• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆயுட்காரகனே 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 76

புதிய முகம்
Author
Joined
Nov 15, 2021
Messages
14
Reaction score
39
வெவ்வேறு இணைப்புகள்
ஒரு சங்கிலியில்
இணைவது
வளையத்தின்
வளைவுகளை
சுவாரஸ்யப்படுத்துவதற்கே

இன்று எதிர்பாரா வகையில் ஆதிபனை பார்த்தவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. வார்த்தைகளை கோர்க்க முயன்றவளுக்கு அதனை சரியான கோர்க்க முடியாமல் போக அவளது நா அதன் போக்கில் தந்தியடித்து அவள் நிமைலையை மேலும் சிக்கலாக்கியது.

இவையனைத்தையும் கண்களில் சுவாரஸ்யம் மின்ன பார்த்திருந்தவனின் பார்வையிலிருந்த கேலியை எதிரிலிருந்தவள் சரியாக கவனிக்கவில்லை.

“சார்... நான் அன்னைக்கு லயா...” என்று தெய்வத்திருமகள் விக்ரம் போல் கதைகூறியவளின் செய்கை கடினப்பட்டு கட்டுப்படுத்தியிருக்கும் சிரிப்பை கட்டவிழ்த்திடுமோ என்று பயந்தவன் கோபமாக எழுவது போல் தன் இருக்கையை வேகமாக பின்னே தள்ளியபடியே எழுந்து நின்றான் ஆதீபன்.

தன் எதிரே நிற்பவனை ரூத்ரமூர்தியாய் அவள் எண்ணி பயந்து நிற்க அவனோ அதற்கு எதிரான மனநிலையில் இருந்தான்.

அவளை அவனது பாணியின் தண்டித்திடும் நோக்கத்துடன் வரவைத்திருந்தவன் அவளது செயல்களில் மூழ்கி தன் நோக்கத்தையே மறந்துவிட்டான்.

கடினத்தின் கடிவாளமாக வலம் வருபவனிடம் அவளின் செயல்கள் அவனுள் ஒளிந்திருந்த ரசிகனை வெளிவரச்செய்தது.

அவன்.................

ஸ்டாப்..........................

இப்படிலாம் நடந்துகிட்ட அவன் ஆன்டி-ஹீரோ இல்லையே.. அப்போ இவன் தான் ஹீரோவா நீங்க கேட்கிறது புரியிது. இந்த சீனுக்கு இவன் தன் ஹீரோ. அதாவது ஆன்டி-ஹீரோ. அப்போ எப்படி அவன் இப்படி இருக்;கான்னு நீங்க யோசிக்கிறது புரியிது. இப்போ நடந்த அத்தனையும் சாஹித்யாவோ கனவு...

என்னது கனவானு நீங்க ஷாக்காகுறது புரியிது. ஆமா... ப்ளாஷ் பாக்கிற்கு அடுத்து நடந்த அத்தனையும் நம்ம சாஹியோட கற்பனை. குழந்தபுள்ள அவனை சாதாரண
ஹீரோனு நினைச்சு இப்படியெல்லாம் கற்பனை பண்ணிக்கிச்சு. ஆனா அவன் தான் ஆன்டி- ஹீரா ஆச்சே. அதனால அவனோட ரியேக்ஷனே வேற.

இனி நிஜமா நம்ம ஆன்டி-ஹீரோ என்ன பண்ணான்னு பார்க்கலாம்.

சட்டென தன் முகத்திலுணர்ந்த ஈரத்தின் விளைவாக சுயஉணர்வு பெற்ற சாஹித்யா நடந்தது என்னவென்று உணர்ந்துகொள்ள சில கணங்களானது.

அப்போது தான் எதிரிலிருந்தவன் தன் முகத்தில் அங்கிருந்த கண்ணாடி குவளையிலிருந்த நீரை ஊற்றியது புரிந்தது.

அவனது செயல் அவளுள் தூங்கிக்கொண்டிருந்த லேடி கிங் காங்கினை துயிலெழுப்பிட பல்லைக்கடித்துக்கொண்டே ஏதோ பேச முயன்றவளை கதவுதட்டும் சத்தம் தடுத்தது.

