• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழி சூழ் நித்திலமே 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம்...

ஆழி சூழ் நித்திலமே நாவலின் 14வது பதிவோட வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி....

ஆழி

மீனவர்கள் பற்றிய சில தகவல்கள்...


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமம் தருவைக்குளம். இங்குள்ள மீனவர்கள் தனிச்சிறப்பானவர்கள். அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள். காரணம், இவர்களுக்கு கடல்வளத்தைப் பேணுவதன் அவசியம் தெரிந்திருக்கிறது. மனிதனின் சுயநலத்தால் காலநிலை மாறி கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தருவைக்குளம்மீனவர்களோ நான், எனது குடும்பம், எங்களுக்கான சொத்து என்றெல்லாம் சுயநலமாக இல்லாமல் கடல் வளத்தை இப்படித்தான்; இவ்வளவுதான் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புரிதலுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

''எங்கள் ஊரில் எல்லோருமே ஊர்க் கட்டுப்பாட்டுக்கு இணங்கிதான் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். யாரும் இழுவை மடி, சுருக்கு மடியைப் பயன்படுத்துவதே இல்லை. கில் நெட் (Gill Net) எனப்படும் செவுல் வலையை மட்டுமே பயன்படுத்துகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக இப்படித்தான் மீன் பிடித்து வருகிறோம். நான் இங்கு நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர். இதேபோல் பெரிய விசைப்படகுகள் வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மாலை மூன்று மணிக்குப் பின்னர்தான் கடலுக்குச் செல்வார்கள். நாங்கள் அதிகாலை முதல் 3 மணி வரை கடலுக்குச் செல்வோம். இந்தக் கட்டுப்பாட்டினை ஒருநாளும் நாங்கள் மீறுவதில்லை. அப்படியே யாரேனும் விலகிச் செல்ல முயன்றாலும் ஊர்ப் பெரியவர்களின் கண்டிப்புக்கு உள்ளாக நேரிடும்.
சந்தையிலிருந்து வரும் தேவை எவ்வளவாக இருந்தாலும் அந்த நெருக்கடிகளுக்காக நாங்கள் மீன் வளத்தை துஷ்பிரயோகம் செய்வதில்லை. ஒருநாளைக்கு கடல் வளத்தை இப்படித்தான்; இவ்வளவுதான் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புரிதலுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த முறையை நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோம். 2004 சுனாமிக்குப் பின்னரே கடல் வளத்தில் நாங்கள் கண்கூடாக பல்வேறு மாற்றங்களைப் பார்க்கிறோம். கடல் வெப்பம் அதிகரித்திருப்பதை எங்களால் கடலுக்குச் செல்லும்போது உணர முடிகிறது. முன்பெல்லாம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கச்சாங் காற்று வீசும். அது வரும் வழியில் மீன்களை அப்படியே சுழற்றி இழுத்துக் கொண்டு வரும். ஆனால், சமீபகாலமாக கச்சாங் காற்றே இல்லை. இதனால் மீன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பார்த்த மீன்களை இப்போதெல்லாம் காண முடிவதே இல்லை. முரள், வாவல், நெத்திலி, விலை மீன் போன்ற வழக்கமான மீன்கள் மட்டும்தான் வலையில் சிக்குகின்றன.

புவி வெப்பமடைதலால் மழை குறைந்திருப்பதும் கடல் வளம் குன்ற முக்கியக் காரணம் என நாங்கள் உணர்கிறோம். மழை இல்லாததால் இங்குள்ள குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன. முன்பு எங்கள் ஊரில் புதிய குளம், பழைய குளம் என இரண்டு குளங்கள் இருக்கும். மழை பெய்யும் காலங்களில் இந்தக் குளங்களில் இருந்து தண்ணீர் கடலில் கலக்கும். கடல் நீரில் இப்படி நன்னீர் கலப்பதும் அவசியம். ஆனால், இப்போதெல்லாம் அரசாங்கம் இதைத் தடுக்கின்றது. எங்கு நீர் ஆதாரம் இருந்தாலும் அது மக்கள் பயன்பாட்டுக்கு என தேக்கி வைத்துவிடுகிறது. குறைந்தது 40 நாட்களாவது கடலில் நன்னீர் கலந்தால் மட்டுமே கடலில் மீன்வளம் பெருகும்.

கடல்வளம் பெருக வேண்டுமானால் வளத்தைப் புரிதலுடன் கையாள வேண்டும். பவளப்பாறைகள் கடல்வளத்தைப் பாதுகாக்க அவசியமானது என்பதை தருவைக்குளம் மீனவர்களாகிய நாங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறோம். அதனால்தான் பவளப்பாறைகளைச் சிதைக்கும் மீன்பிடி முறைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை. இந்தக் கடல் மாதா எங்களுக்குக் கொடுக்கும் வளம் எங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். சந்ததி சந்ததியாகக் கிடைக்க வேண்டும் என்றால் கடல்வளமே நம் வளம் என்ற பொதுநலம் வேண்டும்'' என்றார்.


மீனவர்களின் அனுபவ அறிவு பாரம்பரிய அறிவு முன் நம்மால் சவால் விட்டு நிற்க முடியாது. வாடைக் காற்று, கோடைக் காற்று, கச்சாங் காற்று என 8 விதமான காற்றை வைத்தே எங்கே எப்போது எந்த வகையான மீன் கிடைக்கும் என்று விரல் சொடுக்கும் நேரத்தில் சொல்லிவிடுகின்றனர்.

ஆனால், காலநிலை மாற்றத்தால் இந்தக் காற்று வகைகளில் பல இப்போது வீசுவதே இல்லை என்பது கடலோடிகளுக்கான துயரம் மட்டுமல்ல நமக்கான எச்சரிக்கையும்கூட.

1599450471103.jpg
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top