• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இறப்புக்கு அப்பால் - A World beyond (ரூத் மோன்கொமெரி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நான் ஆர்தர் ஃபோர்டிடம் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "மனிதனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்ததும் ஆனால் உலக விருப்பு வெறுப்புகளால் நாம் மறந்து போனதுமான ஞானமானது எமக்கு இங்கே போதிக்கப்படும். அது ஆதியிலிருந்தே இருக்கும் ஞானமாகும். இந்த உலகுக்குரிய ஆசை அபிலாஷைகள், வெறுப்புகள், காமம் போன்றவற்றைத் தள்ளி வைப்பதன் மூலம் பூதவுடலுக்குரிய வரையறைகளை உயிரோடு இருக்கையிலேயே மீறலாம் என்பதை நாம் அறிவோம்.

இந்த உலக மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றி கொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடிவற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இப்பூவுலக வாழ்வென்பதைப் புரிந்து கொண்டால் மனத்தின் இச்சலனங்களை வெற்றி கொள்வது இலகுவாகும்.

அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவன் தன்னைப் படைத்தவனையே மறக்கும்படி செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.

"இந்தத் தீயசக்திகளானவை சில மத போதகர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீயஅலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மை இல்லாமலும் இருக்கலாம்.

ஏனெனில் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். அதற்குப் போதுமான அளவு நல்ல அலைகளானது உருவாக்கப்படல் வேண்டும். சைத்தான் என்ற ஒன்று உள்ளது. ஆனால் அது நாம் நினைப்பது போல இல்லை.

மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேகரிக்கப்பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீமைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால் ஒவ்வொரு தலைமுறையும் அதனது தீயசெயல்களால் இந்தத் தீயசக்திக்கு உரம் போட்டு அதன் மூலம் உருவான அந்தத் தீயசக்தியே சைத்தானென நாம் எண்ணுவதாகும்.

சைத்தான் என்பது ஒரு நபரல்ல. எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செய்கையாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ அவ்வாறே இந்தத் தீயசக்தி ஒவ்வொரு தீயசெய்கையாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்தி வாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். ஆரம்பத்தில் ஒரு சொல் இருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது.

நிச்சயமாக அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைக்கத் தொடங்கினர். சைத்தானைக் இறைவன் படைக்கவில்லை.

மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் தீய குணங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும் செயல்களினாலும் உயிரூட்டிக் கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களே என்பதனை நாம் உணரவேண்டும்.

ஒவ்வொரு கெட்ட சிந்தனையும் செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும் செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறியதாகிக் கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமெனில் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிறைந்திருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிறைந்திருக்கும்."

விலங்குகளுக்கும் கூட இறப்பில்லையா என அறியவிரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதாவதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதை விளக்கப் போதுமானது. இந்த உண்மையைச் சரிவரப் புரிந்து கொள்வோமெனில் ஏன் தேவையற்ற விஷயமென்று ஒன்றுமில்லை எனப் புரிந்து கொள்ளமுடியும்.

ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூட்டுப்புழு வண்ணாத்திப் பூச்சியாய் மாறிப் பின் அதன் ஆத்மா வேறொரு நிலைக்கு மாறியவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப்பொருள்களுக்குத் திரும்பும்.

ஆத்மா என்றும் மாறாது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையால் அடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது. காரில் அடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதேதான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப் போலவே அழிவற்றதாகையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும்.

இது ஒரு மாறாத நியதியாகும்.

நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் ஒரு உண்மையான செல்லப்பிராணி (நாய்போல) பூவுலகில் மிக மிக முன்னேறினால் அது மீண்டும் பூவுலகிற்குத் திரும்ப வேண்டியிருக்காது. ஆனால் மேலுலகிலும் அது நாயாகவே இருக்கும். தனது முழு வாழ்க்கையையும் மற்றவருக்கு உதவக்கூடியதாகவும் அவர்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதான ஒரு அன்பான ஆத்மாவாக இருப்பதிலும் பார்க்க உயர்வான நிலை தான் வேறு என்ன?

தன்னலம் கருதாது எப்போதும் எஜமானனின் நலனை முன்னே வைத்ததனால் அந்த நாயானது கடவுளின் பார்வையில் பூரணமாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சிறந்ததொரு உதாரணமென்று பார்த்தாயா? நாமும் எப்பொழுதும் எம்முடைய நலனைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல் ஏனையோரின் நலனைப் பற்றியும் கருத்தில் கொண்டோமாயின் பூரணமானவர்கள் ஆவோம். நாம் எந்த விதமான பிறவி எடுத்திருந்தாலும் எங்கள் நலனிலும் பார்க்க மற்றையோரின் நலனைக் கருத்தில் கொண்டால் முன்னேறலாம்."

அவர் தொடர்ந்து எழுதுகையில், "நாய்களோ, பூனைகளோ அல்லது வேறு எந்த வகையான செல்லப் பிராணிகளோ சில மாறுபட்ட குணாதிசயங்களைக் காட்டும். சில விரும்பத்தக்கதாக இருக்கலாம், சில விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள், பறவைகள் போன்றவற்றின் ஆத்மாவானது மனிதர்களின் ஆத்மாவிலும் பார்க்க வித்தியாசமான இறைசக்தியாகும்.

ஒரு அணுவானது உடைந்து சிற்றணுக்களாக மாறுவதைப் போல் அவை ஆத்மாவின் பகுதிகளாகப் பிரிந்து முழுமையில்லாத பகுதி ஆத்மாக்களாக, சிற்சில விடயங்களை மட்டும் நிறைவேற்றும். முழுமையான மனித ஆத்மாவாக மாறக்கூடிய வல்லமையை இழந்தவைகளாகச் செயற்படும். இந்த மரங்கள், பறவைகள், பாறைகள், மிருகங்கள், காட்டுவிலங்குகள், மண் போன்ற எல்லாவகையான உயிரினங்களுக்கும் ஒரு தனித்தன்மையும் ஆத்மாவும் உள்ளன.

ஆனால் அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைவிட முற்றிலும் வேறுபட்டவை. இவையும் சுவாசிக்கும், உயிர்வாழும் பிறவிகளாகும். இவையும் கடவுளின் ஒரு பகுதியேயாகும். அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைப் போல் மிக முன்னேற்றம் அடையாவிடினும் எம்மைப் படைத்தவனையே என்றும் பிரதிபலிப்பனவாகும். அதாவது மனிதர்களாகிய நாம் எப்படி அன்புக்குக் கட்டுப்படுகிறோமோ அவையும் அதே போலவே கட்டுப்படும்.

அவற்றுக்கு வேறுபட்ட விருப்பு வெறுப்புகளிருக்கும். அவற்றின் விளையாட்டுத் தனங்களும் கோபதாபங்களும் வேறுபட்டவை. அவை தங்களுக்கென அமைந்த செயற்பாடுகைச் செய்து ஒன்றில் நல்லவையாகவோ, கேட்டவையாகவோ அவைகளுக்கென்று அமைந்த தனிப்பட்ட குணநலன்களின் படி வரும். அந்தத் தனிப்பட்ட தன்மைகள் ஆத்மாவின் தன்மைகளாகும்.

