• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்புக்கோர் பூ இதயம் -18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Happy Reading.....
Lovlies....
Please share ur likesssss and comments......

Epi-18
நிவியின் அன்னை மீனா மற்றும் அருணா ஹாஸ்பிடல் வந்து நிவியை வீட்டிட்கு அழைத்து வந்திருந்தனர். அவர்கள் வீடு வரவும் ராஜும் நிவியின் தந்தையும் வாசலில் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டிருந்தனர்... நிவியை அழைத்து சென்று ஹாலில் அனைவரும் அமர. வள்ளிப்பாட்டி நிவி அருகே வந்து அவள் தலை கோதி அவள் நலம் விசாரித்து விட்டு அவள் அருகே அமர்ந்து கொண்டார்..
அருணா அனைவருக்கும் பருக நீர் கொடுத்து விட்டு கணவர் முகம் காண எதோ யோசனையில் இருப்பதை கண்டு என்னாச்சுங்க இந்த டைம் வீட்டுக்கு வந்துடீங்க எனவும்.. இன்று விஜய் கூறியவைகளை கூற அருணாவுக்கு மனம் தாங்க வில்லை.... ஈவினிங் அவன் வீட்டுக்கு வந்ததும் இது பற்றி அவன் கூட பேசணும்...ஆபிஸ்ல வெச்சே அவன்கிட்ட கேட்டிருக்கலாம் இல்ல.. எல்லோருக்கும் முன்னே நான் அவனை கேள்வி கேட்க மாட்டேன்னு தெரிஞ்சு தானே எல்லார் முன்னாடியும் சொன்னான்... 'உன்னை மாதரித்தானே உன் பையனும் இருக்க போறான். அப்புறம் என்னடா'.வள்ளிப்பாட்டி கூற ,

'ஆமா எங்க அண்ணன் செய்ற வேலையெல்லாம் அவன் பார்க்க போய்த்தான் இன்னக்கி என் பொண்ணோட நிலை இப்படி இருக்கு... அண்ணா குணம் மட்டுமா அவனுக்கு இருக்கப்போவுது'.மீனாவின் வாய் இடைக்காக கொஞ்சம் அதிகமாகவே பேசி விட,
'மீனா என்ன பேசணும்னு இல்ல, என்ன எங்க எப்படி பேசணும்னு இன்னும் நீ கத்துக்கல்ல, அதையே தான் பொண்ணுக்கும் படிப்பிச்சு வெச்சிருக்க. 'மீனாவின் கணவர் அவரை முறைத்தவாரே கூறிவிட்டு 'நிவியை அழைச்சிட்டு அவள் அறைக்கு கூட்டிப்போ. '
அருணாவோ ஏதும் பேசாது அவ்விடம் விட்டு அறைக்கு சென்று விட. அவர் பின்னே வந்த ராஜ் அவன் ஈவினிங் வந்ததும் நான் பேசுறேன். அதனை பற்றி யோசிக்காதே என்ன. அவரிடம் இருந்து ' ஹ்ம்ம் என்ற பதிலுடன் நான் தான் என் பையனை என்னைப்போலவே வளத்துட்டேன் போல'.என்று கூற,
அருணா என்ன இப்படியெல்லாம் பேசுற.' ஒன்னும் இல்லங்க. அறை விட்டு வெளியே சென்று விட்டார்..

தனது அறைக்கு வந்த நிவி ஈவினிங் அத்து வந்ததும் பேசணும்... என்னால எவ்வளவு சிக்கல்...
தருணுக்கு முதல் முறையாக மெசேஜ் செய்தவள் 'தரு.. நான் வீட்ட வந்துட்டேன்.. வீட்ல கொஞ்சம் ப்ரோப்லம், ஆல்சோ ஐ பீல் ஸ்லீப்பி..அத்து கூட கொஞ்சம் பேசிரு.மிஸ் யூ தரு.. உன் கூட நிறைய பேசணும்னு இருக்கு பட் ஐ காண்ட்.... '

விஜயுடன் பேசுன்னு சொன்னவள் அவன் வெளிநாடு செல்லப்போகிறானாம், என்றாவது கூறியிருந்தால் அவன் உடனே அவனுடன் கதைத்திருப்பான். அனைவரும் அவனுடன் மாலை கதைக்க நினைத்திருக்க அவனோ மாலையே அவர்களை விட்டு செல்ல நினைத்திருந்தான்.


