• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இணைந்து வாழ்வோம்(லிவ் இன் - 8)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
அவனது கைகளுக்குள் அடங்கிப் போன தன் விரல்களையும் அவன் முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்....


அர்ஜீன் நல்ல பையன் தான் ஆனால் இந்த நட்பில் இருந்து ஏன் அடுத்தக்கட்ட உறவுக்கு போக இந்த மனசு மறுக்குது என்ற உள்மனதின் கேள்வி அவளைத் தடுமாற வைத்து பின்பு அதுவே அவளுக்கு பதிலம் அளித்தது..


" இதுவரை நீ பார்த்து கடந்து வந்த ஆம்பளைங்கனாலே தான் அர்ஜீன் மேலே நம்பிக்கை வரல...நான் பார்த்த வரை எல்லோரும் பொண்ணுங்க கிட்டே தப்பா நடந்தவங்க தான்.. இவன் ஒருத்தன் மட்டும் தான் மதிக்கிறா மாதிரி நடக்குறான்.... ஒரு வேளை நம்மளை இம்ப்ரெஸ் பண்ண தான் இப்படி பண்றானோனு ஒரு பயம் உனக்குள்ளே இருக்கு "என சொல்ல அதுதான் உண்மையும் என மூளையும் ஏற்றுக் கொண்டது..


இவன் மேல் நம்பிக்கை வந்தால் மட்டும் தான் அடுத்து காதல் என்கிற ஒரு கட்டத்திற்குள் போக முடியும் என அவனைப் பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டு இருக்க அவன் கவனமோ முழுக்க முழுக்க சாலையின் மேல் தான் பதிந்து இருந்தது.... சட்டென்று அவன் சடன் ப்ரேக் போட்டுவிட்டு அவளைப் பார்த்தான்... இவள் அவன் முகத்தையே விளங்காமல் பார்க்க அவன் ஜன்னலின் வழிக் கை நீட்டினான்...


திரும்பிப் பார்க்க கீர்த்தியின் வீடு வந்து இருந்தது.... அவளுக்கு திகைப்பாக இருந்தது... இவன் ஓட்டியது வேகமா இல்லை என் எண்ணங்களின் ஓட்டம் வேகமாக ஓடியதா??... சுற்றும் முற்றும் எதையும் கவனிக்காமல் அவனைப் பற்றியே யோசித்துபடி வந்து இருக்கிறோமே என்று தன் இதழ்களை லேசாக கடித்துக் கொண்டவள் காரில் இருந்து இறங்க அவள் பின்னே அர்ஜீனும் இறங்கினான்.. இவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைய கீர்த்தி புன்னகையுடன் இருவரையும் வரவேற்றாள்... அதன் பின்பு தியா அர்ஜீனைக் கண்டு கொள்ளாமல் கீர்த்தியுடனும் மற்ற தோழிகளுடன் கலந்து பேசி புன்னகைத்துக் கொண்டு இருக்க அர்ஜீன் தனியாய் வந்து அமர்ந்துக் கொண்டான்..


அங்கே இருந்த இரண்டு பெண்கள் அவனைக் கண்டு அவன் அருகில் வந்து வழியத் தொடங்கினர்.. அதைக் கண்ட தியா தோழிகளுடன் பேசுவதை நிறுத்திவிட்டு கோபத்துடன் இவன் அருகில் வந்தாள்..


" ஹே ஹாண்ட்சம்.. நாளைக்கு நாம டேடிங் போலாம் வரீயா" என ஒருத்தி கேட்க அர்ஜீன் புன்னகேயுடனே " ஏன் அங்கே எல்லாம் போய்க்கிட்டு என் வீட்டுக்கு வாங்க.. அங்க நிறைய இன்ட்ரஸ்டிங் திங்க்ஸ் இருக்கு" என்றான்..


அவர்கள் உடனே குஷியாகி " கண்டிப்பா வரோம்.. அங்க என்ன என்ன இன்ட்ரஸ்டிங்கான திங்க்ஸ்லாம் இருக்கு?"


