித்தபோதிலும் இது போல் வெறுப்பாக உணர்ந்ததில்லை. அந்நிலையில் கூட அவளிடம் அசைக்கமுடியாததொரு உறுதித்தன்மை இருந்தது.

ஆனால் இன்று அதிரனின் நடவடிக்கைகள் ஏனோ அவளை பலவீனமாக உணரச்செய்தது.

அவன் தன்னை அலட்சியப்படுத்தியதை அவளால் ஏற்கமுடியவில்லை.

தன் எண்ணங்களுக்கும் யூகங்களுக்கும் மட்டுமே இடம்கொடுத்தவள் தன் மனதின் உண்மை நிலையை அறியத் தவறிவிட்டாள்.

ஒருவேளை அவள் அதற்கு முயற்சித்திருந்தால் ஏதேனும் உருப்படியான பதில் கிடைத்திருக்கும்.

சற்று நேரம் அவ்வாறே அமர்ந்திருந்தவள் நேரமாவதை உணர்ந்து உள்ளே சென்றாள்.

மீண்டும் தன் அறைக்குள் சென்று அடைந்துகொள்ள முயன்றவளின் முயற்சியை தடுத்தான் அதிரன்.

ஓய்விலிருப்பானென்று அவள் நினைத்திருக்க அவனோ அவளின் அறையின் வாசலில் நின்று தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவள் நிதானமாக அவனருகே வந்தாள்.

அவள் வந்தது கூட தெரியாமல் அடைந்திருந்த கதவோடு கதையாடிக்கொண்டிருந்தான் அதிரன்.

அதை பார்த்தவள் மானசீகமாக தலையிலடித்துக்கொண்டு
“என்ன வேணும்.” என்று சஹஸ்ரா கேட்க அதிரனோ

“வேற என்ன சாப்பாடு தான்.” என்றவனுக்கு அப்போது தான் குரல் வேறொரு இடத்திலிருந்து வருகிறதென்று புரிந்தது.

ஸ்லோ மோஷனில் திரும்பியவன் போலியாய் சிரித்தபடியே
“அது... அது... பசிக்கிதுங்க...” என்று அதிரன் கூற

“கிட்சன்ல கேட்க வேண்டியது தானே.” என்று சஹஸ்ரா கேட்க

“தனியா சாப்பிட ஒரு மாதிரி அன் ஈசியாக இருக்கு மேடம். அதான் உங்களையும் கம்பனிக்கு கூப்பிடலாமேன்னு வந்தேன்.” என்று அதிரன் கூற

“நான் ஆல்ரெடி சாப்பிட்டேன்.” என்று அவளொரு பொய்யை கூற அதிரனோ

“ஆனா நீங்க காலையில இருந்து சாப்பிடலைனு கிட்சன்ல சொன்னாங்களே.” என்று அதிரன் கூற அவள் ஏதும் கூறாது அமைதியாக நின்றிருந்தாள்.

“ப்ளீஸ் மேடம்.. ப்ளீஸ்...” என்று கெஞ்ச சஹஸ்ராவிற்கு அவனை மறுக்க தோன்றவில்லை.

அவனோடு உண்பதற்கு அவள் சம்மதிக்க அனைத்து ஏற்பாடுகளும் கடகடவென நடந்தேறியது.

மதிய உணவை விருந்து உபசாசாரம் போல் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கார்டன் ஏரியாவில் டென்ட் அமைத்து உணவை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

அதிரனும் சஹஸ்ராவும் அமர இரு இருக்கைகள் போடப்பட்டிருக்க அவர்கள் அமர்ந்ததும் வேலையாட்கள் இருவருக்கும் உணவை பரிமாறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

அதிரனும் உணவை ரசித்தபடியே சலசலத்தபடியிருக்க சஹஸ்ராவோ அவன் பேசுவதை அமைதியாக கேட்டபடியே உணவை ருசிக்கத்தொடங்கினாள்.

அப்போது அதிரன் உணவை எடுப்பதற்காக அடிப்பட்ட தன் கையை உபயோகப்படுத்த முயல அவனின் காயமோ அதற்கு அனுமதிக்கவில்லை. பாதி தூரத்திற்கு அதை எடுத்தவனால் அதற்கு மேல் அசைக்கமுடியாமல் போக பாத்திரத்தை தவறவிட அது தவறி அவன் மடியினில் கவிழ்ந்தது.

சஹஸ்ரா அவனை தடுப்பதற்கு முன்னமே இவை அனைத்துமே நடந்தேறியிருந்தது.

சட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்தவள் அவனுக்கு உதவினாள்.

வலியில் ஒரு கையால் மற்றைய கையால் பிடித்துகொண்டவனுக்கு மடியில் கவிழ்ந்து கிடந்த கோப்பை கருத்தில் பதியவில்லை.

