• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலவு - ஸ்ரீநவீ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அன்றொருநாள் இரவு... ஒன்பது மணிக்கு மேல், ஊரடங்கும் சமயம் அல்லது அடங்கிவிட்ட சமயம், மனசெல்லாம் படபடக்க... மூளை வேலை நிறுத்தம் செய்ய, நடந்தது என்னவென்றால்...

சாலை பாதசாரிகளின் நடைபாதையில் நான் நடந்து கொண்டிருந்தேன்.

யாரிடம் பேசிவிட்டு செல்கிறேனோ அவன் நினைவுகளில் என் மனம் பயணிக்க, என் கால்கள் நடைபாதையில் பயணிக்க துவங்கியது.

நடுங்கும் பனிக்காற்றை ஆராயாமல் என் கண்கள் பனிக்க, அவன் பணித்தபடியே அவனை விட்டு விலகிச் செல்கின்றேன்.

எனது பதின்வயதில் காதலை பதியம் போட்டவன், அதன் வேர்விட்ட பொழுதை அறியாமல் இருந்ததன் மாயம் என்ன?

மன்றம் வந்த தென்றலின் வாசத்தை அறிந்தவனால், என் மனதில் பூத்த காதல்வாசத்தை நுகரவில்லை ஏனோ? என் மனதின் நேசத்தை அறிந்துகொள்ளாததும் ஏனோ?

வலைவீசி இதயத்தை வசமாக்கியவனிடம், மந்திரக்கயிறு இல்லாமல் வசியமானேன்.

கட்டுண்ட மருந்திற்கும் கட்டுப்படாமல் அலைபாய்ந்த என் மனதைத் திசை திருப்பும் புத்தியை எங்கு போய் அடகுவைத்தால் அவன் மனம், என் வசமாகும் தெரியவில்லை எனக்கு?

என் மனதில் புதையுண்ட காதலை வெளிப்படுத்த தெரியவில்லை என்று நான் சொன்னது குற்றமா?
புத்தியை அழிக்கும் அன்பு தேவையில்லை என்று நான் கருதியது தவறா?


தன்மானத்தில் புதைந்த என் அன்பை எதை கொண்டு வெளிப்படுத்த? என்னை நிரூபிக்க நான் தாழ்ந்துதான் ஆகவேண்டும் என்றால் அத்தகைய அன்பு வாழ்க்கைக்கு தேவைதானா?

வருங்காலத்தில் கண்களில் தாங்கிக் கொள்வான் என்று அறிவேன், அதற்கு நான் கொடுக்கும் விலை என் குடும்பத்தின் வேரையே வேரறுக்கும் என்பதை எப்படி அறிந்து கொள்ளப் போகிறான்?

அவன் அன்பை நிந்தித்தால் நன்றி கெட்டவள் ஆவேன் என்றான்! என்னை வளர்த்தோரை நம்பிக்கை துரோகம் செய்வது பாவம் என்றேன் நான்!

காதலுக்கு கண்ணில்லை, அனைத்தையும் துறந்து என் பெற்றோரை மறந்து வந்துவிடு என்று எளிதாக சொல்லிவிட்டான்.

அவன் எளிமையை கடுமையாய் மறுத்து விட்டேன் நான்!

காதலித்து விட்டேன் தான்! ஆனால் அவன் கைப்பாவை ஆகிவிடவில்லை! என் மனதில் பதியமிட்டவனே பறித்தும் விட்டான்.

இதோ என் மனவேரினை அறுத்து விட்டு காதலை கலைந்து விட்டு வந்துவிட்டேன் நான்!

இனி நான் ஒரு சுதந்திரப் பறவை! என் மனதை கட்டுபடுத்த எந்த ஒரு சாவியோ பூட்டோ தேவையில்லை எனக்கு!
*******************************
இன்று காலை ஒன்பது மணி... அலுவலகம் செல்ல, பத்து நிமிட நடை பயணத்தில் இருந்த பேருந்து நிலையத்திற்கு நான் வந்து சேர, வழக்கமாக செல்லும் பேருந்து போய் இருந்தது.

9:30 அலுவலகத்தில் இருக்க வேண்டும். அரை மணிநேர பயணம். எப்படியும் பத்து பதினைந்து நிமிடங்கள் தான் தாமதமாகும் சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். நாம் நினைப்பதெல்லாம் அப்படியேவா நடக்கிறது?

