You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


General Audience இரவு நிலவு - பிரேமா

Premalatha

General
SM Team
#1
Hi darlings

ரொம்ப லேட்டாக வந்து இருக்கேன். திடீரென்று எனக்கு உதித்த கதைக்கருவை கொண்டு எழுதனும் என்று ஆசை வந்தது. இது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய புனைவுக்கதை தான். படிச்சுப் பார்த்து சொல்லுங்க டார்லிஸ்... இது என்னுடைய முயற்ச்சி. ரீவியூ மட்டுமே எழுதி இருக்கேன் இதுவரை.. முதல் முறை கதை சொல்ல முயற்ச்சி பண்ணியிருக்கேன்..?

.....................................................

ஒரு நாள் இரவு. நிலா ஒளிர, சுமார் ஒன்பது மணிக்கு மேல். ஊரடங்கும் சமயம். அல்லது அடங்கிவிட்ட பிறகு... மனசெல்லாம் பட படக்க... மூளை சட்டென வேலை நிறுத்தம் செய்யும் அளவிற்கு வெறிச்சோடிக் கிடந்தது அந்த சாலை.

அந்த இரவு நேரத்தில் தன்னந்தனியாக வெறிச்சோடியச் சாலையோரத்தில் நின்றுக்கொண்டு இருந்தேன். ஆட்டோ ஓட்டுநனர்கள் சவாரிக்கு காத்து இருப்பது போல நானும் யாராவது வருகிறார்களா என்று காத்து இருந்தேன்.. என் காத்து இருப்பு வீண் போகவில்லை இரவு பதினொறு மணி இருக்கும் அப்போது ஒரு கார் என் பக்கத்தில் வந்து நின்றது.

“என்ன நீ ஃப்ரீயா.... வருவியா” என்று நிதானமான போதையுடன் கேட்டான் டிரைவர் இருக்கையில் இருந்து கொண்டு.

“ஃப்ரீ தான்... போலாம்” கண்னை காரின் உள்ளே வேற யாராவது இருக்கிறார்களா என்று துலாவிக்கொண்டே சவாரி கிடைத்த ஆட்டோகாரனை போல சொன்னேன்.

“சரி அப்ப காரில் ஏறு” என்றான் வந்த வேலை முடிந்தது என்கிற எண்ணத்தோடு.

“ எவ்வளவு நேரம் ஆகும் ... அப்புறம் முதலில் காசு கொடு அப்ப தான் காரில் ஏறுவேன்” இன்றாவது ஏமாறக் கூடாது என்கிற கரார் தோரணையுடன்.

“உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு அதைவிட அதிகமாக தருகிறேன்.. முதலில் ஏறு” உன்னோட பேரம் பேசும் மூடில் நானில்லை என்று படபடத்தான்.

“எங்கேயென்றாவது சொல்லு அப்ப தான் வருவேன்.. அங்க போலீஸ் எல்லாம் வரமாட்டாங்களே” வம்பில் மாட்டக் கூடாதே என்கிற பயத்தில்.

“எல்லாம் சேப் தான்.. இப்ப நீ வரியா இல்ல வேற ஆளை பார்க்கட்டுமா” வேற ஆட்டோவை பாத்துக்குறேன் என்பது போன்ற அலட்சியமான தோரணையுடன்.

கொஞ்ச நாளாகவே போலீஸ் கெடுபிடி அதிகம் அதனால பதுங்கி, பயந்து தான் தொழில் செய்யவேண்டிய சூழல். சாப்பிடக்கூட பணமில்லை.. இதில் நான் ஒரு பெண்ணை வேறு படிக்க வைக்கிறேன் அதற்கு அடுத்த வாரம் பீஸ் கட்டணும்... பணம் வேண்டும்... வேறு வழியில்லாமல்...துணிந்துச் சென்றேன்..

வீட்டிற்குள் அவனை பின்தொடர்ந்து சென்றேன். செழுமையின் சின்னமாக இருந்தது. இதுவரை இப்படிப்பட்ட இடத்திற்கு சென்றதில்லை. அவ்வளவு அழகாக, ஆடம்பரமாக இருந்தது. நான் எதற்கு அங்கே வந்தேன் என்கிற நினைப்பே அந்த நொடி மறக்கும் அளவிற்கு அழகாக இருந்தது.