அதனால் தான் சில வளரும் தாவரங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாகத் தெரியும்; சில என்னதான் அன்புடன் பராமரித்தாலும் ஒத்துழைக்கமாட்டா. சில மனிதர்களும் அவ்வாறே நடப்பதைக் கண்டிருப்பாயென நினைக்கிறேன். சிலர் சற்றும் ஏனையவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், கடமைகளை மறந்து திரிவார்கள். சிலர் மற்றையவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்கள். மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.

"இங்கே ஞானாலயத்தில் ஒவ்வொரு உயிரினத்துக்காகவும் செய்யப்படும் பிரார்த்தனைகளின் பலன்களைப் பற்றி அறிகிறோம். அவை உடல் உபாதைகளைப் போக்கும் சிகிச்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளாயும் இருக்கலாம். தாவரங்கள், பிராணிகள், கற்பாறைகள், பூச்சிபுழுக்கள் போன்ற எம்மால் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, சுவைக்கக்கூடிய எல்லாப்பொருட்களும் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கக் கூடியன என நாமறிகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் தனது படைப்புகளில் நிறைந்திருப்பதோடு அவைகளின் முன்னேற்றத்துக்கான உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறான். மரங்களிடையே உலவும் காற்றின் குரலும் பறவைகளின் ஒலியும் பூச்சியினங்களின் ஒலியும் மனிதனின் கூக்குரலும் இறைவனுக்கு ஒரே விதமாகவே கேட்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமாக இறைவனுடன் தொடர்பு கொள்ளும். இறைவன் எல்லா விதமான முனகல், ரீங்காரம், கூக்குரல் போன்ற எல்லாவற்றுக்கும் (அது இறைவனுக்கு விடும் அழைப்போ அல்லது ஒன்றுடனொன்று தொடர்பு கொள்ளும் ஒலியோ) செவி சாய்ப்பார்.

இதை ஒரு கற்பனைக் கதையென்று எண்ணிவிடாதே. இவையெல்லாம் உண்மையே ருத். நாம் எல்லா உயிரினங்களுடனும் (ஆத்ம வடிவிலோ அல்லது பௌதீக வடிவிலோ) தொடர்பு கொள்ளக்கூடியதாக வரும் வரையும் நாம் இறைவனுடன் இரண்டறக் கலக்கக்கூடிய நிலையை அடையமாட்டோம். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை எண்ணிப்பார். பாறைகள், மரங்கள், கற்கள் போன்றவற்றின் குரல்களையும் பூச்சியினங்களினது ரீங்காரங்களையும் அதேபோல எல்லாவகையான உயிர்வகையினதும் ஒலிகளையும் கவனிக்கக் கற்றுக்கொள்.

எம் எல்லோரையும் ஒன்றிணைக்கும், எம் ஒவ்வொருவரையும் இறைவனின் வடிவங்களாக்கும் அந்த இணைப்பின் மூலம் அவற்றுடன் தொடர்பு கொண்டு அவற்றின் ரகசியங்களை அறி. நாம் சடப்பொருட்களென்று எண்ணுபவை எல்லாம் எம்மைப் போன்றவையே. ஒவ்வொன்றுக்கும் அதனதன் வழியில் உயிர் வாழ்க்கைகள் உள்ளன. கற்பாறைகளும் பறவைகள், வண்டினங்கள், மனிதர்கள் போலவே இறைவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு உயிரினத்துக்கும் இறைவனின் மாபெரும் திட்டத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய குழப்பத்துடன் நான் "எமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சியினங்களை அழிக்கலாமா" எனக்கேட்டேன். அதற்கு அவர், "பூச்சி புழுக்களானவை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விலகி வந்தால் அவை மனிதனால் அழிக்கப்படுவார்கள். எல்லா உயிரினத்துக்கும் இப்பூவுலகில் இடம் வேண்டும். டைனசோர் வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான விலங்குகள் ஏனைய விலங்குகள், பறவைகள், மனிதரின் இடங்களை அபகரிக்கப் பார்த்ததனால் பூமியின் பரப்பிலிருந்து மறைந்து விட்டன.

இது மனிதனுக்கு ஒரு பாடமாக அமையட்டும். மனிதனும் பல்கிப்பெருகி, அழிவுப்பாதையில் சென்று ஏனைய உயிரினங்களின் அழிவுக்கும் காரணமானான் எனில் மனிதகுலமும் அழிவை சந்திக்க வேண்டிவரும். நீ குறிப்பிட்ட இந்தப் பூச்சியினங்களும் பல்கிப்பெருகி மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தால் அவையும் அழிய வேண்டியவையே.

இப்பூவுலகில் எமக்கென உள்ள இடத்தை மீறி நாம் அமைதியைக் குலைப்போமாயின் நாம் இங்கிருந்து அகற்றப்படுவோம். ஆனால் ஆன்மீக ரீதியில் உண்மையில் ஒன்றுமே எப்போதும் அழிவதில்லை.

பூச்சிபுழுக்களையும் டைனசோர்களையும் மனிதனுடன் ஒப்பிட்டதனை எண்ணி நான் வியந்தேன்: மனிதன் இந்தப் பிரபஞ்சத்தையே குப்பை மேடாக்குபவனே. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் நீரோடை, ஏரி, குளங்களை அசுத்தமாக்குகிறான்.

தூய்மையாக இருந்த காற்றை அசுத்தப்படுத்திவிட்டான். கனிப்பொருள் நிறைந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கர்களாகக் காங்கிரீட்டைப் பாவி மூடிவிட்டான். காடுகளை அழிக்கின்றான். இவற்றின் மூலம் பழைய அழிந்துபோன விலங்குகள் போல் நாமும் எமது அழிவை எழுதிச்செல்கிறோமா?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஏழாம் அத்தியாயம்

குறிப்பிட்ட சிலரைப் பற்றி.. (Specific Cases)

ஆர்தர் ஃபோர்ட் எனது டைப்ரைட்டரைக் காலை வேளைகளில் சில மணி நேரம் ஆக்கிரமிக்கத் தொடங்கியதிலிருந்து சுமார் பத்து வாரங்களின் பின்னர் ஒருநாள் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த திரு, திருமதி வில்ஃபிரட். ஏ. செக்ரைஸ்ட் (Wilfred A. Sechrist) மெக்சிகோவில் உள்ள குவேர்ணவாகா நகரிலிருக்கும் எமது வீட்டிற்கு வந்தார்கள்.

திருமதி எல்ஸி செக்ரைஸ்ட் கனவுகளின் அர்த்தங்கள் பற்றியும் மற்றும் எம் அறிவுக்கப்பாற்பட்ட சூட்சுமமான விஷயங்கள் பற்றியும் மிகவும் ஸ்திரமான எண்ணங்கள் கொண்டவர்.

