• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

"இரும்பு இதயம் உருகாதோ?!" அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருப்பது நான் உங்கள் அனாமிகா 12. இந்த பதிவைப் படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள். உங்களின் கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.

அத்தியாயம் – 8

தன்னுடைய வீட்டில் நடக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் அமைதியாகப் பார்த்த சகாதேவன் மனம் தீயாய் கொதித்தது. அன்று ஒரு பெண்ணை ஈவு இறக்கம் இல்லாமல் கொன்றவனின் பெண் இந்த வீட்டில் மருமகளாக வாழ வேண்டுமா என்ற கேள்வி அவரின் நிம்மதியைக் கெடுத்தது.

இத்தனை வருடங்களாக இரு குடும்பத்திற்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லையென இருந்தவர், திடீரென்று மனைவி கேட்டவுடன் சரியென்று சம்மதித்து சக்ரபாணி வீட்டிற்கு செல்ல சம்மதித்தார். அதற்கான காரணம் தன்னுடைய இரண்டு மகன்களில் ஒருவனுக்கு மிருணாளினி மணம் முடிக்க வேண்டும்.

அவரின் திட்டத்தை எந்தவிதமான உந்துதலும் இன்றி நிறைவேற்றினான் விஷ்ணுவரதன். அடுத்ததாக, அண்ணனின் மகளை ஊரறிய திருமணம் செய்து வைக்க நினைத்த மனைவிக்கு எதிர்காமல், அவர் அமைதியாக இருந்ததுகூட சக்ரபாணிப் பழிவாங்கும் நோக்கம்தான்.

அடுத்தடுத்த விஷயங்கள் அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் சிறப்பாக நடக்க, அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்த்தார் சகாதேவன். மாமனாரின் மீது இருக்கும் கோபத்தை தணிக்க, மனைவியை அணுஅணுவாக சித்திரவதை செய்வான் தன் மகன் என்பதில் அவருக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

இது எல்லாமே அவர்கள் உடலால் ஒன்றிணையும் வரைதான். இருவரும் ஈருடலும் ஓருயிருமாக கலந்தபிறகு, இவை அனைத்தும் தலைகீழாக மாறிவிடக்கூடும் என்றவரின் அனுபவ அறிவு இடித்துரைத்தது. அதுவரை அமைதியாக இருந்த சகாதேவன் மகனின் மனதை திசைதிருப்ப என்ன வழியென்று வேகமாக சிந்தித்து யார்மீதும் சந்தேகம் வராதபடி காயை நகர்த்திட முடிவெடுத்தார்.

தன்னுடைய சுயநலத்திற்காக மிருணாளினியை பகடைக் காயாக மாற்றியதுபோல, இன்று தன் பகையைத் தீர்க்க மகனின் வாழ்க்கையை பகடைக் காயாக மாற்ற நினைத்தார்.

பட்டுவேட்டி சட்டையில் தயாரான அண்ணனை அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவனது படுக்கை முழுவதும் பூவினால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, ஊதுபத்தியின் மணம் நாசியைத் துளைத்தது. கட்டிலுக்கு அருகே இருந்த டேபிளில் ஸ்வீட் மற்றும் பழங்கள் அனைத்தும் இருந்தது.

தனது அறையினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைக் கண்டு எரிச்சலடைந்த விஷ்ணு, “இந்த கருமத்தை எல்லாம் யார் செய்ய சொன்னது?” என்று கார்த்திகேயனிடம் சீறினான்.

அவனது கோபத்திற்கான காரணம் புரியாதபோதும், “எல்லாம் அம்மாவோட ஏற்பாடுதான். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அம்மாவிடம் போய் கேளு” என்றவன் வேகமாக அறையைவிட்டு வெளியேறினான்.

அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்த கையோடு மிருணாவைக் கொண்டுபோய் விஷ்ணுவின் அறைக்குள் விட்டுவிட்டு வந்தனர். அவளது கால் கொலுசின் சத்தம்கேட்டு நிமிர்ந்தவனின் பார்வையைக் கவனித்த மிருணாளினியின் மனம் திடுக்கிட்டது.

