• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலவு - Haripriya

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Preethu

இணை அமைச்சர்
Joined
Apr 18, 2018
Messages
662
Reaction score
841
Location
Chennai
இரவு நிலவு

தனியொருவனுக்குணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
-பாரதியார்

இரவு 10 மணி, கணினியை மூடி என் கைப்பையை எடுத்து கொண்டு அலுவலகத்திலிருந்து சீருந்து நிறுத்துமிடம் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
வானில் தெரிந்த நிலவின் ஒளி ஒர் குளுமையை என்னுள் விதைத்தது. காரை எடுத்து கொண்டு அலுவலகத்திலிருந்து சீரிய வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். வானொலியில் பாடல்கள் அழகாய் தொகுக்கபட்டு அணிவகுத்து இருந்தது.
இசையும், நிலவொளியும் என் அலுவலக பதற்றத்தில் இருந்து என்னை வெளிக்கொணர்ந்து கொண்டிருந்த சமயம், என்னை ஒரு இருசக்கர வாகனம் வேகமாக கடந்து சென்றது. அது கண்டிப்பாக ஒரு ஸ்போர்ட்ஸ் பைக், மிக உயர்ந்த தரத்தில்.


என் பின் ஒரு ஜாகுவார் –XF வண்டி வந்து கொண்டிருந்தது(வண்டிகள் என்றால் அலாதி ப்ரியம் எனக்கு). இப்பொழுது என் எதிரே ஒரு சிறு வெளிச்சம் தென்பட்டது அது விரைவில் பெரும் புள்ளியாய் மாறத் தொடங்கியது. இது யாரு wrong routeல் வருகிறார்கள் நான் உன்னிப்பாக பார்த்த சமயம்.. அதே இரு சக்கர வாகனம் என்னை கடந்து சென்றது, இப்பொழுது அந்த வண்டி சீறிப்பாயவில்லை. ஆதலால் என்னால் அந்த தலைகவசத்தினுள் மறைந்த அவனின் கண்களை காண முடிந்தது. அந்த வண்டி என்னை கடந்த கணத்தில் அனிச்சை செயலாய் ரியர் வியு கண்ணாடியில் பார்த்து நான் உறைந்து பிரேக்கை அழுத்தி இருந்தேன்.

என் பக்கவாட்டில் கார் விழுந்த சமயம் தான் நான் சுயம் பெற்றேன். என் பின் வந்த அனைத்து வாகனமும் ஸ்தம்பித்து நின்றன. இப்பொழுது என் மூளை நடந்த நிகழ்வை ரீவைண்டு செய்து பார்த்தது, அதன் சாராம்சம் இதுதான். அந்த பைக்காரன் இல்லை அது பைக்காரி “என் மூளை திருத்தியது அந்த கண்களை நினைவு கூர்ந்து”, தன் பின் பாக்கட்டில் இருந்து ஒரு கை துப்பாக்கியை லாவகமாய் எடுத்து எதிரில் வந்த ஜாகுவார் –XF வண்டியில் இருந்தவனை அழகாய், அந்த வேகத்திலும் குறி தவறாது நெற்றி பொட்டில் சுட்டு, தான் ஒரு கைதேர்ந்த ஸ்னைப்பரை போல் செயல்பட்டாள். அடுத்த வினாடி அசுர வேகத்தில் கடந்தும்விட்டாள்.

இந்த நிகழ்வை சிந்தித்து கொண்டே என் கை அனிச்சை செயலாய் 108ஐ அழுத்தி விபத்தை பதிவு செய்தது. ஆர்வம் மேலிட அந்த காரை பார்த்தேன், அதற்குள் கூட்டம் சூழ்ந்து இருந்தது. எனக்கு ஒன்று மட்டும் நிச்சயம் அவன் உயிருடன் இல்லை என்பது.
அந்த காரை நெருங்கிய பொழுது அவனை சில நல்ல உள்ளங்கள் வெளியில் தூக்கி இருந்தது(இரவு வேலை என்பதால் 4,5 பேர்கள் தான் இருந்தனர்), ஆதலால் என்னால் அவன் முகத்தை பார்க்க முடிந்தது. அவனை எனக்கு எங்கோ பார்த்த நினைவு...

