• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆயுட்காரகனே 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 76

புதிய முகம்
Author
Joined
Nov 15, 2021
Messages
14
Reaction score
39
கலகலப்பான பேச்சில்
முளைத்திடும் காதல் கூட
கனத்திடும் ஒற்றை வார்த்தையால்
சுவடின்றி தகர்ந்திடுகிறது..


தன் முன்னே நின்றிருப்பவளை பார்த்து அடி வயிறு அரைடசன் பேதி மாத்திரையை உள்வாங்கியது போல் கலங்கிய போதிலும் அதன் வெளிப்பாட்டினை முகத்தில் காட்டாது மறைக்க அதிரன் பெரும்பாடு படவேண்டியிருந்தது.

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவனுக்கும் தனக்குமான இடைவெளியை குறைத்த சஹஸ்ரா அவன் புறம் குனிய அதிரனுக்கோ அதிரினலின் ஹார்மோன் அந்தாட்டிகா கண்டத்தை அடைந்திடும் வேகத்துடன் சுரக்கத்தொடங்கியதை பார்க்காமலே உணர்ந்திடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அவனை நெருங்கியவள் அவனுக்கு எதிரே அவளின் கரத்தினை நீட்ட அதிரனோ மைண்ட் வாய்ஸில்
“டேய் இந்த லேடி ஹிட்லர் என்னத்துக்கு ஸ்கெட்ச் போடுதுனு தெரியலையே.. நாம வேற இவங்க இருக்கிறதை பார்க்காமல் பழக்கதோஷத்துல பல படத்தை ஓட்டிட்டோமே. கடவுளே இந்த ரித்திகா சிங்கிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து ஆண்டவா.” என்று மனதிற்குள் வேண்டுதலையும் வைக்க தவறாதவன் அவளை தடுத்திடும் முயற்சியில்

“மேடம்.. அது.. நான்.. நீங்க..பேச.. சே.. நான் பேசும்போது...” என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தவள் அவனின் மறுபுறமிருந்த பெல்லை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.

அவளது செயலுக்கான அர்த்தம் அப்போது தான் அதிரனுக்கு புரிந்தது.

அவள் விலகியதும் அவன் பெருமூச்சு விட அப்போது கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள் தான்வி.

அவளிடம் அதிரனின் உணவு பற்றி சஹஸ்ரா வினவ
“ஒரு ஸ்கேன் எடுக்கனும் மேம். அதை முடிச்சிட்டு தான் சாப்பிடனும்.” என்று கூற சரியென்றவள் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.
இங்கு அதிரனோ குழம்பிப்போய் அமர்ந்திருந்தான்.

“பெல்லடிக்க வந்தாங்க சரி. அதுக்குன்னு குறுக்கால வந்தா விழனும்? ஒன்று சுத்தி வந்து பெல்லை அடிச்சிருக்கலாம். இல்லைனா நம்மகிட்ட சொல்லியிருக்கலாம்... இப்ப இவங்க நம்மளை கிண்டல் பண்ணாங்களா... பயமுறுத்துனாங்களா... இப்படி வந்து சிக்கிட்டியே மாப்பு... ஆப்பை அட்வான்ஸ் கொடுத்து வாங்குன ஒரே ஆள் நீ தான்டா அதிரனு.” என்று தனக்குள் புலம்பியவனுக்கு தான் எதற்காக புலம்புகிறோம் என்ற காரணமும் புலப்படவில்லை.
அழைப்பை துண்டித்துவிட்டு வந்த சஹஸ்ரா மீண்டும் பழைய இடத்திற்கே சென்று அமர்ந்துவிட்டாள்.

அவள் எதிர்பார்த்தபடியே அதிரனும் அவளை திசைமாறாமல் கவனித்துக்கொண்டிருந்தான்.
இதை பார்த்த சஹஸ்ராவின் உள்ளம் உச்சி குளிர்ந்தது.

