• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆஹிரி(E1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
715
Reaction score
1,173
Location
Bangalore
அத்தியாயம்-1

“என்றேணும்... மந்தமாய் மனமும்...மங்கலாய் நினைவுகளுமாய்...மூளைச் செயல் மழுங்கியிருக்க...

அடர்ந்த வனத்தில் அனாதரவாய் நிற்பதைபோல் உணர்ந்ததுண்டா...??”


பெயர் தெரியா பட்சிகளின் ஆலாபனை அவள் செவிப்பறையில் வாசம் செய்ய ஆரத்தழுவியிருந்த கதிரொளியும்… காலைநேர பனிக்காற்றின் சில்லிடும் குளுமையிலும்…. அவள் இமைகளிரண்டிலும் பசையாய்..!!

கண்களிரண்டும் மென்மையாய் மலர அவள் விழிப்பார்வையில்.. வெண்முகில்களின் ஊர்வலம்..!! குளுமை போர்த்திய வானில் ஆங்காங்கே வெண்மேகங்களின் நடை..!!

நேற்றிரவு கோபம்கொண்டு வெளியேறியும் காதலியை தூரமிருந்து இரசிப்பதைபோல அந்த வெண்மதியின் காதல் தடம்…மங்கலாய்!!

கலக்கம் தீர கண்களிரண்டையும் மென்மையாய் கசக்கியவளை உலுக்கியது நிதர்சனம்.

இத்தனை நேரம் அவளை அமிழ்த்தியிருந்தது அவளது படுக்கையல்ல!! ஏன்… இது அவள் வீடே அல்ல!!

எழுந்தமர்ந்தவளின் கண்முன் விரிந்திருந்த காட்சி…வனாந்திரம் அது!!

அவளிருந்த…. வெண்ணிற மெத்தை…அதற்கு நேரெதிர் திசையில் இருந்தது சுவரல்ல!! அவளிருந்த அறையில் பாதி கண்ணாடியே!! அக்கண்ணாடியில் விழுந்த ஒளியிலேயே தனக்கு விழிப்பு தட்டியிருப்பதை உணர்ந்தவளின் மனமோ செயலற்றுப் போனது…அந்த கண்ணாடிச் சுவற்றுக்கு அந்தப்புறம் விரிந்து கிடந்த பசுமையில்..!!

மெத்தையில் இருந்து கீழிறங்கியவளை உறுத்தியது அவளது உடை!!

மெரூன் நிறத்திலான சோளி ரக ப்ளௌஸ்.. அவளின் இடையில் இருந்து சில சென்ட்டிமீட்டர்கள் மேலிருக்க.. கால்களிரண்டையும் அணைத்து தனது கதகதப்பில வைத்திருந்த அந்த பீஜ் நிற பாவாடை.. ஆங்காங்கே அதே மெரூன் நிற டிஸைன்களுடன்… ஓரங்களில் அடர் மெரூனிலான அளவான பார்டர்களுடன்..!!

புசுபுசுவென தன்னைச் சுற்றி பரந்து விரிந்திருந்த பாவாடையில் ஏனோ இப்பொழுது அவள் மனம் லயிக்கவில்லை.... இரசிக்கவில்லை..!!

அதற்கு கீழ் அவளது காலடிச் சத்தத்தை உணர்த்தும் கொலுசு..!!

அந்த அறையை சுற்றி தன் பார்வையை சுழலவிட்டாள் அவள்.. ஆஹிரி!!

அது மட்டுமே இப்போதைய அவள் நினைவில்..!!

ஆம்! அதிக மன உளைச்சலாலோ இல்லை அப்பொழுதே தூக்கம் கலைந்ததாலோ… உண்மையில் அது தூக்கமா?? இல்லை மயக்கமா??...அவளறியாள்! மூளை மந்தமாய்..!!

அது மரவீடு என்பது புரிய அந்த அறையில் அவளை தாங்கியிருந்த அந்த இளவம்பஞ்சை நிரப்பியிருந்த மெத்தையும்.. அதற்கு அருகில் சிறிய ஷெல்ஃபும்.. அதில் நிரம்பி நின்ற உடைகளும் மட்டுமே அவளுக்கு துணையாய்..!!

