• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராவணனே இராமனாய் - அத்தியாயம் 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rakshika Ravi

மண்டலாதிபதி
Joined
Jan 12, 2023
Messages
154
Reaction score
277
Location
Singapore
அத்தியாயம் 16

அவள் உள்ளே சென்றதும் விஷ்வஜித்தை நெருங்கிய ஜனார்த்தனம் அவனை முறைத்துவிட்டு மாதவியின் அறைக்குள் உள்நுழைய தோளைக் குலுக்கிய விஷ்வஜித் பத்ராவை நோக்கி "பத்ரா! பிரகாசத்தோட கம்பனிக்கு ஆடிட்டிங் அரேஞ்ச்பண்ணு. பிரகாசத்தோட கேஸை ஸ்ட்ரோங்க் பண்ண நம்ம சைட்ல ஒரு லாயரை அப்பாயின்ட் பண்ணு. கேஸ்மிருணாளினுக்கு எதிரா திரும்ப சான்ஸ் இருக்கு. பிகாஸ் இந்த இல்லீகல் பிஸ்னஸ் நடந்தப்போ ஷேர்ஸ் இருந்ததுமிருணாளினியோட நேம் ல. அவளுக்கு இந்த கேஸால எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அன்ட்.. இவங்க பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்ம ஆட்களை செட்பண்ணிட்டு வா பத்ரா. கம்பனி மீட்டிங்க் இருக்கு" என்று கூறி கூலர்ஸை அணிந்தவாறுவெளியேறச் செல்ல

மிருணாளினியைப் பாதுகாக்க நினைக்கும் அவனது எண்ணம் ஆச்சர்யம் அளித்தாலும் அதைப் பற்றி எதுவும் கிளறாமல் "பாஸ்! மாதவியைப் பார்க்கலயா?"

"இன்னும் எனக்கு அவங்க மேல இருக்கிற கோவம் போகல பத்ரா. எனக்குள்ள எரிஞ்சுக்கிட்டு இருக்கிற நெருப்புஅணையட்டும். நானே போய்ப் பேசுறேன்"

"ம்ம்" என்றவன் விஷ்வஜித்தை அனுப்பிவிட்டு வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

"அம்மா!" நீண்ட நாட்களின் பின்னர் கேட்ட மகளின் குரலில் மாதவியின் விழிகள் பட்டெனத் திறந்து கொண்டது. அங்கேமிருணாளினியைக் கண்டதும் "மிரு!" என்றபடி எழுந்தவரை வெயினில் இணைக்கப்பட்டு இருந்த குளுக்கோஸ் போத்தலின் இணைப்பு தடுக்க அதை பிய்த்து எறியப்போனவரை விரைந்து சென்று தடுத்துவிட்டு அவரை அணைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்தவர் அழுகையில் கேவவும் அவரை விலக்கி கன்னத்தை அழுந்தத் துடைத்தவள் "எதுக்குமா இந்த அழுகை?" என்று அமைதியாகவே கேட்டாள்.

"மிரு! மிரு உன்னைக் காணாம இவ்வளவு நாள்.." என்று மீண்டும் அழத்தொடங்க கலங்கிய விழிகளை சிமிட்டி விழிநீர்வழியாமல் அடக்கிய மிரு

"அது தான் இப்போ வந்துட்டேனே மா?! இன்னும் இந்த அழுகை எதுக்கு?" என்றவளின் ஒரு கை ஆராதனாவின் கரத்தைஇறுகப் பற்றிக் கொண்டு இருந்தது.

