• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

"இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்." இதோ இரும்பு இதயம் உருகாதோ - இறுதிப் பதிவுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். இவ்வளவு சீக்கிரம் கதையை முடிக்க வாசகர்களாகிய நீங்கதான் முதல் காரணம்.

எத்தனையோ வேலைகளுக்கு நடுவே உங்களோட கமெண்ட்என்னால் ரிப்ளே பண்ண முடியல. முடிந்தவரை இன்னும் சில தினங்களில் பதில் தருகிறேன். இந்த பதிவைப் படித்து உங்களுடைய நிறைக்குறைகளை மறக்காமல் பகிருங்கள். எபிலாக் நாளை மறுநாள் தர முயற்சிக்கிறேன்.

அத்தியாயம் – 28

அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் இதயத்தைக் காயப்படுத்திட, அதன் வெளிப்பட்டாக கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தற்போது அவளுக்கு ஆறுதல் தேவை என்றுணர்ந்து, “ஷ்.. அழுகாதே மிருணா” என்றவன் முதுகை வருடிவிட, கொஞ்சநேரத்தில் இயல்பிற்கு திருப்பினாள்.

அதுவரை அழுததால் தொண்டை வறண்டு போயிருக்க சட்டென்று கணவனைவிட்டு விலகியவள் சமயலறைக்கு சென்று தண்ணீரை எடுத்துக் குடித்தாள். அதில் கொஞ்சம் மனம் அமைதியடைய, மெல்ல மூளை வேலை செய்ய தொடங்கியது.

அவளின் பின்னோடு சமையலறைக்குச் சென்ற விஷ்ணுவும், “எனக்கும் வேணும்” என்று சொல்லி, தண்ணீரை வாங்கிப் பருகினான். தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்த கணவனை நினைத்து மனம் துள்ளியது.

ஆனால் இன்றைய சந்தோசம் நாளைய எதிர்காலத்தை அழிக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை உன்னிப்பாக படித்த விஷ்ணு, ‘இந்தமுறை இவளைவிட்டு போகக்கூடாது’ என்று நினைத்தான்.

இருவரும் அறையைவிட்டு வெளியே வந்து ஒருவரைப் பார்த்தபடி மற்றொருவர் என்று எதிரெதிரே அமர்ந்தனர். சிறிதுநேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவிட, அவனிடம் பேச வேண்டிய வார்த்தைகளைத் தேடிக் கோர்த்தாள்.

அவனைக் காயப்படுத்த மனமில்லாமல், ‘என்னை அவர் மறந்து, வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணனும்’ என்று நினைத்து, “கருவில் சுமக்காத குழந்தையை சுமப்பதாக சொன்னதுக்குதான், கடைசிவரை எனக்கு குழந்தை பிறக்கல. இனியும் ஒரு பொய்யை அஸ்திவாரமாக வைத்து, உங்களோடு வாழ விரும்பல” என்று சொன்னவள் இடைவெளிவிட, அந்த வார்த்தைகள் அவனது தவறின் அளவையும், அவளின் பயத்தையும் புரிய வைத்தது.

தன் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்த்திவிடும் வேகத்தில், “என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்க. அப்பாவிற்கான நியாயம் கிடைத்தாலும், என்னையே உலகமாகப் பார்க்கும் உங்களைக் காயப்படுத்தியது தவறுதானே! அதுதான் எனக்கு நானே தண்டனை கொடுத்துகிட்டேன்” என்ற மனைவியின் மனம் புரிந்தபோதும், அவள் பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.

கடைசியாக, “நம்ம பிரிவதுதான் எல்லோருக்கும் நல்லது. நீங்க வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோசமாக இருங்க” என்று அவள் மீண்டும் சொன்னதையே சொல்ல, அவன் பொறுமை காற்றில் பறந்தது.

