• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராவணனே இராமனாய் 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
டொட்டடொய்ங்!!! வந்துட்டேன் செல்லங்களா!
தாமதமா வந்ததால எதுவும் பேசாம நேரா அப்டேட்டுக்குள்ள குதிக்கிறா இந்த அனாமிகா 33!

அனைவரினது இறுதி அத்தியாயத்தின் கருத்துக்களிற்கும் பதில் எழுதிவிட்டேன். யாரோட கமெண்ட்ஸ சரி மிஸ் பண்ணி இருந்தா மன்னிச்சுக்கோங்க மக்காஸ்! திரும்ப செக் பண்ணிடுறேன்!

இப்போ அத்தியாயத்துக்குள்ள நுழையலாம்!
அந்தக் கருத்து மட்டும்.. ஹி..ஹி...

HfkNSF.gif
 




Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
அத்தியாயம் 13

f513f6ba818d720f3a0268d8c11bf218.jpg

மிருணாளினியின் மனது பதறித்தான் போனது! எதற்காக என்று அவளுக்கே தெரியவில்லை. கத்திமுனையில் கடத்திவைத்திருப்பவனின் நலனை மனம் நாடுவதன் விந்தையும் புரியவில்லை. ஆனால்! அவன் தன்னைத் தானே வருத்திக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு இருக்கவோ அவனது துன்பத்தில் இன்பத்தைக் காணவோ அவளது இயல்பு இடம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

பல திரைப்படங்களில் கண்டு இருக்கின்றாள். பெண்களைக் கடத்தி இருட்டறையில் நான்கு ஐந்து தடியர்களின் பாதுகாப்பில் எவ்வளவு கொடூரமாகக் கையாளுவார்கள். ஆனால் தாயின் நலனைக்காட்டி பயமுறுத்தி தன்னை இந்த வீட்டில் வைத்து இருப்பதைத் தவிர அவளது தேவைகள் எவையுமே இங்கே மறுக்கப்படவில்லை. மரியாதையும் கூட! என்ன அவளைக் காணும்பொழுது விஷ்வஜித்திடம் எழும் கோவம் அதுதான் அவளைத் துன்புறுத்திக்கொண்டு இருக்கின்றது.

கண்ணியமாக எதிரியின் பெண்ணை நடத்தும் பாங்கு அவளை ஏதோ ஒரு மூலையில் இளக்கிக் கொண்டு இருந்தது. அதைவிட மல்லியின் வாழ்க்கையில் அவன் செய்த செயல்கள்?! தன்னைக் கடத்தி வைத்திருப்பது முதல் அவன் செய்யும் அனைத்திற்கும் அவன் பக்கம் ஏதோ ஒரு நேர்மையான விடயம் இருக்கின்றது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

மனதில் தோன்றிய சலனம்தான் அவளை அவனது கோவத்தையும் மீறிப் பூஜை அறையைத் திறக்கும் அதிகப்பிரசங்கித் தனத்தை நடத்தச்செய்ததோ? அவன் நினைத்து இருந்தால் இந்த மல்லியைக் கூட அவளுக்கு எதிராக இருக்க செய்து இருக்கலாம் அல்லவா? ஆனால் அவனது கோவத்தை அவனுடன் வைத்துக்கொண்டு மற்றையவர்களை அவளுடன் இயல்பாக நடமாடச் செய்த அவன், அவளுக்கு சம்திங்க் ஸ்பெஷல் தான் இல்லையா?

உள்ளங்கையில் சிக்கரெட்டின் நெருப்பு தந்த எரிச்சலைத் தாங்கிக்கொண்டவன் மீண்டும் கையைச் சுடச்செல்லவும் வளைக்கரம் ஒன்று அவனது கையைப் பற்றியது. அவனைப் பற்றிய கை மிருணாளியினது என்று நன்கு தெரியும் விஷ்வாவிற்கு. அக்கையின் பிடியை அப்படியே உதறியவன் கையை மீண்டும் பற்றிய மிருணாளினி கோவத்தில்

"பைத்தியமா விஷ்வா நீ?" என்று கத்தினாள்.

அவள் குரலில் நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தை அங்கிருந்த மெல்லிய விளக்கொளியில் கண்டவள் அதிர்ச்சியில் அப்படியே கைப்பிடியை தளரவிட்டாள். முகத்தில் அறைந்ததன் விளைவாக அவனது இலேசாக வளர்த்து சீராக வெட்டப்பட்டு இருந்த தாடியைத் தாண்டி கன்னமும் விழியும் சிவந்து போய் இருந்தது தென்பட்டது.