அவனருகே வந்த சஹஸ்ரா அவனை சுத்தப்படுத்த உதவினாள்.

முதலில் அதிரனுக்கோ அவள் தன் அருகில் இருப்பது புரியவில்லை.

அவள் குனிந்து நிமிரும் போது அவனது வதனத்தை தீண்டிச்சென்ற அவளது கருங்குழல் அவனை நிதானமடையச்செய்திருந்தது.
வலியை மறந்தவன் அதனின் தீண்டலில் உள்ளம் சிலிர்த்தான்.

அவன் மடியினில் துண்டு விரித்திருந்ததால் உடையில் கறைபடவில்லை.

அதனால் சீக்கிரமே அவனை சுத்தப்படுத்தியவள் அவன் காயத்தை ஆராய முயல அவனோ அசைவின்றி அமர்ந்திருந்தான்.

அவனின் நிலையை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் அவனின் தோளினை தட்ட சுயநினைவுக்கு மீண்டான் அதிரன்.

சூழ்நிலை உணர்ந்து தலையை உலுக்கிக்கொண்ட அதிரனை பார்த்த சஹஸ்ரா
“ஆர் யூ ஓகே...” என்று கேட்க நாலாபுறமும் தலையாட்டியவனை விசித்திரமாக பார்த்தாள் சஹஸ்ரா.

“அதிரன்...” என்று சற்று அழுத்தமாக அழைக்க தன் இருக்கையிலிருந்து விருட்டென எழுந்தவன்

“நா..நான்... வாஷ்ரூம் போறேன்...” என்றவன் அவளை திரும்பிக்கூட பார்க்காது விருவிருவென உள்ளே சென்று மறைந்தான்.

அவன் சென்றதும் பணியாளர்களை அழைத்து சுத்தப்படுத்த சொன்னவள் அதிரனுக்கு என்னானது என்ற யோசனையோடே உள்ளே சென்றாள்.

வாஷ் ரூம் செல்வதாக தன் அறைக்கு சென்றவன் அதன் பின் இரவு உணவிற்கே அறையிலிருந்து வந்தான்.

வந்தவன் கடகடவென தன் உணவை முடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
சஹஸ்ராவிற்கோ அவன் நடவடிக்கைகள் விசித்திரமாக இருந்தது.

ஏதேனும் மறைக்கிறானோ என்று எண்ணியவள் அவன் அறைக்கதவை தட்டினாள்.

ஆனால் அவனோ போனை காதில் வைத்தபடியே வந்து கதவை திறந்தவன்
“ ஹோல்ட் ஓன் தான்வி...” என்றவன் வெளியே நின்றிருந்த சஹஸ்ராவிடம்

“என்ன மேடம் ஏதும் வேண்டுமா?” என்று கேட்க எதிரே நின்றிருந்த சஹஸ்ராவிற்கோ காதில் புகை வராத குறை தான்.

தான் என்னவோ ஏதோவென்று பதறி அவனை தேடி வந்திருக்க அவனோ தான்வியுடன் கடலை வறுத்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவனை கட்டி வைத்து அடித்தாளென்ன என்று தோன்றியது அவளுக்கு.
ஆனால் அவனின் உடல்நிலையை எண்ணி அமைதி காத்தவள் வந்ததற்காக ஏதோ விசாரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் சென்றதும் கதவை அடைத்த அதிரன்
“என்ன இவ இவ்வளவு சீரியஸா நம்மளை கவனிக்கிறா? ஒரு வேளை சாப்பிடும் போது நடந்ததை கவனிச்சிருப்பாளோ.. அதுக்கு வாய்ப்பில்லையே. நாம தான் அங்க இருந்து தப்பிச்சு வந்துட்டோமே. அப்போ எப்படி? ஒரு வேளை... இல்லை இருக்காது... அது மட்டும் தெரிஞ்சிருந்தா இன்னேரம் லண்டன் கடல்ல லாடம் கட்டி துரத்தியிருப்பா. நாளைக்கு தான்வியை பார்த்துட்டு என்ன பண்ணுவானு நினைச்சாலே உள்ள கலங்குதே...” என்று புலம்பிய படியே அவன் கட்டிலில் விழ பெண்ணவளோ அங்கிருந்த இன்னொரு அறையை தஞ்சமடைந்திருந்தாள்.

அங்கு பியானோ வைக்கப்பட்டிருக்க அதில் சென்று அமர்ந்தவளின் கைகள் தன்னிச்சையாக அதன் மீது இயங்கத்தொடங்கியது.

நெடுநாட்களுக்கு பிறகு மனதின் வார்த்தைகளை பியானோவின் இசை மூலமாக வெளிப்படுத்த முயன்றாள் சஹஸ்ரா.