“உன்னோட பைத்தியகாரத்தனமான பேச்சை நிறுத்துடி, நானும் சின்னப்பொண்ணு விட்டுப் பிடிப்போம்னு அமைதியாக போனால், நீ ரொம்ப பேசற” என்று அதட்டல் போட, அவள் அதிர்ச்சியுடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆமா நான் சொன்ன பொய்யால் தான் நம்ம உறவின் தொடக்கம். அதே அளவு உன்னை எனக்கு பிடிச்சிருந்தது. கோவிலில் பார்த்த முதல்நாளே, அப்பாவைப் பற்றி பேசியதும் என்னை கொட்டிவிட்டு சென்ற அந்த விளையாட்டு பெண்ணிடம் மனசைப் பறிகொடுத்தது தான் உண்மை” என்று அவன் எரிச்சலோடு கூற, இம்முறை கணவனைத் திகைப்புடன் நோக்கினாள்.

அவளது பார்வையை உணராத விஷ்ணு, இதுவரை மனதோடு மறைத்த உண்மைகளை அவளிடம் பகிர்ந்திட நினைத்தான். இதுக்குமேல் மறைத்தால் எங்கே அவள் தன்னைவிட்டு நிரந்தமாக புரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயம் அவனை ஆக்கிரமித்தது. அதனால் முடிந்தவரை இன்றே அனைத்தையும் பேசிவிட முடிவெடுத்தான்.

“யாழினியுடன் திருமணம் நின்றதுதான், நான் மனதளவில் வாங்கிய முதல் அடி! அத்தனைப் பேர் முன்னால் அவமானப்பட்டு நின்றது, இன்னைக்கு நினைத்தாலும் வெறுப்பாக இருக்கு” என்று சொல்லும்போது அவன் விழிகள் லேசாக சிவந்தது.

“அந்த சம்பவத்தால் நிறையப்பேர் முன்னால் கேலிப்பொருளாக மாறினேன். அந்த நினைவுகளை மறக்க குடிக்க தொடங்கினேன், அது என்னை பெண்களோடும் தவறாக பழக வைத்தது. ஆனால் யாரிடமும் எல்லை மீறியது இல்ல” என்றவன் மனக்கண்ணில் சக்ரபாணி அடித்தது நினைவிற்கு வந்தது.

அவன் முகம் கசங்கிட கண்டு, “விடுங்க” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், “இன்னைக்கு பேசணும் மிருணா, இன்னொரு முறை உன் பிரிவைத் தாங்கும் சக்தி சத்தியமாக எனக்கு இல்ல” ஒரு கசந்த புன்னகையுடன் மீண்டும் தொடர்ந்தான்.

“ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் போட்ட அன்னைக்கு தான் மாமாவை முதல் முறையாக சந்தித்தேன், அவரிடம் உன்னை அதே படுக்கையில்” என்றவன் சொல்ல முடியாமல் நிறுத்திட, அந்த வார்த்தைகள் அவள் மனதை வலிக்க செய்தது.

அவள் கண்களில் கண்ணீர் தேங்குவதை கண்டு, “அதுக்குபிறகு நம்ம முதல் சந்திப்பில், நீதான் அவரோட பொண்ணு என்று தெரிய வந்தது. உன்னை ஏதாவது செய்யணும் என்று நினைத்த சமயத்தில் அபி உன்னைப் பெண்பார்க்க வந்தான்” என்றவனை அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அவளது வருத்தம் உணர்ந்து பார்வையால் அவளுக்கு சமாதானம் சொன்னவன், “உன்னை அவனுக்கு விட்டுத்தர முடியாமல் தான் அவனைப்பற்றித் தவறாக சொல்லி உன் கழுத்தில் தாலி கட்டினேன். முதலிரவுக்கு மறுநாள் நீ கீதா அறையில் போய் தூங்கியதற்காக அடித்தது, பார்ட்டிக்கு போலாம்னு சொல்லி உன்னை நடுத்தெருவில் விட்டுட்டு வந்தது, இதுக்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல உன்னை கொல்ல நினைத்தது” கடைசி வாக்கியத்தை சொல்லும்போது அவனுக்கு வலித்தது.

“இதுவெல்லாம் மனிதத்தன்மை இழந்த ஒரு மிருகத்தின் செயல்தான். அதற்கு உன்னிடம் விளக்கம் சொல்லி, என்னை நானே நியாயப்படுத்த விரும்பல. ஆனால் இதுக்கு நடுவே நமக்குள் வாக்குவாதம் ஏற்படும்போது நீ பேசிய வார்த்தைகள் என்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கு” என்று சொல்லும்போது, அவள் முகம் மெல்ல தெளிவடைய தொடங்கியது.

