• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்புக்கோர் பூ இதயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Epi 6.
இரண்டு மாதங்களின் பின்னர்....

தாராவிற்கு +2 பரீட்சை நாளை ஆரம்பம்.. நன்கு பரீட்சைக்கு தயாராகி இருந்தவள் இரவானதும் ஒருவித டென்ஷனில் இருந்தாள். நாளை பரிட்சை எனும் நிலையில் தாராவின் நிலை எப்போதும் இவ்வாறே.அவளோடு ஒருவர் மாரி ஒருவர் கதைத்து அவளை இலகு படுத்துவர். தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தவள் காதில் போன், தருண் தான் அழைத்திருந்தான். எப்போதும் வீட்டிற்கு வருபவன் அவனுக்கும் ப்ராஜெக்ட் ஒர்க் நேரம் கல்லூரி கடைசி வாரம் என்பதால் வரமுடியவில்லை, அதனால் தான் இந்த அழைப்பு.
ஸ்ரீ குட்டி...குட்டிம்மா.. என்ன பண்றிங்க என கேட்க, இவள் பதில் கூறும் முன் டேய் என்னடா குட்டிங்குற என்ன பார்த்தா குட்டியாட்டமா இருக்கு என பெல்கனியில் இருந்த விஜய் அவனை அழைப்பதாக நினைத்து குரல் கொடுக்க, தருணோ மீண்டும் தாருவை அழைக்க,
வீடியோ கோளில் பேசிக்கொண்டிருந்த இவளும் யாரது என பார்க்க குட்டிமா உன்னைத்தான் என்றான் தருண் திரும்ப, இருக்கே ... என இவள் மறுபடியும் பேச வாயெடுக்க

டேய் என்னாச்சு உனக்கு குட்டி குட்டின்னு கொஞ்சுற,டேய் பிரபா இவனப்பாறேன் என்ன குட்டிங்குறான்.தாரும்மா வைட் என கையால் அசைத்தவன் போனை கையில் எடுத்துக்கொண்டு பெல்கனிக்கு போனான். டேய் வளர்ந்து கெட்டவனே உன்ன எவண்டா கூப்பிட்டாங்க. நான் ஸ்ரீ கூட போன்ல கதைக்கிறேன் எனவும் தான் அவனையும் அவனது போனையும் பார்த்தவன், நான் நெனச்சேன் என்னதான் பாசமா கூப்பிட்டியோன்னு.போனில் விஜயை யே பார்த்திருந்தாள் தாரா.நாளைக்கு எங்சேம் இருக்குல்ல அதான் டென்டின்சனா இருக்கா என்று விட்டு தாராவுடன் பேச்சை தொடர்ந்தான்.ஸ்ரீ குட்டி உனக்கு ரொம்ப மூளை அதான் இப்படி. படிச்சு முடிச்சாச்சில்ல ரிலாக்சா இரு எதாவது பாட்டு கேளுங்க. உனக்கு பிடிச்ச ஏதாச்சும் வரைஞ்சு பாருங்க மைண்ட் கூலாகிரும். ஓகேவா. இதோ பக்கத்துல இருக்கானே அதைத்தான் பன்றான்.
ஆனால் கிளாஸ் பஸ்ட் வந்துருவான். மெலிதாக சிரித்தவள் ஓகே ண்ணா தேங்க்ஸ் எனவும், விஜயும் ஆல் தே பெஸ்ட் என்றான்.மெலிதாக சிரித்து தேங்க்ஸ் என்றவள் போனை வைத்தாள்
அறைக்கு சென்றவள் அவளது நோட் புத்தகத்தில் அவளது கை வண்ணத்தில் கிறுக்கல் ஒன்று உருவாகியது. இறுதியில் அது கழுத்தில் டவலினை மாலையாக போட்ட படி பெனியனுடன் படிகளில் இறங்கும் ஒருவன்.வரைந்து முடித்தவள், அதனை பார்த்தவள் அவளது அலுமாரியில் பத்திரப்படுத்தி விட்டு நன்கு உறங்கி எழுந்தாள்... பரிட்சையும் நல்லபடியாக முடிய, அடுத்து 3நாட்களில் விஜயும் அவனது நண்பர்களும் கல்லூரி வாழ்வினை முடித்துக்கொண்டு தத்தமது வாழ்வினை எதிர் நோக்கிய பயணப்பாதையில் காலடி எடுத்து வைக்க செல்லும் தருணம்.
விஜய் அவனது கம்பெனியை இன்னும் திறம்பட நடத்துவதற்காக வெளிநாட்டில் உயர் கல்வியை தொடர விரும்பினாலும் தந்தைக்கு ஓய்வு கொடுக்க விரும்பி இங்கேயே படிப்பையும் தொடர்த்துக்கொண்டு தந்தையிடம் ட்ரைனராக இருந்து தொழில் கற்க நினைத்தான்.
தருணும் தந்தைக்கு உதவியாக அவரது தொழிலையே முன்னேற்ற விரும்பினான். பிரபா அவனது அக்கா ஆஸ்திரேலியா வில் இருக்க நிவியின் அண்ணன் திருமணம் முடிய வேலைக்காக அங்கு கிளம்பும் நோக்கத்தோடு இருக்கிறான்