தாராவை பார்த்து விட்டு வந்தவனுக்கு நேரம் ரெக்கை கட்டி பறக்க ட்ராபிக்கில் மாட்டி வீடு வந்து சேரவே மணி இரண்டெனக்காட்டியது.. வீட்டிலிருந்து ஓசூர் விமான நிலையம் செல்ல ஒரு மணி நேரம் எடுக்கும். 5.30க்கு பிலைட். அங்கிருந்து 6.30க்கு சென்னைக்காணது.இரவு பத்து மணிக்கு சென்னையிலிருந்து ஜெர்மனிக்கான பிலைட்.
வீட்டிலிருந்து எப்படியும் நாலுமணிக்கேனும் சென்றால் தான் சரியாக இருக்கும் என கணித்தவன், வீட்டுக்குள் நுழைய. பகல் உணவு உண்டு அனைவரும் அவர் அவர் அறையில் சிறு தூக்கம் கொள்ளும் நேரம். ஹரிணியின் சத்தம் மட்டுமே அவர்களது அறையில் கேட்டுக்கொண்டு இருந்தது.
மாடியேறியவன் கண்ணில் அவனது அறைக்கு நேரெதிரே தெரிந்த அறை மூடியிருக்க, நிவி வந்து விட்டதை புரிந்துக்கொண்டவன்.அவளை பார்க்க துடித்த மனதை அடக்கியவன் அவனது அறைக்கு சென்று அப்படியே கட்டிலில் விழுந்தான்...
கண்களில் அவனது தேவதை பெண்ணின் விம்பம்.. ஒரு வார்த்தை பேசியிருக்கலாமோ? அவளருகே சென்றிருந்தால் மனதில் இருந்த வருத்தங்களை அவளைக்கொண்டு போக்கிவிட நினைத்து கட்டாயம் அவளை இருக்க அனைத்திருப்பான்.. தன் தாய் மடி சாய்ந்திருக்க நேற்று முதலே துடிக்கும் அவன் இதயம், அவளிடம் கட்டாயம் அதை எதிர் பார்க்கும்..
சாரிடா ஸ்ரீ குட்டி உன் கிட்ட பேசிட்டேன்னா அப்புறம் என்னால ஒண்ணுமே கண்ட்ரோல் பண்ண முடியும்னு தோணல டா. முதல்ல உங்க அண்ணன் லவ்வுக்கு கிறீன் லைட்ட போட்டுட்டு நம்ம ரூட்டை சீக்கிரமே தொடங்கிருவேன்.... அதுவரை எனக்காக வெய்ட் பண்ணு பேபி.. மிஸ் யூ மை டக்லிங்....

அவனது பயணப்பொதியில் அனைத்தையும் சரி பார்க்க தருண் அவனுக்கு கோள் எடுத்தான்...
எடுத்தவன் ' எங்க இருக்க விஜய், வீட்ல என்னாச்சு என்ன ப்ரோப்லம் ?' என
வீட்ல என்ன? இப்போதான் நான் வீட்டுக்கு வந்தேன்.
'ஓஹ்.இல்ல... நிவி மெசேஜ் பண்ணினா. எதோ பிரச்சினை உனக்கு கோள் பண்ணுனு. அதான். '

