இசை காதலன்

#1
சுழன்றடடிக்கும் சூறாவளியாய் சுற்றம் மறந்து சூழல் விடுத்து சுயம் தொலைத்து என்னை நின் சுழலில் சிக்க வைத்தாய்...
நித்தமும் நினதுலகில் நின்னுடன் நீண்ட நிமிடங்கள் நீள நினைக்கிறேன்...
குமரியிவள் குழந்தையாகினாள் நின் குவளயத்தில்
வெம்மையில் வெகுண்டெழும் போதிலும் வேதனையில் வேகும் போதிலும் உயிர் வேரை உயிர் வரை உயிரில் உயிர்தெழ செய்யும் வித்தையில் விந்தையடைகிறேன்
முடிவில்லா பயணங்களிலும் முகம் கொள்ளா புன்னகையுடன் வலம் வருவேன் உன்னில் முகிழ்த்த காதலினால்... இனிதாய் இனியதாய் இன்னிசையில் என்னை இசைத்த இசைக் காதலனே...
 
Last edited:
Top