“ஆனால் அன்னைக்கு குடிபோதையில் நான் கலந்த விஷத்தால், உன் உயிர் போயிருந்தால் கண்டிப்பா நானும் இறந்திருப்பேன்” என்று சொன்ன கணவனின் வார்த்தைகள் மனதைப் பாதிக்க, “மாமா” என்று அதட்டினாள் மிருணாளினி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மாமா என்ற அழைப்பைக் கேட்டு மனம் லேசாக, “அப்பா சொன்னதை நம்பிட்டு உன்னைக் காயப்படுத்துல, அதை விசாரிக்க சொன்னபோதுதான் நீ என்னைவிட்டு விலகிச் செல்ல தொடங்கின. நான் அனாதை என்ற உண்மை தெரிந்தபோது, என் மனசு உன்னைத் தான் தேடுச்சு. உன் மடியில் படுத்து அழுகணும்னு வந்தேன்” என்று அவன் உண்மையைப் போட்டு உடைக்க, அது அவள் தலையில் இடியாக இறங்கியது.

அன்று அவனை எவ்வளவு தூரம் உதாசீனம் செய்தோம் என்று நினைத்தவளின் விழிகளில் கண்ணீர் பெருகிட, “அதுக்குப்பிறகு நடந்தது உனக்கே தெரியும். அன்னைக்கு உங்க அப்பா முகத்தைப் பார்க்க பிடிக்காமல் போக சொல்லல, என் மாமனார் தேவையில்லாமல் அவமானப்பட வேண்டாம்னு தான் அவரைப் பார்க்க முடியாதுன்னு சொன்னேன்” என்று கோபத்தில் கூறிய விஷ்ணுவை இமைக்காமல் நோக்கினாள்.

அவள் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருப்பதைக் கண்டு, “நீ இப்படியொரு பிரச்சனை பண்ண போறே என்று எனக்கு முன்னாடியே தெரியும். அதனால் தான் அன்னைக்கு நீ பேசும்போது, நான் அமைதியாக நின்னுட்டு இருந்தேன். என்னைக் காயப்படுத்திவிட்டதாக நினைச்சிட்டு ஏதாவது பேசின மகளே அவ்வளவுதான்” என கோபத்தில் மிரட்டிய விஷ்ணுவின் செல்போன் சிணுங்கிட, அதை எடுத்து பேச தொடங்கினான்.
 




Last edited by a moderator:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மறுப்பக்கம் பேசியவர்களுக்கு பதில் சொன்ன விஷ்ணு, “இங்கே இருக்கும் பொருளை எல்லாம் பேக் பண்ணி வை. நாளைக்கு காலையில் வேலையை ரிஸைன் பண்ணிட்டு, என்னோடு வர வழியைப் பார்க்கிற! இனியும் ஏதாவது காரணம் சொல்ல நினைச்சே, அப்புறம் பழைய விஷ்ணுவை நீ பார்ப்பே” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், அங்கிருந்த படுக்கையறைக்குள் சென்று மறைந்தான்.

அந்த இடம் மழையடித்து ஓய்ந்ததுபோல அமைதி நிலவிட, ‘நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது என்று தெரியாமல், அவரைத் தேவையில்லாமல் பேச வச்சிட்டேன். அத்தனை வலிகளுக்கு நடுவே இருப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்?’ என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது.

ஒவ்வொரு நொடியும் நரகமாக கழியும் என்று அவளின் மனம் சொல்ல, சுவற்றில் இருந்த கடிகாரம் பத்து முறை கூவி ஓய்ந்தது. அப்போதுதான் வீட்டுக்கு வந்து வெகுநேரம் ஆனதை உணர்ந்து, ‘இங்கே வரும் வழியில் சாப்பிட்டாரா என்று தெரியல?!’ என்ற எண்ணத்தில் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாவில் இட்லி ஊற்றி வைத்துவிட்டு, வேர்கடலையில் சட்னி அரைத்தாள். கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் வேலைகளை முடித்துவிட்டு, “விஷ்ணு வாங்க சாப்பிடலாம்” என்று குரல் கொடுத்தாள்.

