• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலவு - காதம்பரி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அடடா.... இதுவும் திரில்லர் இல்லியா??
காது மா.... நீயுமா??
நல்லா வச்சு செய்யுற மா.....
நல்லா இருந்துச்சு பா.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இரவு நிலவு

ஒரு நாள் இரவு...
நிலா ஒளிர...
சுமார் ஒன்பது மணிக்கு மேல்... ஊரடங்கும் சமயம்... அல்லது அடங்கிவிட்ட பிறகு...
மனசெல்லாம் படபடக்க...
மூளை சட்டென வேலை நிறுத்தம் செய்ய...

நடந்தது என்னவென்றால்…

ஆள் அரவமற்ற அந்தச் சாலையில், எங்கு ஓடுவது என்று தெரியாமல், உயிருக்குப் பயந்து, ஒரு பெண் ஓடி ஓடிக் களைத்துக் கொண்டிருந்தாள்.

இந்த உயிர் பயம் எதற்கு?
யாரினால் இந்தப் பயம் வந்தது?

காரணம், அவளைக் கொடூரமாகக் கொன்று போட வேண்டும் என்ற கொலை வெறியுடன், ஒரு ஆண் துரத்திக் கொண்டு வருவதால்!

மணி 10:00

பெரிய பெரிய இடைவெளிகளில் இருந்த சாலை விளக்கொளி பட்டு, அவனது கையிலிருந்தக் கத்தி பளபளத்தது.

ஓடுபவளுக்கும் துரத்துபவனுக்கும் இடையே இடைவெளி குறையும் போது, கையில் வைத்திருந்த கத்தியால், அவளது முதுகின் மேல் சில கீறல்களைப் பதித்தான்.

கீறல்களின் காயங்களிலிருந்து 'சிவப்பு வியர்வை' கசியத் தொடங்கி, ஏற்கனவே வியர்வையால் நனைந்த ஆடையை மேலும் நனையச் செய்தது.

இருந்தும், அவன் கையில் மாட்டிவிடக் கூடாது என்ற பயத்தில், அவளது வேகம் இருமடங்கானது.

மருண்ட அவளது கண்களில் 'யாராவது தன்னைக் காப்பாற்றி விட மாட்டார்களா??' என்ற நப்பாசை தெரிந்தது.

அவனது கண் இமைகள், அவளின் மரணத்தைக் காண வேண்டி திறந்தேயிருந்தன.

மணி 10:30

கன்னாபின்னாவென்று ஓடியவள், கடைசியில் ஒரு கிளைச் சாலையில் திரும்பினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு கடைகள். அனைத்துக் கடைகளும் மூடியிருந்தன. யாரேனும் இருக்கிறார்களா என கண்கள் தேடிக் கொண்டும், கால்கள் ஓடிக் கொண்டும் இருந்தன.

யாருமில்லை! அதற்கு மேல் ஓட, அவளுக்குத் திராணியும் இல்லை. ஒரு பெட்டிக் கடையின் வெளியே கிடந்த, காய்கறி மரப் பெட்டிக்குப் பின்னால் தன்னை குறுக்கி, மடக்கி அமர்ந்து கொண்டாள். பயத்தினால் எச்சிலை விழுங்கிக் கொண்டு, இரு கைகளாலும் வாய் மூடினாள்.

சற்று நேரத்தில்…
அந்த ஆணும்
அதே கிளைச் சாலையில்!
அதே பெட்டிக் கடை முன்பு!!

தேடினான்!

அவன் கண்ணில், அவள் தெண்படவில்லை. அவனது முகத்தில் அவளைத் தவறவிட்டோமோ என்ற கோபம்… இல்லை, அவளின் ரத்தத்தில் குளிக்காமல் தன் கத்தி ஓயப் போவதில்லை என்று சபதம் செய்து கொண்டான்!

அவளோ கடையின் மறைவான தடுப்பின் பின்னிலிருந்து, அவனின் தேடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணி 11:10

தீடீரென்று அவனைக் காணவில்லை. அங்கு அவளைத் தேடிக் கிடைக்காததால், வேறு இடத்திற்குச் சென்று விட்டான் போல!