அவனைக் கண்டு பயத்தில் இதயம் படபடக்க, அதை வெளிக்காட்டாமல் மறைத்தபடியே அவனை நெருங்கினாள். அந்த விடிவிளக்கின் ஒளியில் தேவதையாக மிளிர்ந்த மிருணாவைப் பார்த்து, அவனின் கண்கள் இமைக்க மறந்தது.

சட்டென்று சக்ரபாணியின் முகம் நினைவுவர, அவளை எதற்காக திருமணம் செய்தோம் என்பதை அவசரமாக ஞாபகத்திற்கு கொண்டுவந்து, "அன்னைக்கே உன் வாழ்க்கையை சீரழிக்க போறேன்னு உங்க அப்பனிடம் சொன்னேன். அவன் இந்த விஷ்ணுவை சாதாரணமாக நினைச்சிட்டான்" என்றவன் பார்வையை அவளுக்குள் அருவருப்பை ஏற்படுத்தியது.

அவளின் கையில் இருந்த பால் சோம்பை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, "இங்கேயே இரு வருகிறேன்" என்று எழுந்து சென்றவனைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டபடி படுக்கையில் அமர்ந்தாள்.

அவன் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஸ்கியை முழுவதும் குடித்த கொஞ்ச நேரத்தில் போதை ஜிவ்வென்று தலைக்கு ஏறிவிட, அப்படியே தள்ளாடியபடி அறைக்குள் வந்தவனைப் பார்த்து மிரண்டு விழித்தாள்.

சின்ன வயதில் இருந்தே குடிப்பவர்களை கண்டால் அருவருப்புடன் விலகி செல்லும் பெண்ணவள். ஆனால் இன்று விஷ்ணு நின்றிருந்த நிலையைப் பார்த்து கைகால்கள் வெடவெடவென்று அவளின் மெல்லிய தேகம் நடுங்க துவங்கியது.

அந்த அறையிலிருந்து அவள் எங்கும் தப்பிச்செல்ல முடியாத சூழல் வேறு. அதே சமயம் விஷ்ணு பாவம் பார்த்து விடும் ஆளும் கிடையாது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது அவளைப் படுக்கையில் தள்ளி, அவளின் மீது பரவிப் படர்ந்தான்.

அவனிடம் வீசிய மதுவாடை அவளுக்கு அருவருப்பை கொடுக்க, "ச்சீ நகருங்க" தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து அவனை தள்ளிவிட முயன்றிட, அவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியது.

"உன் அப்பனிடம் விட்ட சவாலை நீ முறியடிக்க பார்க்கிறீயா?" என்றவன் கோபத்தில் அவளது பட்டுப்போன்ற கன்னத்தில் பளாரென்று அரைந்தான்.

அவனது அடியில் பொறிக் கலங்கிவிட, கன்னத்தில் கைவைத்த மிருணாளினி கண்களில் கண்ணீர் அருவியாகப் பெருகியது. அவ்வளவு கண்டிப்புடன் வளர்த்த தந்தையின் அடியினில் கூட இவ்வளவு ஆக்ரோசத்தை அவள் உணர்ந்ததில்லை.

அவளை அடித்த விஷ்ணுவின் கைசிறைக்குள் சிக்கியிருந்த மிருணாளினி, "எங்கப்பா எனக்கு பார்த்த மாப்பிள்ளை அபியுக்தன், அவனைக் கல்யாணம் பண்ணிக்க விடாமல் சதி செய்தீங்க. என்னிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் உங்களை எனக்கு சுத்தமாகவே பிடிக்கல. ஆமா எங்கப்பன் மானம் போகக்கூடாது என்றுதான் உங்களைக் கல்யாணம் பண்ணினேன்" என்று முகத்தை கரங்களால் முடிக்கொண்டு கதறினாள்.