அப்போது உள்ளே வந்த ஆதீபனின் பி.ஏ கையில் இரண்டு கோப்பைகளும் அதோடு டிஸ்ஸ_ பேக்கும் இருந்தது.

அதை பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகவும் குழப்பமாவும் இருந்தது.

பி.ஏ தன் கையிலிருந்தவற்றை மேஜையில் வைத்துவிட்டு ஆதிபனிடம் ஒரு கடிதத்தை நீட்ட அதை வாங்கியவன் தலையசைத்து அவர் வெளியேற அனுமதித்ததும் அங்கிருந்து வெளியேறினார் பி.ஏ.

அவர் வெளியேறுவதற்காக காத்திருந்தது போல் சாஹித்யா

“ஏன் சார் இப்படி பண்ணீங்க?” என்று கேட்க அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு பி.ஏ மேஜையில் வைத்து சென்றிருந்த ஒரு கப்பினை தன் கையில் எடுத்துக்கொண்டவன் மற்றைய கோப்பையை எடுத்துகொள்ளுமாறு கண்களிலேயே பணித்தான்.

அதை எடுத்திடும் எண்ணத்தை மறுத்திருந்தவளுக்கு இப்போ அதை எடுப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

காபி கப்பினை எடுத்தவள் அதனை ரசித்திடும் எண்ணமின்றி சுவைத்து முடித்தாள்.
காலி கோப்பையினை மேஜை மீது வைத்;ததபடியே ஆதிபனுக்கு நன்றி கூறியவளின் முன் அந்த கடிதத்தை நீட்டினான் ஆதீபன்.

அவனை புரியாத பார்வை பார்த்தபடியே அந்த கடிதத்தை பிரித்து படித்தவள் அதிலிருந்த வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.

அவனையும் கடிதத்தையும் மாறி மாறி பார்த்தவள்
“சார் இது...” என்றவளிடம் எவ்வித பாவனையையும் வெளிப்படுத்தாது புருவங்களை மட்டுமே உயர்த்தி பார்த்தவன்

“ஆப்பர் லெட்டர்ல எல்லாம் தெளிவாக தானே போட்டிருக்கு...” என்றவனின் கேள்வியில் உள்ளே கோபம் டன் கணக்கில் கொப்பளித்தபோதிலும் அதனை வெளிக்காட்டாது

“சார் நான் இப்போ எச்.ஆர் ட்ரெயினி சார்.” என்றவள் மேலும் பேசுவதற்கு முன் குறுக்கிட்டவன்

“எச். ஆர் ட்ரெயினி எதுக்கு ஹவுஸ் கீப்பிங் கோர்ஸ் பாலோ பண்ணனும்?’ என்று கேட்க
“அது என்னோட ட்ரீம் சார்.” என்று கூறியவளிடம்

“தென் க்ரேப் த ஆப்பர்சுனிட்டி...” என்று ஆதீபன் கூற மறுத்து என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தாள் சாஹித்யா.

சாஹித்யா தற்போது மனிதவளத்துறையில் பணியாற்றிய போதும் அவளது கனவு ஹவுஸ்கீப்பிங் பயில்வதே. அவளது தமையனின் நிர்ப்பந்தத்தினால் மனிதவளத்துறையில் பட்டம் பெற்று அதே துறையில் பணிபுரிந்த போதிலும்; அவளது லட்சியத்தினை கைவிட அவளுக்கு மனமில்லை. அதனால் ஹவுஸ் கீப்பிங் பகுதிநேர வகுப்புக்களை பின்தொடருகிறாள். இதற்கு செயன்முறை அறிவும் அவசியமென்று அவளுக்கு நன்கு தெரிந்திருந்த போதிலும் அவளின் தமையனை சமாளிக்கும் வழி தெரியாமலே அதற்கான முயற்சியெதும் எடுக்காமல் அமைதி காத்தவளுக்கு இந்த வாய்ப்பினை எவ்வாறு ஏற்பது என்று தெரியவில்லை.

