• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்புக்கோர் பூ இதயம் -17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Happy Reading.......

Please share ur likessssss and commentsssss.....

Epi17

காலைக்கதிரவன் உலகுக்கு ஒளிகொடுக்க அவ்வொளி விஜயின் அறையை நிரப்ப,
நேற்று இரவு நேரம் சென்று உறங்கினாலும் இன்று செய்ய இருக்கும் வேலைகளுக்கான லிஸ்ட் நீண்டதாகவே இருக்க இன்று மாலை ஜெர்மனி செல்வதற்கான அவனது பயணப்பொதிகளை பேக் செய்தவன் அதனை எடுத்து வைத்து விட்டு குளித்து வந்தவன் இடுப்பில் சுற்றி இருந்த டவலுடனேயே அவனது அறை மினி கிச்சேனில் அவனுக்கான தேநீரை தயாரித்து பருக. அவனது மனமோ "இன்றைய இந்த ஒருவனுக்கான தேநீர் அடுத்த முறை தயாரிக்கும் போதும் ஸ்ரீ குட்டி உனக்காகவும் இருக்கும்...."மனதில் கூறிய படி ஆபிஸ் செல்ல தயாராகி வந்தான்..

எதோ மனதில் ஓர் பாரம்... ஒரு வார்த்தை வீட்டினருக்கு என் கூட பேசுவவதற்கு என்ன....
அவள் உயிர் பிரிந்திருந்தால் இன்றைய இந்த வீட்டின் நிலை. என் நிலை. நினைக்கவே தாங்க முடியவில்லை அவனால். வீட்டில் இருப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்... தன் மனத்தை சமாதானப்படுத்தியவன் படிகளில் கீழிறங்கி வர அவனைவரும் காலை உணவை உண்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீப்பா... என ஹரிணியின் குரலில் அவன் வருவதை உணர்ந்தவர்கள் எவரும் நிமிர்த்தும் பார்க்கவில்லை. நேற்று ஹாஸ்பிடலில் பார்த்தது இப்போது தான் பார்க்கின்றனர்..
திவ்யா ஹரிணியை இருக்கி விட அவனிடம் ஓடியவள், அவனை தூக்குமாறு கை நீட்ட அவளை தூக்கி கன்னங்களை தன் மீசைக்கொண்டு உரச குத்துது ஸ்ரீ ப்பா.. என அவன் முகத்தை தன் பிஞ்சு விரல் கொண்டு தடவி" இது வேணாம்" எனக்கூற ஓஹ் வேணாமா அப்போ கட் பன்னிரவா என கேட்க அவள் வேகமாக தலையசைத்தாள்... ஹனி பாப்பா போய் அம்மாகூட சாப்பிடுவீங்களாம். ஸ்ரீ ப்பா ஆபிஸ் போறேன் என அவள் கன்னங்களில் இதழ் பதித்து இறக்கி விட,'மம்மா சாப்பிடல? ஓஹ் டூ விட்டுடீங்களா?' நேற்று அவன் கூறியதை ஞாபகம் வைத்து கேட்க, மெலிதாக அவளுடன் சிரித்தவன் ஹ்ம்ம் என பாவமாக முகத்தை வைத்து கூற அதுவும் உண்மை என நம்பி அவள் அன்னையிடம் சென்றாள்.
மேசையின் அருகே தன் அப்பாவிடம் வந்தவன், "ப்பா உங்க கூட கம்பனி விஷமா கொஞ்சம் பேசணும், ஆபிசில் வெய்ட் பண்றேன் "என்றவன் தனது தாயை பார்த்தவன் அவன் உணவுக்காக மேசையில் அமறுவான் என எதிர் பார்த்து இருக்க அப்படியே கிளம்பிவிட்டான்.கண் கலங்க தன் மாமியாரை பார்க்க அவரும் அருணாவைதான் பார்த்தார்.தினமும் ஆபிஸ் செல்ல முன் ஹனி குட்டிக்கு வழங்கிய இதழ் ஒற்றல்கள் அவனது அன்னைக்கும் பாட்டிக்கும் தினம் கிடைக்கும்.
யாரும் பேசாதது வேறெவரோ ஒருவர் வீட்டில் இருக்கும் நினைப்பு தோன்ற, இதுவே தொடர்ந்தால் அனைவரையும் வெறுத்திடுவேன். கோபத்தால் அவர்களை நோகச் செய்திடுவேன். நான் எடுத்த முடிவே சரி. அவர்கள் சகஜமாக மாறவும் நான் இதை விட்டு வரவும் பிரிவு நல்ல வழியாக அமையும் என்று நினைத்தவன் ஆபிஸ் நோக்கி வண்டியை விட்டான்..
ரமேஷுக்கு கோள் செய்தவன், மீட்டிங் ஒன்று அரேன்ஜ் பண்ணுமாறு கூறி அதற்கான வேளைகளைகளையும் கூறி அப்பா வந்ததும் மீட்டிங் ஆரம்பமாகும் என்று கூறச்சொன்னான்.
அப்பாவிடம் தனியாக பேசினால் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். பொறுப்புகளை மீண்டும் அவருக்கு சுமையாக கொடுக்க கூடாது.