அவளை சூழ்ந்திருக்கும் ஆடவர்கள் அவளிருக்கையில் அவள் முன் பேசுவதற்கே பயப்படுவர். அதற்கு அவளது ஆளூமையும் ஒரு காரணமே. ஆனால் இவனோ தன்னை கண்டுகொள்ளாதது மட்டுமின்றி தன் முன்னேயே இன்னொரு பெண்ணிடம் கடலை வறுத்துக்கொண்டிருக்கிறான்.
சாதாரணமாகவே அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பழக்கப்பட்டவளுக்கு தனக்கென ஒரு பலியாடு சிக்கிய பின்பும் அவனை ஆட்டிப்படைக்காவிடின் அவள் சஹஸ்ரா அல்லவே...

சற்று நேரத்தில் அதிரனை ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து சென்றனர்.

அவனை ஸ்கேனிற்கு அழைத்து சென்றதும் சஹஸ்ரா மருத்துவரை பார்க்க சென்றாள்.

அவரிடம் அதிரனின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு அவனது டிஸ்சார்ஜ் பற்றி விசாரித்தாள்.

மருத்துவரும் அவனின் அனைத்து ரிப்போர்ட்டுக்களையும் பார்த்தபின் அது பற்றி தெரிவிப்பதாக கூற தன் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டவள் மீண்டும் அதிரனிருந்த அறைக்கு வந்தாள்.

அவள் வந்து சற்று நேரத்தில் அதிரனும் வந்திட அவனது உணவும் வந்து சேர்ந்தது.

சஹஸ்ராவும் தன்னுடைய உணவை அங்கு வரவழைத்து அதிரனோடு உண்ணத் தொடங்கினாள்.

எப்போதுமே அமைதியாக இருந்து பழக்கமில்லாதவனுக்கு சஹஸ்ராவின் அமைதி சற்று சங்கடமாக இருந்தது.

முதலில் அவள் விரும்பமாட்டென்று அமைதியாயிருந்தவனால் இரண்டு கவளத்திற்கு மேல் உணவு உள்ளே இறங்கமாட்டேனென்று அடம் பிடித்தது.

அடிபடாத கையினால் கரண்டியின் உதவியோடு உணவை எடுத்தவன் அதை பார்த்தபடியே யோசனையிலிருக்க அதை கவனித்த சஹஸ்ரா
“சாப்பிடலையா?”என்று கேட்க அதிரனோ இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவன் போல்

“எனக்கு பேசலைனா சாப்பிடு உள்ளே இறங்காது மேம்.” என்று கூற அவனை விசித்திரமாக பார்த்தாள் சஹஸ்ரா.

“வாட் யூ மீன்?” என்று சஹஸ்ரா கேட்க

“அது மேம். ஐ யூஸ்டு சிட் சேட் வைல் ஈட்டிங்.” என்று அதிரன் கூற சஹஸ்ராவிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

“மேம் மே ஐ...”என்று அனுமதி கேட்டவனை பார்க்க பாவமாக இருந்தபோதிலும் அவனை சீண்டுவதற்காக

“சாப்பிடும் போது அமைதியாக சாப்பிட்டா தான் எனக்கு சாப்பாடு உள்ள இறங்கும்.” என்று கூறியவள் தன் உணவை தொடர்ந்தாள்.

சற்று நேரம் அவளை பார்த்தபடியே இருந்த அதிரனுக்கு இது சரிப்படாது என்று புரிந்திட தட்டிலிருந்து ஒரு கவளத்தை எடுத்து அதனை முகத்திற்கு நேரே பிடித்தபடியே
“லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா.... லேசா லேசா நீண்ட கால உறவிது லேசா.. லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா..எனக்கெனவே உலகினிலே... பிறந்தவளே...” என்று பாடியவன் அந்த கவளத்தை வாய்க்கு இறையாக்கி கரைக்கத்தொடங்கினான்.

அவனது பாடலும் அவனின் செய்கையும் அவள் மனதினை புன்னகைக்க செய்த போதிலும் அவள் முகமோ அவனை முறைத்தபடியே இருந்தது.

ஆனால் அதிரனோ இதையெல்லாம் கவனித்தது போல் தெரியவில்லை.

அடுத்த கவளத்தை எடுத்தவன்
“உன் மேல் ஆசைப்பட்டு, உள்ளுக்குள்ள விருப்பபட்டு, வாய்க்குள்ள போட போறேன். கிட்ட வரீயா...” என்றவன் அடுத்த கவளத்தை அசால்டாக வாயினுள் திணித்தான்.