நண்பர்கள் மூவரும் ஊருக்கு செல்வதற்கு முன் காலையில் நிவியை பார்க்க வந்தவர்கள் அவளையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ரெஸ்டாரண்டில் காலை உணவை உண்ணச் சென்றனர்... நிவி எப்போ வீட்டுக்கு வருவ? புதன் வரலாம்னு இருக்கேன் அத்து.வருவதற்கு முன் எனக்கு சொல்லிவிடு முடிந்தால் வருகிறேன் என்று விஜய் கூறினான். ஹ்ம் எனவும் .
என்னாச்சு நிவி ஒரு மாதிரி இருக்க என பிரபா கேற்க ஒன்னுமில்லை ப்ரோ என்றாள். அவனுடன் ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக்கொண்டாலும் அவனுடன் அண்ணன் என்ற உறவை உரிமையாய் வைத்துக்கொள்வாள். அவனும் அவ்வாறே. எவ்வாறாயினும் பிரிவு என்பது மிகவும் வலிகளை தரக்கூடியது.அது பழகிய நாட்கள் குறுகியதாயினும்.நிவி கல்லூரி சேர்தந்தது முதல் இவ் வருடம் முழுதும் இவர்களுடன் ஒன்றாகவே பலகியவள் பிரிவை நினைத்து வருந்தினாள்.



தருண் நண்பர்களுடன் எப்போதும் அரட்டை அடிப்பவன் நிவி உடன் இருக்கும் பொழுதுகளில் வாயே திறக்க மாட்டான். விஜய் அதை கவனித்தாலும் ஆரம்பம் முதலே அவன் அப்படி நடந்து கொள்வதால் அதை பெரிதாய் அவனிடம் கேட்டதில்லை l.

அவன்தான் பார்த்த முதலே காதலில் விழுந்து விட்டானே
(அண்ணனும் தங்கையும் இதில் நல்லா பொருத்தம் )
தாரா இருக்கும் போது சகஜமாக பேசி அவள் மீதான காதல் மற்றவர்களுக்கும் அவளுக்கும் விளங்கிடுமோ என அவள் வந்தாலே வாயை மூடிக்கொள்வான்.

இப்படியே சொல்லாக் காதலாகி போனது தான் விந்தை
( சொல்லாத காதல் செல்லாத காதலாகி விடும் என்பதை இவனுக்கு யார் கூறுவார் )

ஓகே டா நாங்க கிளம்பட்டுமா டைமாச்சு என்று அவர்களது வண்டி அருகே வந்தனர்
நிவி அவளது ஸ்கூட்டரில் வந்திருக்க விஜய் அவளது முகத்தை பார்த்து விட்டு அருகே வந்து அவளை தோளோடு அணைத்து நிவி குட்டி நெஸ்ட் வீக் தான் கல்யாணத்துல பார்க்கலாமே எதுக்கு இப்படி இருக்க.இதுக்கே இப்படின்னா ஜாப் போனா என்ன பண்ணுவ, சோ மனச எதையும் தாங்க பழக்க படுத்திக்கொள்ளனும் ஓகே வா என கேட்டான்
( அதை அவனுக்காக சொன்னானா அருகில் சோகமாக இருபவனுக்காக சொன்னானா யாரறிவார் )
ஹ்ம் ஓகே அத்து, ஐ ரியல்லி கோயிங் டு மிஸ் யூ எ லோட் என்று கூற, பிரபுவும் அவளது தலையை பிடித்து ஆட்டியவாறு வரட்டுமா ஜான்சி ராணி என்று வண்டியில் அமர்ந்தான். விஜேயும் ஓட்டுநர் இருக்கையில் அமர தருண் இவளை பார்த்தவன் வார்த்தை தொண்டையில் சிக்கி வெளி வர மறுக்க பார்வையே போதுமடி இந்த உயிருக்கு என்று மனதை சமாதானப்படுத்தி விட்டு வண்டியில் ஏறினான்.
(இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல பார்த்துகிட்டே இருக்கவேண்டியது என மனதினுள் பொறுமிய ஒரு மனம், உன் வாயை திறக்க நா பண்னுற காரியத்தில் எல்லோர் முன்னாடியும் உன் காதலை சொல்ல வெக்கல இருக்கு மவனே என கூறிக்கொண்டது. )