அவளின் கண்ணீரைக் கண்டு இதயம் இலகுவதற்கு பதிலாக இறுகியது. அவள் உச்சரித்த வார்த்தைகளைக் கோர்த்தப் பார்த்த விஷ்ணுவின் கோபம் சுர்ரென்று தலைக்கு ஏறியது. தன்னை வேண்டாமென்று உதறிச் சென்ற யாழினிக்கும், தன்னுடைய மாமன் மகளின் வாக்கியத்திற்கும் முடிச்சுப்போட்டு சிந்தித்தான்.

இரண்டு பெண்களுமே தன்னை ஆண்மகன் என்று சொல்கிறார்கள் என்ற முடிவிற்கு வந்தவன், "உன் கண்ணுக்கு நான் ஆம்பளயாவே தெரியல. அந்த அபியுக்தன் தான் நல்லவன்னு நினைக்கிற இல்ல. அப்போ அவன் உன்னைப் படுக்கைக்குக் கூப்பிட்டாலும் போயிடுவேன்னு சொல்ற” வார்த்தைகளில் விஷத்தைக் கக்கிய கணவனை கண்ணீரோடு ஏறிட்டாள்.

அதுவரை அவன் என்ன பேசினாலும் அமைதியாக இருக்க நினைத்த மனம் சுக்குநூறாக உடைந்தது. தன்னுடைய பெண்மையை ஒரு முறைக் கேவலப்படுத்தியது தெரியும், இரு குடும்பத்திற்காகவும் அத்தை மகனையே மணவாளனாக ஏற்றுக் கொண்டது அந்த பேதை நெஞ்சம்!

அவனது வார்த்தைகள் மிருணாவின் இதயத்தை வாள் கொண்டு அறுக்க, "என்னைக் கீழ்த்தரமாக நினைப்பதும், மொத்த ஊர்காரங்க முன்னாடியும் அவமானப்படுத்துவது, என்னோட பெண்மையை கேவலப்படுத்தும் எண்ணமெல்லாம் உங்களுக்கு தான் வரும்" என்றாள் ஆதங்கத்துடன்.

அடுத்த நொடியே அவளின் முடியைக் கொத்தாகப் பிடித்து இறுக்கியவன், “என்னடி சொன்னே?” அவளின் கன்னத்தில் சரம்வாரியாக அறைந்தான். அப்போதும் அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது. அவனிடமிருந்து விலக நினைத்த மிருணாவை படுக்கையில் தள்ளி அவள்மீது பரவிப் படர்ந்தான்.

அவளது அருவருப்பை பொருட்படுத்தாமல், அவளது தேனுறும் இதழ்களைத் தேடிக் குனிந்தவன், தன் இதழை வன்மையாகப் பதித்தான். இருவருக்குமான முதல் முத்தம் போல இல்லாமல், இந்த முத்தம் அவளுக்கு கண்ணீரைப் பரிசளித்தது.

அவளின் இதழ்களில் இரத்தம் கசிவதை உணராமல் முத்தமிட்டவனின் கரங்கள் அவளின் இடைப் பிரதேசத்தில் அழுத்தத்துடன் படிந்து முன்னேறியது. அவன் கரம்பதிந்த இடங்கள் அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய கணவன் என்ன எண்ணம் மறந்துபோக, அவனிடமிருந்து விடுபட எவ்வளவோ தூரம் போராடினாள்.

அவளது எதிர்ப்புகள் அனைத்தையும் முறியடித்து, தன்னுடைய தேடலைத் தொடர்ந்தான் விஷ்ணு. அவன் தேவை முடிந்து விலகியபோது வாடியக்கொடியாக கிடந்த மிருணாளினியின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவளது முதலிரவு ஒரு கசப்பான உணர்வினை நெஞ்சினில் விதைக்க, “உன் இதயம் என்ன இரும்பா மாமா? எந்த தவறும் செய்யாத என் வாழ்க்கையில் இப்படி விளையாடிவிட்டாயே!” என்றவளின் கேள்வியில் நியாயம் இருந்தபோதும், அதை உணரும் நிலையில் அவனில்லை.

