இஃதிகாபின் சட்டங்கள்😍😍😍

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,030
Reaction score
33,551
Points
113
Location
Srilanka
இஃதிகாப் – ஷரீஆவின் பின்னணியில் ஒரு பார்வை

இஸ்லாமிய சட்ட பரிபாஷையில் இஃதிகாப் என்பது பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தல் என்ற பொருள்படும். இது ஒரு சுன்னாத்தான அமலாகும்.

இஃதிகாபின் சிறப்புக்களைக் கூறும் சில ஹதீஸ்கள்:

1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இஃதிகாபின் வகைகள்

இஃதிகாப் இரண்டு வகைப்படும்.

1) வாஜிப்: யார் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைக்கின்றாரோ அவர் மீது இஃதிகாப் வாஜிபாகும். உமர் (ரழி) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு நாள் இரவு முழுவதும் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவியது போது ‘உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி.)

2) சுன்னதான இஃதிகாப்: ஒருவர் பள்ளிவாசலில் நன்மையை நாடி, இறை திருப்தியை வேண்டி,அல்லாஹ்வை நெருங்குவதற்காக தனித்திருந்து வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவது ஸுன்னதான இஃதிகாப் ஆகும். மேற்கூறிய அனைத்து ஹதீஸ்களும் இதற்கு ஆதராரமாகும்.

இஃதிகாப் இருப்பதற்கான காலம்

இஃதிகாப் இருப்பதற்கென்று குறிப்பிட்ட காலம் கிடையாது. எப்போதும் இருக்கலாம். எவ்வளவு நேரமும் இருக்கலாம். ஆனால் இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்.

சுன்னத்தான இஃதிகாப் இருப்பவர்களுக்கு கால வரையரை கிடையாது. இஃதிகாப் இருக்கும் நிய்யத்தோடு கொஞ்சம் நேரம் பள்ளிவாசலில் தங்கியிருந்தாலும் அது நிறைவேறும். அவ்வாறே ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்து இருந்து விட்டு, இடையில் முறித்துக் கொள்ளவும் முடியும்.

எப்போது ஆரம்பிப்பது:

இஃதிகாப் இருப்பதற்கு நேரம் காலம் கிடையாது. ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்தால் அவர் மஃரிப் நேரத்துடன் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை இருக்கவேண்டும் என்பதே அதிகமான இஸ்லாமிய அறிஞர்களது கருத்தாகும். பஜ்ர் நேரம் உதயமாக முன்னர் அவர் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் அதுவும் ஒரு நாளாக கணிக்கப்பட முடியும் என வேறுசில அறிஞர்கள் கருதுகின்றனர். ‘நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பதற்கு நாடினால் பஜ்ர் தொழுகையை முடித்தவுடன் தனக்குரிய பிரத்தியேகமான இடத்தில் ஒதுங்கிவிடுவார்கள்’ என்ற ஹதீஸ் இதற்கு ஆதராமாக இருப்பதுடன், இஃதிகாப் இருப்பவர்கள் பஜ்ருக்கு பின்; தனியான இடமொன்றை ஒதுக்கி அதில் தரிப்பதும் நபிவழி என்பதை காட்டுகின்றது.

இஃதிகாபின் றுகூன்கள் (கடமைகள்)

1) நிய்யத்: எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்ற ஹதீஸ் நிய்யத் கட்டாயம் என்பதை வலியுறுத்துகின்றுது. எனவே அல்லாஹ்விற்காக இந்தப் பள்ளியில் இஃதிகாப் இருக்கிறேன் என்ற எண்ணம் மனதில் இருப்பது கட்டாயமாகும். நிய்யத் என்பது உள்ளத்தால் செய்யும் அமல் என்பதில் கருத்துவேறுபாடு கிடையாது. எனவே நிய்யத்துக்குரிய இடம் உள்ளமாகும்.

2) இரண்டாவது கடமை மேற்கூறிய நிய்யத்துடன் பள்ளிவாசலில் தரித்திருத்தல்.

இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசல்கள்

இஃதிகாப் இருப்பதற்கு பொருத்தமான இடம் பள்ளிவாசலே என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. ‘இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (ஸுரா பகரா: 187)

இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் போன்றோரின் கருத்துப் படி ஐவேளை தொழுகை நடைபெறுகின்ற எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். இமாம் ஷாபிஈ, இமாம் மாலிகி போன்றோரின் கருத்துப் படி எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். அங்கே ஐவேளை தொழுகை நடைபெற வேண்டும்; என்ற நிபந்தனை கிடையாது. ஆனால், ஜும்மா நடைபெறும் பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது சிறந்தது எனக் கூறியுள்ளனர்.