கதவை பூட்டி விட்டு நேராக பிரிட்ஜ்க்கு சென்று மதுபாட்டிலையும், இரண்டுகண்ணாடி கோப்பையும் எடுத்து வந்து மேசை மேலே வைத்தான்.

“நீ குடிப்பிய... உனக்கு பழக்கம் இருக்க” என்று கேட்டுக்கொண்டே ஒரு கோப்பையில் ஊற்றி என் முகத்தை பார்த்தான்.

“எனக்கு பழக்கமில்ல.. வேண்டாம்.. எனக்கு நேரமாச்சி வந்த வேலை முடிஞ்சா நான் கிளம்புவேன்” என்றேன் அடுத்த சவாரி பிடிக்கனும் என்கிற அவசரத்தில்.

“நான் சொல்லுறவரை நீ இங்க தான் இருக்கனும் .. போறேன் போறேன் என்று என்னை எரிச்சல் பண்ணாதே” கட்டளை போல சொன்னான்.

“அதுக்கு நிறைய காசு ஆகும் ... பரவாயில்லையா” எப்படியாவது அடுத்த வாரம் பீஸ் கட்டிவிட்டால் போதும் என்கிற எதிர்பார்ப்போடு.

“காசு எனக்கு பிரச்சனையில்ல... நானே நொந்து போயி இருக்கேன் நீ மேலும் எதுவும் கேட்காமல் அமைதியா இருந்தா போதும்” என்னமோ நான் அவன் பிரண்டு போல சொன்னான்.

ஆச்சரியமாக இருந்தது. வீட்டுல பொண்டாட்டி டார்ச்சர், பொண்டாட்டி இல்லாத வயசானவங்க, காதல் தோல்வி, டீன் ஏஜ் பசங்க என்று பலவகையான மனநிலையில் ஆண்களை பார்த்து பழக்கப்பட்டவள் தான் ஆனால் இவன் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தான்.

அமைதியாக போயி அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன்.. நேரம் 12.30ஐ கடந்துவிட்டது. அந்த முழு பாட்டிலையும் ஒரே மூச்சாக குடித்துவிட்டு தான் என்னை பார்த்து பேச ஆரம்பித்தான்.

“நான் உயிர் நண்பனாக நினைச்சேன் என்ன பிரயோஜனம்.. அந்த துரோகி என் கூடவே இருந்து என் முதுகை குத்திட்டான். என்கிட்ட கேட்டு இருந்தா நானே கொடுத்து இருப்பேன். என்னைய ஏமாத்தி கழுத்த அறுத்துட்டான் படுபாவி... .“என்று இன்ன பிற கெட்ட வார்த்தையை கொண்டு திட்டிக்கொண்டே அழ ஆரம்பிச்சான்.

எனக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. என்னடா இது ரொதனையாக போச்சி நமக்கு டைம் சரியில்ல போல என்று நொந்துக்கொண்டாலும் அவன் அழுவதை தாங்க முடியவில்லை.

“யாவ் அழதேயா எனக்கு கஷ்டமாக இருக்கு” என்று இன்ஸ்டான்ட் தாயாக மாறினேன்.

ஒரு தாய் தன் குழந்தையை மடி தாங்குவது போல அவனை என் மார்மீது போட்டு கொண்டேன். காமவெறி கொண்ட ஆண்களை கண்டு பழகியவள் தான் ஆனால் இவனின் இந்த குமூறளை தாங்க முடியவில்லை. அவனை கட்டி அணைத்து, தட்டி கொடுத்து பலவகையாக ஆறுதல் செய்தேன்.

“நண்பன் என்று நினைச்சுதானே அத்தனை பெரிய பொறுப்பை கொடுத்தேன்.. என்னை இப்படி ஏமாத்திட்டானே. இங்க இங்க வலிக்குது” என்று இதயத்தை தொட்டு தொட்டு கத்தினான்..

