• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிமே நீ குடிப்ப?! 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
வாழ்க்கை வழக்கம் போல் பலகை விடு தூதாகச் சென்றது மாதுவிற்கும் விதுரனுக்கும். காலையில் கண்விழித்த மாதங்கி தன் அன்றாட பணிகளைத் தொடங்கினாள். திடீரென வாயிலில் அழைப்பு மணி அழைத்தது. மணியைப் பார்த்தவள் இவ்வளவு காலையில் யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தவாறே கதவைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறந்தவள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் நின்றாள். வெளியே சீலாவும் மதுராவும் நின்றனர்.

'என்னாச்சு ட்ரிப் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்குதே! அதுக்குள்ள எப்படி வந்தார்கள்? இரண்டு மென்டலும் சேர்ந்து என் மதுராக் குட்டியுடைய ப்ளான கெடுத்துடுச்சோ?'

"மாது! வழி விடாம என்ன திங்க் பண்ணிட்டு இருக்கிற?" என்று தன் மழலையில் கேட்டாள் மதுரா.

"சாரி, அம்முடா! உங்க ட்ரிப் இன்னும் முடியலையே அதுக்குள்ள எப்படி வந்தீங்கனு யோசித்தேன் டா குட்டி!"

"டோன் கால் மீ குட்டி. ஜஸ்ட் கால் மீ மதுரா. ஏன் நாங்க எங்கள் இஷ்டப் படி வீட்டுக்கு வரக்கூடாதா? உன் கிட்ட பெபர்மிஷன் வாங்கிகிட்டு தான் வரனுமா?"

அவள் பேச்சில் அதிர்ந்த மாது,'பிள்ளையை அவளை மாதிரியே அடாவடியா வளர்த்திருக்கிறதை பார். அப்படியே இந்த சீலாவுடைய ஜெராக்ஸ் காப்பி! முதல் வேலையா மதுராக் குட்டிய ஸ்கூல்ல சேர்க்கனும்.'

"அதில்லைடா செல்லம்! பாதியிலேயே வந்துட்டீங்களே ட்ரிப்ல ஏதாச்சும் ப்ராப்ளமோனு பயந்தேன் அதான் கேட்டேன். உள்ள வாடா செல்லம் பால் குடிக்கிறயா? ஜூஸ் குடிக்கிறயா?"

"பேபி! இந்த பட்டிக்காடு கிட்ட என்ன தேவையில்லாமல் பேசி டைம் வேஸ்ட் பண்ணுற? வா பேபி போய் ரெஸ்ட் எடுப்போம்." என்று இடைமறித்துக் கூறினாள் சீலா (குழந்தை பாட்டுக்கு உண்மை உளறிவிடுமோ என்ற பயம் தான்).

அப்போது தான் அங்குச் சீலா என்றொரு ஜீவன் இருப்பதையே கவனித்தாள் மாது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தாள். 'யோக்... என்ன ஹேர் ஸ்டைலோ இதெல்லாம். கருமம்! கருமம்!! ஸ்டைல்ன்ற பேரில் காமெடி பண்ணுறாளே. ஷண்முகா நீதான் என்னை இதுங்க கிட்ட இருந்து காப்பாத்தனும்.'

மாதுவின் பார்வையைப் புரிந்த சீலாவோ,"என் ஹேர் ஸ்டைல் எப்படியிருக்கு மாது? உனக்கும் வேண்டுமானால் வாயேன் என் கூட 'லேக் மீ' பார்லர்க்கு. 'வொன்டர் லா'ல லக்கி கூப்பன் விண் பண்ணோம் நானும் மதுராவும். சோ ஃப்ரீ கட்டிங் தான். ஆனால் உன்னுடைய பட்டிக்காட்டுப் புத்திக்கு இந்த மாதிரி ட்ரெண்டி ஃபேஷன் எல்லாம் தெரியாது பிடிக்கவும் செய்யாது. சோ சேட்!" என்று அவளைச் சீண்டினாள்.

