• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராவணனே இராமனாய் 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
Podrathe weekly once or twice.adhileyum dhamathundu🧐😁😌😏
Ipidi aniyaayamaa sollakkoodaathu Manju dear!! Nan daily poduren! Ena idaila chinna chinna gap eduthuduren! 😅😅
 
Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Kailash Mrinalini ah kutitu vandu kalyanam panna poriya enga yaar kitta iruka nu teriama pesitu iruka da nee, vishva avaloda appa panna thsppuku ivalai kadathitu iruku avanuku um unakum enna da vithyasam iruku antihero ku moolai velai seiyatha da, nice update dear thanks.
 
Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
Kailash Mrinalini ah kutitu vandu kalyanam panna poriya enga yaar kitta iruka nu teriama pesitu iruka da nee, vishva avaloda appa panna thsppuku ivalai kadathitu iruku avanuku um unakum enna da vithyasam iruku antihero ku moolai velai seiyatha da, nice update dear thanks.
:rolleyes: :LOL:
Ena ji inththa thittu thittureenga?
Haha!! Nan than solli iruken la ivalai kadaththitu vanthu vachchathukkum oru reason irukkum endu. Nampa matenreengale!!
 
Pikachu

நாட்டாமை
Joined
Nov 7, 2021
Messages
32
Reaction score
28
Location
Salem
உணவு உண்டுகொண்டு இருந்த விஷ்வஜித்திற்கு நேரெதிரே இருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள் மிருணாளினி! உணவு உண்டவாறே கையில் இருந்த கைபேசியின் ஸ்க்ரீனை வெறித்துக்கொண்டிருந்தவனின் விழிகள் ஒரு நொடி நிமிர்ந்து மிருணாளினியை நோக்கிவிட்டு மீண்டும் கைபேசிக்குத் தாவியது.

"நான் கொஞ்சம் பேசனும்!" கைகளைக் கட்டியபடி முகத்தை வேறுபுறம் திருப்பியவாறு அமர்ந்திருந்தவளை விழிகளை இடுக்கிப் பார்த்தவன் ஒன்றுமே பேசாமல் உணவை உண்ணவும் மனதை வியாபித்த கோவத்தில் மேஜையைத் தட்டியவள் "நான் உன் கூட பேசனும் மிஸ்டர்!" என்றாள்.

அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி இலேசான சூட்டுடன் இருந்த நீரடங்கிய பாத்திரத்தில் கைகளை நனைத்து எடுத்து அருகில் இருந்த நாப்கினில் நாசூக்காகத் துடைத்து எழுந்தவன்

"எனக்கு உன் கூட பேச விருப்பமில்லை" என்றுவிட்டு ஃபோனை பாக்கெட்டில் போட்டபடி வாசலை நோக்கி நடக்க குடு குடு என்று ஓடிச்சென்று அவனை மறிப்பது போல நின்றாள் மிருணாளினி! தன்னை வெளியேற விடாமல் கபடி ஆடுவதைப் போல மறித்து நின்றவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன்

"பரவால்லையே! ட்ரெஸ் சரியான சைஸ்ல தான் வந்திருக்குல?" என்றான்! அன்று வந்த சேலையுடனே சுற்றிக்கொண்டு இருந்தவளின் அறைக்கு அங்கு வந்து மறுநாளே, மல்லிகாவின் மூலம் சில சேலைகளும், சுடிதார்களும் மற்றும் இதர உடைகளும் வந்திருந்தன. அவள் அணிந்திருந்த ப்ளவுஸை அளவுக்கென, மல்லிகா எடுத்து சென்று இருக்க சேலை அணியாமல் சுடிதாரில் தான் அன்று கீழே வந்திருந்தாள்.. பட்டென்று கைகளைக் கீழிறங்கி அணிந்திருந்த சுடிதாரின் ஷாலை இழுத்து விட்டவள் முறைக்கவும் புருவம் உயர்த்திய விஷ்வஜித்

"என்னைப் பார்! என் அழகைப் பார்! என்று முன்னால வந்து நின்றது நீ! இப்போ முறைப்பு எனக்கா?" என்று அவளைக் குத்தியபடி தாண்டிச்செல்லப் பார்த்தவனின் கால்கள் "ப்ளீஸ்! நான் கொஞ்சம் பேசனும்" என்ற குரலில் அப்படியே நின்றது.

அவளின் முறைப்பைத் தாண்டிப்போக முடிந்த அவனால் கெஞ்சலைத் தாண்ட முடியவில்லை. அதில் தன்மேலேயே எழுந்த கோவத்தில் அவளை சுட்டெரித்தபடியே திரும்பியவன் " எதுக்காக என்னை இப்படி வழி மறிச்சுப்பேசிட்டு இருக்க மிருணாளினி? உன்னோட அழகால, பேச்சால என்னை மயக்கி உன் வலையில விழவைக்கலாம் என்று ஏதும் திட்டம் போடுறியா? அந்தக் காலத்தில பெண்கள் அழகை ஒரு ஆயுதமாப் பயன்படுத்தி இருக்கிறாங்க என்று கேள்விப்பட்டிருக்கேன்! ஒருவேளை அதுக்குத் தான் ட்ரை பண்றியா? " என்றபடி கண்ணைச் சிமிட்டியதுதான் தாமதம்

"என்ன சொன்ன ராஸ்கல்!" என்றபடி கையை ஓங்கியவாறே விரைந்து அவளை நெருங்கினாள் மிருணாளினி. ஓங்கிய கையைப் பற்றி அப்படியே பின்னால் முறுக்கியவன் வலியால் முகத்தை சுழித்தபடி தன்னை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளுக்குள் பார்வையைப் பாய்ச்சி "என்னைச் சீண்டிப்பார்க்கிறது உனக்கு நல்லது இல்லை மிருணாளினி" என்று கடித்த பற்களிடையே வார்த்தைகளைத் துப்பிவிட்டு அப்படியே அவளைக் கீழே தள்ளினான்.