விஜய் அவனது வீடு வர மாலையாகி விட்டிருந்தது. வீட்டின் முன் ஹார்ன் அடிக்க வாயிற்கதவுகளை திறக்க வண்டி உள்ளே சென்றது. நவீன முறையில் கட்டப்பட்ட வீடென்றாலும் பார்க்கும் போது அதில் பழமையின் ரசனை அடங்கியுள்ளதை உணரும் வகையில் இருந்தது. நேரான கொங்கிறீட் கற்கள் பதித்த பாதை வீட்டோடு வரும் போது நடுவே தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு பூ குழாய்கள் பொருத்தி அழகாக இருக்க அங்கிருந்து இரு பக்கமாக பாதை பிரிந்து செல்கிறது.நேரான பாதையின் இடப்பக்கம் முழுதும் புற்தரை யாகவும் இடையிடையே நிழலுக்காக மரங்களும் இருந்தன. அடுத்தப்பக்கம் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக கற்களே பதித்து இருந்தது. வண்டியை விட்டு வாசலில் இறங்கியவன் வீட்டின் அனைவரும் வெளியே அமர்ந்து தேநீர் அருந்துவதையே கண்டான்.வண்டியிலிருந்து பைகளை வேலையாள் அவனது ரூமிற்கு கொண்டு செல்ல இவன் அவர்களை நோக்கி சென்றான். இவனை கண்ட
அருணா ஸ்ரீ என எழுந்துக்கொள்ள ஹாய் மா என அவரை அணைத்து கொண்டவன், ஹாய் ப்பா, எப்டி இருக்கீங்க மாமா, ஹாய் அத்தம்மா, ஹே கல்யாண மாப்பிள்ளை எப்டி இருக்கண்ணா என அவனையும் அணைத்து விடுவித்தான். ஹரி அத்தை மகன் என்றாலும் அண்ணன் என்றே கூறிப்பலகிவிட்டான். இவ்வாறு அனைவரையும் நலம் விசாரித்து விட்டு முகத்தை ம்ம் என வைத்துக்கொண்டு மறு பக்கம் திரும்பி அமர்ந்திருந்த பாட்டி அருகே அமர்ந்தான். ஹாய் வள்ளி எப்டி இருக்கீங்க டார்லிங் என தோள்களில் கையை போட கையை தட்டி விட்டவர் . டார்லிங் டீலிங்ன தருவேன் படவா என தோள்களில் அடித்தவர் அடுத்த வாரம் வரேன்னு சொன்னவன் ரெண்டு மாதம் முடிஞ்சு வந்திருக்க. சாரி பாட்டிம்மா இடைல வர முடியல, அதான் தினமும் பேசினேனே..இதற்கு பிறகு இனி உங்க கூடத்தான் இருக்கப்போறேன் ஓகேயா என அவரை அணைத்துக்கொண்டான். அவர்களுடன் தேநீரை அருந்தியவன், அருணாவுடன் வீட்டுக்கதைகளை பேசியவாறே அறைக்கு ஓய்வெடுக்கச்சென்றான். போனவன் நண்பர்களுக்கு வீட்டுக்கு வந்த செய்தியையும், அவர்கள் சென்றடைந்ததையும் கேட்டுக்கொண்டான்.
 




Last edited:

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
nice pa. Some place la radha and tara mari irruku plz check that. Pona epi la yum irrunduchu pa
 




Last edited:

stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
nice update sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top