" ஊளையிடுற ஓணான் இருக்கு.. இரட்டைத் தலை நாகம் இருக்கு.. அழகா ஊர்ந்து போற புழு இருக்கு.. ஆசையா பார்க்குற ஆந்தை இருக்கா.. அப்புறம் பயங்கரமான ஒரு மந்தி கூட இருக்கு..." என சொல்லிக் கொண்டே போக அந்த இரண்டு பெண்களும் தலைதெறித்து ஓடிவிட்டார்கள்..
அதைக் கண்டு புன்னகையுடன் அவன் அருகில் வந்த தியா " கூட ஒரு கொடூரமான கடுவனும் இருக்குனு சொல்ல மறந்துட்டே" என சிரியாமல் சொல்ல அவனோ லேசாக சிரித்தபடி இழுத்து அணைத்துக் கொண்டான்..


அதன் பிறகு தியா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை.. இருவரும் ஒன்றாகவே கைகோர்த்து வளைய வந்தனர்.. அதில் இவன் எனக்கானவன் என்ற உரிமை தெரிந்தது...


அசோக் சிறிது நேரத்தில் பார்ட்டிக்கு வர அவனைக் கட்டி கொண்டு மகிழ்ச்சியாய் அவனைப் பற்றி விசாரித்துவிட்டு தியாவை தனது லிவ் இன் பார்ட்னராக அறிமுகம் செய்ய அதைக் கேட்ட அங்கே இருந்த அனைவரும் மொத்தமாக சலசலத்தனர்...


அசோக் அவனது கையைப் பற்றி கொண்டு "ஹே மச்சான் நம்பவே முடியலடா.. எங்கே நீ கடைசி வரை கல்யாணமே பண்ணிக்க மாட்டியோனு நினைச்சேன்.. நல்லவேளை தியா வந்துட்டா" என சொல்ல அர்ஜீன் சிரித்துக் கொண்டே "லிவ் இன் ரிலேஷன்ஷிப்னு தானே டா சொன்னோம்.. கல்யாணம் பண்ணிக்க போறோம்னா சொன்னோம்.. அந்த கான்செப்ட் மேலே நம்பிக்கை வந்ததுனா அதைப் பத்தி மேலே யோசிக்கிறேன்" என சொல்ல தியாவும் அவனை ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்..


அசோக்கிற்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை தனது நண்பனது வாழ்க்கை இனிமேலாவது சந்தோஷமாக அமையும் என மகிழ்ந்த தருணத்திலே அது இல்லை என தெரியும் போது அவனால் தான் என்ன சொல்ல முடியும்.. இனிமேலாவது அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதை தவிர..


ஆனால் அங்கே கூட்டத்தில் இருந்த எல்லோரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.. அர்ஜீன் எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.. ஆனால் யாரையும் அவ்வளவு எளிதில் தன்னை நெருங்கவிட மாட்டான்.. அப்படிப்பட்டவன் திடீரென ஒரு பெண்ணோடு லிவிங் ரிலேஷன்ஷிப் தொடங்கி இருக்கிறான் என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டார்கள்.. அந்த ஆச்சர்யத்தோடே பார்ட்டியும் முடிந்துவிட அர்ஜீனும் தியாவும் கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள்..


அவள் ஏறிய சிறிது நேரத்திலேயே காரில் படுத்து தூங்கிவிட அர்ஜீன் வீடு வந்தவுடன் அவளை எழுப்பினான்.. ஆனால் அவள் அசைந்தால் தானே ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பானவன் அவளைத் தூக்கிக் கொண்டு அவள் அறையில் படுக்க வைத்து பெட்ஷீட்டை இழுத்து மூடிவிட்டு தன் அறைக்குள் சென்றான்..


மூடிய அந்த பெட்ஷீட்டை காலை பத்து மணிக்கே திறந்தவள் ஃப்ரஷாகி வெளியே வர அங்கே அர்ஜீன் எழுதிக் கொண்டு இருந்தான்.. அவனைத் தொல்லை செய்யாமல் அவள் சாப்பிட்டுவிட்டு வெளியே செல்வதற்காக கிளம்பி வர அவன் எங்கே என்று பார்வையாலே கேட்டான்.. " நாம ரெண்டு பேரும் மீட் பண்ணோம்ல அந்த பார்க்குக்கு தான் போகப் போறேன் கடுவா.. " என சொன்னாள்..


