• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிமே நீ குடிப்ப?! 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அவர்களின் பந்தயத்தைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் விதுரன். அனைவரும் அவனை ஒருமாதிரி பார்க்க,"சாரி ட்யூட்ஸ்! யூ ஜஸ்ட் கேரி ஆன்!" என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியவாறே ராஜாவைப் பார்க்க, மீண்டும் வெடித்து வந்தது சிரிப்பு.

ராஜாவோ அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் பார்வையில் தன்னை அடக்கிய விது,"சாரி மச்சான்! நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன்!"என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.

அவன் பாவனையில் ராஜாவிற்கே சிரிப்பு வந்தது, அதை மறைத்தவாறு,"மச்சான்!" என்று அரவிந்தையும் அவன் கையிலிருந்த ரேஸரையும் கண்களால் காட்டினான் விதுரனிடம். அதை உணர்ந்த விதுரனும் தான் பார்த்துக்கொள்வதாகச் சமிக்ஞை செய்தான் கண்ணை மூடி.

இவர்கள் கூத்தைக் கவனித்த அரவிந்தோ,'இது வேலைக்காகாது!' என்றெண்ணி மீண்டும் ரேசருடன் ராஜாவை நெருங்கி அவன் மீசையில் வைத்த நேரம், நான்கு ஷார்ட் கிளாஸ்கள் பறந்து வந்து அவன் கைகளிலேயே விழுந்தது. அனைவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.

விதுரன் தான் அந்த நான்கு ஷாட் கிளாஸையும் குடித்துவிட்டு எறிந்திருந்தான். பக்கத்தில் அவர்களுடன் பணியாற்றும் முகேஷ் என்பவன் பாவமாக அழுவது போல் அமர்ந்திருந்தான். ஆம் முகேஷ் ஆசையாக 'பட்டியாலா ஷாட்' அடிக்க வைத்திருந்த வோட்கா கலந்த காக்டெய்லை தான் நம் விதுரன் எடுத்துக் குடித்து வீசினான்.

"டேய்! மாப்ள என்னடா இப்படி பண்ணிட்ட?!!"

ராஜாவின் கேள்வியில் திகைத்த விதுரன்,"உனக்காகத் தான் மாப்ள குடிச்சேன்!"

"டேய் விது பெட்டே பீர்க்கு தான். நீ ஏன்டா விஸ்கி கலந்த காக்டெய்லைப் போய் குடிச்ச!" என்று தலையில் கை வைத்தான்.

"டேய் ராஜா அது வோட்கா மிக்ஸிங் டா!! எனக்கு விஸ்கி பிடிக்காதுடா.." என்று புலம்பினான் காக்டெய்லை பறிகொடுத்த முகேஷ்.

"நாட்டுக்கு ரொம்பத் தேவை!!! பேசாமல் இருடா பேல்பூரிவாயா!" என்று ராஜா முகேஷை அடக்கும் போது சத்தமாக சிரித்தான் விது.

"ஓ அப்போ நீ மாறு கால்.. மாறு கை.. மாதிரி மாறு மீசை.. மாறு தாடி...யோட தான் திரியனுமா?"என்று சிரித்தான்.

"ஏன்டா உனக்கு இந்த நல்லெண்ணம்? நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும்? நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற!"

"நா..னா.. என்னத்துக்கு யுவர் ஆனர்? காய்லான் கடை ஸ்பானர்? டோன்ட் யு ஹாவ் மேனர்? இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர்!!!" என்று கூறி வெடிச் சிரிப்புடன்,"மச்சான் ஹவ் இஸ் மை கவிதை?"என்று கேட்டான் ராஜாவிடம்.

இதில் நொந்துபோன ராஜா மனதினுள்,'என்னது கவிதையா!! போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ!'

"என்னடா இன்னும் இவன் எந்த முக்கால் டெகேட்ட (decade) கூட்டப் போறானோன்னு மனசுக்குள்ள புலம்புறியா! கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன்!" என்று ராஜாவின் தோளில் சென்று சாய்ந்தான்.

'டேய் ராஜா! இவன் நம்மள உடைச்சி ஊத்தி பெப்பர் தூவி ஆம்லெட் போடுறதுக்குள்ள நாம இவனை உரிய இடத்துல டெலிவர் பண்ணிரனும்!' என்று முடிவு செய்த ராஜா,"மச்சான் வாடா வீட்டுக்கு போவோம்! சிஸ்டர் தேடுவாங்க!" என்று விதுவைக் கிளப்பினான்.

"மச்சான் உன் சிஸ்டர் என்னை எதுக்கு டா தேடுவாங்க? உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான்! அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசை மாத்திரு!"

