• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ? !- 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

இரும்பு இதயம் உருகாதோ?! - 9பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருப்பது நான் உங்கள் அனாமிகா 12. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள். உங்க கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.

அத்தியாயம் – 9

மாலை வீடு திரும்பிய பிள்ளைகளிடம் விசாரணையில் இறங்கிய மகனை விநோதமாக பார்த்தபடி ஹாலுக்கு வந்தாள் காதம்பரி. தன்னுடைய அண்ணனிடம் கையும் களவுமாக மாட்டிய பயமின்றி நின்றவளைப் பார்த்து, ‘என்ன தில்லாலங்கடி வேலை பார்த்து வச்சே’ என்று பார்வையில் வினாவினான் கார்த்தி.

“உன்னோட அறையில் தான் ரூம் கீயை வைத்தேன், நீங்க அதைப் பார்க்கவே இல்லையா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்திய கீதாவைப் பார்த்து, ‘அடிப்பாவி!’ என்றான் கார்த்திகேயன்.

விஷ்ணுவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் நின்ற காதம்பரி, “இங்கே என்ன நடக்குது?” என்று பொதுவாகக் கேட்க, காலை தான் செய்த செயலை ஒன்றுவிடாமல் தாயிடம் ஒப்பித்தாள் மகள்.

“அடிப்பாவி ஒரு பெண்ணை உள்ளே வைத்து பூட்டிட்டு காலேஜ் போயிட்டு வந்து இருக்கிறாயே? உனக்கு எல்லாம் என்ன நெஞ்சழுத்தம்!” என்று மகளைத் திட்டியபடியே மாடியேறிய தாயின் பின்னோடு சென்றான் கார்த்திகேயன்.

எந்தவிதமான உணர்வையும் வெளிபடுத்தாமல் நின்றிருந்த அண்ணனைப் பார்த்தவளிடம், “நீ வைத்த இடத்தில் தானே சாவி இருக்கும், அதை எடுத்து அம்மாவின் கையில் கொடு” என்றவனின் உதடுகளில் புன்னகை அரும்பிட, அவனின் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வன்மம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி வேகமாக படியேறிச் சென்றாள் கீதா.

விஷ்ணுவின் படுக்கையறைக்குள் நுழைந்த கீதா தலையணைக்கு அடியில் சாவியைத் தேட, ‘நான் உன்னோட அண்ணன்!’ என்ற துண்டுச்சீட்டைக் கண்டு அதிர்ந்தாள்.

“அம்மா சாவியை இங்கேதான் வைத்தேன்” என்றவளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

“இங்கேதான் என்றால் எங்கே?” என்ற கார்த்திகேயன் அங்கிருந்த மற்ற இடங்களில் அவசரமாக தேட, தன்னுடைய மகளைத் திட்டித்தீர்க்க தொடங்கினார் காதம்பரி.

“நான் வேணும்னு எதுவும் பண்ணலம்மா” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருக்கியது. இங்கே இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க, தன்னுடைய பைக் சாவியை எடுத்துகொண்டு வெளியே கிளம்பிச் சென்றான் விஷ்ணு.

ஒரு அமைதியான இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கியவன், ‘எனக்கு பின்னே பிறந்தது எல்லாம் இந்தளவுக்கு யோசிக்குது!’ என்றவன் மதியம் நடந்ததை நினைத்தான். கீதாவின் அறைக்கதவு பூட்டி இருப்பது கண்டு ஆரம்பத்தில் கோபபட்டாலும், தன்னுடைய தங்கைக்கு தன்மீது இருக்கும் பயம் உணர்ந்தான்.

‘கீதா இப்படி செய்யும் ஆளில்லையே’ என்றவனின் கண்ணில் அந்த துண்டுச்சீட்டு விழுந்தது.

அதை எடுத்துப் பார்க்க, ‘உன்னிடமிருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கல அண்ணா. என் அறையின் சாவி உன் தலையணை கீழே இருக்கு’ என்ற தகவலையும் எழுதியிருந்தாள்.

அவள் சொன்ன இடத்தில் சாவியிருக்க, அதை எடுத்துகொண்டு கீதாவின் அறைக்குச் சென்றான். விஷ்ணு கதவைத் திறந்து உள்ளே நுழைய, மிருணாளினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

தன்னுடைய தங்கையின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட்டு, எந்தவிதமான கவலையுமின்றி உறங்கும் மனைவியைப் பார்த்து அவனது கோபம் அதிகரித்தது. மெல்ல அவளை நெருங்கியவன் தோளைத் தொட, அவளது உடல் நெருப்பாகக் கொதிப்பதை உணர்ந்தான்.