இப்போது தான் சற்று ரிலாக்ஸாக இருக்கிறார். எனது பொறுப்பை நான் வரும் வரை இன்னொருவர் பொறுப்பில். அவ்வளவே..
அனைவர் முன்னிலையில் என் முடிவுகளுக்கு அப்பாவினால் மறுப்பு சொல்ல முடியாது. தந்தையை நன்கு அறிந்தவனாக மீட்டிங் அரேன்ஜ் செய்தான்..
விஜய் அவனது அறையில் அமர்ந்திருக்க உள்ளே வந்த ரமேஷ் "சார் ! அப்பா வந்துட்டாங்க" எனவும். ஓகே ரமேஷ் இதோ வரேன் என்றவன் அவனை பார்க்க என்ன ரமேஷ் யோசனை. ஒன்னும் இல்ல சார். 'அப்டின்னா சரிதான் வாங்க போகலாம். ' என விஜய் முன்னே நடக்க அவனை ரமேஷ் தொடர்ந்து மீட்டிங் ஹாலுக்கு வந்தனர். அவனது தந்தை, நிவியின் அப்பா, ஹரி,மற்றும் கம்பெனியின் முக்கிய பதவியில் இருப்போர் என அனைவரும் கூடியிருக்க அனைவருக்கும் தன் காலை வணக்கத்தினை கூறியவன்,

"அனைவரும் இந்த திடீர் மீட்டிங் எதற்கு என்று யோசித்திருப்பீர்கள்...என்னுடைய பர்சனல் காரணத்திற்க்காக சில காலம் நான் வெளிநாடு செல்லவிருப்பதனால் நான் இந்த கம்பனிக்கு வந்தது முதல் செய்துகொண்டிருக்கும் வேலைகள் நான் இங்கு இல்லாவிட்டாலும் எவ்வித தடையும் இன்றி செய்யப்பட வேண்டும் என்பதற்க்காக என்னுடைய வேலையினை என் தலைமையில் ஒருவர் பொறுப்பில் விட்டுச்செல்ல முடிவெடுத்துள்ளேன்... "
அவ்விடம் பெரும் அமைதி. வீட்டினருக்கு அதிர்ச்சி தகவல்...