"டேய் உன் அழகானப் பொண்டாட்டியைத்தான் டா நான் தங்கச்சி சொன்னேன் சாவடிக்காம வாடா!" என்று பப்பின் வாயிலை அடைந்தான் விதுவை இழுத்துக் கொண்டு.

"டேய் மச்சான்! சூட்டிங் நடக்குது போல விளம்பரம் எடுக்காங்க டா வாடா போய் பார்ப்போம்!"

"ஷூட்டிங் பெரிய இதாடா நீ பார்த்ததே இல்லையா என்ன? பேசாமா வாடா!"

"மச்சான் ப்ளீஸ்டா! சின்ன பிள்ளைல இருந்தே இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும் டா! இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா! ப்ளீஸ்டா!"

விதுரனின் கெஞ்சலில் இளகிய ராஜா,"சரி வா!" என்று அவன் காட்டிய திசையில் திரும்பினான். அங்குக் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.

"அடப்பாவி டேய்! ஷூட்டிங் இன்னிக்கு நடக்குதோ இல்லையோ நீ பார்க்குற வேலைக்கு நாளைக்கு நமக்கு ஆஃபிஸ்ல ஷூட்டிங் ஆர்டர் கன்பார்ம். உன் நொல்ல கண்ணை வச்சு நல்லா பாரு ஷூட்டிங் எங்கடா நடக்கு அது நம்ம பாஸ் ப்ளே க்ரௌண்ட் மண்டையன் டா! ஒனிடா மண்டையன் வேற டா வா போவோம்."

இருவரும் சென்று கார் நிறுத்துமிடத்தை அடைந்தனர். ராஜா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விதுவை திரும்பிப் பார்த்து அதிர்ந்தான். விதுவோ இருக்கை பிடித்து இழுத்துக் கொண்டே,"அண்டா...‌ கா.. கசம்! அபூ.. கா.. கசம்! திறந்திடு சீசே!! சீ...சே! ஒழுங்கா... திறந்திடு சீ...சே!" என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.

இருக்கையிலிருந்து எழுந்த ராஜா விதுவின் அருகில் சென்று, "என்னடா பண்ணுற?" என்று வினவினான்.

"டேய் பக்கி பார்த்தா தெரியல! கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல! டிஸ்டர்ப் பண்ணாம ஓடிரு!" என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.

"மாப்ள! கதவு அல்ரெடி நான் திறந்துட்டேன் டா! நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற! டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா!"

அவன் கெஞ்சலை புரியாத பார்வை பார்த்த விதுவோ எதுவும் சொல்லாமல் உள்ளே அமர்ந்து கதவடைத்தான். நிம்மதி பெருமைச்சுடன் ராஜா மறுபுறம் சென்று கதவை திறந்தான். திறக்க முடியவில்லை.

"அச்சச்சோ லாக் ஆயிருச்சு போலையே!" என்றவாறே விதுவை பார்த்தான். அவனோ இருக்கையை பின்னுக்குத் தள்ளிக் கண்மூடி சாய்ந்திருந்தான். 'போச்சு இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரிதான்' என்று புலம்பியவாறே தனது பாக்கெட்டில் பர்ஸை தேடினான். காரினுள்ளேயே பர்சை வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.

"டேய் மாப்ள! விதுரா! மச்சான்! மாமா! அட ராமா! மட்டையாயிட்டானா?" என்று புலம்பிவிட்டு விதுவை எழ வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பல முயற்சிகள் மேற்கொண்டான். பரிதாபமென்னவென்றால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. திடீரென்று,

'பாசம் வெக்க நேசம் வெக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே'
"வாழவைக்கிறானோ இல்லியோ நல்லா புலம்பவிடுறான்"

'உள்ளமட்டும் நானே
என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்'
"இவன் எங்க சார் பெர்மிஷன்லாம் கேக்குறான்? அவனாவே என் உயிர வாங்கிட்டு தான் இருக்கான்."

'என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்'
"சோறு போடுறான் இல்லீங்கல ஆனால் பிரச்சனைகளையும் அனுகுண்டு மாதிரி தூக்கி தலையில போடுறானே! அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே?"என்றவாறு சுற்றிச் சுற்றித் தேடினான். பின் தனது கைப்பேசி தான் அந்த டீஜே என்பதைக் கண்டுகொண்டான். செல்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். 'தளபதி' காலிங் எனக் காட்டியது.