‘இவளை இப்படியே விட்டால் நாளை என்மேல் பயமின்றி போய்விடும்’ என்ற எண்ணத்துடன் திரும்பியவனின் கண்ணில் ஏசி ரிமோட் விழுந்தது. உடனே அதை கையில் எடுத்தவன் ஏசியின் அளவினை அதிகரித்து கதவைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.

திடீரென்று கேட்ட ஹாரன் சத்தத்தில் தன்னிலைக்கு மீண்ட விஷ்ணு, தன்னுடைய கை கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு வீடு நோக்கி பயணித்தான். நொடிகள் நிமிடங்களாக கரைந்து செல்ல அந்த சாவியை மூவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சட்டென்று சுதாரித்த கார்த்திகேயன், ‘அண்ணா சாவியை எடுத்துப்போய் இருப்பானோ?’ என்ற எண்ணத்தில் செல்லை எடுத்து விஷ்ணுவிற்கு அழைத்தான்.

அவன் அலைபேசி சிணுங்கும் ஓசைக் காதில் விழ,’இவன் இதைக்கூட எடுத்துட்டுப் போகல’ என்றவனின் நெஞ்சினில் அந்த சிந்தனை உருவானது.

“இனிமேலும் நேரம் கடத்த முடியாதும்மா. அண்ணிக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரொம்ப டேஞ்சர். அந்த அறையின் கதவோட டூப்ளிகேட் சாவியும் நம்மகிட்ட இல்லாததால், இப்போ கதவை உடைப்பதைத் தவிர வேற ஆப்ஷனே இல்ல” கார்த்திகேயன் வேகமாக சிந்தித்து அந்த பிரச்சனைக்கான தீர்வை கூறினான்.

தன்னுடைய சின்ன மகனை டூல்ஸ் எடுத்துவர சொல்லி கீழே அனுப்பிவிட்டு திரும்ப, இவை அனைத்தும் தன்னால்தான் என்ற எண்ணத்தில் கீதாஞ்சலி வாய்விட்டு கதறிய மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று அவருக்கு சத்தியமாக புரியவில்லை.

மெல்ல மகளின் தலையை வருடிய காதம்பரியின் இடையை இரு கரங்களால் வளைத்து வயிற்றில் முகம் புதைத்தவள், “நேற்று இரவு அண்ணா அண்ணியை ரொம்பவே துன்புறித்து இருந்தான். அவங்க உதடுகள் கிழிந்து அப்புறம் உடம்புகளில் ஒரு இடமில்லாமல் நகக்காயம் பதிந்து இருந்தது” என்றவள் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் திகைத்தார்.

தன்னுடைய மகன் இந்த செயலை நினைத்து மனம் பதறிட, “விஷ்ணு அண்ணாவிற்கு தெரிந்தால் அடித்துவிடும் என்று சாவியை இங்கே வச்சிட்டு போனேன்” என்றவள் உண்மையைக் கூறும்போது தான், தன்னுடைய முயற்சியில் அறையின் பூட்டை உடைத்துவிட்டான் கார்த்திகேயன்.

மூவரும் பதட்டத்துடன் அறைக்குள் நுழைய, அந்த அறையினுள் ஏசி அதிகமாக வைக்கபட்டிருந்தது. சட்டென்று ரிமோட்டைத் தேடி எடுத்து அதை ஆப் செய்த கீதா, “அண்ணி” என்ற அழைப்புடன் மிருணாளினியைத் தொட சென்றாள்.

ஏற்கனவே ஜுரம் வந்திருந்த பெண்ணிற்கு குளிர் சேராததால் உடம்பு படுக்கையில் தூக்கிப்போட்டது. அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க, “இப்பவே அண்ணியை ஹாஸ்பிட்டலில் கொண்டுபோய் சேர்ப்பதுதான் நல்லது” என்றவன் வேகமாக கீழே சென்றனர்.

தாயும் – மகளும் ஒன்றிணைந்து மிருணாவைத் தூக்கிக்கொண்டு வெளியே செல்ல திரும்பியபோது, “பரவால்ல சாவியை எதிர்ப்பார்க்காமல் பூட்டையே உடைச்சிட்டீங்க” என்ற விஷ்ணுவின் குரல்.

“படுபாவி கட்டிட்டு வந்த மறுநாளே அந்த பெண்ணைக் கொல்லும் அளவிற்கு சென்றிருக்கிற? நீயெல்லாம் மனுஷனா?” என்றவர் அவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தார்.