இவனும் குஷாயாகி " ஓஹோ என்னைப் பார்த்த அந்த இடத்துக்குப் போய் என்னை நினைச்சு டூயட் போட போறீங்களோ?" என அவன் கேட்க " அடிங்க உன் மூஞ்சுக்கு அது தான் ஒரு கேடு... ஆசை தான்.. அங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கு அதனாலே தான்" என்றாள்..


" ஒரு டென் மினிட்ஸ் இரு நானும் கிளம்பி வரேன் தியா" என சொல்ல " பரவாயில்லை கடுவா.. நீ எழுது.. நான் போய்க்குறேன்" என்றாள்..


" எனக்கு நைட் தான் கதை எழுதப் பிடிக்கும் தியா.. இப்போ எழுதுன கதைக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் தான் பார்த்துட்டு இருந்தேன்.. நான் வரேன் ஒரு டூ மினிட்ஸ்" என அவனும் கிளம்பி வெளியே வர கார் அந்த பூங்காவை நோக்கி விரைந்தது..


காரை விட்டு இறங்கிய தியா பார்வையை சுழற்றி அன்று பார்த்த அதே சிறுமியைக் கண்டுபிடித்து அவள் அருகில் சென்று பேசத் தொடங்கினாள்..


" ஓய் இளவரசி.. உன் பேர் என்ன?.. அன்னைக்கு நீ கொடுத்தியே அந்த நம்பர்க்கு போன் பண்ணா காலே போல.. உங்கள் அப்பாக்கிட்டே பேசணும்.. கூட்டிட்டு போறீயா?" என கேட்டாள்..


" அக்கா எப்படி இருக்கீங்க.. என் பேரு தாமரை... அப்பா போன் உடைஞ்சு போச்சுக்கா அதுக்கப்புறம்... அதான் போன் போய் இருக்காது.. ஆமாம் என் அப்பாவை ஏன் பார்க்கணும்??"


" அதெல்லாம் அப்புறம் சொல்றேன் முதலிலே உன் அப்பா கிட்டே என்னை கூட்டிட்டு போ.."என உத்தரவிட அந்த பெண்ணும் அவளது அப்பாவிடம் கூட்டிச் சென்றாள்.. வீட்டிற்கு வெளியிலேயே அர்ஜீனிடம் தாமரையை விட்டுவிட்டு உள்ளே பேசச் சென்றவள் கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தாள்..


" ஓய் தாமரை.. இனி நீ சுண்டல் விற்க போக வேண்டாம் சரியா?.. அக்கா உன்னை படிக்க வைக்கப் போறேன்.. நீ நல்லா படிக்கணும்.. அதுக்கு முன்னாடி இங்கே இருக்குற கீர்த்தினு ஒரு அக்கா கிட்டே கூட்டிட்டு போய் விடறேன்.. அவங்க உனக்கு கொஞ்சம் சொல்லி தருவாங்க..ஜீன் மாசம் தான் ஸ்கூல் ஆரம்பிக்கும் அதுவரை போய் அந்த அக்காக்கிட்டே எப்படி வாசிக்கணும் படிக்கணும்லாம் கத்துக்கோ.. அப்போ தான் ஸ்கூல்க்கு போகும் போது கஷ்டமா இருக்காது" என சொல்ல அவள் அக்கா ரொம்ப தேங்க்ஸ்கா என சொல்லியபடி கட்டிக் கொண்டாள்.. அர்ஜீனோ அவளை கண்களில் சிரிப்புடன் ஆனந்தமாய் பார்த்தான்...