தன்னுடைய கணவன் வரவில்லை என்றவுடன், ‘ஒருவேளை களைப்பில் தூங்கிவிட்டாரோ?’ என்ற சந்தேகத்துடன் அறையின் கதவைத்திறந்து உள்ளே செல்ல, அவளது படுக்கையில் படுத்திருந்தான்.

“என்மேல் இருக்கும் கோபத்தை சாப்பாட்டில் காட்டாதீங்க” என்று கூறியவளை உக்கிரமாக முறைத்துவிட்டு, மறுப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

“நான்தான் பைத்தியம், பட்டிக்காடு, வில்லேஜ் மாங்காய் என்று தெரியும் இல்ல. ஏதோவொரு கோபத்திலும், வேகத்திலும் கிளம்பி வந்துட்டேன். நான் செய்தது தப்புதான். என்னை மன்னிச்சுடுங்க” என்று அவள் கூற, அவன் இதழ்கடையோரம் புன்னகை அரும்பியது.

அவளிடம் விளையாடிப் பார்க்க சொல்லி மனம் கட்டளையிட, “இங்கே பாரு பேச்சை மாத்தாதே! உன்னைத் தேடி வராமல் போயிருந்தால், நிரந்தரமாகவே பிரிந்து கண்காணாத தேசத்திற்கு போயிருப்பே இல்ல” என்ற கணவனின் கோபம் உணர்ந்து, சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டு தலை குனிந்தாள்.

சட்டென்று அவள் பக்கம் திரும்பிய விஷ்ணு, “ஆறுமாசம் நம்ம வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா? உன்னைக் கொல்ல துணிந்தேனே, அதுக்கெல்லாம் எனக்கு தண்டனை கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறியா?” என்று அவன் அடுக்கிய கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென்று விழித்தாள்.

“அதுதான் நடக்கல இல்ல” என்று அவள் வேகமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க, சட்டென்று எழுந்து வந்து அவளின் தலையில் செல்லமாகக் கொட்டினான்.

அவள் வலிதாங்க முடியாமல் அலறிட, “இதுவெல்லாம் நல்லா பேசு, நீ அனாதைன்னு சொன்னால் நான் அனாதை ஆகிட்டேனா? ஏண்டி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்துற?” என்று கேட்கும்போது அவனையும் அறியாமல் விழியோரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அதுவரை பிடிவாதமாக இருந்தவளின் இரும்பு இதயம் மெல்ல உருகிவிட, இரண்டே எட்டில் கணவனை நெருங்கிய மனைவியை அவன் இமைக்காமல் நோக்கினான். தன்னவனின் வருத்தத்தை போக்கிவிடும் நோக்கத்துடன், “இனிமேல் உங்களைவிட்டு என்றும் பிரிய மாட்டேன்” என்றவள் அவனது மார்பினில் முகம் புதைத்தாள்.

ஒரு விரலால் முகத்தை நிமிர்த்தி, “பொண்ணுங்களுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்க, அவளும் ஒப்புதலாக தலையாட்டியவளை இரு கரங்களில் ஏந்தியவன் படுக்கையை நோக்கி நகர்ந்தான்.

அவனது பார்வை மாற்றத்தை உணர்ந்து, “ஏன் திடீரென்று கேட்கிறீங்க?” என்று அவள் வெக்கத்துடன் கேட்க, அவளைப் படுக்கையில் கிடைத்துவிட்டு அவளின் மீது பரவிப் படர்ந்தான்.

“அப்பாவுக்கு மட்டும் சப்போர்ட் பண்ற மாதிரி ஒரு பெண் குழந்தையைப் பெத்துக்கலாம்னு தான்” என்றவன் அவளின் இதழ் தேடி குனிந்தான். மெல்ல அவன் விரல்கள் பாவை என்ற வீணையை மீட்ட தொடங்கிட, அவன் கரங்களில் தன்னைத் தொலைத்தாள்.