ஓஹ் !அப்பா வீட்டுக்கு வந்து காலைல ஆபிசில் நடந்ததை சொல்லி இருப்பார். என மனதில் நினைத்தவன் 'என்னாச்சுன்னு தெரியல டா. இதுக்கப்றம் தான் பார்க்கணும் என்னன்னு. நீ எங்க இருக்க? '
நான் இப்போ தான் வீட்டுக்கு போகலாம்னு கிளம்புறேன். 'அப்போ நீ என்னை நாலு மணிபோல பிக்கப் பண்ணிக்க வீட்டுக்கு வரமுடியுமா ? '
எங்க போகப்போற? தருண் கேட்க
'அதை வழியில் பேசிக்கொள்வோம், டைம்க்கு வந்துரு' என்றான்.
சரிடா ஓகே. வர்றேன்.
போனை வைத்துவிட்டு குளித்து கிளம்பியவன் நேரம் பார்க்க 3.30.அவனது பைகளை அறைக்கு வெளியே வைத்தவன் வேலையாளை அழைத்து கீழே ஹாலுக்கு கொண்டு செல்லுமாறு சொல்லவும் வேலையாள் கீழே கொண்டு வர அருணா அறை விட்டு வெளியில் வந்தவர் யாருடையது எனவும் விஜய் தம்பிதான் கீழ வைக்க சொன்னாரும்மா.
மாடியை பார்க்க விஜய் கிழே வந்துக்கொண்டிருந்தான் ..
அவரை பார்த்தவன், அப்படியே வேலையாளிடம் 'அண்ணா டீ வேணும் ' என. சரி தம்பி இருங்க கொண்டு வரேன் என்று உள்ளே சென்றார்.
தருண் கோள் பண்ணி 'ரெடியாகிட்டியா ' எனவும் 'ஆம் ரெடி.. நீ எங்க இருக்க' எனவும் இன்னும் 15 நிமிடங்களில் வந்துவிடுவதாக கூறி போனை வைத்தான் தருண்.. முன் வாசல் சோபாவில் அமர வேலையாள் தந்த டீயை குடித்தான். அருணா வேலையாளை கண் காட்ட. தம்பி சாப்பிட எதாவது.. அவரை நிமிர்ந்து பார்த்தவன் அருணாவை பார்த்தவாறே காலைல லேட்டாதான் சாப்பிட்டேன் ணா அதனால பசியில்லை என்றான்.
'அப்போ மதியானம் இன்னும் சாப்பிடல்லையா தம்பி? ' பசிக்கல... ஒவ்வருவராக ஹாலில் வீட்டினர் அனைவரும் வந்திருக்க. நிவி மட்டுமே தூங்கியிருந்தாள்.

ஸ்ரீப்பா என ஹரிணி அவனருகே அமர்ந்தவள் எங்க போக போறீங்க என அனைவருக்கும் தெரிய வேண்டிய விடைக்காண கேள்வியை கேட்டாள். ஸ்ரீப்பா... கைக்கொண்டு செய்கையால் பிளைட்டில் செல்வதாக காட்டினான். ஹைய் நானும் நானும் என துள்ள . அருணா அவனை பார்க்க, அவளை பார்த்தவன் வீட்டினரையும் பார்த்து பொதுவாக நான் ஜேர்மன் போகிறேன்..என்னால யாரும் மனம் நோகக்கூடாது. இவ்வளவு நாளும் நான் என் மனதறிந்து அப்படி நடந்ததில்லை. இனியும் அப்படித்தான் நடப்பேன். அதட்காகத்தான் இந்த பயணம்.என்னால அங்க தனியா இருக்க முடியுமான்னு தோணல்ல. ட்ரை பண்றேன். திரும்ப இங்கயே தான் வரணும். அப்படி வர்றப்ப நேற்றிலிந்து நீங்கெல்லாம் என்கூட இருக்கிறதை போல இருப்பீங்கன்னா சொல்லுங்க நான் வரல்ல. இந்த ஒரு நாளைக்கே எனக்கு மூச்சு முட்டுது.. அவன் கண்கள் கலங்கி இருந்தது.அதனை கட்டிக்கொள்ளாதவன் கீழே குனிந்தவாறு சாரிப்பா ஆபிசில் தப்பா பேசிருந்தென்னா.ரமேஷுடைய வேலை பிடிக்கலைன்னா உங்க விருப்பப்படி வேறு யாரையும் அந்த இடத்துக்கு போட்டுக்கோங்க.ஆனா திரும்ப நான் என் இடத்துக்கு வர்றப்ப என் இடம் அப்படியே இருக்கணும்..நிவிக்கு என்னை விட பெட்டரா அவள் விரும்புறது போல அவளுடைய வாழ்க்கை அமையும்..
வெளியே தருண் ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டவன் எழுந்து பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன் அவர் கன்னத்தில் முத்தமிட்டவாறே ஒரு செக்கன்ல..எதோ சொல்லவந்தவன் 'இப்போ என்ன பேசினாலும் தப்பாகிவிடும் என்று நினைத்தவன் ' வரேன் பாட்டி என்று விட்டு மற்றவர்களிடமும் விடைபெற்று அன்னையிடம் வந்தவன் கண்களில் நீர் வடிய அவர் கண்களை துடைத்தவன் 'உங்க இடத்துல நான் இருந்தாலுமே உங்களை போலத்தான் இருந்திருப்பேன் மா.. குடும்பத்துக்காக பெத்த பையன்னாலும் தப்புன்னா அவனையே ஒதுக்கி வெச்சுடீங்க' என்றவன். என்னை நீங்க உங்களை மாதரியேதான் வளர்த்திருக்கீங்க. குடும்பத்துக்காக நானுமே அப்படிதான் மா. '
காலை மீனா அருணாவுக்கு குத்திக்காட்டிய வார்த்தைக்கு நல்ல பதில் தந்தான்.