அதற்குள் அங்கே வந்த கார்த்திகேயன், “அம்மா அண்ணாவை அப்புறம் வந்து அடிக்கலாம்! இப்போ நமக்கு அண்ணியோட உயிர்தான் முக்கியம்” என்றவன் மிருனாவைத் தூக்கிச் செல்ல நினைக்க, அவனின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் விஷ்ணு.

தன்னுடைய அண்ணனிடம் அரை வாங்கியவனின் கண்கள் கலங்கிச் சிவக்க, “அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகக்கூடாது” என்றான் முடிவாக.

அவனது விழிகளில் தெரிந்த வன்மம் கண்ட காதம்பரி, “ஐயோ! இதயம் இருக்கும் இடத்தில் உனக்கு இருதயத்தை வைத்து படைத்து விட்டானா அந்த ஆண்டவன்” என்றவர் விழியிரண்டும் கலங்கிட, கார்த்திகேயன் – கீதாஞ்சலி இருவரும் தவிப்புடன் அண்ணனின் முகத்தை ஏறிட்டனர்.

“இன்னொரு முறை அவளுக்கு யாராவது உதவி பண்ணினால், இந்த மாதிரி பாவம் பார்த்து விடமாட்டேன். இந்த வீட்டில் எனக்கு எதிராக ஏதாவது செய்யணும்னு நினைத்தால், மிருணாவை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்றவன் தங்கையின் தோளில் சாய்ந்திருந்த மனைவித் தூக்கிக்கொண்டு, தன்னுடைய அறைக்குச் சென்றான்.
 




Last edited by a moderator:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மற்ற மூவரும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல, “நீங்க யாரும் வர வேண்டாம்” என அவர்களைத் தடுத்துவிட்டு, படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு டாக்டருக்கு அழைத்தான்.

கொஞ்சநேரத்தில் அங்கே வந்த மருத்துவர், விஷ்ணுவை வெளியே இருக்க சொல்லிவிட்டு, அவளது உடலை ஆராய்ந்தார். அவளது உடலெங்கும் இருந்த நகக்குறி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அத்துடன் சில இடங்களில் கன்றிச் சிவந்திருக்க கண்டு, ‘இவன் என்ன மிருகமா?’ என்று நினைத்தார்.

அத்துடன் அவனிடம் வாங்கிய அறையில் கன்னம் இரண்டும் சிவந்துபோய் வீங்கிருக்க, மிருணாவின் உதடுகள் கிழிந்து கிடந்தது. காலையில் தலைக்கு குளித்தவள் அப்படியே உறங்கியிருக்க, அவன் அதிகரித்த ஏசியின் அளவினால் ஜுரம் வந்ததை உணர்ந்தார்.

சரியான நேரத்திற்கு டிரீட்மெண்ட் தந்ததால், உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அவளது வயது என்னவென்று யோசித்தபடி அறையைவிட்டு வெளியேறிய பெண் மருத்துவர், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவனைத் தனியே அழைத்துச் சென்றார்.

அவனது முகம் பாறைபோல இறுகிக் கிடக்க, “அவங்களுக்கு என்ன வயசு இருக்கும்?” என்று விசாரிக்க, “பத்தொன்பது” என்றான்.

“உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? உங்களையே நம்பி வாழ வந்த பெண்ணை இந்த அளவிற்கு சித்தரவதை செஞ்சிருக்கீங்க?” என்றவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அதன்பிறகு ஏதோ சொல்ல வந்தவரைத் தடுத்து, “உங்களுக்குத் தேவையான பீஸ்” என்று பணத்தை அவரின் கையில் திணித்து, அவரை அங்கிருந்து செல்லுபடி சைகை செய்தான். அந்த வீட்டைவிட்டு வெளியே வந்த பெண் மருத்துவரிடம், தன்னுடைய மருமகளின் நிலையைக் கேட்டு அறிந்தார் காதம்பரி.

இரவு அவளுக்கு என்ன உணவு தருவது என்று விசாரித்தவரிடம், “நிஜமாவே இவன் உங்க மகன்தானா? அவன் மனசு முழுக்க பழிவெறி. அவன் சித்திரவதை செய்ததால் தான் ஜுரம் வந்திருக்கு” என்றவர் விஷ்ணு கொடுத்த பணத்தை கொடுத்தார்.

“உங்க மகனிடமிருந்து அந்த பெண்ணை பத்திரமாக பார்த்துக்கோங்க. இந்த மாதிரி ஆளுங்க கொலை செய்யக்கூட தயங்க மாட்டாங்க” என்று எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றார்.