"இனி இந்த கம்பெனியில் என் பொறுப்பில் இருந்த வேலைகள் என் தலைமையின் கீழ் Mr.ரமேஷ் பொறுப்பில் நடைபெறும்.....
நான் திரும்பி வந்ததும் பொறுப்புகள் எனக்கு கீழ் கொண்டுவரும் வரையில் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஆறுமாதம் சென்ற பிறகு Mr.ரமேஷ்க்கு துணையாக மேலதிக வேலைகள் செய்வதற்கு அவருக்கு உதவியாக வேலையாட்கள் அமர்த்தப்படும்.அதுவரையில் அவ்வப்போது எனது உதவியுடன் இதனை தனியாக கொண்டுசெல்ல வேண்டும்.இது அவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன் நன்றி. "
அவனது உரை ஆங்கிலத்தில் தெளிவாகவும் இடையில் எவரும் கேள்வி கேட்க முடியாத வகையிலும் பேசிவிட்டு அவனது சீட்டில் அமர்ந்தான்..
'ப்ளீஸ், இனி உங்கள் வேளைகளில் ஈடுபடலாம் எனவும் அவ்விடம் வீட்டினர் தவிர்த்து அனைவரும் விடைப்பெற விஜயின் தந்தை ராஜின் பார்வை முழுதும் அவன் முகம் நோக்கியே.. அமர்ந்தவன் ஒரு முறை அவரை நிமிர்ந்து பார்த்தவன் அதன் பின்னர் அவர் பக்கம் திரும்ப வில்லை...
யாரும் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல்லும் மனநிலை அவனிடம் இருக்க வில்லை... அவனருகே வந்த ஹரி 'இப்போ என்ன நடந்ததுன்னு இப்படியெல்லாம் பண்ற ஸ்ரீ '
நத்திங்... யாரும் என்னால நோக வேணாம்னு இருக்கேன்ண்ணா..
'யாரும் இப்போ உனக்கு என்ன சொல்லிட்டாங்க... ' ஹரி அவனை வினவ
'யாரும் ஒன்னும் சொல்லல்ல. அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு ' என்றான்..
'சாரி. உன் பொறுப்பில் விடலாம்னு தான் இருந்தேன். ஷோ ரூம் வேறு பார்த்துக்கணும்.. உன் மேல இன்னும் வேலைகளை தரமுடியாதுன்னு தான்..
விஜய் கூற 'அதுண்ணா ஓகே தான் என்னால எப்படியும் தலைக்கு பாரமான விஷயங்களை ஹேண்டில் பண்ண முடியாது டா.. 'அப்பப்ப கொஞ்சம் பார்த்துக்க.. என விஜய் கூற அவன் தோள்களில் தட்டியவன் பார்த்துக்கலாம் விடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் மீட் பண்ணலாம்.வரேன் என்றவன் வெளியே செல்ல
அதுவரையுமே ராஜோ. ஹரியின்
அப்பாவோ எதுவும் பேசாது எழுந்துக்கொள்ள. தந்தை ஏசவாவது செய்வார் என பார்த்தவனுக்கு மனதுக்கு கஷ்டமாகி போனது.

ரஜோ அவன் இன்றே செல்லவிருப்பது தெரியாமல். மெதுவாக அவனுடன் பேச நினைத்திருக்க

தோல் மேல் கைபோட்டு பேசும் தந்தை இல்லை என்றாலும் தூர நிறுத்தி பேசும் தந்தையும் இல்லை.. என்னடா!!!! என இப்போதே அதட்டி பேசியிருந்தால் அவன் இங்கயே இருந்து விடும் நிலை தான் ஆனால்?????

விஜய் தனது கெபினுக்கு வர நேரம் பத்தை தாண்டியிருந்தது..
 




Last edited:

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
ஹாஸ்டலில் காலை எழுந்தவள் உள்ளமோ இன்று ஏதோ ஓர் படப்பை உணர்த்தியது... என்னாச்சு எனக்கு... குளித்து கிளம்பி வந்தவள் மெரூன் வண்ண டாப் பட்டர் நிற லெக்கிங்ஸ், ஷால் சகிதம் தயாராகி இருந்தாள்.
அன்று முக்கியமானதொரு செமினார் இருக்க இடையே லஞ்ச் பிரேக் அதன் பிறகு மாலை நான்கு மணிவரை அதன் தொடர்ச்சி.
'அடி தாரா அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க முடியுமாடி.. ரெண்டு நாளைக்காவது பிரித்து வைக்கலாம் இல்ல.. '
ஹ்ம்ம் கொஞ்சம் கோள் ஒன்னு பண்ணி சொல்லேன் எனக்கும் தான் கஷ்டமா இருக்கு என தாரா சொல்ல சொல்லிட்டாலும்..
வா கிளம்புவோம் என தனது பேகை எடுத்த அனிதா அவள் முகம் பார்த்து என்னாச்சு உன் முகமே சரில்லையே என.
ப்ச்.. ஒண்ணுமில்லை.. வா கிளம்பலாம் டைமாச்சு இன்னக்கி நீ வண்டி ஒட்டு என்னால் முடில' எனவும் உண்மையாகவே அவள் மனது ஒரு நிலையில் இல்லை என்பதாய் புரிந்த அனிதா ' சரி வா என இருவரும் கல்லுரி கிளம்பினர்.
ஸ்ரீக்கு கோள் பண்ணலாமா என்னனு பண்றது. அண்ணாகிட்ட கேட்கவும்
மறந்துட்டேன்..
செமினார் பிரேக் அப்போ அண்ணாக்கு பேசணும் அதன் ஸ்ரீக்கு பிறகு கோள் பண்ணலாம் என மனதை சரிப்படுத்திக்கொண்டவள் செமினாரை அட்டென்ட் செய்தாள். வந்தது முதல் அவள் முகம் பார்த்த புன்யா அவள் எதோ மனதில் வைத்து கஷ்டப்படுகிறாள். பிரியா இருக்கப்ப அவள் கூட பேசணும் என நினைத்துக்கொண்டாள்.
கல்லூரியில் உண்டான நட்பென்றாலும் தாராவின் செயல்களை நன்கு புரிந்து வைத்திருந்தாள். விஜயின் பார்வை மாற்றமும். அன்று அவனை கண்ட நொடி இவளது முக மாற்றத்தினையும் கண்டுகொண்டாள்.. அவள் கூறாது இது பற்றி கேட்க ஒருமாதிரி இருக்கவுமே கேட்க வில்லை. ஆனால் இன்று அவளுடன் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டாள்.


