• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரட்டுறமொழிதல் 23 (pre-final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
IM - 23

அவசர ஊர்தியில் ஏறுவதாகட்டும், அவர்கள் படுத்துக்கொள்ள சொன்னபோதாகட்டும், SNP அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.

கரனின் கூட்டத்தில் இருந்த ஒருவன், "பாஸ், இவரு இன்னும் வேணுமா? இல்ல..?", என்று கேட்டு, தனது ஆள்காட்டி விரலால் கழுத்தின் குறுக்கே ஒரு கோடு போட்டு, முடிச்சிடலாமா? என்பது போல கேட்டான்.

கரனோ, "அதை நான் இன்னும் முடிவு பண்ணலை, அவங்க என் டிமாண்ட் தராம எங்கயாவது சொதப்பினா, என்னோட ட்ரம்ப் கார்டு & டார்கெட் இந்தாளுதான்", என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு அந்த அடியாள் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அடுத்ததாக கரன் காவல் துறையை அழைத்தான். "எங்க வண்டி வரும்போது செக்யூரிடி-ல யாரும் எங்களை நிறுத்தக்கூடாது. ஒரே ஒரு ஆள் எங்களை மறிச்சு கைய நீட்டினாலும்..., ரிமோட் அதோட வேலைய காமிக்கும். நீங்க ட்ரோன் கேமரால ஏற்கனவே பாத்திருப்பீங்க, இருக்கறதிலேயே ரொம்ப பவர்ஃபுல்லான பாம் இதுதான். அப்பறம் நடக்கிற சேதாரத்துக்கு நா பொறுப்பில்லை.அப்படி ஒரு சூழ்நிலைய வரவழைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்", என்று பேசிவிட்டு தனது அழைப்பைத் துண்டித்தான்.

கரண் சொன்னதுபோல அவர்கள் சொன்ன வாகனத்தில் அமைதியாய் படுத்துக்கொண்டிருந்தபோது SNPக்கு மனைவியின் நினைவு. இனி சரணைப் பார்ப்போமா?, என்று தோன்றியது.

கூடவே, SNP-க்கு இதற்கு முன்பு ஒரே ஒரு முறை ஆம்புலன்ஸில் சென்றது நிழலாடியது. அது ஒரு கார் விபத்து, அதிலும் முக்கியமாக சீட் பெல்ட் அணியாததினால் ஏற்பட்ட விபத்து அது.

பெங்களூர் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சரனுடன் தானும் செல்ல, சரணுக்கு தூக்கம் வந்ததால் பின் இருக்கையில் வசதியாக உறங்கச் சொல்லி இருந்தான்.

அப்போது எதிர்பாராவிதமாக நெடுஞ்சாலையில் SNP-க்கு எதிரே வந்த ஒரு வாகனத்தின் வலது முன்பக்க டயர் வெடித்ததில், அதன் ஓடுபாதை திடுமென மாறியது.

கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம், பாதையின் நடுவே இருந்த குறுக்குச் சுவரைத் தாண்டி SNP-யின் வண்டியை நோக்கி வர, அந்த வண்டியின் ஓட்டுநர் எவ்வளவு முயற்சித்தும் அதன் வேகம் காரணமாய் அவ்விபத்தை தடுக்க இயலாமல் போனது. இரண்டொரு வினாடிகளில் ஏற்பட்ட விபத்து அது.

இவர்கள் கார் மீது அந்த வாகனம் மோத, SNP யின் காரின் பேனட் எனப்படும் முன்பக்கம் அப்பளமாய் நசுங்கியது. எதிரே வந்த வாகனத்தின் வேகம் அதிகமென்றாலும், அதைப் பார்த்த மாத்திரத்தில் உடனடியாக SNP பிரேக்கை மிதித்ததால், நல்ல வேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

ஆனால், பேனட் நொறுங்கிச் சுருங்கியதில் SNPயின் கால்கள் இரண்டும் உள்ளேயே மாட்டிக்கொண்டது. இது தவிர முகம் ஸ்டியரிங்கில் மோதி மூக்கில் இருந்து ரத்தம் வழிய, நெற்றி புடைத்து, முகம் முழுக்க ரத்தக்கறை ஆகி இருந்தது.