அவர் ஆர்தர் எழுதியுள்ளவற்றை ஆவலுடன் படித்து விட்டுச் சில குறிப்பிட்ட நபர்களைப் பற்றி அவர்கள் இறப்பு என்ற வாயிலின் ஊடாக மறு உலகத்தினுள் பிரவேசித்த பிற்பாடு அவர்களின் நிலைமைகளை அறியலாமா எனக்கேட்டார். ஆர்தர் மகிழ்வுடன் சம்மதித்தார். மறுநாள் காலை அவர் பின் வருமாறு ஆரம்பித்தார்:

"இன்று நான் கென்னடி சகோதரர்கள் பற்றிச் சொல்லப்போகிறேன். ஜாக் (Jack) சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். மிக முக்கியமாக அவர் இஸ்ரேலியர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் கொண்டு வருவதற்கு முயல்கிறார்.

பாபி (Bobby) தங்களது சிவில் உரிமைகளுக்காகப் பொறுமையிழந்து போராடுபவர்களை நிலைமையைச் சுமூகமாக்குவதன் மூலம் சாந்தப்படுத்த முயல்கிறார். 'ப்ளக் பாந்தேஸ்' (Black Panthers) போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தீவிரமான சில தலைவர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக உள்ளதென அவர் சொல்கிறார்.

அவர்களின் மன நிலையில் தன்னால் சில மாற்றங்களை உண்டு பண்ண இயல்கிறது என்கிறார். அப்படிப்பட்ட இயக்கங்கள் தலைவர்களைக் கடத்துவது, பழிக்குப்பழி வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவனவாகும். அப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களது இளமை நிறைந்த அழகான பூதவுடலை நீத்து விட்டு ஆத்மவடிவில் இந்த மேலுலகுக்கு வருகையில் அங்கே அவர்களின் அந்த நடவடிக்கைகளைப் பற்றி இங்கே பேசலாம்.

"ஜாக் இறந்தவுடன் உடனடியாக மேலுலகில் விழித்துக்கொண்டார். சிலர் போல அவர் மயக்கநிலையில் இருக்கவில்லை. தான் தலைமை தாங்கிய நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் லிண்டனுக்கு (Lyndon) நிலைமைகளைச் சுமூகமாக்குவதற்கும் சட்டங்கள் சிலவற்றைப் பிரச்சினையேதும் இன்றிக் கொண்டு வருவதற்கும் உதவுகிறார்.

அவர் பூதவுடலுடன் இருக்கையில் பல விடயங்களைச் சரிவர நிறைவேற்றாமல் இருந்தாலும் இப்போதாவது அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற விரும்பினார். வியட்நாம் போரில் எல். பி. ஜேயின் (LBJ) அதிகமான தலையீடானது ஒரு மாபெரும் பிழையென அவர் உணர்ந்தாலும் தான் லிண்டனுக்கு உதவாவிட்டால் அரசியலில் மாபெரும் குழப்பங்கள் வரலாமென அஞ்சினார்.

அவர் தலைவராயிருந்தபோது இவ்வாறான நடவடிக்கையைச் செய்திருந்தாலும் இப்படிப் பெரிய அளவிலான தலையீட்டைச் செய்வதற்கு அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. அந்தப் போர்பூமியில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு அவர் விரும்பினார். அத்துடன் அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே சமாதானத்தை உண்டாக்குவதில் தனது முயற்சிகளை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். ஏனெனில் அந்த ஆதிகாலத்து எதிரிகளின் இதயங்களில் சகோதர பாசங்களை உண்டு பண்ண முடியாவிடின் எதிர்காலத்தில் அப்புண்ணிய பூமியில் விபரீதமாக ஏதாவது நடக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக உணர்கிறார்.

வியட்நாம் போரில் சண்டையிட்டு மடிபவர்களைக் காண அவர் இதயம் நொந்து போனாலும் அப்போர் நீண்ட நாட்களுக்குத் தொடராது என்பதை உணர்கிறார். பாலஸ்தீனத்தில் இருக்கும் வெறுப்புணர்வானது ஆதிகாலத்திலிருந்து வருவதால் இஸ்ரேலியர்களுக்கும் அயல் நாடுகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வுக்கு இப்போ வராவிட்டால் அங்கு ஒரு மிகப்பெரிய பேரழிவு நடக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக அஞ்சுகிறார்.

"பாபி, சிவிலுரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தில் தனது இதயத்தை விட்டுச் சென்றார். மிக வலிமை வாய்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் ஆத்திரமுற்றிருப்பவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவர்களின் கோபத்தைத் தணிய வைத்து ஒரு நடுநிலைமை மாநாட்டு மேசையில் அமர வைத்து ஒற்றுமையையும் அதே நேரம் அவர்களின் உரிமையையும் பற்றிப் பேச வைத்தாலன்றி இந்தப் பிரச்சினை தீராதென அவர் உணர்கிறார்.

அவருக்குத் திடீரென்று ஆத்ம உலகில் கண்விழித்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதனால் சகோதரர் ஜாக் அவருக்கு ஆரம்பத்தில் உதவுவதற்கு இருந்த போதிலும் அவர் வலிமையிழந்து காணப்பட்டார். அந்தச் சகோதரர்களிடையே கூடுதலான முற்பிறவித் தொடர்புகள் காணப்படுகின்றன. பற்பல பிறவிகளில் அவர்களிடையே நெருக்கமான பந்தமிருந்து கொண்டு வந்ததால் ஒருவரின்றி மற்றவர் முழுமையாக உணரமாட்டார்.

பிறப்பதற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் படிதான் அவர்கள் அவ்வளவு நெருங்கிய உறவு முறையுள்ள குடும்பத்தில் பிறந்தனர். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை மீண்டும் மற்றையவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினர். அவர்களனைவரும் ஆரம்ப காலத்து இங்கிலாந்தில் ஒரு மிகமகிழ்ச்சியான சூழலில் ஒரு குடும்பமாக இருந்துள்ளனர். அதனால் இனிமேல் பிரிவதில்லை என ஒரு உறுதியான முடிவெடுத்தார்கள். இப்படியாக எடுக்கப்படும் முடிவுகளெல்லாம் ஒரே நிறைவேறுவதில்லை.

ஆனால் இம்முறை பூமி நேரப்படி இருபதாம் நூற்றாண்டில் மீண்டுமொரு முறை சரியான ஊடகம் மூலமாக எல்லோரும் மறுமுறை ஒரே ரத்தசம்பந்தமுள்ள குடும்பமாக வரக்கூடியதாக இருந்தது. ஏதெல் (Ethel) கென்னடியும் அந்த ஆரம்பக் குடும்பத்தில் ஒருவராக இருந்திருக்கிறார். ஆனால் இம்முறை ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமற் போனாலும் பூவுலகில் பாபியும் (Bobby) அவளும் மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்பதென்பது கேள்விக்கிடமே இல்லாத ஒரு விடயம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களிருவரும் நெருக்கமாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஈருடலும் ஓருயிரும் போல. ஜாக்கி கென்னடி ஒனாசிஸ் (Jackie Kennedy Onassis) முற்பிறவிகளில் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல - அவர் இங்கிலாந்தில் இவர்களறிந்த ஒரு அரசியாவிருந்தார். எனவே அவரை கௌரவிக்க இயலுமாகவும் அதே சமயத்தில் அவரைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருந்தது."