இரண்டு வகையான ஹவுஸ் கீப்பிங் முறைகள் நடைமுறையிலிருக்க சாஹித்யாவிற்க்கு இன்டஸ்ரியல் ஹவுஸ்-கீப்பிங்கை விட ரெசிடென்ஷியல் ஹவுஸ் கீப்பிங் மீதே ஈடுபாடு அதிகமாக இருந்தது. ஆனால் அதனை தொடர்வதற்கு நிச்சயம் வீட்டில் சம்மதிக்கமாட்டர் என்று தெரிந்ததாலேயே இன்டஸ்ரியல்- ஹவுஸ்கீப்பிங்கிற்கான செயன்முறை பயிற்சியிலிறங்க சில முன்னாயத்தங்களில் ஈடுபட்டிருந்திருந்தாள்.

ஆனால் இப்போது அவள் விரும்பும் துறையிலேயே பணி புரிய வாய்ப்பு கிட்டிட அதனை தவறவிடுவது முட்டாள் தனமென உணர்ந்தவள் கிடைத்த வாய்ப்பை ஏற்பது என்ற முடிவுக்கு வந்தவளுக்கு எதிரிலிருந்தவனின் பார்வை மனதை குடைந்தது.

அவனது பார்வை ஏதோவொரு விபரீதத்தை அவளுக்கு உணர்த்த ஏதோ முடிவெடுத்தவளாய்
“இல்லை சார்… எனக்கு இந்த ஆபர் வேண்டாம்” என்று கூறியவள் அவள் கையிலிருந்த கடிதத்தை அவனின் மேசை மீது வைத்தாள்.

அதை எதிர்பார்த்திருந்தவன் போல் ஏளனமாக தன் உதடுகளை வளைத்தபடியே தன் ட்ராயரிலிருந்து ஒரு கோப்பினை வெளியே எடுத்தவன் அதனை அவள் முன் தள்ளி எடுத்து படிக்கச்சொன்னான்.

அவனை கேள்வியாக பார்த்தபடியே அந்த கோப்பினை கையில் எடுத்தவள் அதை திறந்துபார்க்க அதில் அவளது எம்ப்ளாயின்மண்ட் அக்ரிமன்ட் இருந்தது.

அதை பார்த்தவள்
“சார் இது…” என்று ஆதிபனை பார்த்து கேள்வியாக கேட்க அவனோ அதே பாவனையுடன்

“அதுல க்ளோஸ் நம்பர் 10 ஐ படிங்க மிஸ் சாஹித்யா.” என்று கூற அவனை குழப்பமாக பார்த்தவள் அவன் சொன்ன வரிகளை படித்தவளுக்கு அப்போது தான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

அவள் வேலைக்கு சேரும் போதே இரண்டு வருடங்களுக்கு அக்ரிமன்ட் போடப்பட்டிருந்தது. அதோடு மேலிடத்தால் இவ்விரண்டு வருடங்களுக்குள் தேவைக்கு ஏற்ப பணியாளர்களை வேற துறைக்கு மாற்றமுடியுமென்றும் அதனை நியாயமான காரணமின்றி பணியாளர்கள் மறுக்கமுடியாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கான்டர்க்ட்டில் கையெழுத்திடும் போது அது தன்னுடைய பணி வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பாக இருக்குமென்று எண்ணியே அந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டாள். ஆனால் அது இப்படி தனக்கு வினையாக மாறுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதோடு இதனை மறுப்பதற்கு தன்னிடம் நியாயமான காரணமொன்றும் இல்லை. ஏதாவது உடல் பிரச்சினை என்று கூறினாலும் இது உடலை வருத்தி செய்யும் வேலையில்லை. அதனால் அவளால் அப்படியெதும் கூறமுடியாது. ஒப்பந்தத்தை முறியடித்தால் ஒரு பெருந்தொகையான பணத்தை இவளே கம்பனிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தவளுக்கு இதை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பம் மறையவில்லை.

சற்று தயக்கத்துடன்
“சார் நான் என்னோட முடிவை நாளைக்கு சொல்லவா?” என்று கேட்க அவனோ சற்றும் கருணையின்றி

“ இன்னைக்கு ஐந்து மணி வரைக்கும் தான் டைம். அதுக்குள்ள எச் ஆர்க்கு தெரியப்படுத்துங்க. வேற ஏதும் இல்லைனா நீங்க போகலாம்.” என்றவன் அவனது வேலைகளை கவனிக்கத்தொடங்கினான்.

