இனிமே நீ குடிப்ப?! 5

#1
ஹாய் சகோஸ்! எல்லாரும் மறந்துபோற அளவுக்கு இடைவெளி விட்டுட்டு இப்போ வந்து ஹாய் னு சொல்லிக்கிட்டுனு எல்லாரும் திட்டுவது புரியுது... பட் என் சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு...

என் ஆத்துக்காரருக்கு உம்புக்கு முடியலை... ஹாஸ்பிடலில் இருந்ததால ஒரு குடும்ப இஸ்திரியா என் கடமையை செஞ்சதால தான் இந்த கால தாமதம்.... சோ இந்த
பச்சை பிள்ளையை மன்னிச்சு இந்த எபியை படிச்சிருங்க... நட்புக்களே... நாளைக்கே கடைசி எபியும் வந்துரும் தோழமைகளே...மனைவி பேசியவுடன் மயங்கியவனை மற்றவர் பார்க்கும் முன் தட்டி சுயநினைவிற்குக் கொண்டு வந்தான் அவனது நண்பன் ராஜா. மயக்கத்திலிருந்து அவன் தெளிந்தாலும் அவன் மனமோ இன்னும் மனைவி பேசிய மயக்கத்திலேயே மகிழ்ந்து இருந்தது.

"டேய்! மாப்ள என்னாச்சு டா? ஏதாச்சும் ப்ராப்ளமா? எதற்கு டா ஃபோன் பேசவும் மயங்கி விழுந்த? அக்காக்கு எதாவது முடியலையா? யாருக்கு என்னடா?" என்று பதற்றமாக வினவினான் ராஜா.

"எல்லாரும் நல்லா தான் இருக்காங்க மச்சி! இப்போ மாது ஃபோன் பண்ணிருந்தாள்டா."

"என்னாச்சுடா மாது திட்டிட்டாளா? கோபத்தில் கிராமத்துக்கே மறுபடியும் போய்ட்டாளா? மதுராவை விட்டுட்டா? இல்ல கூட்டிட்டு போய்ருக்காளா?" என்று படபடத்தான் ராஜா.

"உனக்கு ரொம்ப நல்லெண்ணம் டா ராஜா! நல்ல்ல்லா வருவடா!" என்று நல்லாவை நல்லா அழுத்திக் கூறினான்.

'இவனையெல்லாம் ஃபரண்டா வச்சிருக்க உன் வாழ்க்கை எப்படிடா உருப்படும்! சீ ஃபில்ட் வித் நெகட்டிவிட்டீஸ்! ரொம்ப கஷ்டம்தான்.' என்று புலம்பியது அவன் மனசாட்சி.

'உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போறியா! என் ஃபரண்ட்ஸ் பத்தி பேச நீயாருடா? ஓடிரு!' என்று மனசாட்சியை விரட்டி அடித்தான் விது.

'கேவலம் பொண்டாட்டி பேசினதுக்கு மயங்கினவன் கிட்டப்போய் பேச்சு வாங்குகிறேன் என் விதி!'

"இல்லைடா மாது சமாதானம் ஆகிட்டா டா சிரிச்சு சிரிச்சு பேசுறா! அதான் சந்தோசத்தில் மயங்கிட்டேன்!" என்று நண்பனிடம் தெளிவுபடுத்தினான்.

"வாவ்! சூப்பர் டா! ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கப் போல! மச்சான்... பா..ர்..டி.. பண்ணுவோமா?"

"என்னது பா...ர்...டீ...யா??? டேய் செத்துச் செத்து விளையாடுவோமா னு கேட்கிற மாதிரியே இருக்குடா!"

'ஏம்பா ஹெட்செட் மாட்டி படம் பார்த்துட்டே பேசுறியா?'

'இப்ப நீ போகலை! நாளைக்கு ஹெட்லைன்ஸ்ல மனசாட்சியை மர்டர் பண்ண மாவீரன்! மைன்ட் வாய்சில் டார்ச்சர் பண்ணியதால் விழைந்த விபரீதம்!! னு வந்துரும் பார்த்துக்கோ!'

