• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இணைந்து வாழ்வோம்(லிவ் இன் -9)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
"ஹே மந்தி என்ன சண்டே அதுவும் வெளியே போற??"
" இல்லை கடுவா.. பஸ் பாஸ் ரினியூ பண்ணனும்" என சொல்லிவிட்டு அவள் முன்னே நடக்க அர்ஜீன் அவளை "ஒரு நிமிஷம்" என்று சொல்லி நிறுத்தினான்.... அவள் புருவங்களில் ஏன் நிறுத்தினான் என்கின்ற கேள்வி முடிச்சு...
அவளது கேள்வியை உணர்ந்தவனாய் " ஹே மந்தி பின்னாடி கறை பட்டு இருக்குடி.." என சொல்ல அவள் தலை தானாக கவிழ்ந்துக் கொண்டது..
" சே என்ன பொண்ணு நாம.. இதைக் கூட கவனிக்காம இருந்துட்டோமே.. அப்பவே வயிறு வலிச்சுது.. ஆனால் இதானு மூளைக்கு ஸ்ட்ரைக் ஆகல.. இப்போ இவன் முன்னாடி வேற இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறோமே " என ஒரு மாதிரி தர்ம சங்கடத்தில் நெளிந்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்து அவளது தலையைக் கோதினான்...
" எதுக்கு இப்படி ஒரு கேவலமான ரியாக்ஷன் தர சகிக்கல மந்தி.. முதலிலே மூஞ்சை கொஞ்சம் சிரிச்சாப்பல வை.."
" இல்ல அர்ஜீன் அது நான் கவனிக்கல சாரி.."
" ஓய் லூசு நீ எதுக்கு சாரி சொல்ற.. இது இயற்கை டி.. இதுக்கு நீ ஏன் மூஞ்சை தொங்க போட்டுட்டு நிற்குற.. இதை பசங்க கிட்டே இருந்து மறைக்கணும்னு சொல்லிக் கொடுத்த பெரியவங்க பொண்ணுங்களுக்கு அந்த டைம்ல எவ்வளவு வலி இருக்கும்னு சொல்லிக் கொடுக்க மறந்துட்டாங்க.. இதைப் பையன் பார்க்கும் போது மனசுல தப்பான எண்ணம் வராம அவங்க கஷ்டப்படுறாங்களேனு உதவி செய்யுற மனப்பான்மை தான் வரணும்... இதை எல்லாம் நம்ம சொசைட்டி சொல்லத் தராது.. எல்லாம் விதி... சரி நீ போய் ரெஸ்ட் எடுமா.. நான் பஸ் பாஸ் ரினியூ பண்ணிட்டு வரேன்" என சொல்லிச் சென்றவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்...
எப்படி இவனால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது.. ஒவ்வொரு நாளும் எனக்கு இந்த கடுவன் வித்தியாசமாக தெரிகிறானே... யூ ஆர் சோ ஸ்வீட் கடுவா என்ற படி உள்ளே ஓய்வெடுக்க சென்றாள்... பின்னர் வந்த நாட்களில் அவள் அறியாமல் அவனுக்கு தெரியாமல் அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்...
அன்று ஆபிஸில் இருந்து தலைவலியோடு உள்ளே நுழைந்தாள் தியா.. அவள் முகமே சோர்ந்து இருந்ததை பிரதிபலிப்பது கண்ட அர்ஜீன் டீ போட சென்றான்..
இவள் உள்ளே வந்ததும் உடையைக் கூட மாற்றாமல் பெட்டில் சாய்ந்தபடி லாப்டாப்பை பார்த்துக் கொண்டு இருக்க அவள் அருகில் வந்த அர்ஜீன் " ஏன் இவ்வளவு டயர்டா இருக்கே மந்தி.. இந்தா டீயைக் குடி.. ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வேலை செய்யலாம்ல" என அக்கறையாக அவள் தலை கோதியவனின் கைகள் சுட்டது..
" ஹே என்னடி உடம்பு இப்படி கொதிக்குது.. "
" பரவாயில்லை அர்ஜீன்.. அது லேசா ஃபீவர் தான்.... நான் முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கிறேன்.. நாளைக்குள்ளே முடிச்சு தரணும்.." என அவள் சொல்லும் போதே அவள் உதடு நடுங்கியது..
உடனே அறையை விட்டு வெளியே சென்றவன் கையில் மாத்திரை தண்ணீரோடு வந்தான்.. அவள் கைகள் வாங்க முடியாமல் நடுங்க இவனே வாயில் போட்டு தண்ணீரை ஊற்றினான்..
