• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலவு 1 - Shivapriya Murali

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

இந்தக் கதை கொடுத்திருக்குற தலைப்போட ஒத்துப்போகுதா இல்லையான்னு தெரியல...ஆனா, இரவு நிலவுன்னு தலைப்பைப் பார்த்ததும் இது தோணிச்சு...எழுதிட்டேன்...இதுநாள் வரைக்கும் வளவளன்னு பக்கம் பக்கமா மட்டும்தான் எழுதமுடியும், நறுக்கு தெரிச்சப்புல சிறுகதை எழுதறதெல்லாம் நமக்கு வேலைக்கே ஆகாதுன்னு முடிவே பண்ணியிருந்தேன்...ஆனாலும் முயற்சி பண்ணலாமேன்னுதான் இந்த கதையை எழுத ஆரம்பிச்சேன்...ஷப்பா...தொடர்கதை எழுதறதை விட சிறுகதை எழுதறது ரொம்ம்ம்ம்மம்பவே கஷ்டம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன்...God Bless all writers who can precisely write a short story...

இதோ... என்னோட முதல் முயற்சி உங்களுக்காக...

உங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

சிவப்பிரியா முரளி

இரவு நிலவு - 1

View attachment 21337
இன்று 9 மணி வரைக்கும் ஓவர்டைம் முருகேசனுக்கு...

எப்போதடா மணி ஒன்பதடிக்கும் என்று ஆவலாய் காத்திருந்தான் அவன்...

இதோ...மணி ஒன்பது...கடிகாரம் குக்கூ என்று கூவி மனதில் உறங்கிக்கொண்டிருந்த ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகளையும் எழுப்பிவிட்டது...

கிளம்பிவிட்டான் முருகேசன்...

ரெக்கை கட்டி பறந்தது முருகேசனின் சைக்கிள்...

வீடு சேர இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகும்...

அமுதா காத்துக்கொண்டிருப்பாள் அவனுக்காக...ஆவலாய்...ஆசையாய்...

அமுதா...முருகேசனின் அமுதா...திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆனபின்னும்... இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னும்...அவனுடைய கண்களுக்கு இன்னும் புதிதாகவே தெரியும்...அவனுடைய அமுதா...அன்பு அமுதா...அழகு அமுதா...

பெயருக்கேற்றாற்போல் முருகேசனின் வெற்று வாழ்க்கையில் அமுதமாய் நிறைந்தவள்...

அவனுடைய ஒண்டுக்குடித்தன ஒற்றைப்படுக்கையறை வீட்டில்...அம்மா, பாட்டி, இரு தங்கைகள் என கூட்டத்திற்கு நடுவிலும் அவனுக்கு காதல் சொர்க்கத்தைக் காட்டியவள்...

எத்தனை கூட்டத்திற்கு நடுவிலும் ஒரு பார்வையாலேயே சரசம் காட்டிச் செல்வாள்...இதழ்க்கடையில் துடிக்கும் லேசான புன்னகையால் ஆயிரம் கதைகளை அவனுக்குச் சொல்வாள்...

முருகேசனின் சொற்ப சம்பளத்தில் நேர்த்தியாய் குடும்பம் நடத்தி, மாமியார் மெச்சும் மருமகளாகவும் இருந்தாள் அமுதா...

எல்லாம் நல்லபடியாக இருந்தபோதிலும் வீட்டில் இருவருக்கும் தனிமை கிடைப்பது மிகவும் அரிதாகவே ஆகிப்போனது இந்நாட்களில்...

இப்படியாக கடந்துகொண்டிருந்த முருகேசன் அமுதாவின் வாழ்நாளில், என்றுமில்லாத திருநாளாய் இந்த நாள் வந்து வாய்த்திருக்கிறது...

சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு முருகேசனின் தாயும் தங்கையும், அவனுடைய இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அன்று செல்வதாக முடிவாகி இருந்தது...

காலையில்தான் அமுதா நினைவுப்படுத்தி இருந்தாள்...அதுவும் எப்படி...

