இப்படிக்கு உன் காதலி

#1
நித்திரையிலும் நீங்காத உன் முகத்தை
என் நெஞ்சத்தில் நிறுத்து வைத்தேன்
உன் நெஞ்சில் தலை சாய்த்து நித்தம்
உறங்கிடும் வரம் கேட்டேன்
காலையில் உன் கண்ணில் என்
முகம் காணக் கேட்டேன்
என் கண் மூடும் போதும்
உன் கருவிழி காணும் காதல் கேட்டேன்
காற்றாற்று வெள்ளமாய் உன் காதல் என்னை அடித்துச் செல்ல
கரை ஒதுங்க தெரியாமல் தவிக்கிறேன்
என் கண் மூடும் முன் உன் மடி சேர்வேனோ நான்?
இப்படிக்கு
உன் மேல் உயிரை வைத்திருக்கும் காதலி
 

Sponsored

Advertisements

Top