இவனின் அலப்பறையை பார்த்திருந்த சஹஸ்ராவிற்கோ சிரித்துவிடுவோமோ என்ற பயமே அதிகமாக இருந்தது.
எப்போதும் மனதின் உணர்வுகளை மனதினுள் மறைத்தே பழக்கப்பட்டவளுக்கு இன்று சிரிப்பு வந்தே தீருவேனென்று அடம் பிடித்தது.
அவளுக்குமே ஒரு நிமிடம் மனம் விட்டு சிரித்தால் என்ன என்று கூட தோன்றியது.

சிரிப்பதா வேண்டாமா என்று யோசித்திருந்தவளை யோசிக்கவிடாமல் சதி செய்தது அதிரனின் அடுத்த பாடல்.

“பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்.. சுடசுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்... ஒரு வாய் தவணை முறையில் என்னை கொல்லுதே..
வயிறு வந்து பசியால் துடிக்க
நாக்கு வந்து உன்னால் துடிக்க
மிச்சம் வைக்க மனசே இல்ல..
அடடா.. அடடா.. அடடா...அடடா...” என்றவனின் பாடல் வரிகளும் அவன் பாடிய தொனியும் அவள் சிரிப்பினை உதிர்த்திட பாலம் அமைத்து கொடுத்தது.
உணவை மென்றபடியிருந்தவனுக்கு ஏதோ தோன்ற சட்டென திரும்பிபார்த்தான் அதிரன்.

சஹஸ்ரா தன் சிரிப்பை மறைக்க பெரும்பாடுபடுவதை கண்டுகொண்டவன்

“மேடம் சிரிப்பு வந்தா சிரிச்சிடுங்க.. அதை ஏன் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திட்டு இருக்கீங்க. காசா பணமா சிரிப்பு தானே. மனசு விட்டு சிரிச்சிடுங்க.” என்றவனின் வார்த்தைகள் அவளின் சிரிப்பினை கட்டுப்படுத்த போதுமானதாக இருந்தது.
அவனை முறைத்தவள் விரைந்து தன் உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவனோ சற்று பயந்தபடியே அவள் செல்லும் வரை பார்த்திருந்தவன் அவள் சென்றதும் ஒரு பெரு மூச்சினை வெளியேற்றிவிட்டு சஹஸ்ரா தனக்காக கொடுத்துச்சென்றிருந்த மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

மறுபுறம் எடுக்கப்பட்டதும்
“யோவ் மச்சான்... எதுவும் சரியாக வரும்னு எனக்கு தோனலை. ரெட் லைட் பாசிஷன் மாறுங்கிற நம்பிக்கை எனக்கில்லை.” என்று கூற மறுபுறம் ஏதோ கூறியது.

“யோவ் எல்லாம் தெரிஞ்சும் கோர்த்துவிட்டுட்டு வேடிக்கை பார்க்கிற உன்னை என்ன பண்ணுறதாம்?”என்று அதிரன் கூற மறுபடியும் மறுபுறம் ஏதோ கூறியது.

“எல்லாம் என் கிரகம் இப்படி வந்து மாட்டிக்கிட்டு அல்லாடுறேன். பேசாமல் அல்லக்கையாகவே இருந்திருக்கலாம். குடும்பமாய்யா இது?”என்று அதிரன் கூற மீண்டும் மறுபுறம் ஏதோ கூறியது.

“ஐயா ராசா தயவு செய்து லெக்சர் பண்ண ஆரம்பிச்சிடாத. எல்லாத்தையும் செய்றேன். செஞ்சு தொலையிறேன்.” என்றவனிடம் மறுபுறம் கூறிய செய்தி கேட்டு திகைத்தவன்

“டேய் இப்போ ஏதும் பிரச்சினையில்லையே.. ஆனாலும் உனக்கு எங்கயோ மாங்காய் சைஸ்ல மச்சம் இருக்குடா. குருவி பிடிக்கபோன இடத்துலே கூண்டோட கிளியை தூக்கிட்டு வந்துட்டியே.. ஆனா அது கிளி தானேனு அசால்டா இருந்தன நடக்கப்போற சேதாரத்துல இருந்து உன்னை யாராலும் காப்பாத்த முடியாது.”என்றவனிடம் மறுபுறம் ஏதோ கூற

“பேசு மவனே பேசு. இன்னும் கொஞ்ச நாளுல நீ பெட்டி பாம்பா அடங்கப்போற சீனை நானும் பார்க்கத்தானே போறேன்.” என்றவனும் சில விவரங்களை தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.