தான் எங்கு இருக்கிறோம்..?? எப்படி வந்தோம்..?? போன்ற கேள்விகள் அவளுள் முளைக்க ஒன்று மட்டும் வெண்பளிங்கின் கரையாய்.. எதுவாகினும்… அவள் இப்பொழுது ஆபத்தில்..!! எப்படியேனும் தப்பவேண்டும் இங்கிருந்து. ஆனால் முதலில் இது என்ன இடம்?? கண்ட காட்சி இது வனம் என்று மனதில் வரைய ஒன்றும் விளங்காமல் அவள்..

அறை ஓரத்தில் இருந்த கதவை கண்டவள் அதனிடம் விரைந்தாள்.

கதவின் தாழில் அவள் கை பதிக்க அது எந்தவித முரண்டும் பிடிக்காமல் சுலபமாய் திறந்துக் கொண்டது.

கதவைத் திறந்தவளின் உள்ளம் உறைந்து நின்றது!!

அவளிருந்தது மரவீடு என்றவள் அறிவாள். ஆனால் அது இத்தனை உயரத்தில் இருக்கக்கூடும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.

தரையிலிருந்து பத்தடிகளுக்கும் மேல் நின்றுக் கொண்டிருந்தது அந்த ஒற்றை அறை கொண்ட வீடு. அவள் முன் நீண்டது ஒரு பாதை.

தொங்கு பாலமாய்.. பச்சை இலைகள் சுற்றியிருக்க நீண்டு நின்ற பாதை சென்று முடிந்ததோ அவள் அறையில் இருந்து நேரெதிரில் இருந்த… சற்று பெரிய மரவீட்டிற்குதான். அந்த வீட்டிற்குச் செல்வதுதான் கீழிறங்குவதற்கு ஒரே வழி என்பது அந்த பக்கத்தின் சுருளாய் நின்ற படிகளே சொல்லின..

கயிற்றை பிடித்தவளாய் மிக கவனமாய் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தாள் ஆஹிரி. இருபக்கமும் அழகிய சொர்க்கம் இயற்கை என்னும் பெயரில்.. ஆனால் அதுவே இப்பொழுது நரகமாய் அவளுக்குள் மிரட்டின..

சற்று தூரம் நடந்து ஒரு வழியாய் அப்பாலத்தை கடந்தவளுக்கு அப்பொழுதே மூச்சு சீராய்..!!

கொஞ்சமும் தாமதிக்கவில்லை அவள். விறுவிறுவென அவ்வீட்டின் மறுபுறம் இருந்த படிகளில் இறங்கிவிட்டாள்.

கீழிறங்கியவளின் முன் பூதாகரமாய் வந்து நின்றது அக்கேள்வி.. இனி என்ன?? என்று.

காணும் இடமெல்லாம் படர்ந்திருந்த பசுமையின் வாசமே சொல்லின… அங்கு மனித நடமாட்டம் இல்லையென.

அப்படியென்றால்.. இந்த வீடு??? என்றெழுந்த கேள்விக்கு விடையில்லாமல் போயின.

திக்குத்தெரியாத காட்டில் தன்னந்தனியாய் மாட்டிக் கொண்டதாய் உணர்ந்தவளுள் திடீர் உலுக்கல்!

‘இல்ல..நான் தனியா இங்க வந்துருக்க முடியாது!! நல்லா யோசி ஆரி!! யாரு??? யாரு???’ என்று மூளைக்கு அதிக அழுத்தத்தை அவள் குடுக்க அதுவோ ஒன்றும் புரியா நிலையில்..!

முயன்று கிட்டிய தோல்வியில் அயர்ந்தவளின் உள்ளே யாரோ வந்துவிடுவார்கள் என்ற எண்ணமே ஓங்கி எழ கால்போன போக்கில் நடக்க தொடங்கியிருந்தாள்.

இது என்ன நிலை?? அம்மா எங்கே??