நான் வரேன்.. என்றவன் பேகினை வேலையாள் வண்டிக்கு கொண்டு செல்ல. தருண் வண்டியை விட்டு இறங்கப்பார்க்க வேண்டாம் என்றவன் வண்டியில் ஏறி எடு வண்டியை என்றான்.. 'என்னாச்சுடா எங்க கிளம்பிட்ட? '
'தருண் வண்டிய ஏர்போர்ட்க்கு விடு என்றவன் சீட்டில் தலை சாய்ந்து
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
தனதறைக்கு வந்த அருணா அழ அவர் தோள் தொட்ட ராஜ் என்ன அருணா எனவும். இப்போவாச்சும் ஒரு வார்த்தை அவனை எங்க போறன்னு கேட்டிருந்தீங்கன்னா அவன் அடுத்த நிமிஷமே நின்னுருப்பான்.. நீங்க எங்க கேட்க நானே அவன் கூட பேசல்ல. நானே என் பிள்ளைய அனுப்பி வெச்சுட்டேன்..அவர் அழுந்து
புலம்ப. 'இங்கே பாரு அருணா, அவன் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும். நிவிய பாக்குறப்ப எல்லாம் இவன் வேணாம்டாதாலதானே இப்படியாச்சுன்னு தோணும். அவனை எல்லாருமா எதாவது பேச, அவன் தான் பந்தாட்டம் எல்லோர் பேச்சிலும் அடி படுவான்..
நிவி கொஞ்சம் சரியாகட்டும். அதுக்கப்புறம் அவனை அலச்சிப்போம் மா. என்னமோ சொல்றிங்க.என் மனசே ஆறலை... போய் அம்மா என்ன பண்ராங்கன்னு பாரு.அவனில்லைன்னா அவங்கதான் ரொம்பவே கஷ்டப்பட போறாங்க.ஹாஸ்டெல்ல ஒரு வருஷம் தங்கினதுக்கே தாங்கள்ல.. போ போய் பாரு ' ராஜ் அவரை அனுப்பி விட்டு அவருக்குமே தான் கவலைதான்.

ஆனால் அருணாவோ, ராஜோ மற்றவர் பிள்ளைக்காகத்தான் தன் பிள்ளையை கோவித்துக்கொண்டுள்ளோம் என்று நினைக்கவே இல்லை.. அவர்களது இரு குடும்பமும் ஒன்றாக இருப்பதற்கு இதுவே காரணம்...