சிலநாட்களின் பின்னர் ஃபோர்ட் மீண்டும் கென்னடி குடும்பத்தைப் பற்றி ஆரம்பித்தார். அதற்கு முன் அவர் பின்வருமாறு எழுதினார்: நாம் குறிப்பிட்டது போல் பிரார்த்தனையின் சக்தியானது எங்கள் பக்கத்திலும் அதேபோல மனிதனால் இறப்பு என அழைக்கப்படும் திரையின் மறுபக்கமாகிய உங்கள் பக்கத்திலும் முக்கியமானது. எமது அன்புக்குப் பாத்திரமான ஒருவர் பூதவுடலை நீத்துவிட்டு அந்தத் திரையை விலக்கிக் கொண்டு இங்கு வரும் போது கூடுதலாக ஒன்றுமே புரியாதநிலையில் ஏதோ தொலைந்து போனமாதிரியும் கைவிடப்பட்ட நிலையிலும் தான் காணப்படுவார்.

அவரது கடந்து போன வாழ்க்கையில் அவர் சந்தித்த இடையூறுகளிலும் பார்க்க மேலுலக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதென்பது சில சமயங்களில் அதிக சிரமமாக அவருக்கு இருக்கக்கூடும். சொர்க்கமென்ற இடத்தைப்பற்றி நாம் இங்கே காணும் இடத்தைவிட முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்பைப் பலர் கொண்டிருப்பதால் அவர்களின் இந்த இக்கட்டான நிலையை இறைவன் நிச்சயமாக அறிந்திருப்பாரோ எனத் தீவிரமாக அறியத்தலைப்படுவார்கள்.

பூவுலகில் அவரின் உறவினர்களால் அவரின் ஆத்மசாந்திக்காகச் செய்யப்படும் அன்பான பிரார்த்தனைகள் அவரைச் சாந்தப்படுத்தி அவரின் ஆத்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சந்தேகமின்றி இறைவனுக்கு எல்லாப் பிரார்த்தனையும் கேட்கும். இப்போ நானிருக்கும் நிலையிலும் கற்றறிதல், வளர்ச்சியுறல் போன்ற முன்னேற்றங்கள் உண்டு. நாமும் உங்களைப் போலவே முன்னேற்றப் பாதையில் மேல் நோக்கி எம்மைப் படைத்தவனுடன் இரண்டறக் கலக்கும் நாளை எதிர்பார்த்து முன்னேறிக் கொண்டிருப்போம்.

எனவே பிரார்த்தனைகள் மிக முக்கியமானவை. கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதென்பது மிகவும் சரியான வழி. ஏனைய சமயத்தவர்களும் வேறு நம்பிக்கை கொண்டவர்களும் முடிவற்ற வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைந்த ஆத்மாக்களின் மேல் அன்பு கொண்ட அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறையாகும். பூவுலகில் இருந்ததிலும் பார்க்க அதிக அக்கறையுடன் இங்கு நாம் பிரார்த்தனைகள் செய்வோம்.

அதனால் கிட்டத்தட்ட எம்மைப் படைத்தவனின் நிலைக்கேற்ப மாறக்கூடியதாக இருப்பதனால் பூவுலகில் இருந்தபோதிலும் பார்க்கக் கூடுதல் விரைவில் அதனது விளைவுகளை இங்கே நாம் உணரக் கூடியதாக உள்ளது. சில நேரங்களில் இங்கு வரும் ஆத்மாவானது பூவுலகிலிருப்பவர்களின் பிரார்த்தனைகளின் நிமித்தமே விழிக்கக் கூடியதாகவுள்ளது.

கென்னடி சகோதரர்கள் பிரார்த்தனையின் சக்திக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். ஜனாதிபதி கொல்லப்பட்ட போது உடனடியாக எழுந்த பிரம்மாண்டமான பிரார்த்தனைகளின் பலனாக அவர் இங்கே வந்தவுடன் தன்னிலையை மறக்கவேயில்லை. கிட்டத்தட்ட உடனடியாகவே அவர் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறிக்கொண்டார்.

அந்தப் பிரார்த்தனைகள் அவரை முன்னோக்கியும், மேல்நோக்கியும் தள்ளியதால் பேர்க்கேட்டரி (purgatory) என்று அவரது சர்ச்சைச் சேர்ந்த பாதிரிமார் குறிப்பிடும் நிலையை அவர் கடுகளவு நேரம் கூட அனுபவிக்கவில்லை. 'பேர்கேட்டரி' என்னும் நிலையானது ஆத்மாக்கள் தொலைந்து போனவர்கள் போல ஒரு இலக்குமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரியும் நிலையாகும்.

இந்த நிலையானது அவர்களுக்கு அவர்களின் உண்மையான நிலையையும் அதனது புதிய தன்மைகளையும் ஏதாவது ஒரு விஷயமானது உணர்த்தும் வரையும் தொடரும். பாபியின் விஷயத்திலும் கூடப் பிரார்த்தனைகள் பலித்தன. அவர்களின் மூத்த சகோதர் சகிதமாக மனித உரிமைகளுக்காக இவர்கள் போராடியதை வரவேற்றவர்களுடன் இங்கே அவருக்காகக் காத்திருந்த அவரது சகோதரரின் அன்பும் அவருக்குக் கூடுதலாக உதவியது எனலாம்.

நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் ஏனையவர்கள் எனக்கு இந்த விடயங்களைச் சொன்னார்கள். அந்த இரு ஆத்மாக்களும் மனிதகுலத்தின் மாட்சிமையைக் காப்பாற்றப் போராடிய காரணத்தாலும் அவர்கள் நீண்டநாட்கள் சம்சாரசாகரத்தில் கிடந்து உழல வேண்டிய தேவை இல்லாத காரணத்தாலும் இங்கே அவர்கள் வரும் போது கோலாகலமாக வரவேற்கப்பட்டார்கள். உனக்கு நல்லவர்கள் எல்லாம் இளமையிலேயே இறந்து விடுவார்கள் என்ற பழைய பழமொழி ஒன்று நினைவுள்ளதா?

எல்லா ஆத்மாக்களிலுமே நல்ல தன்மை தான் கூடுதலாகக் காணப்படுகிறது. ஆனால் எல்லோரும் இளமையில் இறப்பதில்லை. ஆனால் ஒரு ஆத்மா இப்பூவுலகில் தான் நிறைவேற்ற எண்ணி வந்தவைகளைக் குறைவான காலகட்டத்தில் நிறைவேற்ற முடிவதுடன், வயதான காலத்தில் வரும் தளர்வுகளைத் தவிர்த்தால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.