இத்தனை நாட்களாக வாய் வழியாக வெளிவர மறுத்த அவளின் வேதனைக்கும் விரக்திக்கும் பியானோ இசை வடிகாலாகியது.

திரை போல் மனதில் ஓடிய நினைவுகள், வடுக்களாய் அவள் மனதில் பதிந்த கசப்பான அனுபவங்களென அனைத்தையும் மனதில் அசைபோட்டவளுக்கு கண்கள் குளம் கட்டுவதை தடுக்க முடியவில்லை.

அவளின் துக்கம் அவள் கைகள் மீட்டிய இசையிற்கு மூலஸ்ருதி ஆகிட கைகள் அழுத்திய ஒவ்வொரு பியானோ சாவியும் அவ்விடத்தை ஆக்கிரமித்திடும் இசையை அதிர்ந்து வெளியேற்றியது.

மனதின் அழுத்தமும் சுமையும் குறையும் வரை பியானோ மீட்டியவளுக்கு அவள் எதிர்பார்த்த அமைதி கிட்டியது.

அவள் இசைப்பதை நிறுத்தியதும் யாரோ கைதட்டும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் சஹஸ்ரா.

அங்கே அதிரன் நின்றிருக்க பியானோவை மூடி வைத்து எழமுயன்றவளின் அருகே வந்தான் அதிரன்.

அவனை கேள்வியாக பார்த்தவளின் கையை பற்றி இழுத்தவன் அவள் எதிர்ப்பதற்கு வழிகொடுக்காது அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்திருந்தான்.

மனதளவில் பலவீனமாக உணர்ந்திருந்தவளுக்கு அவனை எதிர்க்கும் எண்ணம் துளியும் எழவில்லை. மாறாக அவனை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் முன்னுச்சியில் மென்மையாக முத்தமிட்ட அதிரன்
“இன்னுமா உனக்கு நான் யாருனு தெரியலை போனி?” என்று கேட்க அவனது போனி என்ற அழைப்பு அவளை பல எண்ணங்களில் அலைக்கழித்தது.

பல வருடங்களுக்கு முன் அவள் மனம் விரும்பிய வார்த்தை அது. அறியாத வயதிலிருந்தே அவ்வார்த்தைகளில் சிலிர்த்து போகும் அவளது மனம். அவளின் அன்னையின் “சதுமா” என்ற அழைப்பிற்கு அடுத்து அவள் அதிகம் எதிர்பார்த்த அழைப்பு அது.

“நீ..நீ..நீங்க..” என்றவளது வார்த்தைகள் முதல்முதலாக தந்தியடிக்க அதை ரசித்தான் அதிரன்.

“உனக்கு ஞாபகம் இருக்கா போனி ?” என்று பெரும் எதிர்பார்ப்புடன் கேட்டவனை ஏமாற்றாது ஆமென்று பதிலளித்தாள் சஹஸ்ரா.

“நானும் உன்னை மறக்கல போனி. நீ என்கூட இல்லைனா கூட இத்தனை வருஷமா உன்னை நினைக்காத நாளில்லை. உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்று அதிரன் கூற சஹஸ்ராவிற்கோ அவனின் வார்த்தைகள் அத்தனை நெகிழ்வாக இருந்தது.

“நீயும் என்னை மிஸ் பண்ணியா போனி?” என்று அதிரன் கேட்க அதற்கும் தாமதிக்காது ஆமென்று தலையாட்டினாள் சஹஸ்ரா.

அவளின் முன்னெற்றியில் செல்லமாக முட்டியவன்
“உன்கிட்ட இப்பவும் அதே க்யூட்னஸ் இருக்கு போனி. என்ன ஒன்னு அந்த ரெண்டு போனிடேல் மட்டும் மிஸ்ஸிங்.” என்று சிரித்தவனின் பிடியிலிருந்து விலகியவள் அவனை முறைத்தாள்.

சஹஸ்ராவின் செயலை கண்டு மீண்டும் சிரித்த அதிரன்

“சரி சரி கூல் டவுன். இப்போ தூங்கப்போகலாமா?” என்று கேட்க அவளுக்கு கேட்பதற்கு நிறைய இருந்த போதிலும் இப்போதைக்கு அவனின் யோசனைக்கு இணங்கி அவனோடு அங்கிருந்து சென்றாள்.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Enna da nadakuthu inga ivlo neram thanvi kuda kadalai potutu irundane, ivanuku ippo dan ova yaar nu teriuda pony nu solrane, nice update dear thanks.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அப்ப அதிக்கு முன்னாடியே சாரா வா தெரியுமா, இது என்ன புது டுவிஸ்ட்😳😳😳😳

ரொம்ப நல்ல தெரியும் போலவே🤔🤔🤔🤔

நிவி எப்படி இறந்தாங்க?????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top