பின்னாலிருந்த சரண்யுசாயாவிற்கும் அடிபட்டு இருந்தது. ஆனால் அந்த வாகனம் மோதிய வேகத்தில் படுத்துக் கொண்டிருந்தவள் முன்னாலிருந்த இருக்கையில் மோதி இருந்தாள். தலையும், முழந்தாளும் வேகமாக மோதியதில் சிறு காயமேற்பட்டது அவ்வளவே.

ஆனால், கணவனின் முகத்தில் ரத்தத்தைப் பார்த்த பின் சரணுக்கு வலியாவது ஒன்றாவது? பதைபதைத்து அவள் பக்கத்துக் கார் கதவைத் திறந்து முன் இருக்கைக்கு வர முயன்றாள். ஆனால் காரின் கதவோ திறக்க முடியாத அளவில் நசுங்கியிருந்தது. கதவை பலமுறை காலால் எட்டி உதைத்து திறந்து பார்த்தும் முடியாமல் போக, எப்படியோ தன் உடலை வளைத்து முன் இருக்கைக்கு, நரேனுக்கு அருகில் வந்து விட்டாள்.

SNP யின் கன்னத்தை தட்டி,"நரேன்.., நரேன்", எனும்போது சாயாவின் குரலில் அத்தனை நடுக்கம்.

இவனுக்கோ, பாதி விழிப்பும் பாதி மயக்கமும் எனும் நிலை.ஆனாலும் மனைவியின் குரல் நன்றாகவே கேட்டது. தாடையில் ஸ்டியரிங் இடித்திருந்ததாலோ என்னவோ வாய் திறக்க இயலவில்லை. ‘ஹ்ம்ம்.ம்ம்’ என்று முனக மட்டுமே முடிந்தது.

நல்ல வேளையாக, அதிக நேரம் இவர்களை தவிக்க விடாமல் அவசர ஊர்தி வந்துவிட, மருத்துவர்களும் செவிலியும் சேர்ந்து SNP யின் கால்களை காரில் இருந்து பிரித்து எடுப்பதற்குள், SNP -க்கு வலித்ததைக் காட்டிலும் சரணுக்கு வலித்தது.


“டாக்டர், அவருக்கு வலிக்காம எடுங்க ப்ளீஸ்”, என்றும்..

“ஐயோ, நரேனுக்கு ரத்தம் வருது சார்”, என்ற சரணின் மன்றாடுதலும் தொடர்ந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் பொறுமை இழந்து, “மேம்.நீங்க உங்க காயத்துக்கு மருந்து போட்டுக்கோங்க, இங்க கூட இருந்து தொல்லை பண்ணாதீங்க”, என்று சாயாவைக் கடிந்து கொண்டனர்.

ஆனாலும், “இல்லல்ல உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.எனக்கு ஒன்னுமில்ல அவரை பாருங்க”,என்று சரன்யுசாயா சொன்னதும்தான் மருத்துவர்கள் அவர்களது வேலையை தொடந்தனர். ஒருவழியாக SNP யை காரில் இருந்து பிரித்தெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தான் சரண் ஓரளவு நிதானமானாள்.

சூர்யநாராயண பிரகாஷுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால் வலி தெரியாமல் இருப்பதற்காக, தூக்க மருந்து செலுத்தப்பட்டு இருந்தது. அந்த நிலையிலும் சரன்யுசாயாவின், "நரேன், உனக்கு ஒன்னும் இல்ல, எல்லாம் சரியாகிடும், ஐ லவ் யு, ஐ நீட் யு, ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக வந்துடு", என்ற அவளது வார்த்தைகள் தொடர்ந்து நரேனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.

இதோ, இப்பொழுது இந்த அற்பமானவனின் அவசர ஊர்தியில் பயணிக்கும் போதும் அவளது குரல் கேட்கிறது. மனைவி என்ற பெயரில் வந்த இன்னொரு தாய். "இனியொரு பிறப்பெடுத்தால் கடைசிவரை கூட வருகிறேன் என் தேவதையே.."என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான், "லவ் யூ சரண், பசங்கள பாத்துக்கோ, டேக் கேர்.", என்று விடைபெற்று, நடப்பிற்கு வந்தான் SNP.