ஹார்ன் சத்தத்தில் என் நினைவுகள் கலைந்தது.என்னை சரி செய்து காரை எடுத்து கொண்டு விரைந்தேன். என் வீட்டை அடுத்த 20 நிமிடங்களில் அடைந்தேன். என் கணவர் தூங்கிகொண்டிருந்தார். என் வேலைகளை முடித்து கொண்டு என் குழந்தையின் முகத்தை பார்த்து கொண்டே கண் அயர்ந்தேன்.

அதே வேளையில் ஒர் ஆள் அரவம் இல்லா இடத்தில் முன்பு கண்ட இருச்சக்கர வாகனத்தில் இருந்த அதே பெண் அந்த பௌர்ணமி இரவை ஒரு சிறு வெற்றி களிப்புடன் நோக்கினாள். “இதே போல் ஒர் பௌர்ணமி இரவில் என் பெண்மையை களவாடியவனது உயிரை இன்று நான் களவாடினேன்”, என்று இறுமாப்புடன் எண்ணிக்கொண்டாள்.

ஆஆ.. என்ற அலறலுடன் நான் விழித்தேன், அந்த முகத்தை நான் கண்டுக்கொண்டேன், “அவன் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலிசாரால் கொல்லப்பட்ட கோடீஸ்வரன், நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட செய்தி அது”. என் அலறலில் கண்விழித்த கணவனிடம் அனைத்தையும் பகிர்ந்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு காலையில் பேசிக்கொள்ளலாம் என்று குப்புற படுத்துவிட்டார். நானும் அசதியில் உறங்கிவிட்டேன்.

பொழுது புலர்ந்தது, காலை தினசரியில் நான் நேற்று கண்ட விபத்து/கொலை இருந்தது, ஆனால் அவனின் பெயர் மற்றும் முகத்தை மறைத்திருந்தார்கள், மற்றும் குற்றவாளியை தேடி கொண்டிருப்பதாக அதில் இருந்தது. இப்பொழுது நான் ஒன்று புரிந்து கொண்டேன்,”இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்தது போலி என்கவுண்டர்”, நேற்று அவனை கொன்றது அந்த பாதிக்கப்பட்ட பெண் ஆக இருக்கலாம்(இது என்னுடைய யூகம்). யாராக இருந்தாலும் அவளை கண்டு அந்நொடி பெருமை கொண்டேன்.


“தனியொருத்திக்கு பாதுகாப்பில்லை யெனில் அக்கயவனை அழித்திடுவோம்.”
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
:love::love:

?அழகான கற்பனை. ...
?இறுதியில் உங்கள் கவி அழகோ அழகு. ...
???????????????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
?? அருமை பேபி...
எனக்கு சயானா தான் நினைவுக்கு வந்தாள்..
இதுவும் கனவாக இருக்குமோ என்று படிச்சா இது கனவல்ல நிசம் என்று முடித்தது சூப்பர் ??
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
அருமையான கற்பனை... நேர்த்தியான நடை... உயிரோட்டமான கதையம்சம்... முடிவில் உங்கள் வரிகள் சிறப்பு???????????????????
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இரவு நிலவுக்கு துணையாக இருந்தது கதை நல்ல எழுத்து நடை ப்ரித்து கூடிய விரைவில் நெடும் தொடர் எழுதுங்கள்
 




Preethu

இணை அமைச்சர்
Joined
Apr 18, 2018
Messages
662
Reaction score
841
Location
Chennai
?? அருமை பேபி...
எனக்கு சயானா தான் நினைவுக்கு வந்தாள்..
இதுவும் கனவாக இருக்குமோ என்று படிச்சா இது கனவல்ல நிசம் என்று முடித்தது சூப்பர் ??
Thanks premalatha, எனக்கு அவங்க நாவல் ரொம்ப பிடிக்கும். may be அந்த தாக்கம் இருக்கலாம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top