ஒரு வழியாக அரசுப் பேருந்து ஒன்று நிறைமாத கர்ப்பிணியைப் போல் ஆடி அசைந்து ஊர்ந்து வர கடைசி படிக்கட்டுவரை ஆட்கள் தொங்கிக் கொண்டிருந்தனர்...

அதைப் பார்த்ததுமே எனக்கு இதில் எப்படி பயணம் செய்வது என்ற மலைப்பு! இருந்தாலும் வேறு வழியில்லை, ஏறிவிட்டேன்.

உள்ளேயிருந்து ஒரு சிலர் இறங்க என்னையும் அள்ளி திணித்துக் கொண்டு நகர்ந்தது பேருந்து... நானும் முதல் படிக்கட்டில் நின்று கொண்டு அருகில் இருந்த கம்பியை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன்.

பின்னே எல்லாருக்கும் உயிர் பயம் இருக்கத்தானே செய்யும்! நல்ல வேளையாக எனக்குப் பின்னே ஒரு ஏழேட்டு பேர் இருக்கிறார்கள். அந்த படிக்கட்டுகளில் மட்டுமே குறைந்தது 15 பேர் பயணிப்பார்கள்.

எனக்கு என்னவோ இந்தப் பேருந்தில் ஏறியதில் இருந்து,

‘எங்கே செல்லும் இந்த பாதை.... யாரோயாரோ... யார் அறிவரோ...’ பாடல் வரிகள் திரும்ப திரும்பத் கேட்கிறது...

ஒரு வழியாக இரண்டு நிறுத்தங்களுக்கு பிறகு கொஞ்சமாக வழி கிடைத்து உள்ளே சென்றால், ஒரு பெரிய இம்சை வந்து தொலைத்தது.

இடித்து தள்ளிவிட்டு கொஞ்சம் உள்ளே சென்று நிற்க ஒரு குண்டு ஆசாமி, என்னை உரசிக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றான்...

அங்கிருந்த கூட்டத்தில் எதேர்சையாக படுகிறது என நான் நினைக்க, அந்த ஆசாமியின் கையோ இடை தாண்டி புடவையின் உள்ளே ஊடுறுவ, எனக்கு வந்ததே கோபம்.... திரும்பி நின்று அவனை எரிக்கும் பார்வைப் பார்த்தேன்!

கிட்டதட்ட என் அப்பாவின் வயது இருக்கும் அவனுக்கு... முடியெல்லாம் நரைத்து ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணைப் போல் தொப்பையை தள்ளிக்கொண்டு டிப்டாப்பாக உடையணிந்து நின்றான் அந்த முழுக்கிழம்.... ஆனால் நான் முறைத்ததற்கு அவன் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவில்லை.

அப்படியே அவனை கொன்று விடும் கோபம்தான் வந்தது இருந்தும் என்ன செய்ய எல்லா இடத்திலும் பாதிக்கப்படுவது பெண்தானே!

இப்போது இவனுடன் சண்டையிட்டால் சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். ஏதோ சுவாரசியமான சீரியலை பார்ப்பது போல்!

அந்த கிழம், "என் மகள் போல இருக்கும் பெண்ணிடம் நான் இப்படி நடப்பேனா? என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது?" என ஒரு நாடகத்தை அரங்கேற்றும். பிறருக்கு காட்சிப் பொருளாக விரும்பவில்லை நான்!

தன்மானத்தை உடைத்து வந்துவிடு என்றவனை உதறித் தள்ளிய நான், இப்பொழுது யதார்த்த வாழ்க்கையின் தவறான பக்கங்களை தடுக்கத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்!!






 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
:love::love: சூப்பர் ஸ்ரீ...

?எவ்ளோ அழகான ஒப்பிடல்...
?நிஜமாவே பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள். ....
?இதுக்கு தீர்வு தான் என்ன. ..?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
:love::love: சூப்பர் ஸ்ரீ...

?எவ்ளோ அழகான ஒப்பிடல்...
?நிஜமாவே பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள். ....
?இதுக்கு தீர்வு தான் என்ன. ..?
நன்றி சுகா dear??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top