அவள் எவ்வளவு கூறியும் தாயின் தவிப்பு அடங்கவில்லை போலும். நடுங்கும் கரங்களால் அவளது முகத்தைத் தடவிய மாதவி

"எப்படி இருக்கிற மிரு?" என்று கேட்க தடவிய கரங்களைப் பற்றி முத்தமிட்டவள்

"எப்படிப் போனேனோ அப்படித்தான் இருக்கேன்மா. என்ன உங்களைப் பார்க்காம தான்" என்று சற்று நிறுத்தியவள் வலியப்புன்னகைத்து "அது தான் நான் வந்துட்டேனே" என்று கேட்டாள். அவளின் நிதானத்தை ஆச்சர்யத்துடன் மௌனமாகவேநோக்கிக் கொண்டு இருந்தார் ஜனார்த்தனம். மீண்டும் பிரகாசத்தின் கைது நினைவு வரவும் அழத்தொடங்கிய மாதவி

"உன்னோட அப்பாவைக் கைது பண்ணிட்டாங்கமா"

"தெரியும்!" அமர்த்தலாகவே பதிலளித்தாள்.

"என்ன?!" என்று அதிர்ந்தவர் "எப்படி மிரு நம்ம சமாளிக்கப் போறோம்? ஜெயிலுக்கு போனவனோட பொண்ணு என்ற பெயரோட எப்பிடி உனக்கு ஒரு எதிர்காலம் வரும்??" என்று கேட்க விரக்தியாக புன்னகைத்தவள்

"என்னைப் பணத்துக்காக ஒரு பொறுக்கிக்குக் கல்யாணம் பேசுனவர் தானே அவர்? இவ்வளவு நாள் நான் ஒருத்தனோடவீட்டுல சூழ்நிலைக்கைதியா இருந்தேன் மா. உன்னையும் ஆராதனாவையும் அடைச்சு வைச்சு இருந்தாங்க. அப்போலாம் உன்புருசன் நம்மள பாதுகாத்துக் கிழிச்சிட்டாரா? சரி அது கூட வேணாம். பொண்ணைக் காணோம் என்று ஒரு பொலிஸ்கம்ப்ளைன்ட் சரி குடுத்து இருப்பாரா? இவ்வளவுக்கும் எனக்கு பார்த்த மாப்பிள்ளையோட அப்பா ஒரு அமைச்சர். "

"மிரு!" அவளின் கோவத்தில் அதிர்ந்தவரை இரக்கமே இல்லாமல் பார்த்தவள்

"இதெல்லாம் ஏன் நடக்குது என்று எனக்குத் தெரியாது. இவங்க செய்றதுலாம் சரியா என்றும் தெரியாது. ஆனா, நியாயம் நம்மபக்கம் இல்லை என்று மட்டும் தெரியும்" என்று கூறியவள் ஒரு நொடி நிறுத்தி "அந்த ஆள் என் அப்பாவா இருக்கிறதை விடஇல்லாம இருக்கிறதே பெட்டர்" என்று கோவத்துடன் கூறியவளின் பேச்சு ஜனார்த்தனம் மாதவிக்கு அப்படியே தமயந்தியைநினைவூட்டியது.
 




Rakshika Ravi

மண்டலாதிபதி
Joined
Jan 12, 2023
Messages
154
Reaction score
277
Location
Singapore
சிறிதுநேரம் யாருமே எதுவுமே பேசவில்லை. கோவத்துடன் எங்கோ வெறித்துக் கொண்டு இருந்த மிருணாளினியைநெருங்கிய ஜனார்த்தனம் அவளின் தலையைத் தடவவும் அவரை நிமிர்ந்து பார்த்தவள் கேள்வியாக அன்னையை நோக்கினாள். என்ன என்று கூறி அறிமுகப்படுத்துவது என்று தடுமாறிக்கொண்டு இருந்த மாதவியைத் தடுத்துவிட்டு

"உன்னைக் கடத்தி வைச்சு இருந்த விஷ்வஜித்தோட தாத்தா நான்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்ஜனார்த்தனம். அவரது அறிமுகத்தை அதிர்ச்சியாக உள்வாங்கியபடி எழுந்து நின்றவள் என்ன கூறுவது என்று தெரியாமல்மௌனமாகவே நின்றாள். அவன் மீது கோவம் இருக்கின்றது தான்.. ஆனால் அவனது தாத்தாவிடம் அதைக்காண்பிக்கமுடியவில்லை. அத்துடன் அவரது கண்களில் தெரிந்த பரிவு அவரது நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்க்கத் தான் தோன்றியது.