அவனது மூளை முழுவதும் போதை மட்டுமே ஆக்ரமித்திருக்க, அவளை இழுத்து அணைத்துக்கொண்டு உறங்கிய கணவனின் கைச்சிறைக்குள் சிக்கியிருந்த பெண்ணின் மனதில் வலி மட்டுமே மிஞ்சியிருந்தது. மெல்ல தன்னிலை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தாள் மிருணாளினி.

மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது. அந்த அறையினுள் சூரிய வெளிச்சம் பரவியதில் உறக்கம் கலைந்து கண்விழித்தாள். விஷ்ணுவரதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அவனது சுவாசக்காற்று உரக்க, நேற்று நடந்ததை நினைத்தபடி எழுந்த மிருணாளினி குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் குளித்துவிட்டு கீழிறங்கி வரும்போது ஹாலில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர். அவர்களின் பார்வை இவளின் மீது படிந்திட, மெல்ல தலைக்குனிந்தபடி சமையலறைக்குள் சென்று மறைந்த மருமகளின் பின்னோடு சென்றார் காதம்பரி.

“என்னடா எதுவும் பேசாமல் அமைதியாக வந்து நிற்கிற? விஷ்ணுவிற்கு காஃபி போட்டுக் கொடுக்க நினைக்கிறாயா?” என்றவரின் கேள்விக்கும் நிமிர்ந்து பார்க்காமல், “ஆமா அத்தே” என்றாள்.

“இது சாப்பிடும் நேரம் என்பதால், அவன் குளிச்சிட்டு வந்து முதலில் சாப்பிடட்டும். அப்புறம் நீங்க இருவரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்னதற்கு சரியென்று தலையசைத்தாள்.

தன்னுடைய அண்ணியை வம்பிழுக்கும் எண்ணத்துடன், “என்ன அண்ணி ரொம்ப அமைதியாக இருக்கீங்க?” என்றபடி மிருணாளினியை நெருங்கிய கீதாஞ்சலியை நிமிர்ந்து பார்க்க தயங்கினாள்.

அதற்குள் சகாதேவன் சப்பாத்தி கேட்க “இதோ இருங்க எடுத்துட்டு வரேன்”, அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார் காதம்பரி.

அவர் சென்றவுடன், “என்ன அண்ணி?” என்றபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய கீதாவின் பார்வை, மிருணாளினியின் கிழிந்திருந்த உதட்டின் மீது படிந்தது. தன்னுடைய அண்ணனின் வெறிச்செயல் கண்டு அவளது கண்கள் கலங்கியது.

அவள் சேலைத் தலைப்பை முதுகுடன் சேர்த்து மூடியிருக்க கண்டு, “என்னோடு ரூமிற்கு வாங்க” என்று சொல்லி வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அவளது அறைக்குச் சென்றாள்,

“கீதா அவ சாப்பிடட்டும் விடு” என்ற தாயின் குரல் அவளது காதில் விழவில்லை. தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடித்தவள், அவள் கெட்டியாக பிடித்திருந்த சேலை தலைப்பை விலகிப் பார்த்தாள். அவளின் உடலில் ஒரு இடம் இல்லாமல் நக்கீறல்களை கண்டு அவளது மனம் பதறியது.

“அண்ணி” என்ற கீதாவின் அழைப்பில் முற்றிலும் உடைந்துபோனாள் மிருணாளினி. அவளின் கட்டியணைத்து கதறிய அழுதவளை அணைத்து ஆறுதல்படுத்தினாள்.

மிருணாவின் அழுகை கொஞ்சம் குறைய, “நான் தரும் மருந்து போடுங்க எல்லாம் சரியாகும். இன்று முழுவதும் யார் வெளியே கூப்பிட்டாலும் நீங்க வரக்கூடாது. நான் கதவைப் பூட்டிட்டு காலேஜ் போறேன்” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தாள் மிருணாளினி.