அக்கணம் சைரன் ஒலியுடன் போலீஸ் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அவளது முகத்தில் அப்படி ஒரு நிம்மதி! தப்பிக்க ஒரு வழி!

அந்த ஒலி எந்த திசையிலிருந்து வருகிறது எனக் காதைத் தீட்டி வைத்துக் கேட்டாள்.

பக்கத்தில் கேட்க ஆரம்பித்தது. சட்டென்று மறைவிலிருந்து வெளியே வந்தாள். விரைவாகப் போலீசின் உதவியை நாடிவிட வேண்டும் என நினைத்து அரக்க பறக்க நடந்தாள்.

இடையிடையே அவன் வருகிறானா? எனப் பார்த்துக் கொண்டாள். அவன் வரவில்லை!

மணி 11:45

கிளைச் சாலையின் முனையில் வந்து எட்டிப் பார்த்தாள். இரவு நேர காவலர் ஜீப் நின்றது! தப்பியாற்று! அவனிடமிருந்து தப்பியாற்று!! பெரு மகிழ்ச்சி!! உயிர் பயம் குறைந்தது!! இரண்டரை மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது!!!

ஒரு அடி முன்னே எடுத்து வைக்கலாம் என்று நினைத்த கணத்தில், அவள் தலை முடியை பிடித்து, தரதரவென்று பின்னோக்கி இழுத்து, அவளது முன்னங் கழுத்தில் கத்தியைக் வைத்துக் கொண்டு நின்றான்.

அவளுள் மீண்டும் மரண பயம்!

.

.

.

இரவு மணி 10:00

சட்டென இருள் பரவியது.
நிசப்தம்.

என்ன செய்ய? என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம்!

நிகழ்கணத்தில் ஒர் குரல்!!

"ம்ம்க்கும், இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. எப்போ பாரு பவர் கட்டு. ஒரு படத்தைப் பார்க்க விடுறான்களா?!!" என்று இருட்டில் துழாவித் துழாவி, தன் கைபேசியை எடுத்து டார்ச்சை ஒளிரச் செய்தார்.

பின் அவரது சிந்தனையில் வந்தது,

'அந்தப் பொண்ணுக்கு என்ன ஆயிருக்கும்?'

'கழுத்தில கத்தியைக் சொருகி இருப்பானோ?'

'போலீஸ் வந்து காப்பாத்திருப்பாங்களோ?'

'அவளே தப்பிச்சு போயிருப்பாளோ?'

அவரின் மூளைக்குள், இத்தனை விடை தெரியாத கேள்விகள்.

காற்று வேண்டி, கதவைத் திறந்து வெளியே வந்தார்.
ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலா.
மணி 10:30 யைக் கடந்திருக்கும். ஊரடங்கிவிட்டது.
கேள்விக்கான பதிலை யோசிக்காமல், மூளை வேலை செய்வதை நிறுத்தியது.

கடைசியில், 'ஆங், அந்த டிவி காரன்தான! நூறு நாள் டீவியிலே படத்தை ஓட்டுவான். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்' என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு, அலைபேசியை எடுத்துப் பாட்டுப் போட்டு விட்டார்.

பபப பப்பாப பப்பாப பாபப
பபப பப்பாப பப்பாப பா....
பபப பப்பாப பப்பாப பாபப
பபப பப்பாப பப்பாப பா....

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது..
ஜொலிக்கும்...
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது...

கால்களில் தாளம் போட்டபடி, இரவு நிலவு பாட்டை ரசித்தார்!
?எல்லாரும் ஒரு மார்க்கமா தான் கிளம்பி இருக்கிங்க என்னது இது ?என்னடா விறுவிறுன்னு விறைப்பா கதை போகுதுன்னு பாத்த பட்டுனு பீஸ் புடிக்கிட்டியே மா இப்போ எனக்கு தலை வெடிக்குது? அந்த பொண்ணுக்கு என்னாச்சோன்னு?
ஹாஹா ?வெரி nice மா ??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
கதை அல்ல நிஜம். எப்படியோ அந்த டிவிகாரனை வெச்சு செஞ்சிட்ட காதம்பரி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top