இது தான் வாழ்வோ?

#1
"தினம்
நூறு
திருப்பங்கள்
திரும்பிடும் பக்கமெங்கும்"


"தித்திப்பாய்
சில நொடிகள்
தீக்கங்கின் மேல்
பல பொழுதுகள்"


"தேடல்கள்
நிறைவேறிடும்
முன்னே
கூடுவிடுகிறது
நரை"


"நலிந்த தேகம்
நலம் தொலைத்து
நலமாய் முடிக்கிறது
தன் வாழ்வை
நானிலத்தில்
மண் மூடி"


"கண்மூடி
திறந்திடும்
நொடியில்
காலனின் பிடியில்"


"இது தான் வாழ்வோ?
அழுகையில்
துவங்கி
பிறர் அழுகையில்
பிறியாவிடை பெறுவது"
photo-1525673812761-4e0d45adc0cc.jpg
 

Sponsored

Advertisements

New threads

Top