சூர்ய நாராயண பிரகாஷ் மனைவியிடம் மானசீகமாய் விடைபெற காரணம் உண்டு. இனியும் கரணை உயிரோடு விடும் எண்ணமில்லை, SNP க்கு. தவிர இவனிடமிருந்து வெடிபொருட்கள் வாங்கி நம் நாட்டில் அழிவை ஏற்படுத்தும் அந்த நாசகார கூட்டம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

இந்த காரணத்திற்காகத்தான், கரணிடம் வலிய பேச்சு கொடுத்து, தன்னையே பகடையாய் உபயோகிக்க வைத்தான் SNP. அதோடு அவ்வப்போது தன்னை விட்டு விடுமாறு பயந்தாற்போல கேட்பதும், கரண் கண்டிப்பாக எதிர்மறையாகவே வினையாற்றுவான் என்பதை புரிந்து கொண்டதால் தான்.


தேவைப்பட்டால் தன் உயிரைக் கொடுத்தாவது இந்த காரியத்தை செய்ய வேண்டும் என்று திட்டம் வகுத்துவிட்டான் SNP. வரப்போகும் விமானியின் துணையும் கொஞ்சம் இருந்தால், வேலை கனகச்சிதமாய் முடியும்.

ஆனால் அதற்கு முன் முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது. இந்த கரனிடமிருந்து அந்த கடைசி வெடிகுண்டு எங்கு வைத்துள்ளான் என தெரிந்து கொள்ள வேண்டும், அதைவிட முக்கியமாக அந்த ரிமோட்டை இவனிடமிருந்து பறிக்க வேண்டும் என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது SNP யின் மனது.

அதற்குள் அவர்களது வாகனம் ஏர்போர்ட்டை நெருங்கியிருந்தது. எந்த ஒரு சோதனையும் கூடாது என்று கரண் நிபந்தனையிட்டு இருந்தால், அவர்கள் வாகனம் எவ்வித தடையோ தடங்கலோ இன்றி நேராக விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் ஓடுபாதையின் அருகே சென்று நின்றது.

அரசாங்கம் கரண் கேட்ட அனைத்தும் தயாராக இருப்பதாக முன்பே சொல்லியிருந்தது. விமானநிலையம் சென்று அடைந்ததுமே SNP," இப்போவாவது என்னை விட்டுடலாமே" என கேட்க, கிண்டலாக SNP யைப் பார்த்த கரன் , "நாங்க இறங்கும்போது உன்னை விட்டுறோம்", என்றான்.

கரண் கேட்ட விமானம், அவனது வாகனத்திலிருந்து பார்த்தாலே தெரிந்தது. அப்போதும் வாகனத்தில் இருந்து இறங்காமல் தனது வலது பாக்கெட்டில் இருந்த ரிமோட்டை வெளியே எடுத்தான், கரண்.

வண்டியின் டேஷ் போர்டினைத் திறந்து, அதில் இருந்த சலோடேப் ரோலைக் கொண்டு ரிமோட்டை இடது உள்ளங்கையில் வைத்து, தனது கட்டைவிரலை இயக்குவிசையின் (ரிமோட் பட்டன்) மேல் இருக்குமாறு வைத்து இறுக்கமாக பிணைத்துக் கொண்டான்.

ஒருவேளை அதை அவன் இயக்க வேண்டும் என்று நினைத்தானானால் அதிகம் மெனெக்கெடத் தேவையில்லை. மைக்ரோ வினாடி நேரம் போதும். வேகமாக ஒற்றை அழுத்து அழுத்தினால் போதும் என்பது போல ஏற்பாடு செய்து கொண்டான்.

கரனது செயலை வெறித்துப் பார்த்த SNP யிடம், "என்ன பாக்கற? ரிமோட் இல்லனா என்னோட கத கந்தலாயிடாதா? போலீஸ்காரங்க உடம்புல ஒரு இடம்விடாம சல்லட போட்டுட மாட்டாங்க? அத்தனை பேரும் இல்லேன்னாலும் உன் மாப்ள ஒருத்தன் போதாது?", என்று விகாரமாகச் சிரித்தான்.


SNP எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். பேசும் நேரம் இதுவல்ல என்று அவனுக்குத் தெரியும். அதன் பின்னர், கரண் தனது ஆட்கள் இருவரை அழைத்து அவனுக்காக அனுப்பட்டிருந்த விமானத்தின் உள்ளே யாராவது ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா என பார்த்து வரச் சொன்னான்.

