• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - 27 (Pre - Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 27

தன்னுடைய சொர்க்கம் கைவிட்டுப் போனதை எண்ணி தவித்தவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. இந்த பிரிவு ஒருவேளை இருவருக்குமான புரிதலை அதிகரிக்க செய்யும் என்ற எண்ணம் எழுந்திட, தன்னவளை மீண்டும் சந்திக்கும் நாளுக்காக காத்திருக்க முடிவெடுத்தான். இரண்டு குடும்பத்திற்கும் நடுவே சுமூகமான உறவுமுறை ஏற்பட்டது.

மற்றவர்களுக்கு மிருணாளினி மீது கோபம் இருந்தாலும், விஷ்ணுவை நினைத்து அதை மனதோடு மறைத்தனர். அவள் பாதுகாப்பாக இருக்கிறாளா என்று தெரிந்துகொள்ள, டிடெக்டிவ் ஏஜென்சியை தொடர்பு கொண்டான்.

மும்பையில் ஒரு பெரிய ஃபை ஸ்டார் ஹோட்டலில் வேலையில் இருப்பதாக தவள கிடைக்க, அவளுடன் படித்த வடநாட்டுப் பையனான விக்ரமின் முகம் மனதினுள் தோன்றி மறைந்தது. உடனே அவளின் கல்லூரித் தோழியான பிரியாவிடம் நம்பரை வாங்கினான் விஷ்ணு.

தன்னுடைய காயத்தை மறக்க வைக்க, இந்த பிரிவு அவளுக்கு தேவையான ஒன்று என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவளாக திரும்பி வரும்போது வரட்டும் என்ற முடிவில், தனக்கு விஷயம் தெரியாது என்பது போலவே மற்றவரிடம் காட்டிக் கொண்டான்.

கல்லூரியில் வைத்த கேம்பஸ் இண்டர்வ்யூவில் அவளுக்கு வேலை கிடைத்தால், நேராக மும்பை வந்து சேர்ந்தாள். விக்ரமிற்கும் அதே ஹோட்டலில் வேலை என்ற காரணத்தால், மிருணாளினி ஓரளவு நிம்மதியாக உணர்ந்தாள்.

அதே சமயம் இந்நேரம் வீட்டில் இருப்பவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றினாலும், ‘அவர் வேறொரு திருமணம் செய்யும் வரை, நம்ம இங்கே இருப்பதைத் தெரியப்படுத்தக் கூடாது’ என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்.

விக்ரம் ஏற்பாடு செய்து தந்த வீட்டினில் தங்கிக் கொண்டவள், முடிந்தவரை பகல் நேரங்களில் வேலையை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடுவாள். யாருமில்லாத மயான அமைதியாக இருக்கும் வீட்டிற்கு வர எரிச்சலாக இருந்தாலும், “நம்ம வாங்கி வந்த வரம்” என்று சகித்துக் கொண்டாள்.

மெல்ல மும்பை வாழ்க்கை அவளுக்கு பழக்கமானது. அதே நேரத்தில் கணவனின் நினைவுகளை மறக்க, தன் கவனத்தை வேலையின் பக்கம் செலுத்தினாள். அவள் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, விக்ரம் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.

“நீ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிட்டுதானே வந்தே?” அவன் சந்தேகத்துடன் விசாரிக்க, அதுக்கு குத்து மதிப்பாக தலையாட்டி வைத்தாள். பிரியதர்ஷினிக்கு ஹைதராபாத்தில் வேலை என்ற காரணத்தால், அவளுக்கும் எந்தவிதமான விஷயமும் தெரியவில்லை.

இந்த ஆறு மாதங்களில் அவளின் நடை, உடை, பாவனை எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் சிந்தனையுடன் வலம் வந்த தோழியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தான் விக்ரம்.

மற்றவர்களைவிட இரண்டு மடங்காக வேலையை செய்துவிட்டு, அதைவிட குறைவான சம்பளம் வாங்கிய போதும் அவள் அங்கிருந்து செல்ல முயற்சி செய்யவில்லை. அதை சிந்தித்த விக்ரம் அவளோடு பேசி, அங்கே நடந்ததைத் தெரிந்துகொள்ள முயன்றான்.

