• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம்...

ஆழி சூழ் நித்திலமே நாவலின் 8வது பதிவோட வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

ஆழி (அ)

ஆழி (ஆ)


மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :


கடல் வளம் அழிந்து வருவது நிஜம்.

இதனை ஏற்படுத்துவது பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளும் இன்ன பிற காரணிகளும் ஆகும்.

ட்ராலர் மூலம் அதிகமாக மீன் பிடிப்பதால் மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

கடல்கள் வெப்பமடைவதால் மண் நகர்வுகள் அதிகமாகி வருகிறது.

ஊரல், சிரா, வெள்ளகம்பன் ஆகிய வகை மீன் வகைகள் முற்றிலும் அழிந்துவிட்டது.

பால் சுறா, கல்வெட்டி, கொம்பன் சுறா ஆகியவை கிடைத்தாலும், கிடைக்கும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

வினோதமாக, முன்பு கேரளா பகுதியில் அதிகமாக கிடைத்த மத்தி மீன் இப்பொழுது நம் பக்கத்தில் அதிகமாக கிடைக்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை இப்பகுதியில் டன் கணக்கில் கிடைத்த மண்டை கழுகு என்னும் மீன் வகை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது.

1980கள் வரை கட்டை சீலா, கொம்பன் சுறா ஆகிய மீன் வகைகள் டன் கணக்கில் கிடைத்தன.

இன்று அவற்றை நாம் டிஸ்கவரி சேனலில் தான் பார்க்க முடிகிறது.


படகின் எஞ்சின் சத்தம் மீன்களை விரட்டி விடும் என்பார்கள். மேலும் பெட்ரோல் டீசல் ஆகியவை கடல் நீரில் கலந்து நீரை விஷமாக்கி மீனின் சுவையை மாற்றிவிடும் என்பார்கள் பாரம்பரிய மீன்பிடி மீனவர்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் கரை வலையில் மீன்களை பிடித்தனர்.
ஆனால் இன்று, கரையில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதால், பெண்கள் கடலுக்கு செல்வது வெகுவாக குறைந்துவிட்டது.

கரையோரத்தில் கூண்டுகளை வைத்து மீன்களை இனப்பெருக்கம் செய்வதற்கு மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடல்வளம் அழிவதை இது நிவர்த்தி செய்வதால் அரசே இந்த 'கூண்டு கலாச்சாரத்தை' ஆதரிக்கிறது

முன்பெல்லாம் கடல் பசு மீனவர்களது பிடியில் சிக்கிவிட்டால் அதை மீண்டும் அவர்கள் கடலில் விட்டதில்லை. அது அவர்களின் உணவாகிவிடும்.

ஆனால், பருவநிலை மாற்றமும் மனித நடவடிக்கைகளும் கடல் பசுவினை அழிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதை அறிந்தபின்,
அவர்களது விலை உயர்ந்த வலையை அறுத்து அவற்றை மீனவர்கள் கடலில் மீண்டும் விட்டுவிடுகின்றனர்.

அதேபோல கடல் ஆமையையும் விட்டுவிடுகின்றனர்.

பருவநிலை மாற்றம் மீன்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது.

குறைந்து வரும் மீன் வளத்திற்கு முன்பெல்லாம் அவர்கள் கடவுளையும், இயற்கையையும் குற்றம்சாட்டினார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் அது முற்றிலும் நம்முடைய தவறு என்பதை உணர்ந்துவிட்டனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top