'இவன் தான் மட்டையாயிட்டானே அப்புறம் யாரு காலிங் அதுவும் இவன் நம்பர்ல இருந்து...' என நினைத்தவன் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த விதுரனைப் பார்த்தவுடன் முறைத்தான்.

சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்குமாறு சைகை செய்தான். ராஜா அழைப்பை ஏற்றதும்,"நான் தண்ணியடிச்சேன்னு மாதுகுட்டிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தான் லாக்க ரிலீஸ் பண்ணுவேன்!" என்று பேரம் பேசினான் விதுரன்.

இப்போது விழுந்து விழுந்து சிரிப்பது ராஜாவின் முறையானது. சத்தமாகச் சிரித்தவாறே," சத்தியம் தான பண்ணிட்டாப் போச்சு! சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன்!!" என்று வெளியில் கூறி,'ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா!' என்று மனதிலும் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான். லாக் ரிலிஸ் ஆகியிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
விதுரன் அமைதியாகவே வருவதைப் பார்த்த ராஜா,'அப்பாடா வைப்ரேட்டிங் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு போய்விட்டான். அடுத்து ஃப்ளைட் மோடுக்குப் போனாலும் பரவாயில்லை! சவுண்ட் மோடுக்குப் போகாமல் பார்த்துக்கோ கடவுளே!!' என்று மனதிற்குள் வேண்டினான்.

'இன்னும் கொஞ்ச பிட் இருக்கிறது ராஜா இல்லாவிட்டால் கதைக்குப் பக்கங்கள் பற்றாக்குறை வந்துசேரும்.. சோ இன்னும் கொஞ்ச நேரம் அவன் டார்ச்சரில் இருக்கக் கடவாய்!' என்ற கடவுளின் மனமொழி இவனுக்குக் கேட்டதா கேட்கவில்லையா என்று அறியுமுன்னே மௌனம் கலைத்தான் விதுரன்.

"டேய் வண்டியை நேராப் போலிஸ் ஸ்டேசன் விடுடா! ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கவேண்டும்!"

"போலிஸ் கம்ப்ளைன்டா யார் மேலடா?" என்று பதறினான் ராஜா.

"உனக்குத் தெரியாதா மச்சி! குற்றம் செய்றவங்கள விடக் குற்றம் செய்ய தூண்டுறவங்களுக்கு தான் அதிக தண்டனை. குடிக்கிறதும் ஒரு குற்றம் தான அதான்..."

"அது...னால..."

"அதுனால அந்த தன்யா மேல் ஒரு குற்றம் செய்யத் தூண்டினாள் அப்படியென்று ஒரு கம்ப்ளைன்ட்ட போடுவோம் மச்சி!"

"தன்யா மேலையா அவள் நமது டீமில் கூட இல்லையே! ஆகாஷ் டீம்ல தான இருக்கா! அவ எதற்கு தூண்டினா உன்னை?" என்று சந்தேகமாகக் கேட்டான் ராஜா‌.

"டேய் லூசு! அறிவே இல்லையா உனக்கெல்லாம்! மூளையை என்ன முனியாண்டி விலாஸ்ல வித்துட்டியா??"

"ஆத்தாடி! மூலையை முனியாண்டி விலாஸ்லயா? டேய் என்னடா இப்படி அபசகுனமா பேசுற!"

"அப்புறம் என்னடா! நான் அந்த தான்யாவை சொல்லுறேன்! நீ இந்த தான்யாவை சொல்லுற! எருமை மாட்டுக்கிட்ட ஏ பி சி டி சொன்ன மாதிரி இருக்கு உன்கிட்ட சொல்லுறது!"

"மச்சி என்னை டேமேஜ் பண்ணது போதும்! எந்த தான்யா எதுக்கு கம்ப்ளைன்ட் அதை முதலில் சொல்லு."

"அதான் மச்சி நம்ம சூர்யா இருக்கான்ல?"

"மச்சி எந்த சூர்யாடா?"

"டேய் அதான் அந்த ஃபோன் கம்பனில வேலை பாக்குறான்ல!"

'ஐயோ எந்த சூர்யானு தெரிலையே! குத்துமதிப்பா ஊம் போடுவோம் இல்லாட்டி சிறு மூளையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டியா! பெருமூளையை பேரிச்சம்பழத்துக்கு போட்டியானு கேப்பான்!' என்று நினைத்த ராஜா,"ம்ம்ம்..." ஆமாம் சாமி போட ஆரம்பித்தான்.

"அவன் ஒரு காலேஜ் பொண்ணு கூட பிரச்சினை ஆகி கடைசில அவளையே லவ் பண்ணிட்டான். அந்த பொண்ணு பேருகூட.. ம்ம்ம்!"