சில பெருமை வாய்ந்த ஆத்மாக்கள் தங்களது பழம் பெரும் வயது வரையும் வாழ்ந்து இவ்வுலகுக்குப் பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் சில ஆத்மாக்களோ அதிர்ஷ்டவசமாகத் தங்களது வாழ்வின் உச்சக்கட்டத்தில் தாங்கள் எண்ணி வந்த கடமைகளை நிறைவேற்றியவுடன் பூதவுடலை விட்டு விட்டு இந்த உலகுக்கு வந்து தங்களது முன்னேற்றத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.

இங்கேயுள்ள ஞானாலயங்கள் எங்கள் ஆத்மீக உணர்வுகளைத் தூண்டி எங்களை வெவ்வெறு வழிகளில் சிந்திக்க வைப்பவையாகும். அதனால் தான் பூவுலகில் நாம் கற்றவையொன்றும் இங்குள்ள கல்வியினால் ஏற்படும் மகிழ்ச்சிகளுக்கு ஈடாகா."

கென்னடி சகோதரர்களாகிய ஜாக், பாபி ஆகியோரைப் பற்றியறிந்தது ஜனாதிபதி ஐசன்ஹவரைப் (Eisenhower) பற்றி அறிவதற்கு வழிவகுத்தது.

ஜனாதிபதி ஐசன்ஹவர் எப்படி அந்தப் பக்கத்தில் இருக்கிறாரெனக் கேட்டதற்கு ஃபோர்ட் உடனடியாகப் பின்வருமாறு எழுதினார்: "அவர் ஒரு ஜாலியான நல்ல மனிதர். மிகத் துன்பகரமாகப் பாதிக்கப்பட்ட உலகில் அவர் சமாதானத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் சிறிது காலத்துக்கு முன்னர் அதாவது குழப்பம் குறைவாக இருந்த காலத்தில் அவர் ஜனாதிபதியாக வந்திருந்தால் மனிதகுலத்தின் மேன்மைக்கு மேலும் உதவியிருப்பார்.

போரின் போது அவர் வழி நடத்தியவர்கள் அவர் இப்பக்கத்துக்கு வந்ததும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டனர். அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு தந்தையைப் போல இருந்தார். அவரின் நல்ல இதயத்தை அவர்கள் மதித்தார்கள். அவர்களில் பலபேரை அவர் இன்னும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர்கள் தங்கள் காலம் முடியுமுன்னே தங்கள் இளவயதில் உடலை நீத்து இங்கே வரவேண்டி இருந்ததை எண்ணிக் கோபம் கொண்டு பெரியவர்களை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக் (Ike) அவர்களின் எண்ணங்களை மாற்றி மனித இதயத்துடிப்பின் ஒரு பகுதியாக இறைவனின் துடிப்பும் உள்ளதென்றும் எம்மால் புரிந்து கொள்ள முடியாதவை எல்லாம் கூட எம்மைப் படைத்த இறைவனுக்குப் புரியுமென்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். அத்துடன் ஒரு சிறந்த மரணத்தை விட மோசமான பல அழிவுகள் இங்கேயுள்ளன என்பதையும் அவர்களுக்குப் புரிய வைத்தார்."
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாஸிசத்தை வெற்றியுடன் எதிர்த்த ஜெனரல் ஐஸன்ஹவரின் மிகப்பெரிய வெற்றியானது இயற்கையாக அடல்ஃப் ஹிட்லரைப் பற்றிய கேள்விக்கு வித்திட்டது. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஹிட்லர், ஒரு பிறவியிலேயே இவ்வளவு தீவினைகளைச் செய்ததனால் தன்னைத் தூய்மைப்படுத்த இயலாமலிருக்கக் கூடும். பூவுலகில் பலரின் வாழ்க்கைகளை, நம்பிக்கைகளை, இலட்சியங்களை நாசம் செய்து விட்டு இங்கே வந்தார்.

அத்துடன் தன்னளவிலும் கூட வெறுத்து ஒதுக்கப்படக்கூடிய பேர்வழியாக இருந்ததனால் அவரின் இறப்பிற்காக ஒருவரும் வருந்தவில்லை. இங்கேயும் அவர் தனது முட்டாள் தனமான செய்கைகளையும் இராணுவ அதிகாரி போன்ற நடைகளையும் அதிகாரத்திலிருப்பது போன்ற அர்த்தமில்லாத பேச்சுகளையும் தொடரமுற்பட்டார்.

ஆனால் அவரைக் கவனிக்கவோ அன்றி அவருக்கு மரியாதை செலுத்தவோ இங்கே ஒருவரும் இல்லை. அந்த ஆத்மா இங்கே முற்றாக நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் ஒரு ஆளரவமில்லாத இருண்ட தீவில் தனியே விடப்பட்டிருப்பது போல இருந்தார். அவர் குரலை உயர்த்தி ஆரவாரமிட்டும் ஒரு பிரயோசனமுமில்லை. இங்கே அப்படிப்பட்ட இழிநிலையான ஆத்மாவுடன் தொடர்பு கொள்ளக் கூடிய அளவு கீழ்நிலையில் ஒருவருமில்லை.

அதிகாரத் தோரணையில் நடப்பதாலும் ஆரவாரம் செய்வதாலும் எதுவும் சாதிக்க முடியாது. கடைசியில் அவர் தானே உருவாக்கிக் கொண்டதொரு ஆழமான பள்ளத்தில் விழத்தொடங்கிவிட்டார். எட்கர் கேசியால் (Edgar Cayce) சொல்லப்பட்ட சனிக்கிரக வாழ்க்கை போல முழு இருட்டினுள் விழுந்து கொண்டே போவார். அங்கே அவர் தன்வழியே அவர் மனிதகுலத்துக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளின் தீவிரத்துக்கேற்ப பல நூறு வருடங்களோ அல்லது ஆயிரம் வருடங்களோ விடப்படுவார்.

அவர் மீண்டும் எப்போதாவது விழித்தெழுந்தாலும் அவரது விதி மகிழ்ச்சியாக இருக்கவிடாது. அவர் மற்றையவர்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளில் சிலவற்றுக்கேனும் மாற்றுச் செய்யும் முகமாக இங்கே மிக நீண்ட கடினமான பயிற்சிகளைப் பயின்றாலொழிய அவருக்கு - குறுகிய காலத்திலேயே முன்னேற்றத்தைத் தரக்கூடியதான - பூவுலகில் பிறப்பதற்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது.

காலகாலத்துக்கும் தன்னைத்தானே தனிமைப்படுத்தும் தலையெழுத்தைத் தானே எழுதிக்கொண்டார். இப்போ பூவுலகில் வாழும் ஒருவருக்கும் ஹிட்லரின் விதி தெரியவராது. ஏனெனில் அவரின் தனிமை வாழ்வானது (அவர் தனக்குத்தானே விதித்துக் கொண்ட) சந்தேகமின்றி இப்போ பூவுலகிலிருப்பவர்களால் புரிந்து கொள்ளக்கூடிய காலத்திலும் பார்க்கக் கூடிய காலம் எடுக்கும்."