அவள் பேச்சில் எரிச்சல் எல்லையைக் கடக்க மூக்கு கோபத்தில் விடைக்க,"இப்படியே ஏதாச்சும் பேசி கடுப்பேத்திட்டே இருந்தனு வச்சிக்கோ காவல்துறையில் நாத்தனார் கொடுமைனு புகார் மனு எழுதிக் குடுத்துட்டு வந்துருவேன். ஒழுங்கா இருக்கிற இடம் தெரியாமல் இருந்தீங்கன்னா உனக்கும் நல்லது உன் தம்பிக்கும் நல்லது. நான் வந்து உன்கிட்ட நின்னு கெஞ்சுனனா இந்த பட்டிக்காட்டுச் சிறுக்கிக்கு உங்க வீட்டு வெள்ளைக்கார துறையைக் கட்டி வைங்கனு அழுதேனா? சிவனேன்னு இருந்தவளை மிரட்டி உன் தம்பிக்குக் கல்யாணம் பண்ணிவச்சுட்டு ஐந்தாறு வருசங் கழிச்சு வந்துதான் நான் பட்டிக்காட்டு கிறுக்கினு உனக்கும் உன் தம்பிக்கும் தெரியுதா?"

"மாது ஏன் இவ்வளவு கோபப் படுற? உன்னை யார் என்னச் சொன்னாங்க சொல்லு டார்லிங். மாமா நான் கேட்கிறேன்!" என்றபடியே வந்தது யார் சாட்சாத் நம்ப விதுவேதான்.

போதும் என்றவாறு கையை உயர்த்தி இருவருக்கும் பொதுவாகக் காட்டிவிட்டு மதுராவிற்கு சாப்பாடு செய்வதற்காகச் சமையலறைக்குள் சென்றாள். சீலாவும் விதுவும் அதிர்ந்து நின்றனர் மாதுவின் கோபத்தில். பின்னர் இரகசியமாக இருவரும் பேசினர்.

"எப்படிடா தம்பி இந்த சீலாவுடைய ஃபெர்பாமன்ஸ்? சும்மா தெரிக்கவிட்டேன்ல? இன்னும் போகப்போகப் பார் களைக்கட்ட போகிறது!"

"கிழிச்ச என் வாழ்க்கையில் ஒரு லாரி மண்ணள்ளிக் கொட்டிட்டு களைக்கட்டுமாம். அக்கானு சும்மா விடுகிறேன். ஓடிரு!"

"என்னடா போன் போட்டு அழுதியேனு மதுக் குட்டிய சமாளித்து ட்ரிப்ப பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்தால் புருசனும் பொண்டாட்டியும் டர்ன் போட்டு திட்டுறீங்க? இந்த சீலா என்ன காஜா போடுற நூலா? ஆளாளுக்கு வந்து அக்குறீங்க!"

"அப்படி இல்லை சீலா டார்லிங், மாதுவ சமாதானம் பண்ண வரச் சொன்னால் நீ அவளைக் கூடக்கொஞ்சம் காண்டாக்கிட்ட! அதான் டென்சன்ல அப்படி பேசிட்டேன்."

காதல் மனைவியின் ஒதுக்கம் அவனைப் பெரிதும் வாட்டியது. இந்நிலையில் நேற்று இரவு என்னவென்றால் அவனது மற்றொரு காதலியான நித்திராதேவியும் அவனை ஒதுக்கினாள் காரணமின்றி.

"என்னடா! இது, குட்டிக் கரணம் கூட அடிச்சுப் பார்த்துட்டேன் தூக்கம் வரமாட்டிக்குது! என்னவா இருக்கும்?" என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான்.

'குட்டிக் கரணம் அடித்தால் இடுப்பு வலி தான் வரும்! தூக்கம் எப்படி வரும்?'

"வந்துட்டான்டா! சீய்.... வெறுப்பேத்துறதுக்குனே வருவானே மூக்கு வேர்த்த மாதிரி."

'நான் உன்னைப் பிரிவதும் இல்லை! உன்னை விட்டு விலகுவதுமில்லை!' (சிங்கம் புலி ஸ்டைலில் படிக்கவும்?)

"போடாங்க! சரி விடு எதோ நீயாச்சு என் கூட பேசுரியே!"

'விடுடா ரொம்ப ஃபீல் பண்ணாத ஃப்ரீயா விடு! எல்லாம் சரியாகிடும். சீக்கிரமே உன்னுடைய ஆள் உன்கிட்ட பேசிடும் டா.'

"ம்ம்ம்... அதற்கு ஏதாச்சும் ஐடியா குடுடா."

'ஃபர்ஸ்ட் அவங்க தனி அறையில் படுக்குறத தடுக்கவேண்டும். இந்த ரூம்லையே அவங்களும் இருந்தாதான் ஏதாச்சும் கோமாளித்தனம் செஞ்சாச்சு சரி பண்ண முடியும்.'