திரும்பி வீட்டிற்கு வரும் வழியில் " எப்படி தியா உனக்கு இந்த யோசனை வந்தது.. அவங்க அப்பா கிட்டே என்ன சொன்ன?" என்றான் யோசனையாக


" எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த ஆசை இருக்கு அர்ஜீன்.. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு இப்படி குழந்தைகளோட education காக உதவணும்னு.. ஆனால் என் ஆசையில எங்கம்மா மண்ணை வாரி போட்டுட்டாங்க.. என் சம்பளம் அப்பாவோட அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆகுறா மாதிரி பண்ணிட்டாங்க.. கேட்டா வரப் போற மாப்பிள்ளையோட வரதட்சணைக்காகவாம்... செமயா கடுப்பாகிட்டேன்.. அப்புறம் தான் ஒரு ஐடியா தோணுச்சு.. வாடகைக்கு அதிகமாகும்னு சொல்லி கொஞ்சம் extra பணத்தை வாங்கி குழந்தைகளுக்கு help பண்ணலாம்னு யோசிச்சேன்.. அன்னைக்கு உட்கார்ந்து பார்க்ல கணக்கு போட ஆரம்பிச்சேன்ல.. அதுக்காக தான்...அதுல மண்ணை போடுறா மாதிரி கீர்த்தி போன் பண்ணி வீட்டை காலி பண்ண சொன்ன.. ஐயோ நாம ஆசைப்பட்ட கனவு போகப்போகுதே செலவுக்குப் பத்தாதேனு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் நீ வந்து எனக்கு help பண்ணே.. நான் 10,000 குழந்தைகளுக்காக ஹெல்ப் பண்ணலாம்னு தான் ப்ளான் போட்டேன் ஆனால் சாப்பாடு செலவு ரெண்ட் எல்லாம் கம்மின்றதாலே 15,000 சேர்க்க முடிஞ்சுது.. அன்னைக்கு அதை மைண்ட்ல வெச்சுட்டு தான் ப்ரின்சஸ் கிட்டே நம்பர் கேட்டு வாங்கிட்டு வந்தேன்.. சரி நேர்ல வந்தா தான் வேலைக்கு ஆகும்னு இன்னைக்கு கிளம்பி அவங்க அப்பா கிட்டே அவள் மாசம் எவ்வளவு சுண்டல் வித்து சம்பாதிப்பாளோ அதை நான் தந்துடுறேன்.. நீங்க படிக்க அனுப்புங்கனு சொன்னேன்.. அவரும் ஒத்துக்கிட்டாரு.. "


" செம மந்தி நீ... நான்லாம் கூட யோசிப்பேன் சின்ன வயசுலேயே படிக்காம வேலை செய்யுற பசங்களைப் பத்தி... ஏன் இந்த வயசுல சுண்டல் வித்துக்கிட்டு இருக்காங்க படிக்க போகலாமேனு தோணும்.... இவங்களுக்குலாம் ஃபீரியா கவர்மென்ட் படிக்க சலுகை கொடுத்தாலும் போகாம வாழ்க்கையை ஏன் கெடுத்துக்கிறாங்கனு கோவப்பட்டு இருக்கேன்.... ஆனால் அந்த குழந்தை படிக்க போயிட்டா வர்ற வருமானமும் போயிடும்னு தானே பெத்தவங்க விட மாட்டேங்குறாங்க... அவங்களோட situations பத்தி அவங்களுக்கு தானே தெரியும்.. வெறும் வாயளவுல பாவப்பட்டா மட்டும் போதாது மனசளவுள உதவணும்னு நீ எனக்கு உணர்த்திட்ட... ஹே மந்தி ஐ ரியலி லைக் யூ டி" என்று சந்தோஷமாக அவளை மறுகையால் கட்டியணைத்துக் கொண்டான் அவளும் சந்தோஷமாக அந்த அணைப்பில் பங்கெடுத்துக் கொண்டாள்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா டியர்

பரவாயில்லை
விளையாட்டுத்தனமாக இருந்தாலும் ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்ன்னு தியா அர்ஜுன் இரண்டு பேருக்கும் இருக்கும் நல்ல எண்ணம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா டியர்

பரவாயில்லை
விளையாட்டுத்தனமாக இருந்தாலும் ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்ன்னு தியா அர்ஜுன் இரண்டு பேருக்கும் இருக்கும் நல்ல எண்ணம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்
ஆமாம் டியர்... உண்மை தான்... தேங்க் யூ சஓ மச் மா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top