இருவருக்குமான வாக்குவாதங்கள் முடிவிற்கு வர, இனிமையான இல்லறம் அழகாக அரங்கேறியது. மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்திட, அவள் வேலையை ரிஸைன் செய்துவிட்டு மனைவியுடன் கோவை நோக்கிப் பயணித்தனர்,

இருவரும் சேர்ந்து வரும் தகவல் கிடைக்க விஷ்ணுவின் வீடே திருவிழா கோலம் பூண்டது. அவர்களின் கார் வாசலில் வந்து நிற்க, “அம்மா அண்ணா வந்தாச்சு” என்ற கீதாவின் குரல்கேட்டு, மற்றவர்களும் வாசலுக்கு வந்தனர்.

அவள் வளர்ந்த ராஜூவும், நந்துவும் வந்து அவளின் சேலையைப் பிடித்து இழுத்து சேட்டை செய்ய, அவர்களை சமாளித்தாள். சகாதேவன் – காதம்பரி, சக்ரபாணி – கஸ்தூரி, கஜேந்திரன் – மனோகரி மற்றும் அபியுக்தன் – கீதாஞ்சலி, கார்த்திகேயன் – விக்ரம் என்று அனைவரும் நிற்பதைக் கண்டு அவள் முகம் மலர்ந்தது.

அவர்களைப் பார்த்தும் குற்றஉணர்வு தலைத்தூக்கிட, ‘என்னிடம் யாருமே பேச மாட்டாங்க என்பதை எப்படி மறந்தேன்?’ என்று யோசிக்கும்போது இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்த கீதாஞ்சலி வயிறு மேடிட்டு இருக்க, “எத்தனை மாதம்?” என்று மிருணாளினி பார்வையால் வினாவிட, அதுக்கு பதில் சொல்லாமல் சென்றாள்.

“அண்ணா” என்று அவள் அபியை நெருங்கிட, அவன் கோபமாக முகத்தைத் திருப்ப, கார்த்திகேயன் அருகே செல்லவே மனம் பிசைந்தது. பெற்றவர்களின் பார்வையில் தெரிந்த குற்றச்சாட்டில் கண்கள் கலங்கிட, தன்னவளின் கரங்களை இறுக்கமாக பிடித்தான்.

விக்ரம் அங்கே இருப்பதைக் கண்டு, “நீ என்னடா இங்கே இருக்கிற?” என்று அவள் புரியாமல் கேட்க, “நம்ம கார்த்திக்கும் – பிரியதர்ஷினிக்கும் கல்யாணம் அதுதான். ஒரு வாரத்திற்கு முன்னாடியே வந்துட்டேன்” என்று உண்மைப் போட்டு உடைத்தான்.

சட்டென்று நிமிர்ந்து கணவனை நோக்கிய மிருணாவின் விழிகள் கலங்கிட, “இவங்க யாருமே என்னுடன் பேச மாட்டங்க, அதுதான் அவனோட திருமணத்தை என்னிடம் சொல்லல. ஆனால் நீங்ககூட கார்த்தி திருமணத்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவே இல்ல” என்றாள்.

சட்டென்று மகளை நெருங்கிய சக்ரபாணி, “இதுக்கெல்லாம் கோபம் வருது இல்ல, எங்களை எல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரம் போனபோது, எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்?” என்று மகளின் காதைப் பிடித்து செல்லமாக திருகினார்.

“நான் செய்தது தவறுதான் அப்பா, இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்” என்ற மகளின் தலையை வருடிவிட்ட சக்ரபாணி விழிகள் கலங்கிட, தன் மகளைப் பார்த்து தாயுள்ளம் பூரித்தது.

மற்றவர்களிடம் பார்வையால் அவள் மன்னிப்பு கேட்க, “மும்பை வந்து உன்னை உதைக்கும் அளவுக்கு கோபம் இருந்தது. ஆனால் சில நேரங்களில் பிரிவு என்பது, உறவுகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும் என்பதால் அமைதியாக இருந்துட்டோம்” என்று அபியுக்தன் விளக்கம் கொடுத்தான்.