“நல்லா ரெஸ்ட் எடுங்க அண்ணி” சொல்லிவிட்டு கதவடைத்துவிட்டு, நேராக அண்ணனின் அறைக்குச் சென்றாள் கீதா. தன்னுடைய அண்ணனின் உறக்கத்தைக் கலைக்காமல் மெல்ல அவனது தலையணை அடியே சாவியை வைத்துவிட்டு ஒரு துண்டுச் சீட்டில் எழுதி பால் சொம்பின் கீழே வைத்தாள்.
 




Last edited by a moderator:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தன்னுடைய அண்ணன் எழுந்ததும் மிருணாவைத் தேடும்போது, கட்டாயம் கோபம் வரும். அப்போது கட்டாயம் தன்மீது மொத்த கோபமும் திரும்பும். அப்படி இருக்கும்போது என்னோட வரவை எதிர்பார்த்து காத்திருப்பாரே தவிர இந்த சாவியைப் பார்க்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வந்தாள்.

அதன்பிறகு விறுவிறுவென்று கீழே வந்த மகளை விநோதமாகப் பார்த்த காதம்பரியிடம் “அவங்க ரொம்ப களைப்பாக இருக்காங்க அம்மா. அண்ணன் இருக்கும் வேகத்திற்கு இன்று அவங்களை தூங்க விடமாட்டான். அதுதான் என்னோட அறையில் தூங்க சொல்லி இருக்கேன். அவங்களுக்கு சாப்பாடு வேண்டாமாம்” என அவரை சமாளித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்.

சகாதேவன் அலுவலகம் கிளம்பிச் செல்ல, மற்ற இருவரும் கல்லூரி கிளம்பிச் சென்றனர். அதன்பிறகு கண்விழித்த விஷ்ணுவின் பார்வை அறையெங்கும் வலம் வந்தது. நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவிற்கு வர, ‘இந்நேரத்தில் எங்கே போனாள்?’ என்ற கேள்வியுடன் குளியறைக்குள் புகுந்தான்.

கொஞ்சநேரத்தில் கிளம்பி வந்த மகனைப் பார்த்த காதம்பரி, “நீ வந்து சாப்பிடு” என்று அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தார். அவனது பார்வை வீட்டைச்சுற்றி வலம் வந்தது. தன்னுடைய மகனின் பார்வையைக் கவனித்து, “உன்னோட அருமை மனைவி கீதாவோட அறையில் தூங்கிட்டு இருக்கிறா” என்றார் சிரிப்புடன்.

“ஓ!” என்றவன் சாப்பிட்டுவிட்டு மேலே சென்று பார்க்க, அவளது அறைக்கதவு பூட்டபட்டிருந்தது. அதிலிருந்தே நடந்த அனைத்தையும் கீதாவிடம் சொல்லிவிட்டால் என்ற உண்மை விலகியது.

‘புருஷன் – பொண்டாட்டிக்குள் ஆயிரம் தகராறு வந்தாலும் அதை அடுத்தவங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு அவங்க அப்பன் சொல்லி வளர்க்கல போல. அவளைவிட சின்னப் பொண்ணுகிட்ட போய் உண்மையைச் சொல்லி இருக்கிறா பாரு!’ என்ற கோபத்தில் அந்த அறையின் கதவை எட்டி உதைத்துவிட்டு, தன்னுடைய அறைக்குச் சென்றான்.

தன்னுடைய பிள்ளைகள் பெரியவர்கள் ஆனபிறகு அவர்களுக்கு தனித்தனி அறைகளை ஒதுக்கிக்கொடுத்தார் காதம்பரி.

அவரவர் அறைகளின் சாவியும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத சட்டம்!

கீதா அறைக்கதவை திறக்க முடியாத கோபத்தில், கூண்டுக்குள் அடைப்பட்ட புலிபோல அறைக்குள் அங்குமிங்கும் நடந்தான் விஷ்ணு. இந்த கோபத்தில் பால் சொம்பின் கீழே வைக்கப்பட்டிருந்த துண்டுச் சீட்டைக் கவனிக்க மறந்தான்.