"என்னமா? இந்த தாத்தா மேல கோவமா இருக்கா?"

விழிநீருடன் மறுப்பாகத் தலையசைத்தவள் "என்னைக் கடத்துன உங்க பேரனையே காயப்படுத்த முடியாம தவிச்சவ தாத்தாநான்! உங்க மேல ஏன் கோவப்படப் போறேன்? எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்ற விளக்கம் தான் இப்போதேவை. பிரகாசத்தோட மனைவி மகள் மேல ஏன் இவ்வளவு வன்மம். ஏன் ஆராதானாவையும் எங்க கூட கிடந்துதுன்பப்படவிட்டீங்க"

அவளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் மௌனித்தவர் "உன்னோட அம்மாவையோ, உன்னோட நண்பியையோஉன்னைப் பார்க்காம செய்ததைத் தவிர வேற எந்தத் துன்பத்தையும் உங்களுக்கு கொடுக்கல மா நாங்க.. விஷ்வஜித் அப்படிசொன்னானா? அவன் கிடக்கிறான்! நீ இந்தத் தாத்தாவை நம்பலாம். இனி உங்களை எந்த விதத்துலேயும் அந்தப் பய துன்பப்படுத்த மாட்டான். ஏன்னா மாதவியும் என் பொண்ணு மாதிரித் தான்" என்று கூற "அப்பா" என்றபடி அவரது கையைப் பற்றிக்கதறத் தொடங்கினார் மாதவி.

அவர்கள் இருவரையும் விநோதமாகப் பார்த்தவளைக் கண்டு சிரித்தவர் "உன்னோட அம்மாவும் என்னோட பொண்ணு அதுதான் விஷ்வஜித்தோட அம்மா தமயந்தியும் உயிர்த் தோழிங்க! இது தான் இப்போதைக்கு எனக்கும் உனக்குமான உறவா நான்சொல்லக் கூடியது. என் கூட வாங்கமா. நான் உங்களை பத்திரமாப் பார்த்துக்கிறேன்" என்று கூறியவரைப் பார்த்துஉறுதியாக மறுப்பாகத் தலையசைத்தாள் மிருணாளினி.

"ஏன் மா? இனி எங்க போவதா உத்தேசம்?"

"ஹ! எனக்கு எந்த உத்தேசமும் இல்ல. உங்களால எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய முடியுமா?"

"என்னடாமா?"

"எங்களை வேற எங்கேயாவது பத்திரமான இடத்துக்கு, நிம்மதியா வாழக்கூடிய ஒரு இடத்துக்கு அனுப்பி வைங்க தாத்தா. ஆனா உங்க பேரன் ஏதும் திட்டம் போட்டு வைச்சு இருப்பார் தாத்தா! இதுக்கு உங்க பேரன் கூட நீங்க போராட வேண்டி இருக்கலாம். ஆனா எனக்கு..எனக்கு.. இந்த ஊர் இந்த மனுஷங்க.. யாரையுமே பிடிக்கல! ஏதாவது மாற்றம் வேணும் என்று தோணுது! இவங்களோட போராட்டத்தோட நிழல் கூடப் படாத ஒரு இடமாப் பார்த்து அனுப்பி வைங்க தாத்தா”

அவளின் பேச்சில் மாதவியின் விழிகள் கூர்மையாகியது 'ஏன் இப்படி விரக்தியாகப் பேசுகின்றாள்?' என்பது போல. தந்தையின் மாற்றம் அவரின் குணம் இதனால் மட்டுமாகவே இருக்கும் என்பதை மாதவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆராதனாவும் யோசனையுடனே தோழியை நோக்கினாள். என்ன இது? மனிதர்களே வேண்டாம் என்கின்றாள்? இப்படி மனதை விட்டுவிடுபவள் இல்லையே என் மிரு? ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தது போல மௌனமாகவே நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு இருந்தாள்.