கிணற்றடியில் பல்துலக்கிவிட்டு வீட்டிற்குள் நுழைய இருந்தவனை குளியலறைக்குள் இழுத்து சுவற்றோடு சாய்த்திருந்தவள், அவளும் அவன் மீது முழுதாகச் சாய்ந்திருந்தாள்...

அப்போதுதான் குளித்து முடித்திருந்தாள் என்பது அவள் மீது கமழ்ந்த சோப்பு வாசமும் மஞ்சள் மணமும் ஜில்லிட்டிருந்த அவள் மேனியும் தெளிவாக உணர்த்தின...

“ஏய், என்னடி பண்ற காலங்கார்த்தால...யாராவது பாத்துரப்போறாங்க,” என்று வெளியே எட்டிப்பார்க்க முயன்றவனின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி, “ஐயோ, பொலம்பாம ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க,” என்று சிணுங்கினாள் அமுதா.

அவள் “சாப்பிட வாங்க” என்று விட்டேத்தியாய் கூப்பிட்டாலே கிறங்கிப்போவான் முருகேசன், அதுவே அவள் இப்படி அவன்மீது சாய்ந்துகொண்டு சிணுங்கினால் கேட்கவா வேண்டும்...

அக்கம்பக்கம் மறந்துபோனது முருகேசனுக்கு...

“என்னடி, காலையிலேயே ஒரு மார்க்கமா இருக்க, என்ன விஷயம்?” என்றான் சில்மிஷமாக, அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கமாகச் சேர்த்துக்கொண்டு...

“அது...இன்னிக்கி அம்மா, தங்கச்சி, குழந்தைங்க இன்னிக்கி மத்தியானம் கல்யாணத்துக்கு கிளம்பிடுவாங்க,” என்றாள் இன்னும் இழைந்தபடி...

“அட ஆமாம்ல, தனியாவா போறாங்க, நான் வேணா மத்தியானம் வந்து கூட்டிகிட்டு போகவா?” என்றான் பொறுப்பான குடும்பத்தலைவனாய்...

“அதெல்லாம் உங்க மாமா காரெடுத்துட்டு வந்து கூட்டிட்டு போறாராம்...”என்றாள் அமுதா சுணக்கமாக...

“என்னடி மூஞ்சி சுருங்குது, நீயும் போகவேண்டியதுதானே, யாரு வேணாம்னது, எனக்குதான் லீவு கெடைக்கல, அதுக்காக நீயும் வீம்பு பிடிச்சுகிட்டு போமாட்டேன்ன...இப்போவும் ஒண்ணும் கெட்டுப்போகல...வேணும்னா போயிட்டு வா...”என்றான்.

வார்த்தை “போய்வா” என்று கூறினாலும், அவனுடைய கைகள் அமுதாவை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு “போகாதே” என்றன...

“ம்ப்ச்...சொல்றதை கேளுங்க...”என்று செல்லமாய் அதட்டியவள், அவனை மேலும் பேசவிடாமல் அவனுடைய வாயை ஒரு கையால் பொத்தினாள்...

“எல்லாரும் ஊருக்குப் போயிட்டா, ராத்திரி நாம ரெண்டுபேரும்தானே இருப்போம், அதனால...” என்று அவன் காதுகளில் தன் ஆசைகளை கிசுகிசுப்பாக, தயங்கி தயங்கி, கெஞ்சலாய், கொஞ்சலாய் கூறினாள் அவனுடைய அன்பு மனைவி...

கூறிமுடித்தவள் முருகேசனை விரித்த விழிகளுடன் எதிர்பார்ப்புடன் பார்த்திருக்க...

அவளுடைய கீழுதட்டை இரு விரல்களால் லேசாகப் பற்றி நிமிண்டியவன்...”கரும்பு தின்ன கூலியாடி, மேடம் சொல்லிட்டீங்கல்ல, செஞ்சிட்டா போச்சு,” என்று கூறியபடி அவள் கொடுத்த சுதந்திரத்தை அனுபவிக்க முனைய, “ஆத்தாடி, எனக்கு ஆயிரம் சோலி கிடக்கு, விடிய காத்தால இந்த மனுஷனுக்கு சரசத்தப் பாரு,” என்று அவனைத் தள்ளி விட்டு ஓடியே போய்விட்டாள் அமுதா...