அறைக்கு வெளியே வந்த சாஹித்யாவிற்கோ தலையை எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது. இது சிக்கலா அரியவாய்ப்பாவென்று அவளால் அனுமானிக்கமுடியவில்லை.

இது அவனின் பழிவாங்கும் படலமென்றால் இந்தளவுக்கு அவன் மெனக்கெட வேண்டுமென்ற அவசியமில்லை. அவனது பணபலமே அவளை துன்புறுத்த போதும். ஆனால் எதற்காக தன்னை அவனுடைய வீட்டில் ஹவுஸ்-கீப்பிங்கிற்கான பொறுப்பதிகாரியாக வேலைசெய்ய அழைக்கிறான்?அதுவும் தற்போதைய சம்பளத்தை விட மூன்று மடங்கான சம்பளத்துடன்…

இது ஏதேனும் சதியாக இருந்தால் என்ன செய்வது என்று யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

எதை பற்றியும் கண்ணால் பார்த்து தீர விசாரித்து அறியாமல் சீ இந்த பழம் புளிக்குமென்ற நரியை போல் முடிவெடுப்பது முட்டாள் தனம்.

எவ்வாறாயினும் அவள் எ.டி க்ரூப்ஸின் ஊழியர் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. வேலை இடமும் வேலையும் மாறப்போகின்றதே தவிர வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. அதனால் ஆதீபனால் வேறு மாதிரியான பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. மீறி வந்தால் எப்பாடு பட்டாவது நஷ்டஈட்டினை செலுத்திவிட்டு விலகிவிடலாம் என்று முடிவெடுத்தவள் தன் முடிவினை எச்.ஆரிடம் தெரிவித்துவிட்டு புதிய வேலையில் சேருவதற்கான வேலையில் இறங்கினாள்.

இங்கு அதிரன் ப்ரணீதனை பீச்சிற்கு வருமாறு வற்புறுத்திக்கொண்டிருந்தான். ஆனால் அவனோ அதிரனின் கெஞ்சலை கவனியாது தன் வேலைகளை கவனிப்பதில் மும்முரமாக இருந்தான்.

“டேய் ப்ளீஸ்டா. உன் தங்கிச்சி உன்கிட்ட ஏதோ பேசனும்னு தான் உன்னை பீச்சுக்கு கூப்பிட்டா. ஒரு ஆப் அன்ட் ஹவர் தான்டா. மறுபடியும் நீ திரும்பி வந்து வேலையை பாரு.” என்று அதிரன் கெஞ்ச அவனோ அதனை பொருட்படுத்துவதாய் இல்லை. அப்போது சரியாக அதிரனின் அலைபேசி அழைக்க அதை எடுத்து பேசிவிட்டு வைத்தவன் ப்ரணீதனை பார்த்தான்.

“உன் தங்கச்சிக்கு வேற ஏதோ வேலை வந்துடுச்சாம் அதுனால இன்னொரு நாள் போகலாம்னு செல்லிட்டா. நீ உன் வேலையை கவனி. நான் வேற இவளை நம்பி வன் அவர் பர்மிஷன் வேற போட்டுட்டேன்.” என்றபடியே அங்கிருந்து சென்றவன் தன் வேலைகளை கவனிக்கத்தொடங்கினான்.

மாலை ஒரு மணித்தியாலத்திற்கு முன்பே ஆபிஸிருந்து கிளம்பிய அதிரன் நேரே பாக்ஸிங் சென்டருக்கு சென்றான்.

அது அவன் வழமையாக செல்லும் உயர்தர மக்கள் மட்டும் வருகை தரும் பாக்ஸிங் சென்டர். அவனது அலுவலகம் அதற்கான சந்தா கட்டணத்திற்கு சில சலுகைகள் வழங்கியிருந்ததால் அவனுக்கு அங்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆனால் அங்க வந்தவனுக்கு எதிர்பாராத ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
வீட்டிலிருந்து கிளம்பிய சஹஸ்ரா காரில் பெற்றோல் தீரும் மட்டும் ஊரை வலம் வந்தாள். அவளது வேகம் அவளது கோபத்தை அப்படியே பிரதிபலித்தது.