(இதுக்கும் மேல நம்மாளு அங்க நிப்பாரு! ஒரே ஓட்டமா ஓடிப் போய் அவன் சட்டைப் பையில் ஒளிந்து கொண்டார்.)

தன் நண்பனைப் பார்த்து முறைத்தான். "அய்யோ சும்மா கிண்டலுக்கு கேட்டேன் டா! ஆமா அப்படி அன்னைக்கு என்னதான் டா ஆச்சு? சிஸ்டர் ஏன் இவ்வளவு கோபமா இருந்தாங்க உன்மேல!"

"அதை ஏன்டா கேக்குற! அன்னிக்கு அடிச்ச சரக்கு தான் எல்லாத்துக்ர்கும் காரணம். தண்ணிய தொட்டுக்கூட பார்க்காதவனை அன்னைக்கு எல்லாருமா சேர்ந்து உசுப்பேற்றி விட்டு என் வாழ்கையில் விளையாண்டுடீங்கடா எல்லாரும் சேர்ந்து!"

"டேய் மச்சான் இப்படி வாழ்க்கையையே வெறுத்துப் போய் பேசுகிற அளவிற்கு என்ன நடந்ததுடா??"

"டேய் நான் எங்கடா வாழ்க்கையை வெறுத்தேன்! என் பொண்டாட்டியை நீங்க எல்லாரும் சதி பண்ணி என்னைய வெறுக்க வச்சுட்டீங்கடா பாவிகளா! உங்களைச் சொல்லி என்ன பிரயோஜனம்! என் புத்தி அப்போ புல்லு மேய போயிருச்சா? நான் குடிச்சிருக்க கூடாது, தப்பு பண்ணிட்டேன்! எல்லாம் விதி!" இதைக் கேட்டவுடன் விளக்கைத் தேய்த்ததும் வரும் பூதமாய் வந்து பாடியது அவன் மனசாட்சி.

'உன்னைச் சொல்லி குற்றமில்லை!
என்னைச் சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி!
கடவுள் செய்த குற்றமடி!'

"மச்சான் இந்த துடைப்பு கட்டை எங்க இருக்கும்? ஒரு பெருச்சாளி ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது!" இதைக் கேட்ட மாத்திரத்தில் சோப்பு தேய்த்த நுறையாய்ச் சிதறி மறைந்தது வேறயாரு நம்மாளு தான்.

"மச்சான் இருடா நான் வேணும்னா நம்ம முனியம்மா கிட்ட வாங்கிட்டு வாரேன்."

"டேய்! தேவையில்லைடா! நீ ஆணியே புடுங்க வேண்டாம்."

"சரி விடுடா! நீ உன் வீட்ல நடந்த பிரச்சினையை சொல்லு டா!"

அன்று மாலை நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தான். இது அவன் வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி என்று அங்கே தான் ஏற்பாடு செய்வார்கள்.

அப்படி ஒரு நண்பனுக்குப் பிறந்தநாள் வரவே அதனைக் கொண்டாட அனைவரும் அங்கு கூடியிருந்தனர். பெரிய கேக்கை கொண்டு வந்து வைத்தனர் அந்த பப்பின் ஊளியர் இருவர்.

கேக் வெட்டி முடிந்தவுடன் குளிர் பானங்களும் சிற்றுண்டி வகைகளும் வழங்கினர். அனைவரும் தங்களுக்குத் தேவையான குளிர்பானங்கள் (மதுபானங்களும் தான்) எடுத்துக் கொண்டனர். விதுரனோ மதுப்பழக்கம் இல்லாததால் ஆரஞ்சு பழச்சாறு எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுவாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று அங்கே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்த விதுவும் ராஜாவும் அதில் கலைந்து என்னவென்று பார்த்தனர்.