"அய்யோ!" என்று பதறியவள் "என்ன..என்ன இதெல்லாம்?" என்று தடுமாறியபடி நிறுத்தினாள். அவளை விநோதமாகப் பார்த்தவன்

"உள்ள போ!" என்று அமைதியான குரலில் கூறினான். அந்தக் குரலில் அடிவயிறு சில்லிட்டாலும் அவனைப் பேசச்செய்தால்தான் அவன் பக்கம் இருக்கும் காரணத்தை அறியலாம் என்ற எண்ணம் உந்த

"இல்லை, நான் போக மாட்டேன்! ஏன் உன்னையே காயப்படுத்திக்கிற? பைத்தியமா நீ?" என்று மீண்டும் கேட்டாள்.

"ஹ! ஆடு நனையுதே என்று ஓநாய் அழுற கதையைக் கேள்விப்பட்டு இருக்கேன். இங்க ஓநாய் நனையுது என்று ஆடு அழுது! விந்தையா இருக்குல?" என்று கேட்டுவிட்டு கையில் இருந்த சிகெரெட்டைத் தூரப்போட்டான். போட்டவன் எழுந்து செல்லத்திரும்பவும்

"நில்லு விஷ்வா! எதுக்காக உன்னையே காயப்படுத்திக்கிட்ட என்று சொல்லிட்டு போ!"

அவளின் குரலில் நின்றவன் திரும்பி அவள் பக்கமாக ஒரு அடி எடுத்து வைத்து அணிந்திருந்த நைட் பான்ட்டின் பாக்கெட்டில் கையை விட்டு அழுத்தமாக நின்றுகொண்டு அவளை உற்றுப் பார்த்தான்.

அவளின் விழிகளில் தெரிந்த உணர்வை என்ன என்று அறியமுற்பட்டுத் தோற்றவன் "ஒரு பெண் மேல என்னோட பலத்தைக் காட்டி இருக்கேன் பாரு! அதை நினைச்சு என் மேலே வந்த அருவருப்பால தான் என்னைத் தண்டிச்சுக்கிட்டேன்! அந்த இடத்தில எந்தப்பொண்ணு இருந்தாலும் இதே தான். உனக்காக என்று நினைச்சுக்காத!" எதுக்காக்க விளக்கம் கொடுக்கின்றோம் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனைப் புரியாத பார்வை பார்த்தவள்

"பொண்ணை அடிக்க கூடாது. ஆனா கடத்தி வைச்சு இருக்கலாமா?" என்று நக்கலாகக் கேட்கவும் இளகியிருந்த அவனது முகம் மீண்டும் இறுக தலை சற்று நிமிர்ந்து விழிகள் குரோதத்தில் ஜொலித்தது.

"பிரகாசம், அருணகிரி விஷயத்தில என்னால சரி தப்புலாம் யோசிக்க முடியாது. அவனுகளுக்கு எதிரா சேர்த்து வைச்சு இருக்கிற துருப்புச்சீட்டுகளில நீயும் ஒன்று அவ்வளோ தான்" அவனது பேச்சில் முகத்தை வினாவாக்கியவள்

"அப்பா அப்பிடி என்ன செய்தார் விஷ்வா? அவர் நல்லவராத் தான் இருந்தார். இப்போ தான் கொஞ்ச நாளா..."

அவள் முடிக்கக் கூட இல்லை. கோவம் கலந்து "ஹா..ஹா" என்று வெறி வந்தவன் போல சிரித்தவனின் சிரிப்பைக் கண்டு பயத்தில் நாக்கு அப்படியே பற்களின் பின்னே பதுங்கிக் கொண்டது.

சிரிக்கும் அவனையே பயத்துடன் நோக்கிக் கொண்டு இருந்தவளை சிரிப்பை நிறுத்திவிட்டு முறைத்தவன்

"அப்பா! அப்பா வா? ஹா..ஹா.. அவனை ஒரு மனுஷனாக் கூட பார்க்கக்கூடாது. அவன் உனக்கு அப்பா! ஹா..ஹா.. இப்போ கேட்டுக்கோ உன் அப்பாவோட அழிவு அவ்வளவு தூரத்துல இல்லை. அவனையும் அருணகிரியையும் துடிக்கத் துடிக்க கொல்லப் போறது நான் தான். இந்த விஷ்வா தான்" இறுதியில் அரச கம்பீரத்துடன் தனது பெயரைக் கூறியவன் "உள்ள போ!" என்று விட்டு செல்ல அவனின் பேச்சின் தாக்கத்தில் அவன் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தொப்பென்று அமர்ந்தவள் “என்ன செய்வது? எப்படி இவனைத் தடுப்பது?" என்று யோசிக்கத் தொடங்கினாள்.