நிலத்தில் வீழ்ந்து தனது கைகளைத் தேய்த்தபடி அண்ணார்ந்து நோக்கியவளின் முகத்தினருகே குனிந்தவன் "நீ பிரகாசமோட பொண்ணு என்று எப்போலாம் எனக்கு நியாபகம் வருதோ அப்போலாம் உன் மேல வெறுப்புத் தான் உருவாகுது! அதுனால என் முன்னாடி நீ வர்றதைக் குறைச்சுக்கிறதே உனக்கு நல்லது. இல்லனா! காயப்படப்போறது நீ தான் " என்றுவிட்டு மீண்டும் வாசலருகே நடந்தவனை

"இன்னைக்கு என்னோட பிறந்த நாள்" என்ற குரல் மீண்டும் தேக்கியது. அப்படியே திரும்பி வீழ்ந்திருந்தவளை நோக்கியவன் எதுவும் கூறாமல் அவளையே வெறிக்கவும் தட்டுத் தடுமாறி எழுந்துநின்றவள் அவன் முறுக்கியைத் தேய்த்துவிட்டவாறே

"எனக்கு.. இன்றைக்கு.. எனக்கு அம்மா கூட பேசனும்" என்று கூறிமுடிக்கும் முன்னரே இரு துளிக்கண்ணீர் விழிகளைத் தாண்டி ஓடியது இவனிடம் கெஞ்சவேண்டிய தன் நிலையை எண்ணி. அவளுக்கு நெருங்கிய இரு உயிர்களையும் கடத்திவைத்து இருப்பவன் இவன். தன் தந்தையைப் பழிகூற இவனுக்கு என்ன அருகதை இருக்கின்றது. தொழில்ப்போட்டிக்காக குடும்பத்தினரைக் கடத்திவைப்பது எவ்வளவு பெரியபிழை. இதில் இவனுக்கு என்னைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கின்றதாமே!

ஒரு பெருமூச்சுடன் வாசலை நோக்கித் திரும்பியவன் " எனக்கு அம்மா இல்லாமப் போகக் காரணமா இருந்தவனோட பொண்ணுக்கு, அவளோட அம்மாவோட பேச சந்தர்ப்பம் அமைச்சுத் தர நான் என்ன அவ்வளவு நல்லவனா?" என்று ஏதோ ஒரு உணர்ச்சி நிறைந்த குரலில் கோவம் கொப்பளிக்க அவன் கூற, அவனின் பேச்சில் விக்கித்து நின்றவளுக்கு அடுத்து பேச நா எழவில்லை.

அவளின் அமைதியான நிலையை சாதகமாக்கிக் கொண்டு விரைந்தவனின் காதுகளுக்குள் " எனக்கு அம்மா கூட பேசனும்" என்று கூறிய மிருணாளினியின் குரலே மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது.

"என்னது? என்னோட அப்பாவால இவனோட அம்மா இல்லாமப் போனாங்களா? அப்போ இவன் என்னை இங்க வைச்சு இருக்க பிஸ்னஸ் காரணம் இல்லையா?" ஒருவேளை இவன்.. மேல் யோசிக்கப் பிடிக்காமல் நகர்ந்து சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தலையைப் பற்றிக்கொண்டாள் மிரு!

அதேநேரம் "நில்லுடா! என்ன உங்க ப்ளான் என்று சொல்லிட்டு போடா?" என்று தோட்டத்தில் நின்ற பத்ராவிடம் துள்ளிக்கொண்டு இருந்தாள் ஆராதனா!
Nice

Nice 😊
 
Prathaajini Ganesh

நாட்டாமை
Joined
Sep 11, 2020
Messages
23
Reaction score
27
Location
Srilanka
Epi kaga wait pannitu irunthen sis...semma vichu baby romba getha irukare😍😍😍😘😘😘miru mela vichu ku something something start agitu pola🤣🥰🥰🥰pavam miru but enna seiya ava appa sari illaye 😪😪 kailash enna panna porano🙄🙄 but vishwa thandi miruva onnum panna mudiyathu 😉😉😜 bathra vum arathanavum than jodiya😅😊😊😊 very interesting epi sis🥰🥰🥰👏👏
 
JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
அருணகிரியும் கைலாஷூம் மிக மோசமான பேர்வழிகளாக இருக்கானுங்க.

இப்ப என்னடா செய்ய போற விஸ்வஜித்து, அம்மா ஓரு தெய்வம்ன்னு பாட்டு பாட போறீயா ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top