அவர்கள் விமானத்தின் அனைத்து பகுதிகளையும் தங்கள் கையில் வைத்திருந்த ஹீட் சென்சார் எனப்படும் கருவியைக் கொண்டு நன்றாக சலித்தனர். யாரும் இல்லை என்று உறுதியாக தெரிந்து கொண்டதும், விமானத்தின் வாயிலுக்கு வந்து, கரனைப் பார்த்து வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்தி காண்பித்தனர்.

வாகனத்தில் இருந்து இறங்கும்போது, ஜாக்கிரதையாக ரிமோட் பிணைக்கப்பட்டுள்ள தனது இடது கையை கேடயம்போல தனது மார்பின் முன்பாக வைத்து மீதமிருந்த அடியாட்களுடன் SNPயையும் கூட்டி கொண்டு விமானத்திற்குள் நுழைந்தான் கரண். .

விமானியை ஒரு முறை பார்த்து வர நினைத்து, "பைலட்-டை பாக்க போறேன், வா", என்று கரண் சொல்ல..

"நா எதுக்கு?", என்று SNP பயந்தது போல நடுக்கத்தோடு கேட்டான்.

"இனிமே நான் சொல்றத மட்டும்தான் நீ கேக்கணும் , மீறி பேசின ... ", என்று மிரட்டினான் கரண்.

காக்பிட் சென்று விமானியை பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி, கரனுக்கோ, விமானி சீக்கிய மதத்தை சேர்ந்தவன் தவிர ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே அறிந்தவன் என புரிய...., சட்டெனகோபமானவன், "தமிழ் மாலும்?", என்று கேட்டான்.

"கொஞ்சம் கொஞ்சம் தெரியும் சார், ஒரே ஒரு ரெக்வஸ்ட் மட்டும்தான் கவர்மெண்ட் கேக்குது, கண்டிப்பா பாம் எங்கயும் வெடிக்கக்கூடாது, நீங்க கேக்கறது அவங்க செய்ய தயாரா இருக்காங்க. சோ ப்ளீஸ்..", என்று சற்றே வட இந்திய வாசனையுடன் என்றாலும் தமிழில் தெளிவாக அந்த சீக்கியர் பேசினார்.

"அது நான் பத்திரமா போய் சேர்றதில இருக்கு", சொன்னவாறு விமானியின் உடலை ஆயுதம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டான்.

அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த SNP, "நான்தான் நீ சொல்ற எல்லாமும் கேக்கறேன்?, இந்த பயமுறுத்தறா மாதிரி என் உடம்பை சுத்தி இருக்கிற ஓயரெல்லாம் எடுத்துடலாமே ?", என்று கரணை பார்க்க..

"ஏற்கனவே சொன்னது தான், ஆனாலும் மறுபடியும் சொல்றேன், நான் போய் சேர்றவரைக்கும், அவங்களுக்கு ரத்தம் காமிக்க நீ வேணும். நீயே சொன்னது தான்.". பேசும்போது துப்பாக்கியை கையில் எடுத்திருந்தான்.

"ம்ஹூம்", விரக்தியாக தலையசைத்து, "சரி நா இங்க உக்காந்துக்கவாவது எனக்கு அனுமதி இருக்கா?", என்று கேட்டான்.

"இங்க உக்காந்து என்ன பண்ணப்போற?"

"எங்க இருந்தாலும் எதுவும் பண்ண முடியாமத்தான் கைல ரிமோட் ஒன்னு வச்சிருக்கியே? அப்பறம் என்ன? பிளைட்-ல முன் சீட்ல உக்காரனும்னு ரொம்ப நாள் ஆசை. என்னோட கடைசி ஆசைன்னு நினைச்சுக்கோயேன்", என்றான் SNP.

"டே.. இங்க இவங்க கூடவே இரு. ஏதாச்சும் பேசினா என்கிட்ட சொல்லு", என்று தன அடியாள் ஒருவன், கொஞ்சம் படிப்புக் களை முகத்தில் இருந்தது, அவனிடம் சொல்லிவிட்டு காக்பிட்டில் இருந்து வெளியேறினான் கரண்.

கோ-பைலட் இருக்கையில் அமர்ந்துகொண்டு பக்கவாட்டில் விமானியை பார்த்ததும் SNP ஒரு நொடி திகைத்தான். பின் உடனேயே தெளிந்து புன்னகை பூசியது அவன் கண்கள். ஆம் கண்கள் தான் சிரித்தது, முகம், எப்பொழுதும் போல் இருந்தது.