அதற்குள் அவனின் செல்லிற்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர,’யார்’ என்று நெற்றியை வருடி சிந்தித்தபடி அழைப்பை ஏற்று பேச தொடங்கினான். மறுப்பக்கம் பேசிய நபர் சொன்ன தகவலைக் கேட்டதும், சட்டென்று திரும்பி தன்னுடைய தோழியை நோக்கினான்.

“இந்த கிச்சன் கிளினிங் முடிந்துவிட்டால், அப்புறம் வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று சொன்னவளை இமைக்காமல் நோக்கினான் விக்ரம். அவனிடம் பதிலில்லை என்றவுடன், சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

அவன் வேறொரு நபருடன் பேசியபடி நின்றிருக்க, அவள் கேள்வியாக புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, ‘ஒண்ணுமில்லே’ என்று மறுப்பாக தலையசைத்து புன்னகைத்தான்.

அந்த அழைப்பைத் துண்டித்ததும், “உன்னிடம் கொஞ்சம் பேசணும்” என்றவன் ஹிந்தியில் சொல்ல, அவளும் சரியென்று ஒப்புக்கொள்ள, இருவரும் அங்கிருந்து கிளம்பி ஜூஹூ கடற்கரைக்குச் சென்றனர்.

மாலை நேரம் என்ற காரணத்தால் வானம் செந்நிற கோலத்தில் காட்சியளிக்க, இதமான காற்று உடலைத் தழுவிச் சென்றது. கடலலை சத்தம் காதுக்கு இனிமை சேர்க்க, தன் போக்கில் நடந்த விக்ரம் ஆளுக்கொரு பெல்பூரியை வாங்கி வர, மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் இருவரும் சென்று அமர்ந்தனர்.

சிறிதுநேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவிட, “மிருணா நீ என்னிடம் ஏதோ மறைக்கிற?” என்ற விக்ரமை அவள் புரியாமல் பார்க்க, அவளை இமைக்காமல் பார்த்தபடி அவர்களை நெருங்கியது அந்த உருவம்.

அவர்கள் பேச்சுக்குரல் கேட்கும் தூரத்தில் அமர்ந்தவனின் கவனம் அவர்களின் மீதே நிலைக்க, அதை உணராமல் திகைப்பும், அதிர்ச்சியுமாக நோக்கிட,“கணவன் – மனைவி பிரச்சனைக்குள் தலையிடுவது தவறுதான்” என்று இடைவெளிவிட, அவன் பேசப் போகும் விஷயம் என்னவென்று புரிந்துக்கொண்டு மௌனமானாள்.

“ஆனால் ஒரு நண்பனாக உன்மீது அக்கறை வைத்து கேட்கிறேன், நீ ஊரிலிருந்து கிளம்பும்போது அங்கே என்ன பிரச்சனை பண்ணிட்டு வந்தே” என்று நேரடியாக கேட்க, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளின் வீட்டுப் பிரச்சனையை நண்பர்களிடம் அவள் பகிர்ந்ததில்லை.

ஆனால் பிரியதர்ஷினி – விக்ரம் இருவரும் அதற்கு விதிவிலக்கு என்று சொல்லலாம். அவளைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்தவர்களிடம், வீட்டில் நடந்த பிரச்சனையைப் பற்றி அவள் மூச்சுவிடவில்லை.

ஆனால் ஆறுமாதமாக இல்லாமல் இன்று அவன் திடீரென்று கேட்டதும், “விக்ரம்” என்றாள் அதிர்ச்சியுடன்.

“இன்னைக்கு எனக்கு உண்மை தெரியணும்” என்று அவன் கண்டிப்பான பார்வையுடன் கூற, வேறு வழியில்லாமல் கோவையைவிட்டு கிளம்பு வரும் முன்பு, தான் அரங்கேற்றிய நாடகத்தைப் பற்றி ஒன்றுவிடாமல் நண்பனிடம் ஒப்பித்தாள்.