மருத்துவமனையிலிருந்து கிளம்பிய சஹஸ்ரா நேரே தன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றவள் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

அறைக்கதவை பூட்டியதும் இத்தனை நேரமாக அவள் கட்டுப்படுத்தியிருந்த மொத்த சிரிப்பையும் வெளியே கொட்டிவிட்டாள்.

அவளும் மறக்கவேண்டும், நினைக்கக்கூடாது என்று மனதிற்குள் கூறிக்கொண்டே தான் வீட்டிற்கு வந்தாள். ஆனால் அவள் நினைக்கும் போதெல்லாம் அவன் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் நினைவில் வந்து அவளது கட்டுப்பாட்டை மீறி சிரிக்கத்தூண்டியது.

சிரித்து களைத்தவள் தரையிலமர சிரிப்பு நிற்பேனா என்று சண்டித்தனம் செய்தது.
பல முயற்சிகளுக்கு பின் தன் சிரிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தவளுக்கு அப்போது தான் வேலை பற்றிய நினைவே வந்தது.

வீட்டிலிருந்து கிளம்பியவள் நேரே அலுவலகத்திற்கு சென்றாள்.
ஆதீபன் ஏற்பாடு செய்திருந்த வீட்டிலிருந்து மறுநாள் காலை அமுதாவும் சாஹித்யாவும் வேலைக்கு கிளம்பினர்.

அவர்களிருவரும் தயாராகி வெளியே வரும் போது அவர்களை அழைத்து செல்ல காரொன்று வாசலில் தயாராக நின்றது.

அதை பார்த்ததுமே அது யாருடைய ஏற்பாடென்று புரிந்திட இருவரும் ஏதும் பேசாது உள்ளே அமர்ந்ததும் அக்கார் அங்கிருந்து கிளம்பியது.
அமுதா தன் அலுவலகத்தில் இறங்கியதும் சாஹித்யா ஆதீபனின் வீட்டிற்கு சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் அவ்விடம் முழுவதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பதை கண்டவள் தன் மேலாளரிடம் சென்றாள்.

அவரும் பணியை மேற்பார்வை செய்வதில் பிசியாக இருக்க தன் வருகையை தெரியப்படுத்தியவள் அன்றைய நாளுக்கான தன்னுடைய வேலை பற்றி வினவினாள்.

“சார் இன்னும் மூன்று நாளைக்கு வீட்டுலயே தான் இருக்கப்போறதாக பி.ஏ சொல்லியிருக்காரு. அதனால மீட்டிங்ஸ் எல்லாமே இங்க தான் நடக்கும். நீ என்ன பண்ணுறனா சிந்து கூட போய் மீட்டிங் ரூமை அரேன்ஜ் பண்ண ஹெல்ப் பண்ணு. அந்த வேலை முடிஞ்சதும் எனக்கு வந்து ரிப்போர்ட் பண்ணு. அடுத்த என்ன செய்யனும்னு சொல்றேன்.” என்று கூறிய மேலாளர் சிந்துவை அழைத்து சாஹித்யாவை அவளோடு அழைத்துச்செல்லக்கூறினார்.

சிந்து என்று அழைக்கப்பட்ட பெண்ணும் சாஹித்யாவை அழைத்துக்கொண்டு மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தாள்.
அவ்விடம் இன்னொரு அலுவலகம் போல் இருந்தது.

அவ்விடத்தின் நடுவில் நீண்ட மேசை போடப்பட்டிருக்க எதிரே ப்ரொஜெக்டரும் ஸ்க்ரீனும் பொருத்தப்பட்டிருந்தது.