மிருணாளினியின் வேண்டுதலில் தாடையைத் தடவி யோசித்தவரின் மனதில் இவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவும் விஷ்வஜித்தை சமாளிக்கவும் விஸ்வநாதனைத் தவிர வேறு யாரும் சரிவர மாட்டார்கள் என்றே பட்டது. ஆனால் கிராமத்தில் இவர்கள் சமாளிப்பார்களா? விஸ்வநாதனிடம் இதைக் கூறினால் விஷ்வஜித் என்ன சொல்வானோ? தன்னை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த மிருணாளினியின் முகம் அனைத்து சந்தேகங்களையும் யோசனைகளையும் தகர்க்க மிருவின் தோளைத் தட்டியவர் தனது கைபேசியை எடுத்து விஸ்வநாதனுக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

"என்னடா ஜனா காத்து இந்தப்பக்கம் அடிக்குது?" ஹலோ வணக்கம் எதுவுமே கூறாமல் ஆர்ப்பாட்டமாகப் பேச்சைத் தொடங்க இவனால் மட்டுமே முடியும்!

"ஏன்டா விசு இப்போ இந்தக் கூச்சல் போடுற? பேசாம ஃபோனை வைச்சுட்டு அங்க இருந்தே கத்து! எனக்கு கேட்கும் போல" பல்லைக் கடித்தவாறு காதைத் தேய்த்துவிட்டுக்கொண்டவரின் செய்கையில் மிருவின் உதடுகளில் புன்னகை பூத்தத்து.

விசு என்ற அழைப்பிலேயே யாருக்கு அழைப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது புரிய மாதவியின் இதயத்தில் மெல்லிய வலி.

"ஹா! ஹா! சரி சரி.. என்ன விஷயம்னு சொல்லு. நிறைய வேலை இருக்குது எனக்கு"

"அது.." என்று சற்றுத் தயங்கிவிட்டு மளமளவென நடந்த அனைத்தையும் கூறியவர் "இப்போ என்ன செய்யுறது என்று தெரியலை விசு" என்று சோர்வாக முடித்தார்.

அவர் கூறிய விடயங்கள் விஸ்வநாதனுக்கே அதிர்ச்சி தான் போலும். சிறிது நேரம் சத்தமே இல்லை. அந்தப்புறம் எதுவும் கூறாமல் இருக்க "விசு! விசு!" என்று ஜனார்த்தனம் கத்தவும்

"அடச்சே! நிப்பாட்டு. இவ்வளவு நடந்து இருக்கு சொல்லாம இப்போ வந்து விசு விசு என்று கத்திட்டு இருக்க. மாதவி மேல தப்பு இல்லை என்று உனக்கே தெரியும். பொட்டைப் பிள்ளையை வைச்சுட்டு அவ வேற என்ன பண்ணுவா? அதை விடு. கடத்தி வைச்சது தான் வைச்சான் மகளை மட்டும் தனியா தன்கூட வைச்சு இருக்கிறான்..ஹ்ம்ம். இது சரியாப் படலையே ஜனா! நீ எதுவும் கேட்கலையா?"

"என்ன கேட்க சொல்ற விசு? அவன் போராடுறது நம்ம பிள்ளைங்களுக்காக. அவன் நிம்மதியா தூங்கி கூட நான் பார்த்தது இல்லை. அவனோட வேதனையைப் பார்த்துட்டு என்னால அவனைக் கண்டிக்க முடியல விசு" கண்கள் கலங்க ஜனார்த்தனம் உரைக்க புருவம் சுருக்கியபடி அவரின் பேச்சை உள்வாங்கிக் கொண்டு இருந்தாள் மிருணாளினி.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Ohhhh hooo hero va paakka koodathaama Intha dancer kku🤷‍♂️

Nalla irukku update 👍 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top