*******​
 




Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
அருகில் அமர்ந்திருந்த யுவதியின் இடையில் கைகளைத் தவழ விட்டவன் அப்படியே அவளை இழுத்து தன்மேல் சாய்த்துக்கொண்டான். கைலாஷின் இந்த செயலில் பல்லைக்கடித்தாலும் புன்னகை முகமாக அவனைத் தள்ளிவிட்டு எழுந்த அந்தப் பெண்

"நோ டார்லிங்க்! ஃபர்ட்ஸ் ட்ரிங்க்ஸ். நெக்ஸ்ட்.." மையலாகப் புன்னகைத்துக் கண்ணடித்தாள். அவளின் பாவனையில் கிறங்கிப்போனவன் "அஸ் யுவர் விஷ்" என்றபடி கையைக் குவளைக்காக நீட்டவும் அவனைத்தடுத்துவிட்டு அவளே ஒரு குவளையை எடுத்து பருகச் செய்தாள். அவளின் தோள் சாய்ந்தபடியே பருகியவனின் கண்கள் அப்படியே சொறுகி மயக்கத்திற்குச் செல்ல அவனை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு பத்ராவிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

விமானத்தில் கைலாஷின் அருகிலே ஷாஷாவின் இருக்கை அமையுமாறு பார்த்துக்கொண்ட பத்ரா, விமானப் பயணநேரத்திற்குள் கைலாஷுடன் நட்பை வள்ர்த்து, அவளை அவனது அறைக்கு செல்லும் படி உத்தரவிட்டு இருந்தான்.

தந்தைக்குத் தெரிந்தால் அவர் வெளியாட்களை உள்ளே எடுக்க வேண்டாம் என்று கூறிய உத்தரவை தான் தொடரவில்லை என்று கோவம் கொள்வார் என நன்கு அறிந்த கைலாஷிற்கு ஷாஷாவை விட்டுச்செல்லவும் மனமில்லை. அதனாலேயே தனது அறைக்கு அவளை அழைத்து செல்வதையும் அருணகிரிக்குத் தெரியப்படுத்தாமல் அங்கே ஷாஷாவுடன் சென்றிருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அலுவலகத்திற்கு செல்லாமல் தோட்டத்தில் லேப்டப் மற்றும் ஃபோனுடன் அமர்ந்து தனது வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்த பத்ரா ஷாஷாவிடம் இருந்து அழைப்பு வரவும் காதில் இருந்த ப்ளூடூத்திற்கு அவளது அழைப்பினை விரைந்து ஏற்றான்.

"சொல்லு ஷாஷா!"

"பாஸ்! டன். ஆள் மயங்கிட்டான்"

"வெல்டன் ஷாஷா!" என்று அவளைப் பாராட்டியவன் "இனி ஒரு நிமிஷம் கூட நீ டிலே பண்ணாத. வெளியில நம்ம ஆட்கள் கார்ல உனக்காக காத்துட்டு இருக்காங்க. கைலாஷிற்கு பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தவர்களில் இருக்கிற எங்க ஆட்கள் மற்றைய ஆட்களை க்ளியர் பண்ண இன்ஃபார்ம் பண்ணிடுறேன். அவங்களே கைலாஷை இனிப் பார்த்துக்குவாங்க. நிறைய நேரம் தாக்குப் பிடிக்க முடியாது ஷாஷா.சீக்கிரம் போ!"

"ஓகே பாஸ்!"

"பத்திரம் ஷாஷா" என்று வைத்தவன் "யார் ஷாஷா?" என்ற ஆராதனாவின் குரலில் துள்ளித் திரும்பினான். 'இவள் எப்பொழுது வந்தாள்?' என்று சந்தேகமாகப் பார்த்தவன் அவளிற்கு பதிலளிக்க நேரமின்றி இன்னொருவனுக்கு அழைப்பை ஏற்படுத்தி "க்ளியர் தெம். டேக் ஹிம்" என்று மட்டும் கூறி அழைப்பைத் துண்டித்தான். பின்னர் சாவகாசமாக காதிலிருந்த ப்ளூடூத்தைக் கழற்ற்கிக் கையில் எடுத்தவன் தன்னை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்த ஆராதனாவை நோக்கி

"என்ன கேட்ட?" என்று வினவினான்.