சுவரோரமாக வைக்கப்பட்டிருந்த சிறு ராக்கைகளில் பல கோப்புகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தையும் ஒரு பார்வையில் குறிப்பெடுத்தவள் சிந்துவுடன் சேர்ந்து அவ்வறையை சுத்தம் செய்யத்தொடங்கினாள்.
அனைத்தையும் அவர்கள் செய்து முடித்ததும் மேலாளருடன் உள்ளே வந்தார் சாரதி.

மீட்டிங் நடைபெறும் நேரங்களை தெரியப்படுத்தியவர் அதற்கு தேவையானவற்றை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர்கள் சென்றதும் இன்னும் இருவரை வரவைத்து மொத்த வேலையையும் முடித்தார் மேலாளர்.

இவ்வாறு அன்றைய நாள் முழுவதும் வேலை அதிகமாக இருக்க வழமைக்கு மாறாக சோர்ந்துவிட்டாள் சாஹித்யா.
சோர்வு பசியை மறக்கடித்து உறக்கத்தை வேண்டிநின்றது.

கடமைக்காக இரண்டு வாய் உண்டவளுக்கு உணவு உள்ளே இறங்க மறுத்துவிட்டது.

அன்றைய நாளுக்கான கடைசி வேலையாக ஆதீபனின் ஆபிஸ் அறையினை சுத்தம் செய்ய அங்கு சென்றாள் சாஹித்யா.

அவளுடன் இன்னும் இருவர் இருக்க மூவரும் சேர்ந்து அவ்வறையை சுத்தம் செய்து முடித்தனர்.

வேலை முடிந்ததும் மற்றவர் இருவரும் அங்கிருந்து சென்றிட அவர்களுடன் செல்ல முயன்ற சாஹித்யாவிற்கு அப்போது தான் ஹெயார் ப்ரஸ்னரை மாற்றவில்லை என்ற நினைவு வந்தது.

அதை மாற்றிவிட்டு வருவதாக கூறியவள் மற்றவர்களை அனுப்பிவிட்டு அறைக்குள் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவளுக்கு இரண்டு அடிக்கு மேல் காலை அசைக்கமுடியாதபடி நடுங்கியது.

கஷ்டப்பட்டு சமாளித்தவள் ஹேயார் ப்ரஸ்னரை மாற்றிவிட்டு அவ்வறையிலிருந்து வெளியே வர முயன்றவளது பார்வையை ஏதோ மறைப்பது போலிருந்தது.

மற்றவர்கள் ஏற்கனவே வெளியே சென்றிருக்க சுவற்றை பிடித்தபடியே வெளியே வந்தவள் பாதை மறந்து வெளியே செல்வதற்கு பதிலாக அங்கிருந்த அறையொன்றினுள் நுழைந்தவளுக்கு அதன் பின் நடந்த எதுவும் நினைவில் இல்லை.

உடைமாற்றுவதற்காக தன் அறைக்கு வந்த ஆதீபன் நேரே அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளித்துவிட்டு ஆப்டர் பாத்துடன் வெளியே வந்தவன் உடைமாற்றும் அறைக்குள் செல்லும் போது தான் அறையில் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தான்.

அவனது மெத்தை விரிப்பு ஒரு புறமாக கசங்கியிருப்பதை கண்டவன் அவ்விடத்தை ஆராய அங்கு தரையில் மயங்கிக் கிடந்தாள் சாஹித்யா.

முதலில் அவளை கண்டு அதிர்ந்தவன் விரைந்து அவளருகே சென்று அவளை தூக்கி மெத்தை மீது கிடத்தினான்.

அவளை எழுப்ப முயன்றவனது முயற்சி தோல்வியில் முடிந்திட விரைந்து மருத்துவரை வரவழைத்தான்.

விஷயம் தெரிந்து மேலாளரும் சாரதியும் அவனது அறைக்கு வந்தனர்.

சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவர் அவளை சோதித்துவிட்டு அவள் பலவீனமான இருப்பதாக கூறியவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்.