அங்கே நடந்த ஏதுமறியாத சகாதேவன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அவரிடம் அங்கே நடந்த அனைத்தையும் கூறிய காதம்பரி, “உங்க மகனைக் கொஞ்சம் கண்டித்து வைங்க” என்றவர் இரவு உணவினைத் தயார் செய்தார்.

ஒரே நாளில் மகன் செய்த வேலையை அவரது மனத்தைக் குளிர வைக்க, விஷ்ணுவைத் தேடி அவனது அறைக்குச் சென்றார்.

அங்கே படுக்கையில் கிடந்த மருமகளின் அருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்து, ‘இவளோட நிலையைக் கண்டு மனம் மாறிவிட்டானா?’ என்ற சிந்தனையுடன் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்.

“இப்போ அவளுக்கு எப்படி இருக்கு?” என்றவர் அக்கறையுடன் விசாரிக்க, அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவனது மனம் இங்கில்லை என்று உணர்ந்த சகாதேவன், “விஷ்ணு” என்ற அழைப்புடன் அங்கே வந்த தந்தையை நிமிர்ந்து பார்த்தான். அவரது விழிகள் இரண்டும் கலங்கிச் சிவந்திருக்க கண்டு, “என்னாச்சு அப்பா” என்றவனின் மனம் பரிதவித்தது.

மற்ற சிந்தனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டே எட்டில் சகாதேவனை நெருங்கிய மகனின் மனதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, “அன்னைக்கு சக்ரபாணியின் மீது என்ன கோபம்னு கேட்டியே கண்ணா! அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றவரின் பார்வை மிருணாளினி மீது படிந்து மீண்டது.

‘அன்று தான் கேட்டபோது சொல்ல மறுத்தவர், இன்று வழிய வந்து சொல்ல என்ன காரணம்?’ விஷ்ணுவின் மனம் தீவிரமான சிந்தனையில் இறங்கியது.

அவனது பார்வையை வைத்தே மனதைப் படித்த சகாதேவன், “அன்னைக்கு சொல்லியிருந்தால் கண்டிப்பாக நீ சக்ரபாணியை கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போயிருப்பே விஷ்ணு! அதுதான் நான் நடந்ததை என் மனதோடு மறைக்க நினைத்தேன். ஆனால் இப்போதுதான் மிருணாளினி இங்கே இருக்கிறாளே...” என்றவரின் குரலில் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தவன், தன்னுடைய உணர்வுகளை வெளிக்காட்டாமல் மறைத்தான்.

“அந்தளவுக்கு அந்த ஆளு என்ன காரியம் செய்தாரு?!” என்றவன் கோபமாகக் கேட்க, “உன்னோட அம்மாவைக் கொன்றதே சக்ரபாணி தான்” என அவனின் தலையில் இடியை இறக்கினார் சகாதேவன்.

அதுவரை அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணுவின் விழிகள் இரண்டும் சிவக்க, “அப்பா” என்றான் அதிர்ச்சியுடன்.

அவனின் தோளில் மெல்ல தட்டி, “ஆமா! இதோ இந்த காதம்பரி என்னோட இரண்டாவது மனைவி. அவளுக்குப் பிறந்த பிள்ளைகள்தான் கார்த்திகேயனும், கீதாஞ்சலியும்!” என்றவர் இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“அப்போ என்னோட அம்மா இவங்க இல்லையா?” என்றவன் கேட்கும்போதே, அவனின் குரல் கரகரத்தது.

தன்னுடைய தாயைக் கொன்றுவிட்டு, அந்த இடத்திற்கு வந்த காதம்பரி மீது விஷ்ணுவிற்கு கோபம் வந்தது. தன்னுடைய மகனின் பரிதவிப்பை உணர்ந்தவரின் இதழ்களில் புன்னகை அரும்பியது. தன்னுடைய மகனின் மனதில் விஷசத்தை விதைக்க இதுவே சரியான தருணம் என்று நினைத்தார்.

அதே சமயம் மிருணாளினியின் உறக்கம் மெல்ல கலைந்தபோதும், கண்ணைத் திறக்க போராடியவளின் காதில் சகாதேவனின் குரல் தெளிவாக விழுந்தது.

“இவளை இங்கே ராணி மாதிரி வாழ வைக்க உன் மாமன் செய்த சதிதான். உன்னையும், என்னையும் விட்டால் உங்க அம்மாவுக்கு வேற உலகமே தெரியாது கண்ணா. அப்படிப்பட்ட பெண்ணை ஏமாற்ற நினைத்த என்னிடமிருந்து நிரந்தரமாக உங்க அம்மாவை பிரித்துவிட்டார் கடவுள்” என்றவர் நீலிக்கண்ணீர் வடிக்க, விஷ்ணுவின் முகம் பாறைபோல இறுகியது.