கடைசியாக, “அப்பாவுக்கு நியாயம் கேட்க போது, விஷ்ணுவை அனாதைன்னு சொல்லிட்டேன் விக்ரம். மத்த யார் சொல்லி இருந்தாலும், அது அவ்வளவு தூரம் அவரைப் பாதிக்காது. ஆனால் நான் சொன்னது ரொம்ப தப்புதானே?” என்று வருத்தத்துடன் கேட்டவளின் குரல் கரகரத்தது.

அவன் ஒப்புதலாக தலையசைக்க, “அதுதான் அங்கே இருக்கிற யாரிடமும் சொல்லாமல் இங்கே வந்துட்டேன். அதே நேரத்தில் அத்தை கேட்ட கேள்வியிலும் நியாயம் இருந்தது விக்ரம்” என்றவளை கேள்வியாக நோக்கினான்.

“ஒருவேளை நாங்க சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எனக்கு குழந்தை உருவாகி இருந்தால், நானும் அமைதியாக போயிருப்பேனோ என்னவோ? ஆனால் அது நடக்கவே இல்ல, இனி நடக்கவும் வாய்ப்பில்லை” என்றவள் சொல்லும் அர்த்தம் உணர்ந்து, “நீயாக ஏதோ கற்பனை செய்து பேசாதே!” என்று அதட்டினான்.

அதுவரை இயல்பாகப் பேசிய மிருணாளினி, “என்னுடைய கற்பனை இல்லடா. நான் உண்மையைத் தான் சொல்றேன். எங்களுக்கு கல்யாணமாகி ஆறு மாதம் சேர்ந்து வாழ்தோம். அப்போது பிறக்காத குழந்தை இனி பிறக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை” என்ற தோழியை அடிக்கும் அளவிற்கு கோபம் வந்தபோதும், அதைக் காட்ட முடியவில்லை.

“இங்கே பாரு! எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்காது. அதுக்கென்று நேரம் வந்தால்தான், அதுவெல்லாம் நடக்கும். இப்பவும் சொல்றேன், நீ உன்னையும் காயப்படுத்தி, அவரையும் காயப்படுத்திட்டு இருக்கிற. நீ நினைக்கிற மாதிரி விஷ்ணு அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை மறக்க மாட்டார்” என்றான் எரிச்சலோடு.

அவன் பேசுவதைக் காதில் வாங்காமல், “அவருக்காக வாழ்ந்த நாட்களும் போதும், அவரைக் காயப்படுத்திப் பார்த்தும் போதும். இன்னும் ஒரு வருஷமோ இல்ல இரண்டு வருஷமோ என்னை மறந்துட்டு விஷ்ணு வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்குவார்” தன்னுடைய ஆசையை மனதில் போட்டு புதைத்துவிட்டு கூறியவளைக் கண்டு அவன் பொறுமை பறந்தது.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“உனக்கு தாய்மை உணர்வு இல்லன்னு சொல்லி, உன் காதலை உனக்குள் மறைக்காதே!அன்னைக்கு உன்னைத் தேடி வந்த விஷ்ணுவைத் திட்டி அனுப்பிட்டு, அடுத்த நிமிசமே அவருக்காக ஓடினாயே அதுக்கு பெயர் என்ன?” என்றவன் கேட்க, அவள் பதில் சொல்லாமல் கண்ணீரோடு தலை குனிந்தாள்.

“அதைவிடு! கார்த்திகேயன் – கீதாஞ்சலி இருவரும் உன்னை அண்ணி என்று கூப்பிட்டாலும், ஒரு தாய்க்கு நிகரான பாசத்தை அவங்ககிட்ட நீ காட்டியதை பல முறை பார்த்து இருக்கேன். பெண்கள் தாய்மை அடைந்தால்தான், கணவனோடு சேர்ந்து வாழ தகுதியானவர்கள் என்ற ரூல்ஸ் கிடையாது” என்று அவன் சொல்ல, மிருணாளினி கண்ணீரோடு நண்பனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது விழிகளில் தெரிந்த வலியைக் கண்டு, சிலநொடிகள் தன் பேச்சை நிறுத்தினான் விக்ரம்.