எத்தனை இன்பமான வாழ்வாய் இருந்தது அவளது!! தந்தையை அந்த நித்திரா தேவி அமிழ்த்திக்கொள்ளும் வரையிலுமே! அதுவும் எப்படிப்பட்ட நித்திரை?.. காலவரையற்ற நித்திரை! அதன்பின்னான வாழ்..

என்று சென்று கொண்டிருந்த எண்ண அலைகளுக்கு அணையிட்டிருந்தது அந்த நீரோடை..!!

ஆக்ரோஷமாய்.. அந்த பாறைகளில் மேல் பாய்ந்தோடிய நீரோடையை கண்டவளின் கண்கள் கண்டதிலேயே..!!

இதை கடப்பது சாத்தியமற்ற ஒன்று!!

காலை வைத்தாலே அவளையும் சேர்த்து இழுத்துச் சென்றுவிடக்கூடும்.

அதில் இங்கு எத்தனை உயிர்குடிக்கும் உயிரனங்களோ.. என்றோடிய அவள் எண்ணவோட்டத்திற்கேற்ப அவளை கலைத்தது அவள் பின்னே ஒலித்த அந்தச் சத்தம்!!

ஸ்ஸ்ஸ்…ஸ்ஸ்… என்ற சத்தத்திலேயே என்னவென்று புரிபட்டுவிட திரும்பினாள் அவள். அவளெதிரே இருந்ததை பார்த்தவளின் நாவெழவில்லை.. பாதம் நகரவில்லை..!!

காரணம் அவள் நின்று கொண்டிருந்தது நிலத்தின் நுனியில். ஓரடி பின்னெடுத்து வைத்தாலும் நீரோடு அடித்துச் செல்லப்படுவாள். முன் வைத்தால் எதிரில் நிற்பதற்கு இரையாகிடுவாள்..

பக்கவாட்டில் அவள் ஓரெட்டு எடுத்து வைக்க, கல்லொன்று தடுக்கியதில் நிலை தடுமாறியவளின் உள்ளம் உறைந்துப்போயின.. இதுதான் அவளது கடைசி தினம் என்று!

கணப்பொழுதில் அவள் இடை பற்றியணைத்தவாறு.. அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியிருந்தது இரு கரங்கள்..!!

ஒற்றை கரம்கொண்டு பற்றியணைத்திருந்த அவள் இடையோடு.. அப்படியே அவளை தூக்கியிருந்தான் அவன்.

தேகம் நீரை ஸ்பரிசிக்காமல்போக விழித்திரை அகற்றியவளின் மனம் அவளை யாரோ அழுந்த பற்றியிருப்பதை உணர்த்த.. தரையில் படியாத பாதங்கள் இரண்டும் வேறெதையோ உணர்த்த.. தலை நிமிர்த்த முயன்றவளுக்கு தோல்வியே!!

ஒரு கையால் அவளை தூக்கியிருந்தவனோ மற்றொரு கரத்தால் நிமரத்துடித்த அவள் சிரத்தை அவன் நெஞ்சோடு சேர்த்தணைத்திருந்தான்.

சற்று தூரம் நடந்த பின்னே அவள் பின்னந்தலையில் படிந்திருந்த கரத்தை அகற்றினான்.. பிடியை தளர்த்தாமலே!

நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவளின் வதனம் ஓர் நொடி துடைத்து மொழுகிய தரையாய்..

அவன் பிடியிலிருந்த ஆஹிரிக்கு முன்தின நிகழ்வுகள் அத்தனையும் இல்லை என்றாலும் சில.. வெட்டப்பட்ட நிழற்பட துண்டங்களாய்.. மேக மூட்டத்திற்குள் மறையும் பிறை நிலவாய் வந்துச் செல்ல..

அவன் முகம் மனதில் பதிய பதிய.. உள்ளம் முழுமையிலும் அதிர்ச்சியே எழுந்தன..

இவன்.. இவன் எப்படி??.. அப்போ..??? என்று நீண்ட எண்ண அலைகள் அவளை அடித்துச் செல்ல நீரோடையில் தப்பி சமுத்திரத்தில் சிக்கிய உணர்வில் ஆஹிரி.

அவள் மனம் அடித்துரைத்தது.. அவளது தூக்கமில்லை.. மயக்கமென்று!!!


தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top