• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆயுட்காரகனே 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 76

புதிய முகம்
Author
Joined
Nov 15, 2021
Messages
14
Reaction score
39
எதிர்ப்பது
யாராகிலும்
உன் அருகாமையால்
அவர்களை
வீழ்த்திடும்
சூட்சுமத்தை
அறிந்திட முயன்றது
உன் மனம் கவர்ந்த

என் காதல் மனம்...

அனைவரும் சிறை பிடிக்கப்பட்டதும் ஒருவனை ஆதீபனை முன் நிறுத்தினர்.
முதலாமவன் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஞானப்பிரகாசத்தையே ஆதீபனின் முன் நிறுத்தினர்.

தன் முன் எவ்வித பதட்டமுமின்றி நின்றிருந்த ஞானப்பிரகாசத்தை மேலிருந்து கீழ் வரை அளந்த ஆதீபன் சாரதியை பார்க்க அவன் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டது போல் சாரதி பேசத் தொடங்கினார்.

"யார் நீ? உன்னை பார்த்தா அர்ஜுனனோட ஆட்களை போல தெரியலையே...” என்று கேட்க ஞானப்பிரகாசம் தெளிவாக பேசினார்.

“நான் ஞானப்பிரகாசம். ரிசர்ச் கெமிஸ்ட். மிஸ்டர் அர்ஜுனரோட புது ப்ர்ப்பியூம் கம்பனிக்கான பார்மியூலா தயாரிக்க இங்க வந்தேன்.” என்று கூற ஆதீபனோ அவரை கூர்மையாக பார்த்தபடியே நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தான்.

“இதை நாங்க எந்த அடிப்படையில் நம்புவது?” என்று சாரதி கேட்க

“உள்ளே லேப் இருக்கு. அங்கு போய் பார்த்தால் உங்களுக்கே புரியும்.” என்று ஞானப்பிரகாசம் கூற சாரதி ஆதீபனை பார்த்தார்.

அவன் தலையசைத்து அனுமதி தந்திட சாரதியும் இன்னும் சிலரும் ஞானப்பிரகாசத்தை பின்தொடர்ந்து உள்ளே சென்றனர். அவர்கள் உள்ளே சென்றதும் ஆதீபன் அவ்விடம் முழுவதையும் நோட்டம் விட்டான்.

அவ்விடத்தில் ஏதோ தவறு இருப்பதை அவன் உள்ளுணர்வு உணர்த்தியதாலேயே அவ்விடத்தை முழுசாக ஆராய முடிவெடுத்திருந்தான்.

அர்ஜூனனின் அனைத்து நகர்வுகளுக்கும் அர்த்தம் உணர்ந்தவனால் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. இரவில் மறைத்து மறைந்து செய்யுமளவிற்கு அவனின் தொழில் வீழ்ச்சியை காணவில்லை.

அவ்வாறிருக்கையில் அவன் இவ்வாறு குறைந்த ஆட்களோடு வேறொருவரின் தொழிற்சாலையில் பரிசோதனை நடத்துவதன் காரணம் என்ன என்ற கேள்வியே அவனின் சந்தேகத்திற்கு போதுமானதாக இருந்தது.

அத்தோடு எதையும் பலத்த ஆர்பாட்டத்தோடு செய்து பழக்கப்பட்டவன் எதற்காக சாதாரண பர்ப்பியூம் பார்மிலாவை பாதுகாப்பதற்கு அவசியமில்லாத முயற்சியை செய்திட வேண்டும்....?????

உள்ளே சென்றவர்கள் சற்று நேரத்தில் திரும்பி வந்திட
“சார்... அங்க லாப் டெஸ்ட்டிங் நடந்துட்டு இருக்கு. நான் பார்மியூலாவோட சாம்பிளை பார்த்தேன் சார்.” என்று கூற ஆதீபன் மீண்டும் அவ்விடத்தை நோட்டம் விட்டபடி மற்றைய இடங்களை பார்க்கச்சொன்னான்.