சில நொடிகள் அமைதியாக கழிந்துவிட, “ஒரு குழந்தை பிறந்திருந்தால் உனக்கு தாய் மனம் புரிந்திருக்கும்னு சொன்ன அத்தை, நாளைக்கு என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு” என்று அவள் கூற, அந்த கருத்தை ஏற்க மறுத்தான் விக்ரம்.

அவளது பயம் என்னவென்று புரிந்துக்கொண்டு, “பெண்கள் வேறு பிள்ளை பெற்று தரும் மிஷின் கிடையாது. பிள்ளையே பெற்றுக் கொள்ளாமல் இருப்பது பேஷன் என்று சொல்லும் அளவுக்கு முன்னேறிப் போயிட்டு இருக்கும் உலகத்தில் இருக்கிற மிருணா” என்று சொன்னதைக் கேட்டு, அவள் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது.

அவளைத் தீர்க்கமாக நோக்கிய விக்ரம், “அவ்வளவு சீக்கிரம் உன்னை மறந்துவிடுவார் என்று நினைக்கிறாயா மிருணா?” என்ற விக்ரம் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தபோதும், தன் மனதில் நினைப்பதை கூறினாள்.

“உடனே மறக்க வாய்ப்பில்லை. ஆனால் கொஞ்சநாள் தேடித் பார்த்துக் கிடைக்கவில்லை என்றால், அவரை அப்படியே தனிமரமாக யாரும் விடமாட்டாங்க. ஒவ்வொரு முறை என் முகத்தைப் பார்க்கும்போது இவ அனாதைன்னு சொன்னவதானே என்று அவருக்கோ, இவ்வளவு அன்பைப் பொழியும் கணவனை இப்படி சொல்லிவிட்டேனே என்ற எண்ணம் எனக்கோ வருவதைத் தடுக்க இதுதான் வழி” என்றவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கிட, சட்டென்று சுண்டுவிரலால் நாசுக்காக கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

சிறிதுநேரம் அமைதியாக கடலை வேடிக்கைப் பார்த்த விக்ரம், “உன்னோட வாழ்க்கை?” என்றான்.

தன் வருத்தத்தை மனதினுள் மறைத்துக்கொண்டு, “அவரை அனாதைன்னு சொன்னதுக்கு, நான் அனுபவிக்க வேண்டிய தண்டனைதான். கடைசிவரை இப்படியே தனிமையில் இருக்கலாம்னு முடிவெடுத்து விட்டேன்” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சட்டென்று எழுந்து நின்றாள்.

சட்டென்று எழுந்து அவர்களை நெருங்கியவன், “தேங்க்ஸ் விக்ரம்! உங்களால் தான் இவ மனசில் என்ன இருக்குன்னு எனக்கு தெரிஞ்சிது! இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்” என்று அவன் கையைப்பிடித்து குலுக்கிய விஷ்ணுவைக் கண்டு அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள்.

தன்னைத் தேடிக்கொண்டு கணவன் இவ்வளவு தூரம் வருவான் என்று எதிர்பார்க்காத மிருணாளினி என்ன பேசுவது என்று புரியாமல் நின்றிருக்க, “என்னோட தோழி வாழ்க்கை சந்தோசமாக இருந்தால், அது போதும் சார்” என்றான் விக்ரம்.

அவர்களுக்கு தனிமைக் கொடுத்துவிட்டு அவன் விலகிச்செல்ல, “வீட்டுக்குப் போலாமா?” என்று அவளின் தோளில் கைபோட, சட்டென்று கணவனின் கையைத் தட்டிவிட்டாள்.

“என்னால உங்களோடு வர முடியாது” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, அவளது கரம்பிடித்துகொண்டு அமைதியாக கடற்கரையை வேடிக்கைப் பார்த்தான். அவள் எவ்வளவோ தூரம் கையை விலக்கிக்கொள்ள முயற்சி செய்ய, அதை சுலபமாக முறியடித்தான்.

