இரவு நிலவு

#1


டியர்ஸ், இது என்னுடைய first attempt. எப்படி இருக்குனு சொல்லுங்க ????.


இரவு -நிலவு


images (1)_1.jpg


ஒரு நாள் இரவு பௌர்ணமி நிலவு , ஊரடங்கிய நேரம் ( எங்க ஊர்ல 11 மணிக்கு மேல் தான் ஊர் அடங்கும்) அப்போ தடால்….. னு sound அதை தொடர்ந்து டம்….டம்னு சத்தம். ரூமில் படுத்திருந்த நான் மடார்னு எந்திருச்சேன். திரும்ப ஏதாவது சத்தம் வருதானு பார்த்தா திரும்ப ஒரே அமைதியோ அமைதி. ஒன்னும் புரியாம திரும்ப படுக்க போனா திரும்ப தடால்னு சத்தம். சந்தேகம் இல்லை பக்கத்து வீட்டுக்கு எவனோ திருட வந்துட்டான் போலயே , அவ வேற ஊருக்கு போறப்போ அவ்வளவு பத்திரம்னு சொன்னாளேனு எனக்குள்ள பதட்டம். மெதுவா எழுந்திருச்சு சன்னல்ல பார்த்தா ஒன்னும் தெரியல சரி தைரியத்தை வர வைச்சு மெதுவா கதவை திறந்து வெளியே பார்த்தா ????என் நெஞ்சு போட்ட தாளத்தை அடக்கிட்டு திரும்ப பார்த்தேன் ??. அங்கே இரண்டு பேர் பக்கத்து வீட்டு கேட்டை தாண்டி கொஞ்சம் தள்ளி சுத்தியும் பார்த்துக்கிட்டு அவங்களுக்குள்ளே ஏதோ வாதம் நடந்துக்கிட்டு இருந்தாங்க.
ஒருத்தன் ஹைட்டா ஜீன்ஸ் , சர்ட் போட்டிருந்தான் இன்னொருத்தன் ஹைட்டு கம்மியாக இருந்தான். அவன் போட்ட டிரஸ் என்னனு தெரியலே புதுவிதமான இருந்தது. பய பந்து உருள என் பதியை கூப்பிட வந்தேன். ( பக்கத்தில அணுகுண்டு விழுந்த சத்ததிற்கு எழுதாத ஆளு என் சவுண்ட் க்கு எங்கே எழும்புறது????) தண்ணியை தெளிச்சு அப்படிஇப்படினு புரிய வைச்சு இழுத்திட்டு வரத்துக்குள்ள திருவாரூர் தேரை இழுத்துட்டு போய்டாலாம்போலனு இருந்தது. அவனுங்க அந்த இடத்தை விட்டு போய்ட்டா பிடிக்க முடியாதுனு வேற பயம். (பின்னே நமக்கு னு ஒரு கெத்து வேணாமா ☺☺☺☺) . போய் பார்த்தா இப்ப அவங்களுக்குள்ள ஏதோ சண்டை போல அந்த இடத்தை விட்டு நகரல. என் பதியிடம் காண்பிப்பது சொன்னேன். போலீஸ்க்கு சொல்லிட்டு நாம் பிடிக்க போலாமானு ஹஸ்கி வாய்ஸில் கேட்டேன். கொஞ்சம் நிமிஷம் பார்த்துட்டு வெளிகேட்டை திறந்து அவனுங்க இருக்கிற இடத்துக்கு போய் ஏதோ பேசினார்.
அவனுங்களும் ஏதோ பேசிட்டு இருந்தாங்க. எனக்கு உதறல் எதுக்கும் இருக்கட்டும் னு என் தாத்தா தடி (அது பித்தளை தடி வெயிட் வேற) கையில் வைச்சு பார்த்துட்டே இருக்கேன் , அவங்க பேசிட்டே இருக்காங்க ?????. எனக்கு ஒன்னுமே புரியல ??. சிரிச்சிக்கிட்டே என் பதி எங்க வீட்டுக்கு வரார் அவனுங்க எதிர்த்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க இப்ப தான் பார்த்தேன் ஒருத்தன் வண்டியை தள்ளிட்டு போறதை. என் பதி வந்தவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். அப்படியே என் வழி(சலி)யில் போய் மாட்டிக்கிட்டு வந்தேன் என் கண்ணாடியை ????. என் பதி என்னை முறைச்சு பார்த்துகிட்டு சொன்னாரு எதிர்த்த வீட்டு மாமி அவங்க மாமாவோட வண்டி ஓட்ட கத்துக்கிட்டு இருந்திருங்காக. வண்டி முதல்ல பக்கத்து வீட்டு கேட்டில மோதிருக்கு அப்புறமா தள்ளி தரையில் விழுந்திருக்கு. மாமி சௌர்கியத்திற்கு குர்தாவும் பேண்ட்டும் (அவங்க பொண்ணோடது???) போட்டுட்டு இருந்திருங்காக. என் கிரகம் கண்ணாடி போடாம போய் இதை பார்த்தது தான். அப்புறம் என்ன????? சிவராத்திரி தான் எனக்கு ?????….. வாங்கின வாங்குல காதுல வேறு எதுவும் விழாம போய் அது சரியாக இரண்டு நாளாச்சு.
இப்பவெல்லாம் அந்த மாமி பார்த்தா ஒரு மாதிரி சிரிப்பாங்க. பக்கத்து வீட்டு பொண்ணு கூட இந்த மாமி யார்கிட்டையும் பேச மாட்டாங்களே ,உங்கிட்ட மட்டும் எப்படி இப்படினு ???ஒரு சேஜ்னு கேட்டுச்சு. நானும் ஈ….ஈனு வந்துட்டேன். எனக்கே தெரியலே அந்த மாமி எதுக்கு சிரிக்கிறாங்கனு ???(ஒருவேளை நமக்கு ஐ பவர் கம்மினு அவங்களுக்கு தெரியுமோ என்னமோ ???. நமக்கு எதிரி தான் வீட்லயே இருக்கே ஏதாவது சொல்லியிருப்பார் அதான் ஈ……ஈ இளிச்சுட்டு வந்தாரே).

இப்பவெல்லாம் நைட் என் பதி என்கிட்ட படுகிறப்போ சொல்லிட்டு தான் படுக்கிறார் கண்ணாடியை போட்டுட்டு படு தாயேனு?????.
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#4
????????????? செம‌ செம கலக்குறீங்க டியர்????????????? முதல் முயற்சியே அதிரடியா...
நல்ல வேலை தாத்தா தடியை வச்சு அவங்களை வெளுத்து வாங்காம விட்டீங்களே?????
 
Advt

Advertisements

Top