அடுத்ததாக ஃபோர்ட் அல்பேர்ட் ஐன்ஸ்டைனைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: ஒரு மிகப்பெரிய விஞ்ஞானியான அவர் பூவுலகை விட்டு இங்கு வருகையில் மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் வரவேற்கப்பட்டார். அவர் தனது திறமைகளைத் தூய விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனித இனத்தின் நன்மைக்குமாகத் திறம்பட உபயோகித்தார்.

தனது திறமைகளை அழிவுக்குப் பயன்படுத்தாமல் நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திய ஒருவரைப் பற்றி நாமிங்கே பேசுகிறோம். பௌதீக உலகில் மஹா மேதையாகப் போற்றப்பட்ட அவர் உண்மையில் விசேஷ அறிவுகளைப் பயின்று அவற்றைப் பயன்படுத்தியவர். அவர் இப்பக்கத்திலே இருக்கும் விஞ்ஞான அறிவுள்ள ஏனைய ஆத்மாக்களின் உதவியுடன் விஞ்ஞான முன்னேற்றத்தில் மெய்நிகர் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியதாக உள்ளார்.

தொலைபேசி, மின்சாரம், நீராவி இயந்திரம் இவை போன்ற பருத்தி இயந்திரம் உட்பட அனைத்துமே (பூவுலகில் சில நல்ல வகையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான) பூவுலகிலும் மேலுலகிலும் இருக்கும் திறமை வாய்ந்தவர்களின் கூட்டு முயற்சியேயாகும்.

ஐன்ஸ்டைன் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் சிற்சில நிமிடங்களுக்குச் சிறுதூக்கம் கொள்வதனால் இங்கேயுள்ள சில சக்திகளுடன் இசைவாக்கம் கொள்ள இயலுமாக இருந்ததனால் அவரது நோக்கங்கள் புதுப்பிக்கப்பட்டு அவரது பரிசோதனைகளின் அடுத்த கட்டங்களை அறியக்கூடியதாக இருந்தது. சிறிய தூக்கங்களின் போது பௌதீக உலகிலிருக்கும் நீங்கள் இங்கேயுள்ள ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்கையில் உங்கள் சக்திகள், நோக்கங்கள், இலட்சியங்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன."

எல்ஸி செக்ரைஸ்ட் (Elsie Sechrist) பாதிரிமார்கள், விஞ்ஞானிகள், பழமைக்கோட்பாடுகளைச் சார்ந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள், காட்டுமிராண்டித்தனமானவர்கள் போன்ற பல்வேறு வகையானவர்களைப் பற்றிக் கேட்டார்.

மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "இன்று நாம் ஒரு பாதிரியாரைப் பற்றிப் பார்ப்போம். இவர் பில்லி சண்டே (Billy Sunday) போன்றவர். அதாவது பைபிளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் நம்பியவர். நரகத்திலிருக்கும் நெருப்பு, கந்தகக்குளம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் உபதேசித்தவர். அவர் இங்கே வருகையில் இறைவன் பெரிய அரியாசனத்தில் தேவதேவதைகள் சூழ அமர்ந்திருக்கவில்லை என்பதைக் கண்டதும் அது அவருக்கு முதலாவது அதிர்ச்சி.

அதன் பின்னர் அவர் எங்களை மேலும் தாமதிக்காமல் எங்கள் பிழைகளுக்காக வருந்தச் சொல்லி வலியுறுத்தினார். தான் இந்தப் புதிய சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் வரையும் தற்காலிகமாகத் தான் அங்கே மிகக்குறுகிய காலத்துக்குத் தங்கியிருப்பதாகவும் நாமெல்லோரும் கடவுளின் அன்புக் கரங்களை அடைய இயலாத பாவிகளாயிருக்க வேண்டுமெனவும் தீர்மானித்தார். அவரது பிரசங்கங்கள் உண்மையிலேயே சில ஆத்மாக்களை அதாவது தாம் தமது சிற்றறிவில் உருவாக்கிக் கொண்ட சொர்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்த ஆத்மாக்களை ஈர்த்தது உண்மை.

அவர்கள் இந்தப் பெரியவர் தங்களை சொர்க்கபூமிக்கு வழிநடத்திச் செல்லப் போகிறாரென எண்ணினார்கள். அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரது பிரசங்கங்களைச் செவிமடுத்தார்கள். அத்துடன் அவர் மிகக்குறுகிய நேரத்தில் எல்லோரும் யாழ் (harps) மீட்டிக்கொண்டிருக்கும் தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் சொர்க்கபுரிக்கு முன்னேறிச் செல்வோமெனச் சொன்ன போது 'ஆமென்' எனக் கூச்சலிட்டனர்.

கடைசியில் தங்களுக்குரிய ஒருவர் ஆலயக் கதவுகளைத் திறந்துவிட வந்துவிட்டதை நன்றியுடன் எண்ணி மீண்டும் 'ஆமென்' எனக் கூச்சலிட்டனர். இப்போதகர் (இப்போதைக்கு அவரை 'பில்லி' என்றே அழைப்போம்) ஆரம்பத்தில் உரத்த குரலில் இங்கேயுள்ள பழைய ஆத்மாக்களிடம் கடவுளின் அரியாசனத்துக்குப் போகும் வழியைக் காட்டும்படி வலியுறுத்திக் கேட்டார். நாம் அவ்வழியை மாயமாக மறைத்து வைத்திருப்பதாக அவர் உண்மையில் நம்பினார்.

கடைசியில் பழைய ஆத்மாக்கள் ஒன்று கூடி பில்லிக்கு அவர் உண்மைக்குப் புறம்பான போதனைகளைச் செய்வதாகவும் சொர்க்கமென்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பதெனவும் அதேபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவரவர் பிரத்தியேக நரகமிருப்பதாகவும் அவருக்கு ஒன்றையும் மறைக்கவில்லை எனவும் விளங்கப்படுத்தினர்.

அவருக்குரிய ஆத்மீக முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்குவது அவரில் தான் தங்கியுள்ளது எனவும் சத்திய பூமியென்ற பொய்யான நம்பிக்கையை மற்றையவர்களுக்குக் கொடுத்து அவர்களைப் பிழையாக வழிகாட்டுவதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறார் எனவும் சொன்னார்கள். உண்மையில் இது தான் சத்தியபூமி.

நாம் எமது சிந்தனைகளினாலும் முயற்சிகளினாலும் தான் அதனை உருவாக்குகின்றோம். ஞானவான்கள் பில்லியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். உண்மையில் பில்லி ஒரு நல்ல ஆத்மா. ஆனால் பிழையாக வழிகாட்டப்பட்டவர். அவர்கள் அவரை ஞானாலயத்துக்குச் சென்று பயின்று முழுமுதல் உண்மையை அறியும்படி ஆலோசனை கூறினார்கள். அதாவது நாமனைவருமே கடவுள். இவ்வுண்மையை நாமனைவரும் உணரும் வரை மனிதனுடைய அடிப்படை நிலையிலிருந்து மேலே முன்னேற முடியாது.