"ரெஜினா!" என்றான் ராஜா எதையோ புரிந்து கொண்ட பாவனையில். (நீங்க கெஸ் பண்ணது ரொம்ப கரெக்ட் ராஜா ராணி படமே தான்?)

"ம்ம் அவ தான். அவ ஃப்ரண்ட் தான் தான்யா."

"தான்யா தெரியுதுடா. பட் கம்ப்ளைன்ட் எதுக்கு?"

"எதுக்கா? அவதான மச்சான் ஷாட் க்ளாஸ்ல எதோ ஒரு சரக்க கப் கப் னு அடிச்சு அடுக்குவா. அந்த மாதிரி க்ளாஸ்ல எதாச்சும் குடிக்இனும்னு ஆசையா இருக்கும். அதான் பீர் பாட்டில எடுக்காமல் அந்த முக்காப்படி முகேஷோட பட்டாணி பெக்க எடுத்து குடிச்சுட்டேன்."

"அடப்பாவி! தெரிஞ்சே தான் குடிச்சியா நீ! அது பட்டியால பெக் பட்டாணி இல்லை. சோ உங்களைச் சரக்கடிக்க தூண்டுன தான்யா மேல் கம்ப்ளைன்ட் பண்ணப் போற!"

"ஆமாடா!"

"சரி டா இறங்கு!"

"அதுக்குள்ள ஸ்டேசன் வந்துருச்சா? வாடா இன்றைக்குக் கண்டிப்பாக கம்ப்ளைன் பண்ணவேண்டும்!" என்றபடியே கார்க் கதவைத் திறந்து இறங்கினான்.

"நீ என்ன கம்ப்ளைன் பண்ணாலும் யாரை கம்ப்ளைன் பண்ணாலும் இந்த ஸ்டேசனில் உனக்கு மட்டும் தான் டா அரெஸ்ட் ப்ரொடெஸ்ட் பெட்ரெஸ்ட் எல்லாம்!" என்றான் ராஜா நக்கலாக.

"அப்படி என்னடா புது ஸ்டேசன்?" என்று கேட்டவாறே வெளியே கண்களைச் சுழற்றி பார்த்தான்,"டேய்! மச்சான் இந்த ஸ்டேசன் பாரேன் அப்படியே எங்கள் ஃப்ளாட் மாதிரியே இருக்கு!" என்று ஆச்சரியப்பட்டான்.

"கொஞ்ச நேரத்தில் பாரு இன்ஸ்பெக்டர் அம்மா வருவாங்க! அவங்களை பாரு உனக்கு ஷாக்கே அடிக்கும்."

"என்னது??"

"இல்லைடா ஷாக்கிங் ஸர்ப்ரைஸா இருக்கும்னு சொல்ல வந்தேன்.." என்று கூறி அவனை அழைத்துச் சென்றான். லிப்டில் ஏறி அவன் ஃப்ளாட் இருக்கும் தலத்தின் எண்ணை அழுத்தினர்.

"இங்க பாருடா லிஃப்ட் கூட எங்க அபார்ட்மெண்ட் லிஃப்ட் மாதிரியே இருக்கு. எதுக்கு டா ஸ்டேசன்ல லிஃப்ட் வச்சிருக்காங்க?"

"அது... வந்து மச்சான்.. அக்யூஸ்ட் தப்பித்து போனாங்கனா படியிலென்றால் போலிஸால துரத்திப் பிடிக்க முடியலையாம்! அதான் லிஃப்ட். லிஃப்டில் தப்பிச்சா லிஃப்ட லாக் பண்ணிறலாம்ல அதான் டா."

"ஓ! பரவாயில்லையே போலீஸ் எல்லாம் முன்னேறிட்டாங்க போல! நல்ல நல்ல திட்டம் செயல்படுத்துறாங்க."

"ம்ம்ம்" என்று அவனை இழுத்துக்கொண்டு அவன் வீட்டு வாயிலில் நின்று அழைப்பு மணியை அடித்தான். சீலா வந்து கதவைத் திறந்தார். விது நின்ற நிலையைப் பார்த்து வருந்தினார். மாது இதைப் பார்த்தாள் மிகவும் உடைந்து விடுவாள் என்று நினைத்தவர். அவனை அவள் வருமுன்னரே தன் அறையில் படுக்க வைக்க அழைத்துச் சென்றார்.

யாரின் கெட்ட நேரமோ! மாது மதுவிற்குப் பால் எடுத்துப்போக அறையிலிருந்து வெளியே வந்தவள் இந்த காட்சியைக் கண்டு பதறினாள். அவள் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றே நினைத்து அவர்களிடம் விரைந்து வந்தாள்.