சாஹித்யா அவனறையிலேயே ஓய்வெடுக்கட்டும் என்று கூறியவன் ஒரு பணிப்பெண்ணை அவளின் துணைக்கு இருத்திவிட்டு மற்றவர்களுடன் அவனும் அறையிலிருந்து வெளியேறினான்.

சற்று நேரத்தில் கண்விழித்த சாஹித்யாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

யோசித்து பார்த்தவளுக்கு ஒவ்வொன்றாய் நினைவு வர படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.

அவள் எழுந்தமர்வதை பார்த்த மற்ற பணிப்பெண் அவளருகே வர என்ன நடந்ததென்று கேட்டு தெரிந்துகொண்டாள்.

அப்போது தான் சாஹித்யாவிற்கு தான் ஆதீபனின் அறையிலிருப்பது புரிந்தது.

உதவிக்கு இருந்த பெண் அவளுக்கு குடிக்க சூடாக சூப் எடுத்து வர அதை குடித்து முடித்தவளுக்கு வடிந்திருந்த மொத்த சக்தியும் மீள் கிடைத்த உணர்வு.

அது தந்த உத்வேகத்தில் வீட்டிற்கு கிளம்புவதாக கூறிய சாஹித்யாவை தடுத்தாள் சகப்பணிப்பெண்.

“சார் இன்னைக்கு உங்களை இங்கேயே ரெஸ்ட் எடுக்கச் சொன்னாரு.” என்று கூறி அப்பெண் தடுக்க

“எனக்கு ஒன்னும் இல்லைங்க. இப்போ நான் நல்லா தான் இருக்கேன்.” என்று அவள் கூறிக்கொண்டிருந்தபோது

“அப்படி நல்லா இருக்கவங்க எதுக்காக என்னோட ரூம்ல வந்து மயங்கி விழனும்?” என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க இரண்டு பெண்களும் திரும்பி பார்த்தனர்.

அங்கு ஆதீபன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது.
சாஹித்யா அருகே வந்ததும் ஆதீபன் மற்ற பெண்ணை அங்கிருந்து கிளம்பிச் சொல்ல அவளும் நொடி தாமதிக்காது அங்கிருந்து கிளம்பினாள்.

இதுவரை நேரம் தைரியமாக நின்றிருந்த சாஹித்யாவிற்கு இப்போது நெஞ்சம் படபடக்கத்தொடங்கியது.

சிங்கத்தின் குகையினுள் மாட்டிக்கொண்ட முயல்குட்டியை போல் அங்கு தனியாளாக நின்றிருந்தாள் சாஹித்யா.

பதில் பேசாமல் அமைதியாக நின்றவளை நோக்கி தன் அடிகளை நகர்த்தினார் ஆதீபன்.

அவன் ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க சாஹித்யாவோ இரண்டடி பின்னால் சென்றாள்.

இது சில விநாடிகள் தொடர கடைசியாக அங்கிருந்த சுவர் அவளின் நடைக்கு தடையாகிட அந்த சுவற்றோடு புதைந்திடும் அளவிற்கு அதனோடு ஒட்டி நின்றாள் சாஹித்யா.

சுவரோடு நின்றவளை கேலியாக பார்த்தவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவள் கைபற்றி இழுத்து தரையில் தள்ளினான்.

இதை எதிர்பாராத சாஹித்யாவோ அதிர்ந்து போய் தரையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.

“உன்னை அவ்வளவு சீக்கிரத்துல விடுறதுக்க என்னோட இடத்துக்கே வரவச்சேன்? என்னை பத்தி தப்பா பேசுனவங்களையே நான் சாதாரணமாக மன்னிச்சு விடமாட்டேன். நீ என் காலரை பிடிச்சு கேள்வி கேட்டுருக்க...உன்னை ஸ்பெஷலாக கவனிக்க தான் என் இடத்துக்கே வரவச்சிருக்கேன். “ என்றவனின் வார்த்தைகளில் வெளிறியவன்
“அப்போ..... அப்போ... என்னை.... கடத்துனதும் நீங்க தானா...” என்று தந்தியடித்த நாவினை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வார்த்தைகளை உதிர்த்தவளை பார்த்து ஏளனமாய் சிரித்தான் ஆதீபன்.