நோன்பும் இஃதிகாபும்

நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது பொதுவாக சிறந்த அமலாகும். ரமழான் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறப்புக்குரியதாகும். நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பதற்கு கூடிய கரிசனை காட்டியுள்ளதோடு அதனை தூண்டியுமுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பின்றி இஃதிகாப் இருந்ததில்லை என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் ரமழான் அல்லாத ஏனைய மாதங்களிலும் நோன்புடன் இஃதிகாப் இருப்பது விரும்பத்தக்கது என்பதையே உணர்த்துகிறது. எனவே ரமழான் அல்லாத மாதங்களில் இஃதிகாப் இருப்பவர் விரும்பினால் நோன்பு பிடிக்கலாம், விரும்பினால் நோன்பின்றி இஃதிகாப் இருக்கலாம்.

இஃதிகாப் ஏன்:

• லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்காக

• தனித்திருந்து அல்லாஹ்வை நெருங்குவதற்காக

• உள்ளத்தை தூய்மைப்படுத்துவதற்காக

• வணக்க வழிபாடுகளில் மாத்திரம் முற்றுமுழுதாக ஈடுபடுவதற்காக

• இச்சையின் தூண்டுதல்களை விட்டு தூரமாகி நோன்பைப் பாதுகாப்பதற்காக

• உலக வாழ்வில் பற்றற்று வாழப் பழகுவதற்காக

இஃதிகாப் இருக்கும் போது:

இஃதிகாப் இருப்பதிலிருந்து பூரண பயன் அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் வீணான பேச்சுக்களை விட்டும் தவிர்ந்து கொண்டு தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களிலேயே கழிக்கவேண்டும். தனியாக இஃதிகாப் இருப்பது போலவே கூட்டாகவும் பலர் சேர்ந்து இஃதிகாப் இருக்கலாம். ஆனால், கூடிக்கதைத்து அதன் பலனை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழுக்களாக இருந்து குர்ஆன் விளக்கங்களை, சன்மார்க்க சட்டங்களை, அல்குர்ஆனில் ஒரு ஸூராவை மற்றும் பயனுள்ள புத்தகங்களையும் படிக்க முடியும்.

இஃதிகாப் இருப்பவரை பாதிக்காக செயற்பாடுகள்:

1) மனைவியை வழியனுப்புவதற்காக வெளியேறுதல். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் ஒரு தேவையின் நிமித்தம் நபியவர்களிடம் வந்த அவர்களது மனைவி ஸபிய்யா (ரழி) அவர்களை வழியனுப்;புவதற்காக வீடு வரை சென்றார்கள்.

2) முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாருதல்: இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்.

3) மலசலம் போன்ற அவசியத் தேவைக்காக பள்ளியை விட்டும் வெளியேறலாம்.

4) உண்ணுதல், பருகுதல், தூங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

5) ஜும்மா தொழுகைக்காகவும் நோயாளியை தரிசிப்பதற்காகவும் ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காகவும் வெளியேறுவதை அலி (ரழி) அவர்கள் விரும்பத்தக்கதாக கருதியுள்ளார்கள். சில சமயம் சமூகப் பணிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள். உண்மையில் இஸ்லாத்தில் துறவரம் என்பது கிடையாது. இஃதிகாப் என்ற பெயரில் சமூக உறவை முற்று முழுதாக அறுத்துவிடக் கூடாது என்பதையே இது காட்டுகின்றது. எனவே, இஃதிகாப் விடயத்திலும் சமநிலை பேணுவது ஷரீஆ வேண்டி நிற்கின்ற ஒரு விடயமாகும்.

இஃதிகாப் தனிமனிதனில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

இஃதிகாப் இருக்கும் வழக்கம் தனிமனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இஃதிகாப் தேவையற்ற சகவாசம், அதிகமாக தூங்குதல், நாவினால் ஏற்படும் பாவங்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதுடன் இறை நினைவோடு வாழ்வதற்கும் அல்குர்ஆன் ஓதுவதற்கும் அல்லாஹ்வைப்பற்றி சிந்திப்பதற்கும் அதிகமாக தொழுவதற்கும் மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கும் இன்னும் பல வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் துணை செய்கின்றது.

இஃதிகாபை முறிக்கும் கருமங்கள்

1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்.

2) மதம் மாறுதல்.

3) மயக்கம் அல்லது மனநோய் காரணமாக புத்தி நீங்குதல்.

4) ஹைழ், நிபாஸ் ஏற்படுதல்

5) உடலுறவு கொள்ளுதல்

இறுதியாக

முறையாக விடுமுறை எடுக்காமல் தொழிலை விட்டு விட்டு அல்லது பெண்கள் தமக்குள்ள கடமையான பணிகளை கவனிக்காமல் பள்ளியில் தங்க நினைப்பது அங்கீகரிக்க முடியாத செயலாகும். ஒரு சுன்னத்தான அமலை செய்வதற்காக அதைவிட முற்படுத்த வேண்டிய பணிகளை விட்டுவிடுவது தவறாகும். எனவே, இந்த விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top