"எம்மைப் போலவே ஏனையோரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதனை நாம் கிரகித்துக் கொள்கையில் இறைவனின் அந்த ஏனைய பகுதிகளுக்கு உதவுவதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றாக உயரிய விழிப்பு நிலைகளுக்கு முன்னேறலாமென்ற அரிய செய்தியை உலகுக்கு எடுத்துரைக்கலாம். அப்போது எமது கண்களை இவ்வளவு காலமும் மறைத்துக் கொண்டிருந்த மாயத்திரை விலகும்.

அத்துடன் நாம் இங்கே எதற்காக வந்தோமென்பது சரியாகப் புலப்படத் தொடங்கும். ஏனையவர்களுக்கு உதவுவது தான் மந்திரச் சொல்லாகும். இந்தப் பிரபஞ்ச ரகசியத்தின் சிறிய ஒளிக்கீற்று பில்லிக்குத் புலப்படத் தொடங்கியது. சிறிது நாளிலேயே அவர் எவ்வாறு நரகத்தில் எரியும் நெருப்பையும் கந்தகக்குளத்தையும் பற்றி உபதேசித்தாரோ அதேயளவு உற்சாகத்துடன் இவ்வுண்மையையும் ஏனையவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. பிழையான கொள்கைகளினால் அவர் பிழையான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தவர். இப்போ அதேயளவு நாவன்மையுடன் உண்மையைப் பரப்பி வருகிறார். கூடிய சீக்கிரத்தில் அவர் தனது முந்தைய பிறவியினைப் பற்றி ஆராயத் தொடங்குவார்.

தனது பழமை வாய்ந்த இறுக்கமான சமயக் கோட்பாடுகளிலும் பார்க்கக் கொஞ்சம் மாறுபட்ட நம்பிக்கை கொண்டோரின் நம்பக்கூடிய வாதங்களுக்குச் செவிசாய்த்துத் தன் கண்களைத் திறக்காததன் மூலம் எங்கே எப்படி மற்றையவர்களுக்குப் பிழையான முறையில் வழிகாட்டினார் என்பதைக் கண்டு கொள்வார்.

அவர் தனது பிழைகளைத் திருத்த விரும்பினார். அதேபோல நம்பிக்கை கொண்ட, பூவுலகில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமயவாதிகளின் மனதில் நன்கு பண்பட்ட மண்ணில் போடப்படும் விதைபோல ஞானத்தைப் பயிர்செய்வதன் மூலம் இறுக்கமான நம்பிக்கை கொண்டோரிடம் உண்மையைப் பரப்ப முயல்கிறார்.

அடிப்படையில் அவர் ஒரு நல்ல ஆத்மாவானதால் பூவுலகில் இருக்கையிலேயே இவ்வுண்மைகளை அறிந்திருந்தும் ஒரு முயற்சியுமின்றி இவரைப்போல ஏனையோருக்கு உதவி அவர்களையும் முன்னேற்ற முயலாமல் இருப்பவர்களிலும் பார்க்க இங்கே அவர் வெகு விரைவாக முன்னேறுவார்."

மறுநாட்காலை ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: இன்று ஒரு கைக்குழந்தையின் கதைக்கு வருவோம். அக்குழந்தை பிறந்து சற்று நேரம் உயிர்வாழ்வதற்காகப் போராடிய பின்னர் அது பின்வாங்கி ஆத்மநிலைக்கே மீண்டும் வந்தது. நிச்சயமாக அக்குழந்தை உயிர்வாழ விரும்பியிருக்கும். தனது பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவாவது உதவியிருக்கும்.

பின் இந்த மாறுதலுக்குக் காரணம் தானென்ன? சிலவேளைகளில் அக்குழந்தையின் உடல் குறைபாடுகளால் பலவீனமுற்று உயிர்வாழ்வற்குரிய தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் கூடுதலாக இப்படியான சந்தர்ப்பங்களில் ஆத்மாவானது பின்வாங்குதல் தான் சரியான காரணியாயிருக்கும். உதாரணத்துக்கு ஒரு நல்ல குடும்பத்தில் தவமிருந்து பெற்ற குழந்தையாகப் பிறந்த ஒரு குழந்தை சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ வாழ்ந்து பின் உயிர் நீத்தது என எடுத்துக்கொள்வோம்.

கிட்டத்தட்ட நிச்சயமாகப் பின்வாங்குகின்ற இந்த முடிவில் அக்குழந்தையின் பங்கும் ஏதோ இருந்திருக்க வேண்டும். சிலவேளைகளில் உடலுக்குள் செல்லுவதற்கு ஆத்மா தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது தனது ஆத்மீக வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருக்கும் கர்மவினையைப் போக்குவதற்குரிய சரியான ஊடகம் அதுவல்லவென அந்த ஆத்மா தீர்மானித்திருக்கலாம்.

எது எப்படியாயினும் அப்பூவுலகக் குழந்தையின் உயிர் அது சற்றுமுன்னே எங்கிருந்து புறப்பட்டதோ அந்த இடத்திற்கே உடனே வந்துவிட்டது. சிலவேளைகளில் சிறிது நேரம் உறங்கவேண்டிவரும். ஆனால் சாதாரணமாக ஆத்மவுலகை விட்டு இவ்வளவு குறுகிய நேரத்திற்கு மட்டுமே வெளியேறியிருந்தால் மீண்டும் வருகையில் சிறிதளவே அனுசரிக்க வேண்டிவரும்.

மீண்டுமொரு முறை அந்த ஆத்மாவானது நடந்தவைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சற்று முன் என்ன நடந்தது என்பதனை ஆராய்ந்து தனது கர்மவினைகளைக் களைவதற்காகப் பிறவியெடுத்த அந்தச் சந்தர்ப்பத்தைத் தான் ஏன் நழுவவிட்டேன் என ஆராய்ந்து உணரும்.

"அக்குழந்தையானது உண்மையில் குழந்தையல்ல. அதாவது ஆத்மவுலகைப் பொறுத்தவரையிலாவது அது குழந்தையல்ல. ஏனெனில் எல்லா ஆத்மாக்களும் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கின்றன. சில ஆத்மாக்கள் இங்கேயும் பூவுலகிலும் பெற்ற அனுபவங்களினால் பரிணாம வளர்ச்சியடைந்து ஞானவான்களாக இருப்பதன் மூலம் அவர்களின் இருப்புக் கூடுதலாக அறியப்பட்டாலும் இங்கே ஒருவரும் குழந்தையல்ல.