பின் ஏதோ தோன்ற அவள் பாக்ஸிங் சென்டருக்கு வந்திருந்தாள். அவள் வழமையாக வரும் இடம் தானென்ற போதிலும் இன்று வழமைக்கு மாறான நேரத்தில் எவ்வித பாதுகாப்புமில்லாமல் வந்திருப்பது அந்த பாக்சிங் சென்டர் நடத்துனருக்கு சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

அனைவரையும் அனுப்பிவிடலாமென ஒரு கணம் யோசித்தவர் பின் மறுகணமே அந்த எண்ணத்தை கைவிட்டார். ஆனால் காவலாளிகளை அழைத்து சற்று கண்காணிப்புடன் இருக்குமாறு பணித்துவிட்டு தன் வேலையை கவனிக்கச்சென்றுவிட்டார்.

பாக்சிங் சூட்டிற்கு மாறிய சஹஸ்ரா தன் பயிற்சியை தொடங்கிட அங்கிருந்தவர்கள் அவளை சற்று பயத்துடன் பார்த்திருந்தனர்.

அதற்கு காரணம் மனதிலிருந்த வேதனை மற்றும் ஆற்றாமையை தன் பயிற்சியினூடாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள் சஹஸ்ரா. அவளது ஒவ்வொரு குத்தும் அவளது மொத்த பலத்தையும் காண்பித்திட அது பார்ப்பவர்களை அச்சுறுத்துவதாக இருந்தது.

அவளது வேகத்தை கண்டு அவளருகே நின்றிருந்தவர்கள் கூட அங்கிருந்து விலகி சென்றனர்.

மாலை அங்கு வந்த அதிரனும் இந்த காட்சியை கண்டான். அவளை கண்டதும் அதிர்ந்தவன் அவளது வேகத்தையும் பலத்தையும் கண்டவனுக்கு ஆச்சரியமும் மெச்சுதலும் ஒரு சேர தோன்றியது.

அவளை அனைவரும் பயத்துடன் நோக்க இவன் கண்களுக்கோ அவள் லேடி ஹிட்லராகவே தெரிந்தாள். பாராபட்சமின்றி அவளிடமிருந்து வெளிப்படும் கடுமை பல சந்தர்ப்பங்களில் எரிச்சலை கிளைப்பியபோதிலும் அவளது பதவிக்கு அது அவசியமென்ற உண்மை அவனுக்கு புரிந்தே இருந்தது. ஒரு பெண்ணாக அவளது ஆளுமையை கண்டு அவன் பல சமயங்களில் வியந்திருக்கிறான். சஹஸ்ராவிற்கு கீழ் பணி புரிவது அவனை பொறுத்தவரையில் பெருமைப்படவேண்டிய விஷயமே.
இன்றும் அதே ஆளுமையுடன் பாக்ஸிக் பயிற்சியில் இருந்தவளை அதே ப்ரம்மிப்புடன் பார்த்திருந்தான் அதிரன்.ஆனால் அவனுக்குமே அவளருகே செல்லும் தைரியமில்லை.

முதற்கட்ட பயிற்சியை முடித்துவிட்டு ரிங்கிற்குள் வந்த சஹஸ்ராவோட போட்டி போட அங்கிருந்த யாரிற்கும் துணிவில்லை. அதிரனும் அவளிடம் சிக்கப்போகும் அந்த ஆடு யாரென்ற ஆவலுடன் அவளை பார்த்தபடியே தன் பயிற்சியை தொடங்கினான்.

சஹஸ்ராவோ தன்னை சுற்றி நடப்பதெதையும் கண்டுக்கொள்ளும் நிலையில் இல்லை. கோபமும் ஆற்றாமையும் அவள் கண்களை மறைத்திருந்தது.
தனியே ரிங்கில் நின்று பயிற்சி செய்து கொண்டிருந்தவளை நோக்கி யாரோ முன்னேறுவதை உணர்ந்த அதிரன் அந்நபரை கவனிக்க அந்த நபரோ தன் கைமறைவில் கத்தியை பதுக்கியிருந்தான்.

