• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience இன்றைய விடியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
*நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டாச்சு; நீண்ட போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி!*

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளிகளான முகேஷ் சிங்(32), பவன் குப்தா(25), வினய் ஷர்மா(26), அக்‌ஷய் குமார் சிங்(31) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் குடியரசுத் தலைவருக்கு மாறி மாறி கருணை மனுக்கள் அனுப்பி வந்தனர். ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதற்கிடையில் பலமுறை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இவையும் தள்ளுபடி செய்யப்படவே தூக்கு உறுதியானது. 4 பேரையும் தூக்கிலிட மீரட் சிறையில் இருந்து பவன் ஜல்லாத் என்ற ஹேங்மேன் வரவழைக்கப்பட்டிருந்தார்.


கடந்த செவ்வாய் இரவு திகார் சிறைக்கு வந்து சேர்ந்த இவர், தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒத்திகை பார்த்து தயார் நிலையில் இருந்தார்.

நாட்டை உலுக்கிய நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை!

அதன்படி இன்று அதிகாலை சீக்கிரமாகவே ஹேங்மேன் எழுந்து குளித்து தயாராகி விட்டு சிறைத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்தன. அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறை வளாகம் முழுவதும் மூடப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை சிறை கதவுகள் திறக்கப்படவில்லை. நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடும் செய்தி அறிந்து திகார் சிறை முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுத்தனர். குற்றவாளிகளுக்கு தேநீர் கொடுத்த போது அவர்கள் அருந்த மாட்டோம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் 4 பேரும் தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சரியாக 5.30 மணிக்கு திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து பார்த்து அவர்கள் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

திகார் சிறை வரலாற்றில் ஒரேசமயத்தில் 4 பேர் தூக்கிலிடப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சிறைத்துறை அதிகாரிகள் எந்தவித தவறும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கின்றனர்.

இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு முன்பாக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நிர்பயா வழக்கில் 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


படித்ததை பகிர்ந்தேன் ...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Anaivarukum vanakkam,

English typing thaan makkale, adjust pannikonga.

Intha nirpaya sambavam nadakum poluthu naan delhiyil thaan en husband oda irunthen. News enaku late a thaan theriyum.

Annaiku night intha sambavam mudinja udane, marunaal kaalai pathinoru maniku, delhiyin prathaana saalaiyil oru pen ammanamaaga odukiraal.

Athai paarthu athirnthu vittu, avaruku uthavi seiyalam endru naan ninaika, enagaluku vantha guide vendaam endru koorivitaar.

Kaaranam ketta poluthu, avar ondrum sollavillai, adutha naal naangal ooruku vantha piragu, intha seithi kettu kothithu ponen.

Antha pennirku erpatta aneethiku , udane theervu kodukka intha arasaangathirku thuppillai endra aathaangam.

Appoluthe ithai seithu irunthaal, evvalavu nadraaga irunthu irukkum. Innum pala nirapayakkal kaapatrappattu irupaargale.

Ippoluthaavathu niraiverthinaargale endru aasuvasapaduvathai thavira veru ondrum kooruvatharku illai..

Antha penin aanma ippoluthu saanthi adainthu irukkum endru nambuvomaaga..

Jai hind..
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
இதை விட கொடுமையான தண்டனை வழங்க பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து...
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
தாமதமாக கிடைக்கும் நீதியும் மதிப்பில்லாத ஒன்று. இவர்கள் இத்தனை நாட்கள் சட்டத்தின் ஓட்டையால் உயிர் வாழ்ந்தார்கள்.
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
தாமதமாக கிடைக்கும் நீதியும் மதிப்பில்லாத ஒன்று. இவர்கள் இத்தனை நாட்கள் சட்டத்தின் ஓட்டையால் உயிர் வாழ்ந்தார்கள்.
இதை நான் வழிமொழிகின்றேன்... தண்டனை என்பது உடனடியாக, அதே சமயம் கடுமையானதாக அமைய வேண்டும்... அப்போது தான் இது போன்ற வக்கிரகம் குறையும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top