“இப்போ கூட என்னோட வேலை தான் அதுனு உனக்கு புரியலையா?” என்று அரக்கனின் அதிகாரத்துடன் கேட்டுவிட்டு உள்ளம் அதிர்ந்திடும் வண்ணம் சிரித்தவனை பார்த்தவளுக்கு முள்ளந்தண்டு சில்லிட்டது.

“அப்போ.... அப்போ... நீங்க...” என்று வார்த்தைகள் தந்தியடிக்க

“அப்போ மட்டுமில்லை... உன்னோட ஆயுசு முழுக்கா நான் உனக்கு தண்டனை தரப்போறேன். நீ சாகும் வரைக்கும் அந்த தண்டனையை அனுபவிக்க போற...” என்றவனது வார்த்தைகள் ஏதோ விபரீதத்தை உணர்த்த அங்கிருந்து தப்பிச்சென்றிடும் முடிவோடு எழுந்து ஓட முயன்றவளை ஒரு பாய்ச்சலில் தடுத்து நிறுத்தியவன் அவளை சுவரோடு அழுத்தியபடியே
“ நீ எங்க தப்பிச்சு போக நினைச்சாலும் உன்னை மறுபடியும் என்கிட்டேயே வரவைக்கிறதுக்கான இரண்டு ஆயுதம் என்கிட்ட இருக்கு. பார்க்கிறியா?” என்றவன் தன் ஒரு கையால் பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்து ஒரு காணொளியை இயக்கினான்.

அதை பார்த்தவளது விழிகள் பயத்தில் விரிவதை பார்த்தபடியே மற்றைய காணொளியை இயக்கினான்.

இரண்டாவது காணொளியை பார்த்தவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

இரண்டு காணொளியையும் காண்பித்ததும்
“அவ..அவ..அவங்க... இரண்டு பேரும்...?”

“முதல் வீடியோவில் உள்ளவனுக்கு இப்போ எந்த ஆபத்தும் இல்லை. ஆனா ஆபத்து வரலாம். “ என்றவனை அரண்டுபோய் பார்த்தாள் சாஹித்யா.

“இரண்டாவது ஆளை சிக்க வைக்க ஒரு சென்ட்(send) பட்டன் போதும்.” என்று கூற சாஹித்யா கதிகலங்கிப்போய் நின்றாள்.

“ஆனா இது இரண்டும் நடக்காமல் இருக்கணும்னா அது உன்னோட பதில்ல தான் இருக்கு.” என்று ஆதீபன் கூற அவனை இயாலாமையுடன் பார்த்தாள் சாஹித்யா.

அதை பொருட்படுத்தாதவன் போல்
“உன்னோட யெஸ் ஆர் நோங்கிற பதில் என்னோட முடிவை முடிவு செய்யும்.” என்று கூற அதிர்ச்சியில் நின்றிருந்தவளுக்கு அவன் பேசுவதை கேட்பதை தவிர வேறேதும் செய்யமுடியவில்லை.

“உ..உங்களுக்கு... என்ன வேணும்...?” என்று குழறலாக கேட்டவளிடம்

“ஐ நீட் யோர் பிசிகல் ஹெல்ப்.”என்றவனின் வார்த்தைகளில் விக்கித்து நின்றாள் சாஹித்யா.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
En da velai vamgura sari adu enna physical help, adhiran, adhiban, sahithya, sahasra nu names enaku confuse agude ma, unaku eppadi ma confuse agama irukiya ma, nice update dear thanks.
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
892
Reaction score
1,334
Location
Chennai
Enda dei, physical help na edha da solra,chair thukadhurdu,table ah thikardhu adhuva...chewingum kekra Mari asalt ah kekara.kanna katudhuda sami
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் பாவி பயலே ஏண்டா இப்படி🙄🙄🙄🙄

அதி நீ செம்ம, சாரா வா கூட சிரிக்க வெச்சிட்டியே😂😂😂😂

அதி போன்லா பேசினது ஆதி கூட தானே, அது தான் அவனை மச்சான்னு சொல்றான்.....

ஆன ஆதி ஏன் இப்படி பண்றான்🤔🤔🤔🤔

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top