அதை கண்டதும் சுதாகரித்த அதிரன் சஹஸ்ராவின் காவலர்களை தேட அங்கு யாரும் இருக்கவில்லை.

தாமதிப்பதில் பலனில்லையென உணர்ந்த அதிரன் விரைந்து சஹஸ்ராவிருந்த ரிங்கிற்குள் சென்றான்.

அதிரனுக்கு முன்பாகவே ரிங்கிள்குள் வந்த அந்த நபர் சஹஸ்ராவை தாக்க முயல அதற்குள்
“மேடம் அவன் கையில கத்தியிருக்கு…” என்று கத்தியபடியே ரிங்கிற்குள் நுழைந்தான் அதிரன்.

அதிரன் கத்தவும் சுற்றுப்புறம் உணர்ந்த சஹஸ்ரா தன்னை தாக்க முயன்ற எதிரிலிருந்தவனை ஒருவாறு தடுத்து நிறுத்தியிருந்தாள்.

அதற்குள் அதிரனும் உள்ளே வந்திருக்க இருவரும் அந்த நபரை தாக்கி தரையில் கிடத்தியிருந்தனர்.

அப்போது திடிரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க அப்போது தான் சஹஸ்ராவிற்கு தன் முட்டாள் தனம் புரிந்தது.

அதிரனுக்கு சுற்றி என்ன நடக்கின்றது என்று புரியாத போதிலும் எதோ சரியில்லையென உணர்ந்து தன்னருகே நின்றிருந்த சஹஸ்ராவின் அனுமதியை வேண்டாமலேயே அவளை இழுத்;துக்கொண்டு ஓடினான்.

அவளுமே அப்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு ஏதும் கூறாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

குண்டுகள் வெவ்வேறு திசையிலிருந்து பறந்து வர அங்கிருந்த பலர் செல்லும் வழியறியாது அதனால் தாக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் அதிரனுக்கு என்ன செய்வதென்று புரியாத போக அவனிடம் தடுமாற்றம் உண்டானது.

அது சஹஸ்ராவிற்கு புரிந்ததுபோலும். அதிரனை தரையில் படுக்க சொன்னவள் அங்கு மீதமிருந்த மற்றவர்களையும் அதையே செய்யச்சொல்லிட்டு அவளும் தரையில் படுத்துக்கொண்டாள்.

அப்போது குண்டுகள் எங்கிருந்து வருகின்றதென சரியாக தெரிந்தது. அதை கவனமாக கிரகித்துக்கொண்டவள் தன் இடைமறைவில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ஒவ்வொரு இடத்தையும் குறி வைத்து சுடத்தொடங்கினாள்.

அந்த துப்பாக்கி ஒலியெழுப்பாத துப்பாக்கி வகையை சார்ந்தது என்பதால் எதிராளிகளுக்கு அவள் தன் தாக்குதலை தொடங்கியது பற்றி தெரியவில்லை.

ஆறு பேர் அவளின் தாக்குதலில் மடிந்து சரிய இப்போது குண்டு பாய்ச்சுதல் முற்றாக நின்றிருக்க சில விநாடிகள் தரையில் இருந்த நிலையிலேயே அதனை உறுதிப்படுத்திவிட்டு அனைவரையும் குனிந்தபடியே அங்கிருந்து வெளியேறச்சொன்னாள்.

உள்ளே இத்தனை கலவரம் நடந்திருக்க வெளியேயும் அதே அளவு கலவரம் நடந்தேறிக்கொண்டிருந்தது.

சஹஸ்ரா காவலாளிகள் யாரும் வேண்டாமென்று கூறிவிட்டு வந்திருந்தபோதிலும் அவளறியாமல் சிலர் அவளை பின்தொடர்ந்திருந்தனர்.

அவர்கள் வெளியே காத்திருந்த வேளையில் அங்கே சஹஸ்ராவின் எதிரிகளின் கையாட்கள் இருப்பதை அடையாளம் கண்டுகொண்டிருந்தனர் சஹஸ்ராவின் காவலாளிகள்.