கடைசியில் அவன் மீது கோபம் வர, “நான்தான் நீங்க வேண்டாம்னு விலகி வந்துவிட்டேனே, அப்புறம் எதுக்காக இவ்வளவு தூரம் வந்து என் நிம்மதியைக் கெடுக்குறீங்க” என்று எரிச்சலோடு கேட்டாள்.

“எனக்கு நீ மட்டும்தான் வேணும், அதுதான் உன்னைக் கையோடு கூட்டிட்டுப் போக வந்தேன்” என்ற கணவனைக் கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது.

“எனக்கு உங்களோடு வாழ விருப்பம் இல்ல. நீங்க வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்வதுதான் இருவருக்கும் நல்லது” என்று தன் மனதின் காதலை மறைத்துக்கொண்டு அவள் வீம்புடன் கூற, சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்தான்.

அவள் கைவிரலோடு தன் விரல்களைக் கோர்த்து, “எந்த பெண்ணின் நிழலையும் தொட மாட்டேன்னு என் தர்மபத்தினிக்கு சத்தியம் பண்ணி தந்திருக்கிறேன்” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு முன்னே செல்ல, அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினாள்.

அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு கால்டாக்ஸி பிடித்தவன், மிருணாளினி தங்கியிருக்கும் வீட்டின் முகவரியைச் சொல்லி காரில் ஏறிக் கொண்டான். அதுக்குமேல் ரோட்டில் நின்று வாக்குவாதம் செய்யாமல் அவளும் அமைதியாகிவிட, அடுத்த அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.

தன்னிடம் இருக்கும் சாவியைத் திறந்து அவள் வீட்டிற்குள் நுழைய, “நீ அறிவாளி என்று நினைக்கும்போது, நான் அடிமுட்டாள் என்று நிரூபிக்கிற மிருணா?” என்று கிண்டலாக மொழிந்த கணவனைக் கேள்வியாக நோக்கினாள்.

அந்த வீட்டின் கதவைத் தாழிட்டு அவளின் பக்கம் திரும்பியவன், “நம்ம சேர்ந்து வாழ்ந்ததை வாழ்க்கைன்னு சொல்லாதே! அதைகேட்டு எல்லோரும் சிரிச்சிடுவாங்க” என்றவன் அவளின் கரம்பிடித்து அருகே இழுத்தான்.

சட்டென்று தடுமாறி மார்பில் விழுந்த மனையாளின் இறுக்கியணைத்த விஷ்ணு, “நானே அனாதை என்று தெரிந்தபிறகு நேசித்த நீயே, என்னை இப்படி அனாதையாக விட்டுவிட்டு வந்தால், நான் யாரிடம் போய் ஆறுதல் தேடுவது? இந்த பிரிவுக்கு நீ கூறிய காரணங்கள் எல்லாமே முட்டாள்தனம் என்று உனக்கே தோணல” அவளின் கண்ணைப் பார்த்து நியாயம் கேட்க, பதில் சொல்லாமல் இறுகிப்போய் நின்றிருந்தாள் மிருணாளினி.

அவளது முகத்தை வைத்தே மனதைப் படித்த விஷ்ணுவோ, “உன்னோட இதயம் இரும்பா? என்னைவிட்டு வந்து ஆறுமாசம் ஆகியும், இன்னும் உன் மனசு மாறவில்லையா? இந்த அனாதைக்கு உன் மனதில் இடம் இல்லையா மிருணா?” என்று அவன் கேள்விகளை அடுக்க, அதுக்குமேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவனது கேள்விகள் இரும்பாக மாறியிருந்த அவளின் இதயத்தை உருக்கிவிட, “இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க!” என்ற மிருணாளினி உடைந்து அழுதுவிட, அடுத்த நிமிடமே அவன் இதயம் எங்கும் சந்தோசம் பரவிட, அவள் முகத்தைக் கையில் ஏந்தி முத்தமிட தொடங்கினான்.
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
சூப்பர் பதிவு ❤✨❤
விக்ரம் எவளோ கரெக்டா பேசற... மிரு என்ன ஆச்சு உணக்குள்ள இப்படி ஒரு எண்ணமா 😐

இன்னும் ஒரு பதிவு தான்😍 அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top