" தியா நீ படு.." என அவன் சொல்ல மறுப்பாக தலையசைத்து "நான் முடிச்சுட்டு தூங்குறேன் கடுவா.. நாளைக்குள்ளே தரணும்" என்று மறுத்தாள் அவள்..
" ஒழுங்கா நான் சொல்றதை கேளுடி.. நீ ரெஸ்ட் எடு... நான் முடிச்சு தரேன்.. " என அவன் சொல்ல " உனக்கு அதைப் பத்தி தெரியாதே.. எப்படி முடிப்பே" என்றாள் முணங்கிய படி..
" நான் சொன்னனா.. எனக்கு தெரியாதுனு... நீ படு" என்றவன் தன் மடியில் அவளை இழுத்து படுக்க வைத்து பெட்ஷீட்டை இழுத்து மூடிவிட்டு லேப்டாப்பில் வேலை செய்ய தொடங்கினான்.. மருந்தின் வீரியத்தில் அவளும் நன்றாக படுத்து உறங்கிவிட்டாள்.. அந்த ப்ரோஜெக்டை முடித்த பின்பு லேப்டாப்பை மூடியவன் அவளை பெட்டில் படுக்க வைத்துவிட்டு அதிகாலை நான்கு மணிக்கே வெளியே வந்தான்...
நன்றாக தூங்கியவள் காலை ஆறு மணிக்கு மேல் விழித்தாள்... அப்போது தான் இன்று முடித்துத் தர வேண்டிய அவளது வேலை நினைவுக்கு வந்தது .. பதறி அடித்தபடி லேப்டாப்பை திறந்தாள்.. அதில் எல்லாமே முடிக்கப்பட்டு இருக்க அவளுக்குள் நிம்மதி பெருமூச்சு....
நேற்று நடந்த சம்பவங்கள் எல்லாம் ஓரளவுக்கு அவளுக்கு நினைவுக்கு வந்தது... தூக்கக்கலக்கத்தில் லேப்டாப்புடன் இருந்த அர்ஜீனைப் பார்த்தது நினைவுக்கு வர அவன் தான் எல்லாவற்றையும் முடித்துத் தந்தானா என ஆச்சர்யப்பட்டு போனாள்.... உடனே அவனுக்கு நன்றி சொல்வதற்காக அவன் அறைக்கு சென்றாள்.. அங்கே அவன் நன்றாக தூங்கிக் கொண்டு இருக்க அருகில் சென்றவள் " தேங்க்ஸ் டா " என கண்ணத்தில் இதழின் தடத்தைப் பதித்துவிட்டு சென்றாள்...
இவன் கண்கள் பத்து மணிக்கே விடியலைத் தழுவ எழுந்தவன் பதறினான்.. " ஐயோ அவளுக்கு உடம்பு வேறே முடியல.. காலையில சாப்பிடாமலேயே கிளம்பி போய் இருப்பாளே.. " என யோசித்தவன் அவளுக்கு கால் செய்தான்..
" சாரி டி.. நல்லா தூங்கிட்டேன்.. நீ காலையிலே கேன்டீன்ல ஏதாவது வாங்கி சாப்பிட்டியா?.. மாத்திரை போட்டியா?.. இப்போ உடம்பு பரவாயில்லையா?" என கேட்டவனது குரலிலோ அக்கறையின் தடம்....
அவன் அக்கறையில் இவள் மெய் சிலிர்த்து போனாள்.. " உடம்பு இப்போ சரியாயிடுச்சு கடுவா.. ரொம்ப தேங்க்ஸ் டா.. என் ப்ரொஜெக்டை முடிச்சு கொடுத்ததுக்கு.. " என்று மனமாற பேசிய பின் போனை வைத்தவள் இதழ்களில் புன்னகை சாயல்...
அன்று முழுவதும் உதட்டில் இருந்த புன்னகை சிதறாமலேயே வேலையைப் பார்த்தவள் முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்....
அவன் இவளை கவனிக்காது தோட்டத்திற்குள் உட்கார்ந்து கதை எழுதிக் கொண்டு இருந்தான்... அவள் தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்..
" ஓய் எப்போ வந்த.. இப்போ உடம்பு ஓ.கே தானே டி" என பேனாவை மூடிவிட்டு இவளின் உடம்பு பற்றி விசாரித்தான்...
" ஐ யம் ஓ.கே டா.. நீ என்ன படிச்ச அர்ஜீன்.. எப்படி என் ப்ரோஜெக்டை முடிச்ச?" என்று கேட்டாள்..