உடனேயே மற்றைய காவலாளிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு அவர்கள் எதிராளிகளை தாக்கத்தொடங்க அங்குமொரு யுத்தம் ஆரம்பித்திருந்தது.

மற்றைய காவலாளிகளும் வந்து சேர எதிராளிகளும் அவர்களது ஆட்களை வரவைத்திருக்க அங்கொரு கடுமையான போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சஹஸ்ராவோடு வெளியே வந்த அதிரன் அங்கு நடந்தபடியிருந்த சண்டையை பார்த்து உறைந்து நின்றான். படங்களில் மட்டுமே இவ்வாறான சண்டைகாட்சிகளை பார்த்த பழக்கப்பட்டவனுக்கு இன்று அதனை நேரடியாக காணநேர்ந்ததை நம்ப முடியவில்லை.

அப்போது ஒரு படை சஹஸ்ரா அருகே வந்து அவளை அங்கிருந்து அழைத்து செல்ல முயல அவள் அதிரனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்போது தூரத்திலிருந்து ஒரு குண்டு அவர்களை நோக்கி வருவதை கண்ட அதிரன் சஹஸ்ராவை நகர்த்திவிட்டு அவனும் நகர்வதற்குள் அந்த குண்டு அவனின் தோள்பட்டையை பதம் பார்த்துவிட்டது.

அதிரனோ வலியில் அலறியபடியே நிலத்தில் சரிய அதற்குள் அங்கிருந்தவர்கள் நிலைமையை உணர்ந்து சஹஸ்ராவை அகற்ற முயல அவளோ வலியில் துடித்துக்கொண்டிருந்த அதிரனின் செயலில் பதறி அவனை கவனித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது கருப்பு நிற காரொன்று அங்கு வந்து நிற்க அதில் விரைந்து ஏறி அமர்ந்த சஹஸ்ரா அதிரனை தன் மடியில் கிடத்தச்சொன்னாள்.

காவலாளிகளும் விரைந்து செயற்பட்டு காரை அங்கிருந்து விரைவாக அனுப்பிவைத்தனர்.

கார் விரைந்து ஹாஸ்பிடலை அடைய அங்கு அவர்களுக்காக ஒரு மருத்துவர் குழு காத்திருந்தது.

அந்த குழு விரைந்து செயற்பட்டு அதிரனை அவசரபிரிவில் அனுமதித்தவர்கள் சிகிச்சையினை ஆரம்பித்தனர்.

இதுவரை நேரம் பதட்டத்துடன் செயற்பட்டவளுக்கு இப்போது தான் சற்று நிம்மதியாகயிருந்தது.

ஆனால் குற்றவுணர்வு அவளை சூழ்வதை அவளால் தடுக்கமுயலவில்லை. தன் அலட்சியமான நடவடிக்கை சம்பந்தப்படாதவர்களை பாதித்ததோடு இப்போது தன்னால் ஒருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான். அதுவும் தனக்காக தாக்குதலை அவன் ஏற்றுக்கொண்டு வலியில் துடிக்கின்றான். இதை நினைத்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.

அப்போது திடிரென பலர் அவளிருந்த இடத்தினை முற்றுகையிடுவதை உணர்ந்தவள் அடுத்து நடக்கப்போவதை எதிர்கொள்வதற்கு தயரானாள்.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இது என்ன ட்ராக் மாறும் போலவே🤔🤔🤔🤔

நா அதிரன் - சாஹி தான் ஜோடி ஆ இருப்பாங்க போலனு நினைச்சேன் ஆனா இங்க வேற மாதிரி போகுதே🧐🧐🧐🧐

ஆதிபன் என்ன பிளான் லா அவளா வீட்டுக்கு கூபடரான்....

இப்ப அதி மேல சஹஸ்ராக்கு ஏதும் இன்டரேஸ்ட் வருமா🤩🤩🤩🤩

அப்ப பிரணிதன்?????
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Enna da ithu hollywood movie la vara pola shoot nadakuthu en ma sahasra yaar ma ivanumga, sahithya enna mudivu eduka pora, jodi marumo nice update dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top