அவன் உக்கிரமான பார்வைக்கான அர்த்தம் புரிய, “நீ பிறக்கும் வரை சொந்த ஊரில் இருந்தவன், அதுக்குப் பிறகுதான் நல்ல வேலை தேடி ஈரோடு வந்தேன். அங்கே காதம்பரியைப் பார்த்து பாதை மாறியது நான் செய்த மற்றொரு தவறு. கடைசியில் காதம்பரியைக் கரம் பிடித்த கொஞ்சநாளில் உங்கம்மா என்னைத் தேடி பாரியூர் வந்தாள்” என்றார்.

அவர் சொன்னதைக்கேட்டு அதிர்ந்த மிருணாளினி, ‘ஐயோ அவர் பொய் சொல்றாரு மாமா! உங்கப்பா சொல்வதை நம்பாதீங்க’ என்று ஆழ்மனத்தில் சொல்ல, தன் மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணைத் தேடிச் சென்ற தந்தையின்மீது கோபம் வந்தது.

“உங்களுக்கு அம்மாவைவிட இவங்க முக்கியமாக போயிட்டாங்க இல்ல” அவர் சொல்வதை உண்மையா என்று ஆராயாமல், அதை அப்படியே நம்பியது தான் விஷ்ணு செய்த பெரிய பாவமே!

“நான் தவறு செய்தவன் விஷ்ணு. அதுதான் உங்க அம்மாவைப் பிரிந்து தண்டனை அனுபவிக்கிறேன். இங்கே நியாயம் கேட்டு வந்தவளை உங்க மாமா கிணற்றில் பிடித்து தள்ளிவிட்டார். கொஞ்ச நேரத்தில் அவளும் இறந்துவிட, தற்கொலை என்று சொல்லி ஊரையே நம்ப வைத்துவிட்டான் அந்த படுபாவி” என்று தலையில் அடித்துக்கொண்டு கலங்கிய தகப்பனைப் பார்த்து பிள்ளை மனம் ஊமையாய் அழுதது.

கடைசியில், “இந்த விஷயத்தை உன்னிடம் சொல்லக்கூடாது என்று காதம்பரி என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டாள். இதோ இப்போ போய் நீ உண்மையா என்று விசாரித்தால்கூட, நான் சொன்னது அனைத்தும் பொய் என்று சொல்லி சத்தம் பண்ணுவாள் அந்த ராட்சசி” என்றவர் வார்த்தைகள் உக்கிரம் கண்டு திகைத்தான் மகன்.

“இந்த விஷயத்தை காதம்பரியிடம் கேட்காதே! அதே நேரத்தில் அவளும் உன்னைப் பாசமாகத்தான் வளர்த்தாள்” என்று மனைவிக்கு சாதகமாக பேசிய சகாதேவனின் வார்த்தைகள், விஷ்ணுவின் மனதில் விஷத்தை விதைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

தன்னைப் பெற்றவளைக் கொன்றவனின் மகளை மனம்முடித்ததை எண்ணி, ‘உன்னை சும்மா விடமாட்டேன்’ என்றவனின் பார்வை கொலைவெறியுடன் மிருணாளினி மீது வன்மத்துடன் படிந்தது.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ச்சைக், என்ன மனுஷன் இவன் எல்லாம், பெத்த பையன் வாழ்க்கையை விட பழிவெறி அவளோ முக்கியமா😡😡😡😡😡

அடேய் கிரதகா, நீ ஏற்கணவே ஆடுவா இப்ப உன் அப்பன் வேற உடுக்க அடிச்சிட்டு போய் இருக்கான், ஐயோ மிரு நிலமை😳😳😳😳
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
இவன் எல்லாம் மனுஷனே இல்ல...ஒரு பொண்ணா உடாலால
காயப் படுத்தரவன் மிருகம்....எப்படி இவளோ வன்மம் வெச்சுருக்கான்😡

அந்த சாகதேவன் சொல்றா பொய்ய கேட்டு இன்னும் என்ன பண்ணுவானோ
 




Saki B

மண்டலாதிபதி
Joined
Nov 12, 2021
Messages
406
Reaction score
406
Location
Tamilnadu
aiyayo author anti-hero la irunthu serial villain trope ku poitu irukan udane break ai nachaku endru podavum....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top