"ஆமாடா! அவ என்கிட்ட பேசாட்டிக்கூட பரவாயில்லை. என்கிட்டையே இருந்து அவளை பார்த்துட்டே இருந்தால் கூட போதும்."

'சரி எதாச்சும் ஃப்ளான் பண்ணி அவங்களும் இந்த அறையிலேயே இருக்க மாதிரி பண்ணனும். உனக்கு ஏதாச்சும் ஐடியா வருதா?'

முதலில் யோசிப்பது போல் பாவனை செய்து பின்னர் இல்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினான் விதுரன். அதைச் சலிப்புடன் பார்த்த அவனது மனசாட்சி,'உனக்கெல்லாம் யோசிக்கத் தெரிந்திருந்தால் நீ ஏன் போயும் போயும் அந்த சீலா கிட்டயெல்லாம் ஐடியா கேட்கிற! அதுவும் கேவலமான மட்டமான மடத்தனமான ஐடியாதான் எல்லாம்!'

"சீலா டார்லிங்க அவ மட்டமா பேசலாம் பிகாஸ் அது நாத்தனார் சண்டைனு வந்துரும். அதுவும் சீலாவுடைய தம்பியா இருந்துகிட்டு நீ பேசலாமா? தாய்ப் பாசத்தையும் மிஞ்சியது தமக்கையார் பாசம்! தெரிஞ்சுக்கோ!"

'என்ன நேத்து இராசராச சோழன் ஹச்டி பிரிண்ட்ல பார்த்தியா? நானும் பார்த்தேன். நான் சீலாவ ஒன்னும் திட்டல. அவர்கள் குடுத்து நீர் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றியும் அவை தழுவிய தோல்விகளைப் பற்றியும் தான் பேசுகிறேன்.'

"டேய்! ஐடியா! சீலாவைப் பத்தி பேசிக்கிட்டு இருந்ததுல எனக்கு மண்டைல ஒரு ஸ்பார்க் அடிக்குது. சீலாவும் மதுராவும் வந்துட்டாங்கன்னா மாது ரூம்க்கு வந்துதானே ஆகனும். எப்படி என் ஐடியா?"

'ஐடியா நல்லாத்தான் இருக்கு. பட், அவங்க ட்ரிப் முடிஞ்சாதான வருவாங்க. அதுக்குத் தான் இன்னும் ஒரு வாரம் இருக்கே!'

"இதெல்லாம் ஒருமேட்டரா! சீலா தான் போகும் போது சொல்லிட்டு தான போயிருக்கு,'எனி ப்ராப்ளம்! ஒன் கால்! சீலா வில் அப்பியர்!' சோ, போன் போடு கொண்டாடு! எப்படி?" இத்தோட முடிவு தான் காலையில் சீலா மற்றும் மதுராவின் திக்விஜயம்.

ஐந்து வயது மதுராவிற்கு ஒன்றாம் வகுப்பு பள்ளியாண்டு துவங்க இரண்டு வாரம் இருந்த நிலையில் சீலா அவளை தன் தோழிகளுடன் சுற்றுலா அழைத்துச் சென்றாள். முதலில் தோழிகள் மட்டும் செல்ல நினைத்த பயணம் சீலாவால் சிறுவர்களுக்காக மாறியது. முதல் வாரம் பெங்களூரில் உள்ள சுற்றுலா தளங்களைச் சுற்றிவிட்டு கோவில்களையும் வலம் வந்து இறுதியாக வொன்டர்லா சென்று பின் அப்படியே மறு வாரம் மைசூரைச் சுற்றுவதாகத் திட்டம். விதுவின் தொலைப்பேசி விடு தூதில் மைசூர் போகாமல் திரும்பியிருந்தனர்.

"ஆனாலும் தம்பி நீ ஒருவிசயம் கவனிச்சியா? இத்தனை நாள் மௌனராகம் படம் காட்டிட்டிருந்தவ இப்போ உரிமைக்குரல் குடுக்குறா!"

"ஆனாலும் அக்கா நீ இப்படி உன் பெண்ணை இவ்வளவு அடாவடியா பெத்திருக்க வேண்டாம்! முடியலை!"

இதனை மறைவில் நின்று கேட்டிருந்த மதுவின் முகத்திலோ குழப்ப ரேகை என்றால் மாதுவின் முகத்திலோ அனல் சிவப்பு.
தொடரும்...
1558961167020.jpg1558961250095.jpg1558960963921.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top