ஆபிஸில் செய்ய வேண்டிய இரண்டொரு வேலைகளை செய்தவன் ரமேஷிடம் அவனது பொறுப்புகளை ஒப்படைத்தான்..
நேரத்தை பார்க்க மணி 11.30.
'ரமேஷ் எனக்கு கால்லேஜிலே ஒரு லெட்டர் எடுக்க வேணும்.நா அதை எடுத்துட்டு அப்படியே வீட்டுக்கு போனேன்னா ஏர் போர்ட் போகத்தான் டைம் சரியா இருக்கும்' என, சார் நீங்க வந்ததற்க்கு இன்னும் சாப்பிடவே இல்லை டீ சொல்லட்டுமா? '
'ஆமால்ல.. எனக்கு டிபன் அனுப்ப சொல்லுங்க நா சாப்டுட்டே கிளம்புறேன்.'
சரி சார். என்றவன், அவனுக்கு தேவையான உணவினை வரவழைத்து கொடுத்தான்..
உண்டவன் அவனிடம் விடைபெற்று செல்ல எதிரில் ஹரியை பார்த்தவன் உன் வண்டிய கொஞ்சம் எடுத்துட்டு போறேன். நீ என் வண்டில வீடுக்கு வந்துரியா? எனவும், சரிடா எடுத்துட்டு போ என்றான்.
அவனிடம் கூறிக்கொண்டு காலேஜ் நோக்கி கிளம்பினான்.
கல்லூரி சான்றிதழ் ஒன்று தேவைப்பட்டிருக்க இன்று அதை பெற்றுக்கொள்ள 12மணியளவில் வர சொல்லி இருந்தனர்.
ஸ்ரீயை அவள் அறியாது ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.அவன் உள்ளம் ஆசை கொள்ள என் வண்டியில் சென்றாள் என்னை கண்டுக்கொள்வாள்... எனவே தான் ஹரியின் வண்டி....

காலேஜ் உள் நுழைந்தவன் எப்படி அவளை பார்ப்பது எனும் சிந்தனையோடு நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி வந்தவன் கல்லூரியை ரசித்த வண்ணம் அலுவலகம் நோக்கி சென்றான்.
அவனை வரவேற்றோர் அவனது திறமைக்கும் அவன் தொழில் வளம் பற்றி அறிந்து, போற்றி பாராட்டிவிட்டே அவனுக்கு தேவையான கடிதத்தினை வழங்கினர்..

(என்றுமே ஆசான்கள் தமது மாணவர்களை காணும் போது அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம் தனிதான். வளர்ச்சியில் அவர்களது பங்கு எவ்வகை என மாணவர்களது வளர்ச்சியே எடுத்துக்காட்டு.இன்று அவ்வகையான ஆசான்கள் அரிதே. )