"மாமா! என்னாச்சு மாமா?" என்று கேட்டபடியே வந்தவள் அவன் முகத்தைப் பார்த்ததுமே நடந்ததை அறிந்துகொண்டாள். எதிலோ தோற்றுப்போன உணர்வு அவளுள் எழுந்தது.

"எந்த சோகத்தை மறக்க இப்போ இவர் குடிச்சாராம்மா?"

"இல்லமா.." என்று சூழ்நிலையை விளக்க வந்த ராஜாவை மாது விது இருவரும் ஒருசேரத் தடுத்தனர். தன் நிலையை மனைவியிடம் புரியவைக்க மூன்றாம் நபரின் தலையீட்டை அவன் விரும்பவில்லை. தன்னவனை தன்னிடம் மூன்றாம் நபர் நியாயப் படுத்துவதை அவள் மனம் ஏற்கவில்லை.

"சரிடா மச்சான் நான் கிளம்புகிறேன்! பார்த்துக்கோங்க மா! வரேன் சிஷ்டர்!" என்று விது, சீலா, மாது மூவரிடமும் விடைபெற்றுச் சென்றான் ராஜா.

இருவரும் மற்றவரைப் பார்த்தவாறு நின்றனர். அவன் கண்களில் குற்றவுணர்வு பொங்கியதென்றால் இவள் கண்களில் ஏமாற்றம் கண்ணீராய் வடிந்தது. இவர்கள் நிலையை உணர்ந்த சீலா இருவரையும் கலைத்தார்.

"மாது! நீ போ பாப்பாவைப் பார்ப் போ! விது வாடா இன்னைக்கு என் அறையில் நீ படு நான் மாது கூட படுத்துக்குறேன்." அவனை அழைத்துச் சென்று தன்னறையில் படுக்க வைத்தார்.

பின் மாது வை தேடி அவள் அறைக்குள் நுழையும்போது மாதுவின் கண்களில் கண்ணீர் தன் அணையை உடைக்க காத்திருந்தது. அவள் கைகளை விரைவாகச் சென்று பற்றி அழுத்திக் கொடுத்தார். அவள் அவரை என்னவென்று பார்த்தாள். அவரும் கண்களாலே மதுராவை சுட்டிக்காட்டினார்.

"மது பேபி! நீ போய் அப்பாவை பார்த்துக்க டா! என் ரூம்ல படுத்திருக்கிறான். அவனுக்கு ஃபீவர் சோ தொந்தரவு பண்ணாமல் பார். ஓகேவா?"

"டன்! பைம்மா. பை கிரானி." என்று ஓடினாள் நம் மதுக் குட்டி.

கதவைத் திறந்து உள்ளே தந்தையை எட்டிப்பார்த்தாள் மதுரா. அவனோ தன் பர்சில் மறைத்து வைத்திருந்த தன்னவளின் புகைப் படத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான்.

"டாடி அது யாரு?" என்று அவனிடம் சென்றாள்.

மகளை எதிர்பார்க்காத விதுரன் பதற்றமாக தன்னவளின் புகைப் படத்தை மறைத்து,"யாருமில்லை டா க்யூட்டி." என்றான்.

"டாடி! நான் பார்த்தேன் ஃபோட்டோல யாரோ ஒரு லேடி இருந்தாங்க காட்டுங்க."

மகளைப் பலவகையில் சமாளித்தும் பயனின்றி கடைசியாக அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.

"இவுங்க.." என்ற மகளின் யோசனையைத் தடுத்தது விதுரனின் பதில்,"உங்க அம்மா!". பின்னர் மகளை சமாதானப்படுத்தித் தூங்க வைத்து தானும் தூங்கினான் விதுரன். அன்றே நடந்ததை வரிசை மாறாமல் தன் நண்பனிடம் கூறினான்.

ஆனால் அவன் தூங்குவதற்காகவே காத்திருந்த மது எழுந்து அவன் பர்சில் வைத்த தன் தாயின் புகைப்படத்தை எடுத்து தனது ட்ராயிங் டைரியில் மறைத்து வைத்ததோ மறுநாள் மாதுவிடம் அதைக் காட்டியதோ அவனறியவில்லை.

அவன் கூறியதைக் கேட்ட ராஜா,"மச்சான்! எனக்காகத் தான் குடிச்ச, இருந்தாலும் இனிமே நீ குடிப்ப?!" என்று கேட்டுச் சிரித்தான். அதில் எரிச்சலடைந்தாலும் தன் தலையை இல்லையென்பது போல் ஆட்டோ ஆட்டென்று ஆட்டினான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top