ஆதீபனின் உத்தரவின் பேரில் அவனின் ஆட்கள் சிலருடன் சாரதி செல்ல மற்றவர்கள் அங்கேயே நின்றிருந்தனர்.

சில விநாடிகளுக்கு பின் அனைத்து இடத்தையும் சோதனையிட்டு திரும்பிய சாரதியின் குழுவினர் அங்கு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த யோசனையுடனேயே அவ்விடத்தை பார்த்தவன் அங்கிருந்த காவலாளிகள் இருவரையும் ஞானப்பிரகாசத்தையும் மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

இது வழமையாய் நடைபெறுவதே. அர்ஜூனனோ ஆதீபனோ ஒருவர் மற்றவரின் இடத்தை ஆக்கிரமித்தால் பாதுகாப்பு கருதி எதிராளிகளின் ஆட்களை கைது செய்து அழைத்து சென்று விடுவர். பின்னர் உரியமுறையில் விடுவிடுத்திடுவர்.

இன்றும் அவ்வாறே ஆதீபனின் குழுவினர் அர்ஜுனனின் ஆட்களை அழைத்து செல்ல ஆதீபனும் யோசனையுடன் சாரதியுடன் அங்கிருந்து சென்றான்.

ஆதீபனும் சாரதியும் காரில் ஏறியதும் கார் கிளம்பிட மற்றவர்களும் அங்கிருந்து சென்றனர்.

செல்லும் வழி நெடுகிலும் யோசனையுடனேயே வந்த ஆதீபனை பார்த்த சாரதி
“என்னாச்சு சார்?” என்று கேட்க

“ஏதோ தப்பா இருக்கிற மாதிரி உங்களுக்கு தெரியலையா சாரதி?” என்று கேட்க

“ஏதோ தப்பு இருக்கு சார். அதை நம்மோட கண்ணுக்கு மறைவாக வச்சிருக்காங்க. அதை கண்டுபிடிக்க தான் ஒரு வாய்ஸ் ரெக்கோடரை அந்த ஞானப்பிரகாசத்தோட கோர்ட் பாக்கெட்டுல போட்டுட்டு வந்திருக்கேன். அவனோட கையில் அது தட்டுப்படாத வரைக்கும் அங்க என்ன நடக்குதுனு நாம் தெரிஞ்சிக்கலாம்.” என்று கூறிய சாரதி தன் மொபைலை எடுத்து அதில் எதையோ திறந்து அதனை ஆன் செய்தான்.

அதில் ஏதேதோ சத்தங்கள் வர அதனை இருவரும் கூர்ந்து செவிமடுத்தனர்.

தொழிற்சாலையிலிருந்து ஆதீபனின் குழுவினர் வெளியேறியதை உறுதிப்படுத்திய ஞானப்பிரகாசம் மீதமிருந்த இரு காவலாளிகளிடம்
“அர்ஜூனன் சாருக்கு இங்க நடந்ததை தெரியப்படுத்துங்க.” என்று கூறியவர் அங்கிருந்து வெளியேறி லாபிற்கு சென்றார்.

அங்கிருந்த சுவற்றினில் மாட்டப்பட்டிருந்த காலெண்டரை விலக்க அங்கொரு சிவப்பு நிற ஆளியொன்று இருந்தது. அதை ஞானப்பிரகாசம் அழுத்திய மறுநொடி அவரெதிரேயிருந்த சுவர் விலகியது.

அதனுள்ளே செல்ல அங்கே அந்த திரையை பார்த்தபடி அமர்ந்திருந்தான் இரண்டாமவன் என்றழைக்கப்பட்ட நரேன்.