'நீங்கள் டைமில்லன்னு சொல்றதுனால உங்களை விடுறேன் விஜய். இல்லன்னா கண்டிப்பா என்னுடைய மாணவர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தாமல் அனுப்ப மாட்டேன்.நான் மீட் செய்த உங்க பேட்ச் மாணவர்கள் பலருமே இன்று நல்ல நிலைகளில் இருக்கின்றார்கள்.. கண்டிப்பா இன்னொரு நாள் நீங்க வரனும். உங்க தொழிலோட சேர்ந்து உங்க படிப்பு தொடர்றது ரொம்ப சந்தோஷம்.
காலேஜ் கரெஸ்பாண்டண், அதிபர் அவனை வாழ்த்த 'தேங்க் யூ சார் இட்ஸ் மை பிளேசர்.கண்டிப்பா இன்னொரு நாள் மீட் பண்ணலாம்' என்றவன் வெளியில் வந்தான்.
ஸ்ரீயை எப்படி பார்க்கிறது எனும் யோசனையில் வந்தவன் லஞ்ச் பிரேக் என்பதால் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக இருக்க அவள் எங்கும் தென் படிகிறாளா என பார்த்த வாரே வர ஹ்ம்ம் ஹ்ம்ம் எங்கும் காணவில்லை...

ஹலோ!!! ஹீரோ சார் !....... குரல் வந்த திசை திரும்பி பார்க்க... புன்யா அவனை பார்த்து கை காட்டிய வண்ணம் அவனருகில் வந்தாள்....
ஹாய்... என விஜய் அவளை விளிக்க
ஹாய் என்ன எப்பயும் நம்ம காலேஜ் ரோட்லதான் இருப்பிங்க. இன்னக்கி என்ன எங்க காலேஜ்கே வந்திருக்கீங்க.
மெலிதாக சிரித்தவன். 'இது நம்ம காலேஜூம் கூட.
' ஓஹ்! ஆமால்ல. என்ன இந்தப்பக்கம், மறுபடியும் படிக்கலாம்னு வந்துட்டீங்களா?
' சின்ன வேலையா வந்தேன். எங்க மத்தவங்க ரெண்டு பேரும்? ' விஜய் கேட்க
அவங்க செமினார் ஹால்ல இருக்காங்க இப்போதான் லஞ்ச் பிரேக். தாரா வரமுடியாதுன்னா, சோ லஞ்ச் ஏதும் வாங்கலாம்னு வந்தேன்ணா.
ஆஹ் ஓகே மா நான் கிளம்புறேன் என.' வைட் பண்ணுங்க தாராவை வர சொல்றேன் ' நோ நோ எனக்கு டைமாச்சு இன்னொருநாள் பார்க்கலாம், என்றவன் அவளிடம் விடை பெற்று வாகன தரிப்பிடம் நோக்கி சென்றான்.
காலை முதல் தாராவின் முக வாடுதலை கவனித்திருந்தவள் இவனும் வந்து அவளை பார்க்காது செல்வது எதுவோ சரியில்லையே. ஹமா பார்க்கலாம். ஹாலுக்கு வந்தவள் 'தாரு பேபி விஜய் அண்ணா வந்திருக்காங்க அவசரமா..... என அவள் கூறுவதையும் செவிமடுக்க மறுத்தவள் அவள் இடம் விட்டு எழும்ப அவள் மாடியில் இருந்த புத்தகங்கள், நோட்கள் கீழே சிதற அதையும் கவனியாது அவ்விடம் விட்டு சிட்டாக பறந்திருந்தாள்...
ஹேய்.... என அனிதா கத்தவும் விடு அவள் பார்த்துட்டு வரட்டும். காலைல இருந்து பார்த்தல்ல அவ முகமே சரியில்லை... '
ஹ்ம் அதுக்கு எதுக்கு இப்போ ஓடுறா என அனிதா கேட்க்க 'ஆஹ் அதுவா எதுவோ வேண்டுதல்' இந்தா இதை சாப்பிடு என அவளிடம் உணவை கொடுத்தவள் அவ்வளிடத்தில் அமர்ந்தாள்.

அச்சோ இந்த பொண்ணு ஸ்ரீய கூட்டி வந்துருவாளோ. . நானே இருக்க நிலைமை எனக்குதான் தெரியும். என்றவன் வண்டியில் விரைவாக ஏறி அமர்ந்தவன் இவன் வண்டிப்பக்கம் தாரா ஓடி வருவதை கண்டான்.