கூர்மையாக அவனைப் பார்த்தவள் "யாரு ஷாஷா?" என்று மீண்டும் கேட்டாள். அவளை வினோதமாக நோக்கிய பத்ரா

"நான் ஏன் உனக்கு அதை சொல்லனும்?"

'அதுதானே! இவன் ஏன் சொல்லனும்? ஷாஷா யாரா இருந்தால் எனக்கென்ன?' என்று எண்ணிய ஆராதனா "இல்லை... அவங்க மிருணாளினியோட ஏதும் சம்பந்தப் பட்டு இருப்பாங்களோ என்று தான் கேட்டேன்" என்று இழுக்கவும்

"ஆஹான்?" என்று கிண்டலாக இழுத்தவன் தோளைக் குலுக்கியபடி "ஷாஷாவுக்கு மிருணாளினி யார் என்றே தெரியாது" என்று கூறிவிட்டு லேப்டப்பில் பார்வையைப் பதித்தான்.

"ஆ..அப்போ.. இப்போ யாரையோ தூக்க சொன்னா ல? யாரு அது? நீங்களாம் கிட்னாப்பர்ஸா? ஆட்களைக் கடத்தி என்ன செய்வீங்க? ஷாஷா அவ உன்னோட டீமா? ஏதோ பழிவாங்க மிருவை என்னைக் கடத்தி வைச்சு இருக்கீங்க என்று பார்த்தால் நீங்களாம் வேற கும்பல் போலவே" தங்களை ஆட்கடத்தும் கும்பலாகவே கற்பனை செய்த்து கேள்விகளை அடுக்கியவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்

"கொஞ்சம் வாயை மூடுறியா!" என்று இரைந்தான். அவனது குரலில் உடல் தூக்கிப் போட பயமாகப் பார்த்த ஆராதனாவின் தோளை ஆதரவாக அழுத்தியது அஷ்வஜித்தின் கரம்.

அவளை ஆசுவாசப்படுத்திவிட்டு பத்ராவின் புறம் திரும்பிய அஷ்வஜித், தான் ஆராதனாவின் தோளில் வைத்திருந்த கையையே வெறித்துப் பார்த்தபடி இருந்த பத்ராவைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டே "ஏன் பத்ராண்ணா ஆராதனாவைப் பயமுறுத்துற? பாரு எப்படிப் பயப்பிடுறாங்க என்று"

தனக்கு ஆதரவாக பேசிய அஷ்வஜித்தைப் பார்த்து புன்னகைத்த ஆராதனா பத்ராவை இப்பொழுது கெத்தாக பார்த்தாள் 'பாரு! எனக்காக பேச ஒரு ஆள் இருக்கின்றது என்பது போல'

அஷ்வஜித்திடம் உண்மையைக் கூறமுடியாமல் பத்ரா மௌனம் காக்கவும் ஆராதனா புறம் திரும்பிய அஷ்வஜித் "நீங்க சொல்லுங்க ஆராதனா! என்ன கேட்டிங்க அப்படி? பத்ராண்ணா இவ்வளவு கோவப்படுற மாதிரி" என்று கேட்க ஆராதனாவின் விழிகள் பத்ராவின் புறம் திரும்பியது.. அவனின் விழிகளின் மறுப்பைக் காணவும்

"அதுவா ஷாஷா.." என்று இழுத்தாள். அவள் ஷாஷா என்ற பெயரைக் கூறவும் பதட்டமேறும் பத்ராவின் விழிகளைத் திருப்பிதியாகப் பார்த்த ஆராதனா

"யார் ஷாஷா?" என்ற அஷ்வஜித்தின் குரலில் கலைந்தாள்.

""ஆங்.. அது..அது.. இல்லை இவங்க லேப்டப்ல நியூஸ் பார்த்துட்டு இருந்தாங்க. ஷாஷா என்று ஒரு பெயரைக் கண்டு யார் என்று கேட்டேன். வேலையைத் தொந்தரவு செய்தேன் என்று கோவப்பட்டுட்டாங்க" என்று கூறவும் "ங்க..""ங்க.." என்று மரியாதையாக வந்த அழைப்புகளில் பத்ராவிற்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.

அதைக்கூறி முடித்துவிட்டு "இல்லைங்க?" என்று தன்னைப் பார்த்து இளித்தவளை என்ன செய்தால் தகும்? ஒன்றும் செய்ய இயலாமல் மண்டையை ஆமோதிப்பாக ஆட்டியவன் அங்கிருந்து எழப் போகவும்

"பத்ராண்ணா! உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசத் தான் வந்தேன்!" என்று அவனைத் தடுத்து நிறுத்தினான்.