உள்ளே வந்த ஞானப்பிரகாசத்தை பார்த்த நரேன்
“என்னாச்சு சார்?” கேட்க

“ஏதும் இல்லை. அடுத்த ப்ராசஸ்ஸை ஆரம்பிச்சாச்சா?” என்று ஞானப்பிரகாசம் கேட்க

“ஆமா சார். இதோ...” என்று ஸ்கீரனை காட்ட இவையனைத்தையும் மறுபுறம் சாரதியும் ஆதீபனும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
திரையை பார்த்துக்கொண்டே ஞானப்பிரகாசம்

“எல்லாம் கரெக்டா இருக்கு. இவங்க இறுதி பரிசோதனைக்கு பயன்படுவாங்க. இவங்களோட முழு ரிப்போர்ட்டையும் அனலைஸ் பண்ணிட்டு ஆப்பரேஷனுக்கு தேவையானதை ஆரம்பிக்கலாம். அதுவரைக்கும் இந்த பொண்ணு அன்கான்ஷியசாகவே இருக்கட்டும். இப்போதைக்கு ஐந்து சேம்பள்ஸ் கைவசம் இருக்கு. இன்னும் இரண்டு சேம்பிள் கிடைச்சிட்டா ஃபைனல் ப்ராசசை ஆரம்பிச்சிடலாம்.” என்று கூற நரேன்

“சார் நாம அந்த பொண்ணை விசிட் பண்ண வேண்டாமா?”என்று கேட்க

“இப்போதைக்கு வேண்டாம். அர்ஜுனன் சாரோட எதிரிகளுக்கு இங்க ஏதோ தப்பா நடக்குதுனு சந்தேகம் வந்து இந்த இடத்தை சோதனை போட்டாங்க. அவங்களை டைவர்ட் பண்ணுறது க்காக லாப்பை காட்டி சமாளிச்சிட்டேன். ஆனா அவங்க நம்புன மாதிரி எனக்கு தெரியல. நிச்சயம் அவங்க இங்க மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு இருக்கு. அதனால இப்போதைக்கு எதுவும் வேண்டாம். காலையில அர்ஜுனன் சார் வந்ததும் பாதுகாப்பை உறுதிப்படுத்திட்டு அந்த பொண்ணை வச்சிருக்க இடத்துக்கு போகலாம்.” என்று கூற நரேனும் அதனை ஆமோதிப்பது போல்

“ஆனா சார் இங்க இருந்தே அன்டர் க்ரவுண்ட் போறதுக்கான வழி இருக்கே. அதை பயன்படுத்திக்கலாமே சார்.” என்று கூற

“அதை காலையில் பார்த்துக்கலாம். இப்போ நீ ரிப்போர்ட்டை ரெடி பண்ணுற வேலையை கவனி.” என்றுவிட்டு ஞானப்பிரகாசமும் அங்கிருந்த பைலொன்றை எடுத்து புரட்டத்தொடங்கினார்.

இவர்கள் பேசுவதனைத்தையும் மறுபுறம் கேட்டுக்கொண்டிருந்த ஆதீபனுக்கும் சாரதிக்கும் அவர்களுக்கு தேவையான சாரம்சம் கிடைத்தது.

ஆதீபன் சாரதியை பார்க்க அவர் அடுத்த செய்யவேண்டியவற்றை கவனித்தார்.

ஆதீபனின் ஆட்கள் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து அத்தொழிற்சாலையில் அண்டர் க்ரவுண்ட் ஏரியாவை தேடினர்.
இப்போது காவலுக்கு இருவரை தவிர வேறு எவரும் இல்லாததால் அவர்களை தடுக்க யாருமில்லை.

அந்த அண்டர் க்ரவுண்ட் ஏரியாவை கண்டறிந்து சாரதிக்கு தகவல் சொல்ல அவரும் ஆதீபனும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்த அறையை அடைத்திருந்த இரும்புக்கதவை பல முயற்சிகளுக்கு பின் திறந்ததும் அவர்கள் அனைவர் கண்களுக்கும் இருட்டு மட்டுமே தெரிந்தது.

காவலாளி இருவர் தம் மொபைலை எடுத்து டார்ச் லைட்டை இயக்க அவ்விடத்தை நிறைத்தது அவ்வொளி.