அந்த தேர்ந்த விமானியும் SNP -யின் கண்ணசைவுகளை, வாங்கி பிரதிபலித்தாலும், எச்சரிக்கை சமிக்ஞயை கொடுத்து அமைதியானது.

விமானியின் பரிபாஷை புரிந்தாலும், இவர் வந்திருக்க வேண்டாமே, வேறு யாருமே கிடைக்கவில்லையா இந்த அரசாங்கத்திற்கு? என்று வசைபாடத்தான் தோன்றியது SNP -க்கு. சமீப காலத்தில்தான் எதிரிநாட்டில் போர் செய்யும்போது பிடிபட்டு பின் ராணுவ ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் அந்நாட்டு ராணுவத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விமானி அவர்.

அவரின் திறமையில் SNP-க்கு சந்தேகமில்லை ஆனால் மீண்டும் ஒருமுறை அவர் மரணத்தின் வாசலை மிதித்து வர வேண்டுமா? என்று யோசனையாய் இருந்தது. ஆனால் இப்போது அதைக் குறித்து யோசித்து ஒன்றும் செய்வதற்கில்லை.

இங்கே தனி ஒரு மனிதனை விட, மக்கள் முக்கியமானவர்கள். சின்னதாய் ஒரு நூலிழையளவு தப்பிக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், முதல் ஆளாய் அவரை அனுப்ப வேண்டும் என்றும் மனதுக்குள் முடிவு செய்தார் SNP.

இதோ விமானம் கிளம்பியாயிற்று. அவன் போக சொன்ன இடம் ***********னில் இருக்கும் ******* விமான நிலையம், இது சிறிய ரக போர் விமானங்களுக்கு மட்டுமான தளம், இப்படி ஒரு விமானத்தளம் இருப்பதே மற்ற நாடுகள் மட்டுமல்ல, அந்நாட்டு மக்களே கூட அறியா வண்ணம் அந்நாடு ரகசியம் காத்தது.

இந்திய எல்லையை தாண்டியவுடன், விமானத்தின் இருப்பிடத்தை அறிவிக்கும் கருவிகள், வான்வழி தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட கரனின் ஏற்பாடு. பின் அந்நாட்டில் இருந்து வரும் சமிக்ஞைகள் வைத்து இவர்கள் விமானம் தரையிறக்கப்பட வேண்டும் என்று ஏற்பாடாகி இருந்தது.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் .......????

++++++++++++++++++++++++++


தோழமைகளுக்கு ..

வணக்கம்.

ரெண்டு வருஷத்துக்கு மேல இடைவெளி விட்டு ஒரு கதையோட இறுதி பதிவுகளை யாராச்சும் குடுத்துருக்காங்களா? -ன்னு கேட்டா... ஹா ஹா .. இதோ அடியேன் இருக்கேன்.

கதை ஞாபகம் இருக்கான்னு கேக்கவே மாட்டேன்.. ஏன்னா என்னையே உங்களுக்கு (நிறைய பேருக்கு) ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை. பேரை சொன்னாலே தெரியிற அளவுக்கு அவ்ளோ பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்ல.

நம்பி கதைய படிங்க. இன்னும் ஒரே ஒரு எபிதான் பாக்கி. அடுத்த வருஷம் முதல் வாரத்தில :eek: கண்டிப்பா போட்டுடறேன். :p:p:p

எப்படி இவ்ளோ நம்பிக்கையா சொல்றேன்னா... இறுதிப்பகுதி ஏற்கனவே எழுதி வச்சிட்டேன். (ரொம்ப முன்னால ரெண்டு வருஷம் முன்னாலன்னு வச்சிக்கோங்களேன்..) ஜஸ்ட் பட்டி டிங்கரிங் பாத்து.. சுபம்னு போடற வேலை மட்டும்தான் பாக்கி.

இன்னொரு கதைக்கு சுபம் போடவேண்டி இருப்பதால்.. இந்த கதையின் இறுதிப்பகுதி அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

நிறைய அறிமுகமில்லாத புதிய முகங்கள்.

சோ, எபி படிச்சிப் பாருங்க.. பிடிச்சா லைக் அண்ட் கமெண்ட்..

அன்புடன்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top