கீதா சொன்னபடி அறைக்குள் சிறைபட்டிருந்த மிருணா நிம்மதியாக படுத்து உறங்கினாள். விஷ்ணுவின் கடுஞ்சொற்கள் அவளுக்கு தந்த வலியை மறந்து தூக்க மாத்திரையின் உதவியுடன் உறங்கினாள்.

மதிய உணவு இடைவேளையின் போது தங்கையைத் தேடி வந்த கார்த்திகேயன், “நீ எதுக்காக அண்ணியை உன்னோட அறையில் வச்சு பூட்டிட்டு வந்தே? இந்த விஷயம் அண்ணனுக்குத் தெரிந்தால், உன்னை கொன்னே போட்டு விடுவான்” என்றான்.

“அதுக்காக அவங்களை என்ன செய்தாலும் பார்த்துட்டு இருக்க சொல்றீயா? நம்ம அண்ணிக்கு அண்ணாவை எதிர்த்துப் பேசக்கூட தெரியாதுடா. என்னைக் கட்டிப்பிடித்து எப்படி அழுதாங்க தெரியுமா?” என்றவளின் குரலில் வருத்தம் இழையோடியது.

“உன்னோட வருத்தம் எனக்கு புரியுது கீது! அதே நேரத்தில அண்ணனோட கோபத்தில் அளவு எப்படி இருக்கும்னு உனக்கு தெரியும் இல்ல. இன்று நீ காப்பாற்றிவிட்டதாக நினைக்கும் அண்ணியை இன்னைக்கு என்னவெல்லாம் கொடுமை படுத்துவான்னு யோசிக்காமல விட்டுட்டியே” என்றான் கவலையுடன்.

விஷ்ணுவின் குணம் வீடே அறிந்தது என்பதால், “அதுக்காக அப்பாவி அவங்களை அப்படியே விட்டுட்டு வர சொல்றீயா? நம்ம அண்ணிக்கு இனிமேல் எல்லாமே நம்மதான். அவங்களுக்கு நம்மதான் அனைத்தையும் கற்றுத் தரணும்” என்றாள்.

இருவரும் உண்டு முடித்ததும் அவரவர் கிளாஸ் ரூம் நோக்கி சென்றனர். மாலை அண்ணனும், தங்கையும் வீடு திரும்ப, அவர்களின் வரவை எதிர்பார்த்தபடி ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் விஷ்ணு.

தன்னுடைய அண்ணனின் கோபத்தை நன்கு அறிந்திருந்த இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறியபடி வீட்டிற்குள் நுழைய, “கீதா நில்லு! எதுக்காக மிருவை உன்னோட அறையில் தூங்க சொல்லிட்டு கதவைப் பூட்டிட்டுப் போனே?” என்று அவன் விசாரணையில் இறங்கினான்.

அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல், “அண்ணா” என்று மிரண்டு விழித்த தங்கையைப் பாவமாகப் பார்த்தான் கார்த்திகேயன்.
 




Last edited by a moderator:

Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
892
Reaction score
1,334
Location
Chennai
Putina seri,Avan than therandutane,veetla ulavanguku kuda theriyume ava Geetha roomla irukardhu.🤔🤔🤔🤔🤔🤔🤔
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அருமை
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அட பிறவி பைத்தியமே இப்படியா டா அந்த பிள்ளையா அடிப்ப🙄🙄🙄🙄

இதுக்கு நீ எந்த சமாதனமும் சொல்ல முடியாது, இது மொத்தமும் உன் சைகோ தனத்தை காட்டுது🤮🤮🤮🤮

அடேய் சதா, நீ எல்லாம் மனுஷன் ஆ, இன்னும் நீயே இப்படி இருக்க, உனக்கு பிறந்தவன் வேற எப்படி தான் இருப்பான், ச்சைக்😒😒😒😒

கீது நீ செய்தது சரி, ஆன இனி என்ன பண்ண போராநோ🙄😳😳😳
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
ச்ச....என்ன மனுஷன் இவன்🤦😡
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top