காலையிலிருந்து அமுதா அளித்த கிறத்துடனேயே திரிந்துகொண்டிருந்தவன், இதோ கிளம்பிவிட்டான் மனைவியின் ஆசையை நிறைவேற்ற...

மதியமே கடைக்குச் சென்று அவள் கேட்டதையெல்லாம் வாங்கிவிட்டான்...கூடவே கால் கிலோ லாலா கடை அல்வாவும்...ரொம்பப் பிடிக்கும் அவளுக்கு...

நிலவின் ஒளியும்...பின்பனிக்காலத்தின் லேசான குளிர்காற்றும்...ஏற்கனவே பரபரத்திருந்தவனின் உடலில் புது ரத்தம் பாய்ச்சின...

யாருமில்லாமல் வெறிச்சோடிக்கிடந்த வீதிகளில் லேசாக ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடி சைக்கிளை அழுத்தி மிதித்து வேகம் கூட்டினான்...

வீடு சேரும்போது பத்தரை... வாசலிலேயே காத்திருந்தாள் அமுதா...தலை நிறைய மல்லிகைப்பூ சூடி...

கையிலிருந்த பையை அவளிடம் கொடுத்தவன், “எல்லாத்தையும் ரெடி பண்ணி வை, அஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துர்றேன்,” என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு குளிக்கச்சென்றான்...

அவன் குளித்துவிட்டு வருவதற்குள் எல்லாம் தயார்...

ஒரு பெரிய்ய்ய பவுல் நிறைய பாப்கார்னுடன், லாலா கடை அல்வா சகிதம்...யாருடைய தொந்தரவுமின்றி...

நிலவு காயும் இரவு முழுவதும், காலையில் கதிரவன் வந்து காயும் நிலவை விரட்டும்வரை...

இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியதிலிருந்து இன்றுவரை, மாமியாரின் சீரியல்கள், குழந்தைகளின் கார்டூன் அல்லது தங்கையின் விருப்பமான நிகழ்ச்சிகளைத் தவிர தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பே கிடைக்காமல் ஏங்கியிருந்த முருகேசனும் அமுதாவும் அவர்களுடைய புதிய 32 இன்ச் எல்இடி டிவியில் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தாயாராகிவிட்டனர்...


:LOL::LOL::):):)(y)(y)

செம்ம...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர், சிவப்பிரியா முரளி டியர்
ஹா ஹா ஹா
கொஞ்சம் பழைய ஜோடியின் ரொமான்ஸோன்னு பார்த்தால் டி வி பார்க்கத்தான் இவ்வளவு அலப்பறையா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அது சரி காதல் கடன் என்னவாயிற்று?
ராதிகாவை சந்தித்து நீஈஈஈஈஈஈஈண்ட காஆஆஆஆஆஆஆஆலமாகி விட்டது, சிவப்பிரியா டியர்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹா...‌ ஹா... சூப்பர்! லாலா கடை அல்வாவோட தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சு 32" டீவியில பிடித்த நிகழ்ச்சியா!? அமுதா கலக்கிட்டா.??
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Idhu ennadaathu vamba pochu, Iravu nilavunu story padikka aarambithadhulirindhu idhu moonaavadhu story naan bulb vaanguvadhu.:LOL::LOL:
Nanna romanticaa kondu poitu ippadiya tv munnadi okkathi vaikaradhu.:LOL::LOL:
Shivapriya, Kadhal Kadan story update eppa varum?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஏன் டியர் இப்படி மா ஏமாத்தறது ???நான் கூட ரொமான்டிக் கதைனு நினைச்சு ஓடி வந்தா எல் இ டி டிவியை காண்பிச்சுடீங்களே ?????
Same feeling ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top