அந்த ஒளியின் உதவியோடு தரையில் ஒரு பெண் சுருண்டு மடிந்து படுத்திருப்பதை அனைவரும் கண்டனர்.

கதவை உடைப்பதை அறிந்து கொண்ட நரேனும் ஞானப்பிரகாசமும் இங்கிருப்பது ஆபத்தென்று எண்ணி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

ஆதீபனும் கூட அவர்களை பற்றி கண்டுகொள்ளவில்லை. எப்போதுமே அவனின் குறி அர்ஜூனன் மட்டுமே என்பதால் அவன் மூலமே நடப்பதை அறிந்துகொள்ளாமென்று எண்ணி அவர்களை கண்டுகொள்ளவில்லை.

தரையிலிருந்த பெண்ணருகே சென்ற இரு காவலாளிகள் அவள் முகத்தில் லைட்டை அடித்து பார்த்துவிட்டு
“சார் இந்த பொண்ணு மயக்கமா இருக்கு.” என்று கூற சாரதியும் ஆதீபனும் அருகே வந்தனர்.

ஒரு காவலாளியிடம் தண்ணீர் எடுத்து வரச்சொல்லி விட்டு அவளை இருவரும் பார்த்திருந்தனர்.

ஆதீபனுக்கு அவளை பார்த்ததுமே அது சாஹித்யா என்று புரிந்துவிட்டது.
அவள் எப்படி இங்கே என்று யோசிக்கும் போதே காவலாளி ஒருவன் தண்ணீர் எடுத்து வர அதை வாங்கி முகத்தில் தெளித்தான் ஆதீபன்.

ஆனால் அவளிடம் எந்த அசைவுமில்லாமலிருக்க சாரதியை பார்த்தவன்
“ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம்.” என்று கூற உடனே ஆஸ்பிடல் அழைத்து செல்லப்பட்டாள் சாஹித்யா.

மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சாஹித்யாவிற்கு தாமதமின்றி சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அவள் அனுமதிக்கப்பட்டதும் ஆதீபன்
“இந்த நெட்வர்க்கோட நோக்கம் என்னதுனு சீக்கிரம் கண்டுபிடிங்க. போலிசும் இந்த விஷயத்தில் இன்வால்வ் ஆகனும். இந்த பொண்ணோட பெயர் இந்த விஷயத்துல அடிபடக்கூடாது.” என்று சாரதியிடம் கூற அவரும் அவன் கூறிய வேலையை கவனிக்க சென்றார்.

சற்று நேரத்திலேயே மருத்துவர் வெளியே வர அவரிடம் சாஹித்யாவின் உடல் நலம் குறித்து விசாரித்தான் ஆதீபன்.
“அவங்களுக்களோட ப்ளட் ப்ரஷரும், குளுக்கோஸ் லெவலும் ஜாஸ்தியாக இருக்கு.” என்று மருத்துவர் கூற

“எதனால இப்படியாகிருக்கினு தெரிஞ்சிக்கலாமா டாக்டர்?”

“மேபீ அவங்களுக்கு ஆல்ரெடி டயபெட்டிக்ஸ் இருந்திருக்கலாம். ஆனா அவங்க மெடிக்கல் ரிப்போர்ட்டை கம்ப்ளீட்டா அனலைஸ் பண்ணா தான் சரியாக தெரியும்.” என்று கூற

“டாக்டர் ஒரு சின்ன உதவி.” என்று கூறியவன் தனக்கு தெரிந்த அளவு அவளுக்கு நடந்ததை கூறியவன் அவளை முழுப்பரிசோதனை செய்யச்சொன்னான்.
அவனின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவரும் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத்தொடங்கினார்.

யூ.எஸ்ஸில் அதிரனுக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை முடிந்ததும் சஹஸ்ராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கிளம்பி ஆஸ்பிடல் வந்தவள் மருத்துவரை சந்திக்க சென்றாள்.