" நான் பி.இ கம்ப்யூட்டர் சைண்ஸ் டி.. அதான்"
" அப்புறம் ஏன்டா நீ ஐடி ஃபீல்ட்ல போல"
" நான் எங்கே போலனு சொன்னேன்.. போனேன்.. கொஞ்ச நாள் ஒர்க் பண்ணேன்.. அப்பவே ஒரு சலிப்பு.. மைண்ட்ல ப்ரஷர் அதிகமா ஏத்துனானுங்க.. அப்படி கடுப்பா இருந்த டைம்ல அங்கே வேலை செய்யுற ஒருத்தி வந்து ப்ரோபோஸ் பண்ணா.. நான் இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொல்லிட்டேன்.. பட் அவள் நான் தப்பா பிஹேவ் பண்ணேனு சொல்லி ஆபிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திட்டா.. அவனுங்களும் பொண்ணு பேசுறதை கேட்டு வேலையிலே இருந்தே தூக்கிட்டானுங்க.. அப்ப இருந்து பொண்ணுங்க மேலே ஒரு கோபம் அவங்களை இந்த சமூகம் ஸ்பெஷலா ட்ரீட் பண்றதுனால தானே இப்படி நடந்துச்சு.. ஆணும் பெண்ணும் ஈக்வல் தானே.. அப்புறம் ஏன் சமூகம் அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கேர் எடுத்துக்கணும்... ரெண்டு பேரை இக்வலா ட்ரீட் பண்ணலாம்ல.. நான் செமயா காண்டாகிட்டேன்.. ஒரே மைண்ட் ப்ரஷர்.. அப்போ தான் எனக்கு பிடிச்சதை நோக்கி ஓடலாமேனு தோணுச்சு.. எனக்கு போட்டாகிராப்பினா ரொம்ப இன்ட்ரெஸ்ட்... Olympus global open photo contest ல கலந்துக்கிட்டேன்.. ஆனால் என் போட்டா செலக்ட் ஆகல.. ஏற்கெனவே எனக்கு எதுவும் அமையலனு என் மைண்ட் செட் இருந்தது.. அதனாலே போட்டாகிராபியை விட்டுட்டு எனக்கு பிடிச்ச அடுத்த ரைட்டிங் பீல்டை choose பண்ணிட்டேன்.." என்றான் அவன்..
" சீ இப்படிலாம் கூடவா பொண்ணுங்க இருப்பாங்க" என்றாள் அருவெறுத்த முகத்துடன்..
" இல்லை டியர் உன்னை மாதிரி சூப்பர் பொண்ணுங்களும் இருப்பாங்க.. " என்றான் சிரித்தபடி..
" என்ன கலாய்க்குறீயா.. எப்போ தான்டா கதையை எழுதி முடிப்ப.. உன் கதையை கேட்கணும்னு ஆசையா இருக்கு"
" நான் முடிச்சுட்டேன் டி.." என்றவன் விஜய் சேதுபதி ஸ்டைலில் " ஒரு கதை சொல்லட்டா மேடம்" என அவன் குறும்போடு கேட்டான்...
" ஐ யம் வெயிட்டிங் " என்றாள் இவள் விஜய் ஸ்டைலில்..
அவன் சிரித்துக் கொண்டே கதையை சொல்ல ஆரம்பித்தான்..
????
நம்ம கதையோட ஹீரோயின் ருத்ரா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு மாடிப்படி ஏறுறாங்க...
"ஹ்ம்ம செம கடுவா அப்புறம் "
பக்கத்து வீட்டுக்கார பொண்ணுங்க எல்லாம் அவளைப் பார்த்து "இங்கே பார்த்தியா.. எவ்வளவு ஸ்டைலா நடந்து போறா.. இதே நானா இருந்தா தூக்குல தொங்கி இருப்பேன்.. கொஞ்சமாவது மான மரியாதை வேணாம்.. கெட்டுப் போன அப்புறமும் எப்படி இவளாலே தலை நிமிர்ந்து நடக்க முடியுது" என பேசிக் கொண்டு இருக்க நேராக அவர்கள் முன்வந்து நின்றாள் ஆருத்ரா கோபமாக....
" உங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்கு அப்புறம் நீங்க கெட்டு போனவங்க தானே ஏன் இன்னும் நீங்க தூக்குல தொங்காம இருக்கீங்க.. நீங்களும் கற்பை இழந்தவங்க தானே.."
" ஹே நான் என் புருஷன் கூட வாழ்ந்தேன்டி.