அரவிந்த் என்பவன் தன் நெருங்கிய நண்பன் ப்ரதீப்புடன் மதுபானக் கோப்பைகள் நிறைந்த தட்டை கையில் ஏந்தி பாட்டிற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே இவர்கள் இருந்த மேஜையை நோக்கி வந்தனர்.

"என்னடா இவனுங்க எதுக்கு இப்படி கேவலமா ஆடிக்கிட்டு நம்மகிட்ட வராங்க? எதாவது ப்ளான் பண்றீங்களா?"

'அய்யய்யோ அலர்ட்டா இருக்கானே! என்ன பண்ணலாம்!'

"அதுவந்து மாப்ள! அவனுங்க உன்னை ரொம்ப கலாய்ச்சானுங்க மாப்ள! அதான்..."

"என்னடா அதான்னு ஜவ்வுமிட்டாயா இழுக்குற? ஆமா அவனுங்க எதுக்காக என்னை கலாய்ச்சானுங்க?"

"அதுவந்து மாப்ள! நீ ரொம்ப நல்லவனாம்... அழகானவனாம்... அறிவானவனாம்... பண்பானவனாம்... ஆனால்.. ரொம்ப ரொம்ப கோழையாம்!!"

"அதுக்கு! ஸார் என்ன சொன்னீங்க?"

"டேய்! என் ஃப்ரண்ட என்கிட்டயே கோழை சொல்றீங்களா? உங்கள இன்னைக்குனு... சட்டைக் காலரை பிடிச்சுட்டேன் மாப்ள!"

'டேய்! ராஜா நீ அந்த மாதிரில்லாம் பேசிருக்கமாட்டியே!'

"அப்படியா!அப்புறம் என்னாச்சு!" என்று நம்பாத பார்வை பார்த்தான்.

"அது இதுன்னு ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்ணினோம்.."

"அப்பறம்!"

"அப்பறம்! அவன் சொன்னான்... இந்த வாரம் வரும் ரமேஷோட பர்த்டே பார்ட்டில சரக்கடிச்சா உன்னை வீரன் ஒத்துக்குவாங்களாம்!"

"நான் அந்த கருமத்தைக் குடிக்கவும் வேண்டாம். அவனுங்க குடுக்குற வீரன் பட்டமும் வேண்டாம். இவனுங்க பெரிய மிஸ்டர் சென்னை ஜட்ஜஸ் நான் இவிங்கள இம்ப்ரஸ் பண்ணி அவார்ட் வாங்கப்போறேன். போடா டேய்!"

"மச்சான் ஒரு பீர் மட்டும் தான் டா! ப்ளீஸ் டா எனக்காக!"

"உனக்காகவா என்னடா உளறிகிட்டு இருக்குற?"

"ஆமா மச்சான்! பெட்ல தோற்றா என்ன செய்யனும்னு அவன் கிட்டக் கேட்டேன்."

"ம்ம்ம்ம்ம்ம்.."

"என் ஃப்ரண்ட பத்தி இனிமே எதுவும் இப்படி நக்கலா பேசக்கூடாதுனு சொன்னேன்."

விதுரனின் நம்பாத பார்வையில்,"அதுவும் கேட்டேன் மச்சான்! சத்தியமா!" என்றான்.

"அதுவும் கேட்டியா? அப்போ இன்னும் வேறென்ன கேட்ட?" என்று அவனை ஆழ்ந்து பார்த்தான்.

"உனக்கும் எனக்கும் தனித்தனியா ஒரு மட்டன் பிரியாணி, சிக்கன் விங்க்லெட்ஸ், நண்டு கிரேவி, ப்ரான் 65, காடை வறுவல், சிக்கன் சுக்கா,....."

"டேய் போதும்டா போதும். என்னடா இரண்டு பேருக்குனு சொல்லிட்டு ஒரு ஊருக்கே ஆர்டர் பண்ணிருக்க!"