அவளை வரவேற்ற தலைமை மருத்துவர்
“ ஆப்பரேஷன் நல்லபடியாக முடிஞ்சிது. இனி பேஷண்ட் கண்முழிச்சதும் தான் அடுத்து என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணனும்.” என்று ஆங்கிலத்தில் கூற

“அவருக்கு கான்ஷியஸ் வர எவ்வளவு நேரமாகும்?” என்று சஹஸ்ராவும் ஆங்கிலத்தில் கேட்க

“மேபீ த்ரீ டு போர் ஹவர்ஸ். அதுவரைக்கும் அவர் எங்களோட ஆப்சர்வேஷன்ல தான் இருப்பாரு.” என்று கூற இன்னும் சில தகவல்களை கேட்டுத்தெரிந்துகொண்டவள் அதிரன் கண்விழிப்பதற்காக காத்திருந்தாள்.

மருத்துவர் கூறியது போல் மூன்று மணித்தியாலங்களின் பின் கண்விழிக்க அவனை மருத்துவர் குழாம் சோதித்தது. அவர்கள் எதிர்பார்த்தது போல் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று உறுதிபடுத்திய பின்பே அதிரனை நார்மல் வாடிற்கு மாற்றினர்.

மருந்துகளின் உபயத்தால் அதிரனுக்கு அயர்வாக இருக்க வாடிற்கு மாற்றிய பிறகும் உறக்கத்தின் பிடியிலேயே இருந்தான் அதிரன்.

அதிரனுக்கு இனி எந்த பிரச்சினையும் இல்லையென்று மருத்துவர் குழாம் உறுதியளித்த பின்பே சஹாஸ்ராவிற்கு நிம்மதியாக இருந்தது.

அதிரனின் வார்டிற்கு வந்தவள் அவனை பார்த்துவிட்டு அவனின் துணைக்கு இருந்தாள்.

அதிரனை கவனிக்க அவளின் ஆட்கள் இருந்த போதிலும் ஏனோ அவன் குணமடைவதை தன் கண்களால் பார்த்து உறுதிப்படுத்திட வேண்டுமென எண்ணினாள் சஹஸ்ரா.

அதிரன் இருந்த அறை வி.ஐ.பி அறை என்பதால் சகல வசதிகளும் இருந்தது.
அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தவள் தன் மொபைலை பார்த்தபடியே கண்ணசந்துவிட்டாள்.

சஹஸ்ரா பூங்காவிலிருந்த பென்ச் இருக்கையில் அமர்ந்து ஏதோவொரு புத்தகத்தை படித்தபடி ஹெட்செட்டின் உதவியோடு பாடல் கேட்டபடியமர்ந்திருக்க அவளெதிரே யாரோ நின்றிருப்பதை கவனித்தும் கவனியாதது போல் அமர்ந்திருந்தாள்.

அவள் எதிரே நின்றிருந்த உருவமோ அவள் கவனத்தை ஈர்க்க அங்கும் இங்கும் நகர்ந்தபடியிருக்க அவளோ அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

அந்த உருவமும் விடாது தன் முயற்சியை தொடர பொறுமையிழந்த சஹஸ்ரா புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து அந்த உருவத்தை கடந்து சென்றாள்.

சட்டென அவள் கைபற்றி தடுத்த அந்த உருவம் அவளை தன் புறம் இழுத்து அவளின் இதழ்களை தன் அதரங்களால் சிறை செய்தது.

அவ்வுருவத்தின் திடீர் தாக்குதலால் அதிர்ந்த சஹஸ்ரா அதன் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தபடியே தன் விழிகளை திறந்து பார்க்க இப்போது அந்த உருவம் அதிரனாக தெரிந்தது.

அவனை கண்டதும் நொடிக்கு நொடி விரிந்த விழிகளை கண்ட அதிரன் தன் இதழ் யுத்தத்தை நிறுத்திவிட்டு அவளின் செவியில் தொங்கிக்கொண்டிருந்த ஹெட்செட்டை அகற்றிவிட்டு கிறங்கடிக்கும் குரலில் கிசுகிசுக்க தொடங்கினான்.