அவனை சமாளிப்பது அத்தனை சுலபமான வழியாக தெரியவில்லை. அவன் தூங்கினால் போதும் என்று இருந்தது. இப்படிபட்ட சூழ்நிலையை எதிர்கொண்ட பழக்கமில்லை. வன்மையாக, வெறியாக நடந்தவர்களை கையாண்டு இருக்கிறேன். என்னை காத்துக்கொள்ள அடித்துக் கூட இருக்கிறேன். ஆனால் இது புதுசு எப்படியோ போ என்று விட முடியவில்லை. வயற்று பிழைப்புக்கு தான் என்றாலும் நானும் ஒரு மனுஷி தானே.. எனக்கும் உணர்வுகள் உண்டு தானே. அவனுக்கு நம்பிக்கை தரும் அப்படி பேசுவோம் என்று முடிவு எடுத்தேன்.

“சரி செய்ய முடியாத பிரச்சனை என்று ஒன்றுமேயில்லை.. உன் பிரச்சனை என்ன என்று தெரியாது ஆனால் கண்டாப்பாக சரி செய்ய முடியும் என்று நான் நம்புறேன். இப்ப நீ நல்லா தூங்கு காலையில எல்லாவற்றையும் பார்த்துக்கலாம்” என்று சமாதானம் செய்தேன்.

ஒரு கட்டதிற்கு மேல் அவனே அழுது, கத்தி, ஓய்ந்து என் மடி மீதே தூங்கிவிட்டான். அவனை சோபா மீதே படுக்க வைத்து விட்டு படுக்கை அறையிலிருந்து ஒரு போர்வையை எடுத்து அவன் மீது போர்த்திவிட்டேன். எங்கே மறுபடியும் எழுந்து கொள்வானோ என்று அவன் அருகிலேயே தரையில் அமர்ந்த வண்ணம் தலையை கோதிக் கொண்டே சோபாவின் மீது சாய்ந்து உட்கார்ந்த வாக்கிலேயே நானும் விடியலில் உறங்கி போனேன்.

பகலில் எங்களை போன்ற அரவாணிகளை ஏலனமாக பார்க்கும் மனிதர்கள் இரவில் எங்களை தேடி வருவது விசித்திரமாக இருக்கும். இப்படிபட்ட ஒரு இரவை நான் பார்த்ததேயில்லை. என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத இரவு அது.. என் வாழ்க்கையையே புரட்டி போட்டதும் கூட. இருளைக் கண்டு வெளியே வரும் இரவு விலங்குகளைப் போல இருந்த என் வாழ்வை சூரியனை கண்டு மலரும் சூரியகாந்தி போல மாற்றியவர்.

நான் அரவாணி என்று தெரியாமல் கூட்டிகிட்டு போனார். அவரை தேற்ற நான் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் என்னைப்பற்றி தெரிந்த பின் எனக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கையை விதைத்தவர். என்னால் இந்த சமூதாயத்தில் நிமிர்வுடன் வாழ முடியும் என்று என்னை நம்பவைத்தவர்.

ஆம், அவரோட கம்பெனியில் Accounts departmentsஇல் வேலை கொடுத்தார். அதன் பிறகு என்னை அவர் வீட்டிற்க்கு அழைத்து சென்றார். அனைவரிடமும் என்னை அவரின் தோழி என்று அறிமுகப்படுத்தினார். பெற்றோர்களே என்னை அவமான சின்னமாக நினைக்க யாரோ ஒருவர் என்னையும் ஒரு மனுஷியாக அங்கிகரித்தது கொழு கொம்பு போல பற்றிக் கொண்டேன். வாழ்க்கையில் கண்டிப்பாக சாதிக்கனும் என்கிற வெறியை தந்தது.

“மேடம் ஒன் மோர் question” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க.

எனக்கு ஒரு முக்கியமான போர்டு மீட்டிங் இருக்கு மற்ற கேள்வியை இன்னும் ஒரு நாள் ஆறுதலாக சொல்லுறேன். இப்ப Bye ???
 
Last edited:
#4
அருமை ?. திருநங்கைகள் பலர் இப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்விலும் நல்லவை நடக்க கதையில் முயற்சி செய்துள்ளது அரும. பாராட்டுகள் பிரேம்ஸ்.
 
#10
?முதல் முயற்சி போலவே தெரியவில்லை .....
?முதிர்ச்சி பெற்ற எழுத்தாகத்தான் தோன்றுகிறது..
?வெகு அருமை. ... கதையும்... எழுத்து நடையும். ...
?எனக்கு அழுகையே வந்துடுச்சி....
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top