"இதே தான் அவனும் சொன்னான் மச்சி. ஆனா வாங்கித் தரேன்னு சொல்லிட்டான்."

"வாங்கித்தரேன்னு சொல்லிட்டானா? சோ நீ விதவிதமா சோறு திங்க நான் தண்ணியடிக்கனும். ஏன்டா? சரி விடு இதெல்லாம் மொத்தமா வாங்கித்தராட்டியும் ஒன்னொன்னாவாச்சு நான் வாங்கித்தரேன். அதுக்காக எல்லாம் என்னை தண்ணியடிக்க சொல்லாத டா!"

"மாப்ள இதுக்காக உன்னைச் சரக்கடிக்கச் சொல்லலை டா!"

"அப்புறம்??? இன்னுமென்னடா??"

"பதிலுக்கு நானும் கேட்டேன் அப்படி நான் தோத்துட்டா உனக்கென்ன வேணும்னு!"

"ஓ இப்படித்தான் எல்லார்கிட்டயும் பகுமானம் பண்ணி பந்தா காட்டுறியா? இந்த என்னுடைய க்ரெடிட் கார்ட் எந்த ஹோட்டல்னு கேட்டு கூட்டிட்டுப் போ! பாத்துடா என் காசுதானன்னு ஓவரா திங்காத லிமிட்டா முடிச்சுக்கோ!"

"மச்சான்...."

"இன்னுமென்ன டா நானும் வந்து சர்வ் பண்ணாதான் வருவாய்ங்களா?"

"அதில்லைடா..." என்று ராஜா எதுவோ சொல்லவரவும் அரவிந்த் மற்றும் ப்ரகாஷ் மதுக் கோப்பையுடன் அருகில் வரவும் சரியாக இருந்தது. அதைப் பார்த்த விதுரன் எரிச்சலின் எல்லையை எட்டினான்.

"டேய் பெட் தான என்னால குடிக்க முடியாது! சோ உங்க பெட்ட நீங்க தாராளமா கேரி அவுட் பண்ணலாம்" என்று கூறித் தோளைக் குலுக்கினான்.

விதுரனின் பேச்சில் கடுப்பான இருவரும் தங்கள் கையில் தயாராக வைத்திருந்த ரேஸரை எடுத்து ராஜாவை நெருங்கினர். இதனைக் கண்டு ராஜா பயந்தானென்றால் விதுரனோ அதிர்ந்தான்.

"டேய்! எதுக்கு டா ரேஸரை எடுத்துட்டு அவன் கிட்ட போறீங்க? என்னதான் டா உங்க பெட்?"

"ஓஹோ! உனக்கு பெட் என்னன்னே தெரியாமதான் ஃபெயில்னு டிக்ளேர் பண்ணியா??" என்று சிரித்த அரவிந்த் அவர்கள் பந்தயத்தை விம் போட்டு விளக்கினான்.

ராஜா பந்தயமாக முனியாண்டி விலாஸ் ஆர்டர் குடுத்ததும் அரவிந்திற்கு என்ன பந்தயம் என்று கேட்டான். அரவிந்தோ,"விதுரன் தண்ணியடிச்சுட்டான்னா நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேன். பட் குடிக்கலைன்னா... உன்னோட முகத்தில் வலது பக்க மீசையும் இடது பக்க தாடியும் எடுத்துட்டு ஒன் வீக் ஃபுல்லா பாதி தாடி பாதி மீசையோட தான் நீ சுத்தனும்."

இதனைக் கேட்டு அதிர்ந்த ராஜாவோ,"முடியவே முடியாது!" என்று அழுத்திக் கூறினான்.

"அப்போ உன் விது மாப்பிள்ளையைச் சரக்கடிக்க சொல்லுடா என் பொட்டேட்டோ!" என்று கோரஸ் பாடியவாறே அரவிந்தும் ப்ரகாஷும் சென்றனர்.
 
Last edited:

Sponsored

Advertisements

Top