"என்ன அஷ்வா?" என்ற படி திரும்பியவனின் விழிகளை கூர்மையாகப் பார்த்தபடி "நாளைக்கு மினிஸ்டர் அருணகிரி தன்னைச் சந்திக்க வர சொல்லி இருக்கிறார்" என்று கூற விழிகள் சற்றுச் சுருங்கி விரிந்ததே ஒழிய அவனின் விழிகளில் வேறு எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் இதை அறிந்த ஆராதனாவோ பதறிப்போனாள்.

"அய்யோ! அந்த ஆளுக்கு நாங்க இங்க இருக்கிறது தெரிஞ்சு போச்சா? அப்போ மிரு? மிருவைப் பிடிச்சு அந்த ஆளோட பொறுக்கிப் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடுவார். போச்ச்சு.. போச்சு" என்று துள்ளியவளை

"அடச்சீ நிறுத்து!" என்று கத்தி அடக்கிய பத்ரா அஷ்வஜித்தை நோக்கி “விஷ்வாகிட்ட கேட்டுட்டு இதுக்கு பதிலை நான் சொல்றேன்" என்று விட்டு விலகிச்செல்ல அவனது முதுகைப் பார்த்து "வெவ்வேவ்வே" என்று பழிப்பம் காட்டிய ஆராதனாவைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் அஷ்வஜித்.
 




Last edited:

Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
உணவை உண்ண அமர்ந்த விஷ்வாவின் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் மிருணாளினி. அவன் மீது இருந்த கோவமோ, பயமோ எதுவோ ஒன்று அவள் இதுவரை இப்படி இயல்பாக விஷ்வஜித்தின் அருகே அமர்ந்து உணவு உண்டது இல்லை. விஷ்வஜித்தும் அவளை உணவு உண்ணும் போது எதிர்பார்த்தது இல்லை.

அவள் இன்று இப்படி அமர்ந்தது அவனுக்கு சற்று ஆச்சர்யம் தான். ஆனால் அதனைக் காட்டிக்கொள்ளாமல் உணவை உண்ண எத்தனித்தவனின் கை எரியத்தொடங்கவும் "ஸ்ஸ்" என்று முணகியவனின் மனதில் நேற்றைய நிகழ்வுகள் வலம்வர சட்டென அவன் பார்வை மிருணாளினியை நோக்க அவளும் அவனைத்தான் நோக்கிக்கொண்டு இருந்தாள். அவர்களின் பார்வைப் பரிமாற்றத்தை அறியாத விஷ்வஜித்தின் கைபேசியின் திரை ஒளிர்ந்து ஒலிக்கத்தொடங்கியது "பத்ரா காலிங்".

மிருணாளினியைப் பார்த்தவாறே அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டவன் "சொல்லு பத்ரா!" என்று கூறவும்

"பாஸ்! அருணகிரி, அஷ்வஜித்தை நாளைக்கு மீட் பண்ண வரச்சொல்லி இருக்கான்!" என்று பதட்டமாகக் கூறினான். பத்ராவின் பதட்டங்கள் எல்லாம் விஷ்வஜித்தின் முன்னால் தான் வெளிப்படும்.

"வாவ்!! லஞ்ச்சா? டின்னரா?"

"பாஸ்"அவன் பல்லைக் கடிக்கவும்

"கூல் பத்ரா! அந்த அருணகிரி நாளைக்கு அஷ்வாவை மீட் பண்ண மாட்டான்"

"விஷ்வா?" கேள்வியாக இழுத்தவனிற்கு பதில் கூறாமல் மிருணாளினியை நக்கலாகப் பார்த்து சிரித்தவன்

"நாளைக்கு பிரகாசத்தை அரெஸ்ட் பண்ணப் போறாங்கனு வைச்சுக்கோ! எப்படி மினிஸ்டர் அஷ்வாவை மீட் பண்ணுவான் சொல்லு"

"பாஸ்!" பத்ராவின் குரல் ஆனத்தத்தில் கூவ எடுத்த உணவைத் தட்டில் போட்டுவிட்டு விஷ்வஜித்தை பேசவும் இயலாமல் விழிவிரித்துப் பார்த்தாள் மிருணாளினி!

********​
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
மிருவின் உணர்வையும் விஸ்வாவின் உணர்வையும் துல்லியமாக வடிசிட்டீங்க எழுத்தரே. மிருவை பொறுத்த வரை பிரகாசம் நல் அப்பாவோ? 2ம் குறி பிரகாஷின் கைது?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top