கடைசியாக, “உங்கமேல் கோபமெல்லாம் இல்ல அண்ணி, என்ன எங்களிடம் வேலை கிடைத்த விஷயத்தை மறைத்துவிட்டு எங்கோ போயிட்டீங்க என்று கொஞ்சம் வருத்தம்” என்ற கார்த்திகேயன், கீதாவின் கரங்களைக் கெட்டியாக பற்றிகொண்டாள்.

“சரி வாங்க வீட்டுக்குள் போய் பேசலாம்” என்ற காதம்பரியின் பின்னோடு மற்றவர்கள் சென்றுவிட, கணவனின் கரத்தைப் பிடித்துகொண்டு வீட்டினுள் நுழைந்தாள். வீடு முழுவதும் இருந்த சொந்தபந்தங்களின் முகத்தில் இருந்த நிறைவைக் கண்டு அவள் விழிகள் சந்தோசத்தில் கலங்கியது.

சகாதேவன் சக்ரபாணியுடன் இயல்பாக பேசுவதும், அதுக்கு கணவன் குறும்புடன் பதில் சொல்வதை வெகுவாக ரசித்த மருமகளின் அருகே அந்த காதம்பரி, “முதலில் போய் குளிச்சிட்டு வாங்க” என்று அவர்களை மேலே அனுப்பினார்.

தங்களின் அறைக்குள் நுழைந்தவுடன் மனைவியை இழுத்து அணைத்தவன், “நான் ரொம்பவே சந்தோசமாக இருக்கேன் மிருணா” என்றவுடன், “நானும்தான்” என்ற மனைவியின் இதழ் தேடிக் குனிந்தான் விஷ்ணு.

அடுத்த ஒரு வாரத்தில் கார்த்திகேயன் - பிரியதர்ஷினி திருமணம் நடந்து முடிய, அன்று காதம்பரி திருமணத்தில் சிதறிய குடும்பம், இன்று ஒரே குடும்பமாக மேடையில் நின்றனர். அங்கிருந்த போட்டோ கிராஃபர் அவர்களை இணைந்து நிற்க சொல்ல, மொத்த குடும்பத்துடன் இணைந்து நின்றனர்.

விஷ்ணுவரதனை சுற்றி மொத்த குடும்பமும் நின்றிருக்க, தன்னவளின் கரங்களை காதலோடு பிடிக்க, "ஐ லவ் யூ விஷ்ணு மாமா" என்று உதட்டை அசைத்து குறும்புடன் கண்சிமிட்டி சிரித்த காட்சியை அப்படியே உள்வாங்கியது புகைப்பட கருவி

இரும்பு கனலில் வெந்து உருகுவதுபோல, வஞ்சம் வைத்த இதயங்களும் காதல் வந்தால் பனிமலைப்போல மாறிவிடும். ஒருவர்மீது மற்றொருவர் காட்டும் தூய்மையான அன்பு, பல போராட்டத்திற்கு பிறகும் அவர்களை இணைத்துவிடும். இருவருக்கும் இடையே உண்டான புரிதல் காலம் கடந்தபிறகும், காதலோடு அவர்களை இணைத்திருக்கிறது.

இதேபோல வாழ்க்கையில் இணை பிரியாமல் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
 




Last edited by a moderator:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Superb ending ma....


Karthi priyadharshini marriage kuda kamichu irukkalam la🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
அப்படியா சரிக்கா காட்டி விடலாம். நன்றி. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
Happy new year sis....
பழைய எண்ணங்களை
புதைத்து விட்டு
புத்தம் புதிதாய்
புதிய ஆண்டில்
புது துவக்கம் அவர்கள் வாழ்வில்....
வாழ்த்துவோம் நாமும்....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Happy new year sis....
பழைய எண்ணங்களை
புதைத்து விட்டு
புத்தம் புதிதாய்
புதிய ஆண்டில்
புது துவக்கம் அவர்கள் வாழ்வில்....
வாழ்த்துவோம் நாமும்....
ஹாப்பி நியூ இயர்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
அப்படியா சரிக்கா காட்டி விடலாம். நன்றி. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Happy New Year
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top