“நீ எனக்கு வேணும். என்னோட காதலியா, என்னோட மனைவியா நீ எனக்கு வேணும். நீ என்ன பண்ணாலும் உன்னை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். இந்த லேடி லயனஸ் எனக்கு மட்டும் தான்.” என்றவன் அவளின் செவி வளைவிலும் தன் இதழ் பதிக்க அது தந்த கூச்சத்தில் நாணிச்சிவந்தவள் அங்கிருந்து ஓடமுற்பட தூரத்தில் கேட்க ஒலி அவளை கனவின் பிடியிலிருந்து மீட்டது.

கண்விழித்த சஹஸ்ராவிற்கு இருக்கும் இடம் உணர சில விநாடிகள் பிடித்தது. சுற்றம் உணர்ந்தவளுக்கு அப்போது தான் இத்தனை நேரம் கனவு கண்டிருக்கிறோமென்ற உண்மை புரிந்தது.

தன்னிலை உணர்ந்தவள் சுற்றி பார்க்க பெண் தாதி ஒருவர் அதிரனின் அதரங்களை துணியின் உதவியோடு ஈரப்படுத்திக்கொண்டிருப்பதை கண்டாள்.

அவர் தன் வேலையை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்து சஹஸ்ரா அவர் வந்ததும் மன்னிப்பு வேண்டினாள். பின் அதிரனை பற்றி விசாரித்துவிட்டு அவன் விழித்திருக்கிறானா என்று கேட்க

“இல்லை மேடம். அவரு இன்னும் அரை மயக்கத்துல தான் இருக்காரு. எப்படியும் முழுதாக மயக்கத்தில் இருந்து தெளிய இரண்டு நாளாகும்.” என்று கூற சரியென்றவள் அவரை அனுப்பிவிட்டு சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.

சோஃபாவில் அமர்ந்தபடியே அதிரனை பார்த்திருந்தவளுக்கு மீண்டும் அக்கனவு நினைவில் வந்தது. அக்கனவோடு சேர்த்து பாக்சிங் சென்ட்ரில் நடந்த சம்பவமும் அவள் மனத்திரையில் ஓடியது.

அந்நேரத்தில் இருந்த பதற்றில் அவள் எதை பற்றியும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது அந்நேரத்தில் அதிரனின் செயல் அவள் மனதை கவர்ந்ததை இந்நொடி உணர்ந்தாள் சஹஸ்ரா.

ஆனால் ஏனோ இந்த உணர்வு அவளை சஞ்சலப்படுத்துவதாக இருந்திட அவ்வுணர்வை உடனடியாக துறந்திட வேண்டுமென உறுதியெடுத்தாள் சஹஸ்ரா.

தன் உறுதித்தன்மை மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தன்னுடைய இந்த முடிவை செயற்படுத்த முடியுமென்று எண்ணியிருந்தவளை பார்த்து காலச்சக்கரம் கால் மேல் காலிட்டு கேலியாய் சிரிப்பதை அவள் அறிய நேர்ந்தால்........????
 




Last edited:

Farhana

மண்டலாதிபதி
Joined
Sep 2, 2021
Messages
127
Reaction score
161
Location
Rakwana
Suspensa iruku.aadheebankum sahasrakum enna relationship....? Adhiranku aal irukuepe....
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
Omg, இது என்ன பொண்ணுங்க கிட்ட இருந்து பெர்யூம் தயாரிக்கும் கும்பல் ஆ😳😳😳

அதுக்கு தான் சாஹியா கடத்தி இருப்பாங்களா🤔🤔

இது என்ன ட்ராக் மாறுது, அதிக்கு ஜோடி சரா வா, ஆன அதி & சஹி தானே லவ் பண்ராங்க🤔🤔🤔🤔

அடேய் அர்ஜுன் எங்க டா இருக்க நீ?????

இன்னைக்கு எபிசோடில் பிரணிதன் காணோம்😒😒😒😒

ஜீ, கொஞ்சம் கேப் விடாம எபிசோட் தாங்க பா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top