'விஜய் இப்போ நீ போகவே வேணும்னே என்ன அவசியம். இங்கயே இருக்கலாம் இல்ல.'தருண் வினவ
' இருக்கலாம்டா. ஆனா எல்லாம் இப்படியே தான் இருக்கும்... நீயும் கல்யாணம் பண்ணனும் அதுக்கப்புறம் தானே நான் பண்ணிக்கணும்.. நீ பண்ணினா தானே என் ரூட்டு கிளியர் ஆகும்....'தான் ரிலாக்ஸாக இருப்பதாக காட்டிக்கொள்ள தாராவை மனதில் வைத்து இவ்வாறு கூற தருணோ நிவியை வைத்து தான் பேசுகிறான் என எண்ணி ' ஆமால்ல. '
ஹ்ம்ம் ஆமா தான். டேய் தருண் பிரபா நெஸ்ட் மந்த் எண்ட்ல வருவான்.. நம்ம ஷோ ரூம் வேலை வேறு இருக்கு பார்த்துக்கோ... பார்க்கலாம் பார்க்கலாம் . எல்லாம் என் தலைல கட்டிட்டு போ. நீ எங்க போறன்னு தெரியாம நான் வேறு பிக்கப் பண்ண வந்துட்டேன். வீட்ல எனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சு கேள்வி மேல கேள்வி கேப்பாங்க...
அப்படியெல்லாம் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டாங்க அப்பப்ப வீட்டுக்கு வந்துட்டு போ.. ஆஹ் அது இனி நீ எப்படியும் அடிக்கடி வருவல்ல... விஜய் அவனை கிண்டலடிக்க தருண் சிரித்தான். அய்யே வழியுது..
டேய் விஜய்! பொறாமைடா உனக்கு ' தருண் அவனை சகஜமாக்கும் பொருட்டு இருவரும் இருவரையும் கலாய்த்துக்கொள்ள
'யாரு எனக்கு பொறாமையா. அது சரி.நீ பார்க்கத்தானே போறே அண்ணணுக்கு தெரியாம அவன் தங்கச்சிக்கு ரூட்ட விட்டு அவ அப்பாவையே எங்க வீட்ல பேச வெக்கிறேனா இலையான்னுப்பாரு.. நாமெல்லாம் காதல்னு வந்துட்டா அந்த காதலுக்கு சேதாரமில்லாம எப்படி வட்டியும் முதலுமா காதலை எடுத்துகிறதுன்னு தான் பார்ப்பேன்... 'விஜய் கூற. அன்னைல இருந்து பார்க்குறேன் என்னால புரிஞ்சிக்க முடியாத போலவே பேசுற... நீ. எதுவோ பண்ணு. நீ ஹேப்பியா இருந்தா அதுவே போதும்.. தருண் கூற, அவனது போன் ஒலித்தது.
பார்க்க தாரா அழைத்துக்கொண்டிருந்தாள். அச்சோ மறந்தே போய்ட்டேன்.என்ன? விஜய் கேட்க, காலையில பேசினா, லேட்டாகி பேசுறேன்ன்னேன்.மறந்துட்டேன டா ..ஏசப்போரா. ஹலோ ஸ்ரீ குட்டி சாரிடா உண்மையா மறந்துட்டேன். 'பரவாயில்லண்ணா '.
செமினார் முடிஞ்சதா ஹாஸ்டெல் வசந்துட்டியாடா? ஹ்ம்ம் இப்போ கொஞ்சம் முன்னாடிதான் வந்தேன்.என்னாச்சு குட்டி. ஒரு மஸ்த்ஷ்டி பேசுற. ஏசுவன்னு பார்த்தேன்..
'ஒன்னில்லண்ணா கொஞ்சம் தலைவலி அதான். எங்க இருக்கீங்க.. டிரைவ் பண்றியாண்ணா? 'தாரா அவமைக்கேட்க,
ஆமா ஸ்ரீ ஏர் போர்ட் போய்கிட்டு இருக்கேன் டா.
மனதால் திடுக்கிட்ட தாரா 'ஏர்போர்ட் எதுக்கு திடிர்னு....'
அத ஏன் கேக்குற ஸ்ரீ. இதோ விஜயை ட்ரோப் பண்ண போறேன். வெளில போறான்.ஓஹ் !அண்ணி வீட்டுக்கு வந்துட்டாங்களா?
'ஆமாடா குட்டி. நா வீட்டுக்கு போய் உனக்கு கோள் பன்ரெண்டா. வெச்சிரவா?'தருண் பேசிவிட்டு வைக்க அவளும் ஹ்ம்ம் என்று போனை வைத்தவள் மனமோ 'பிஸ்னஸ் விஷயமா எங்கயாச்சும் போராங்களா இருக்கும் 'மனதுக்கு ஆறுதல் கூறிகொண்டவள், தலைவலி அதிகமாக இருக்க அனிதாவிடம் எழுப்ப வேண்டாம் என கூறி அப்படியே உறங்கிப்போனாள்.

உன்னை விட்டு வெகு தூரம் போகிறான் நீ காத்திருப்பாய் என்று...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
இமையி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top