உயர்த்தி ஒரு பாண்டில் அடைக்கியிருந்த அவள் கார் கூந்தல் காற்றில் இரு பக்கமும் அசைந்தாட. அவள் கண்களோ தவிப்பில் அவனை காண துடிக்க நாலுப்பக்கமும் சுழன்று வர, முகமோ சொல்லமுடியாது பாவத்தில். ..
அதை கண்டவன் இதயம் இங்கு பந்தயக்குதிரை வேகத்தில் ஓட மனோ சொல்ல வார்த்தைகள் இல்லா மகிழ்வில்.

அவள் உடையை பார்த்தவன் இன்னைக்கும் யெல்லோ மிக்ஸா. அச்சோ முடியல டக்கலிங் .அவன் வண்டியை தேடியவள், இல்லை என்றதும் அப்படியே அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்தாள்.வண்டியை விட்டு இறங்க துடித்த கால்களை கஷ்ட்டப்பட்டு அடக்கியவன்.. அவன் நேரமும் அவனுக்குகாக காத்திராது ஓட அதை உணர்ந்தவன் அவளை பார்த்த சந்தோஷத்தில் வண்டியை கிளப்பினான். அந்த சத்தத்தில் நிமிர்த்தவள் கண்கள் கலங்கி இருந்ததுவோ அவளே அறியாள்..

'உன்னருகே நான் வந்தாள் நான் நானாக இருக்கமாட்டேன் ஸ்ரீ . தருணை போல எனக்கு உன்னை தூர இருந்து பார்க்க முடியாது. இப்போ இறங்கினேன்னா உன்னை அப்படியே அள்ளிக் கொண்டு செல்வேன்... உன் கண்களில் நான் காணும் இந்த காதல் என் ஆயுளுக்கும் வேண்டும் ஸ்ரீ. அது யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காது இருக்க வேண்டும்... உன்னை அப்படியே அள்ளிச்செல்ல வருவேன்.. 'அவன் மனதில் கூறிக்கொண்டவன் அவள் அருகே சென்று வண்டியை திரும்பியவன் அவளை ஒரு முறை முழுதாக கண்களினுடே உள்வாங்கியவன் கிளம்பினான்.

அவன் வேறொரு வண்டியில் வந்திருப்பான் என்று நினைக்காதவள்,அந்த வண்டியை நிமிர்த்தும் பார்க்கவில்லை. 'உங்களுக்காக என்னில் ஏற்படும் தவிப்பினை போன்று அவர் மனதில் இருந்திருந்தால் என்னைப் பார்க்காமல் சென்றிருக்க மாட்டார். நானாக தேவையில்லாத நினைவுகளை சுமந்து கஷ்ட படுகிறேன் போல... என் விருப்பங்கள் அவருக்கும் இருக்கும் என நினைப்பது என் முட்டாள் தனம் தானே நான் ஒரு மடச்சி... செமினார் ஹாலை அடைந்தவள் அனிதா அவளை பார்த்த விதம் அவள் அவ்விடம் விட்டு சென்றது ஞாபகம் வர சாரி டி. என்று அவளருகே அமர. 'எங்க அவ்வளவு பாஸ்டா ஓடின? ' புன்யா கேட்க்க, 'அதான் நீ அவங்க வந்திருக்காங்கண்ணியே?'
எவங்க? இது புன்யா.
இல்லை தரு பிரென்ட்......
ஓஹ் ஆமா வந்தாரு.... பேசிட்டு உன்னை கூப்பிடவான்னதும், அவசரமான வேலை கிளம்புறேன்னு சொல்லிட்டு பட்டுனு போய்ட்டாங்க. அத சொல்ரதுக்குள்ள தான் பேபி ஓடிட்டிங்களே உங்க அண்ணா... பிரெண்ட பார்க்க...
'ஓஹ் அப்பவே போய்ட்டாங்களா. நா அவங்க இருப்பாங்கன்னு தான் போனேன் 'என தாரா உள்ளே போனா குரலில் வருந்தி சொல்ல..
' ஓகே ஓகே பேபி... அவசரமாக அவங்க வந்திருப்பாங்க டா. பீல் பண்ணாத' என புன்யா அவள் மனதை இலகு படுத்த மீண்டும் செமினார் தொடரவும் சரியாக இருந்தது.

அதன் பின் தாராவின் மனது சொல்லமுடியாத ஓர் அழுத்தம். எப்படா ஹாஸ்டெல் செல்லலாம் என்று இருந்தாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
இமையி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top