நீயும் நானும் ஒன்னா.. நாலு பேர் கூட்டிட்டு போய் உன்னை கசக்கி எறிஞ்சு தூக்கி போட்டானுங்களா.. அப்போ நீ தான்டி சீரழிச்சு போனவ.. ஒழுங்கா காலை அடக்க ஒடுக்கமா வெச்சுக்கிட்டு வீட்டுல இருந்தனா இந்த நிலைமை உனக்கு வந்து இருக்குமா?"
" எனக்கு இந்த நிலைமை வந்ததுக்கு காரணம் நான் வெளியே போனதுனாலே இல்லை பசங்களுக்கு கற்புனா என்னன்னு சொல்லிக் கொடுக்காமா வெளியே அனுப்பப்புனதுனாலே தான் வந்தது புரியுதா?" என்றவள் மேலும் தொடர்ந்தாள்...
" உங்கள் வாய்க்குலாம் பயந்து என்னாலே வெளியே போகாம இருக்க முடியாது.. ஏன்னா என்னை காப்பாத்திக்க நான் வெளியே போய் தான் ஆகணும்.. இதோ இந்த வாய் இப்போ என் பொண்ணு வரும் போது ஏதாவது பேசுச்சு அருவாள்மனையிலே இழுத்து வெச்சு அறிஞ்சுடுவேன்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அவள் புயலாய் தன் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த பத்து நிமிடங்களில் மகள் கவலைக் கப்பிய முகத்தோடு வந்து நின்றாள். கண்களில் கண்ணீர் கூடு நிறைந்தபடி...
" என்னடா அஞ்சலி ஏன் டல்லா இருக்கே.. ஸ்கூல்ல நிறைய ஸ்ட்ரெஸ்ஸா.. பண்ணென்டாவதுனா அப்படி தான்டா இருக்கும்.. " என சொல்லிக் கொண்டே போக அவள் மகளோ " அம்மா நான் சாகப் போறேன்" என்றாள் உயிரற்று... அந்த சொல்லைக் கேட்யதும் ஆருத்ராவின் கண்களில் கோபம் ருத்ர தாண்டவம் ஆடியது..
அவள் பிறந்த ஊரிலேயே அடக்க ஒடுக்கம் என்ற பெயரை மொழிப் பெயர்த்தால் அது ஆருத்ரா , என்று சொல்லும் அளவுக்கு அமைதியாய் இருப்பாள் ருத்ரா....
சிறுவயதிலேயே கற்பு பெண்மை என அவளுக்கு போதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொண்டு தலையை ஏற்றாமல் கீழே குனிந்தபடியே நடப்பாள்..
ஆனால் அவள் தனது பதினெட்டாவது வயதிலேயே சில மிருகங்களின் இச்சைக்கு தீக்கிரையாகினாள்..
அவளுடைய கற்பு பறிபோய்விட தன் உயிரையே பறித்துக் கொள்ள முடிவு செய்து கடையில் விஷமருந்து வாங்கப் போன பொழுது அவளை சீரழித்தவர்களில் ஒருவன் மகிழ்ச்சியாய் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தாள்...
அவனும் தானே தன்னுடைய கற்பை இழந்தான்.. அவன் முகத்தில் எந்த வருத்தமும் இல்லையே... அவன் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான்.. ஆனால் நான் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கவலைப்பட்டு சாக வேண்டும்.. என்ற கேள்வி அவளுள் பெரியதாக எழுந்தது...
என்னுடைய கௌரவம் மானம் எல்லாம் என் உடலை சார்ந்து அல்ல மனதை சார்ந்து தானே இருக்கிறது.. மனதினால் இதுவரை நான் கற்பை இழக்கவில்லையே என யோசித்தவள் அந்த தற்கொலை முடிவை அங்கேயே மறந்துவிட்டு கையில் குச்சி மிட்டாய்யை வாங்கிக் கொண்டு வீட்டிற்க்குள் வந்தாள்..
பிறகு குனிந்த தலை நிமிர்ந்தது.. சமுதாயத்தை எதிர்த்து கேள்வி கேட்டாள்.. அவள் மனதினுள் தன்னம்பிக்கை வளர்ந்தது கூடவே அஞ்சலியும் வயிற்றில் வளர்ந்தாள்.. அன்றிலிருந்து தன் குழந்தையையே தன் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்தவள் காதுகளில் அவள் குழந்தையின் வாயினாலே என் வாழ்க்கையை நானே பறித்து கொள்கிறேன் நான் இனி உயிர் வாழ மாட்டேன் என கேட்டால் எப்படி தாங்குவாள் அவள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top