இன்று உதாரணமாகச் சொல்லப்பட்ட கைக்குழந்தையானது சற்றே போராடிப் பார்த்த பின் மீண்டும் எம்மிடம் வந்து சேர்ந்தது. அக்குழந்தையின் பூவுடலின் இருதயமானது பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அதனால் உயிர்பிழைக்க முடியவில்லை. இங்கு மீண்டும் வந்தபோது முதலில் அந்த ஆத்மாவானது ஏமாற்றமடைந்த நிலையிற் காணப்பட்டது. குழந்தைப் பருவமானது அவ்வளவு சிறப்பான நிலையல்ல என்றாலும் தனது பெற்றோரை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும் அந்தச் சூழலானது தனது சில கர்மவினைகளைப் போக்குவதற்கு உகந்த சூழலென அவ்வாத்மா எண்ணியதாலும் அது சற்று ஏமாற்றமடைந்தது.

பௌதீக உடற் கோளாறினால் இச் சந்தர்ப்பமானது அவ்வாத்மாவுக்கு மறுக்கப்பட்டது கூட உண்மையில் ஒரு கர்மவினைப் பயனாகும். அவ்வாத்மா தனது முந்தைய ஒரு பிறவியில் ஒரு பிறந்த குழந்தையின் தேவைகளைப் புறக்கணித்ததன் மூலம் அக்குழந்தையின் இறப்புக்குத் தான் காரணமாக இருந்ததை உணர்ந்து கொண்டது.

எனவே நிறைவாகத் தோன்றிய இப்பிறவியை முழுதாக வாழ்ந்து முடிப்பதற்கு அவ்வாத்மா மிகவும் விரும்பியிருந்தாலும் அச்சந்தர்ப்பத்திலிருந்து பின் வாங்கியதன் மூலம் தனது கர்மவினைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. அக்குறிப்பிட்ட குழந்தையானது இங்கே வந்த பின் சற்றே தன்னை மாற்றியமைத்துக் கொண்டு மீண்டும் ஞானாலயத்தில் இணைந்து இறைவனுடன் இரண்டறக் கலக்கும் இலட்சியத்தை அடையும் பாதையில் செல்வதைப் பற்றிப் பயில ஆயத்தமாகிறது.

அவர் சற்று நேரத்துக்கே இங்கிருந்து சென்றிருந்ததால் சிறிது மீள் வழிகாட்டலே போதுமானது. இதுவே அவர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பூவுலகில் குழந்தையாய் இருந்திருந்தால் இங்கே அவருக்கு உளவியல் ரீதியாக உதவுவதற்கு ஆத்மாக்கள் இருக்கின்றன. அவர்கள் இவரைக் குழந்தைப் பருவத்து மனநிலையிலிருந்து விடுவித்து வயது வந்தவராய் மாற்றி விடுவார்கள்.

அடுத்ததாக ஆர்தர் ஃபோர்ட் சற்றே வளர்ந்த குழந்தையொன்றை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு எழுதினார்: "காக்கை வலிப்பு நோயுள்ள ஒரு குழந்தையின் விஷயத்துக்கு வருவோம். அக்குழந்தையில் அன்பு கொண்ட அனைவரும் அவனுக்கு வலிப்பு வரும் போதெல்லாம் மனவேதனைக்கு ஆளாவார்கள். அவனுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவு வலிப்பு வரும். அந்த நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களில் அவன் சாதாரண குழந்தையாகவே இருப்பான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வலிப்பு வருகையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வானென்ற பயத்தின் காரணமாக ஏனையவர் போல சாதாரண வாழ்வை வாழ அனுமத்திக்கப் படாதவனாக இருந்தான். வாழ்க்கை அவனுக்குப் பெரும் பாரமாக இருந்ததனால் வாழவேண்டிய வயதுவரை வாழாமல் அந்த உடலை விட்டுவிட்டுப் பின்வாங்கி வந்துவிட்டான். அவன் இங்கே கண்விழிக்கையில் முன்பின் தெரியாதவர்களிடையே தனக்கு மீண்டும் வலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துவிட்டான்.

எனவே தனது தாய், தந்தை, பாட்டி இவர்களைத் தேடியழுதான். இவர்கள் தான் அவனைப் பூவுலகில் அன்பாகப் பார்த்துக் கொண்டவர்கள். அன்னியர்கள் தன்னைப் பிடித்தாலும் என்ற பயத்தில் அவன் தனது ஆத்மாவின் கண்களைத் திறக்க அஞ்சினான். அவனது மனவேதனை எல்லா விதத்திலும் உண்மையாகவே இருந்தன.

"இறுதியில் ஒரு பிரபல வைத்தியருக்கு அவனது பரிதாபநிலை எட்டியது. அவர் அந்தப் பையனுக்கு முழுமையான ஆதரவுடன் தான் அவனுடைய வியாதிக்கு மிகச்சிறந்த வைத்தியம் பார்ப்பதாக உறுதியளித்தார். அவர் பூவுலகில் எவ்வாறு அவனுடைய உடலைப் பேணிப் பாதுகாப்பாரோ அதேயளவு மென்மையான லாவகத்துடன் அவனது மனத்தை மாற்றத் தொடங்கினார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனதில் நம்பிக்கையை வளர்த்து அவனுடைய அச்சத்தைப் போக்கினார். பின்னர் அந்த டாக்டர் மற்ற மென்மையான ஆத்மாக்களை அறிமுகம் செய்து வைத்தார். அவ்வாத்மாக்கள் கைவிடப்பட்ட உடலினில் ஏற்படும் தொல்லைகள் பற்றி அவன் இனிமேல் வருந்தத் தேவையில்லையென நம்பிக்கையூட்டினர். அச்சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

ஒருவர் கூடத் தனக்குப் பரிச்சயமான பாரமான உடலைச் சூடிக்கொண்டிருக்கவில்லை என்பதனைக் கண்டு கொண்டான். அவர்களனைவரும் பூவுடல்களிலும் பார்க்க மிக அழகான ஆன்மீகவடிவிலான உடைகளைச் சூடிக்கொண்டிருந்தனர். அத்துடன் உடல் உபாதைகள், வருத்தங்கள் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் இருந்தனர்.

அவன் தன்னுடைய வீட்டைச் சென்று பார்வையிட்டான். அவனுடைய பெற்றார் கவலை உற்றவர்களாகக் காணப்பட்டாலும் அவனை நினைத்து வேதனைப் படவில்லை என்பதனைத் தெரிந்து கொண்டான். அவர்கள் மிக முன்னேறிய ஆத்மாக்கள் என்பதால் தங்கள் மகன் இப்போ கடவுளின் அன்பில் முழுவதும் ஆழ்ந்திருப்பான் எனவும் அவனுக்கு உடல் உபாதைகளொன்றும் இருக்காது எனவும் உணர்ந்து கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

"அவன் தனது பெற்றோரைத் தன் அன்பினால் ஆசீர்வதித்தான். அதன்பின் இங்கிருக்கும் ஆசிரியர்களின் உதவியுடன் அவன் மிக வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கினான். அவ்வாசிரியர்கள் அவனும் ஏனையோரைப் போல் வளர்ந்தவனே என்பதனை அவனுக்கு உணர்த்தினார்கள். அவன் தன்னுடைய கடந்த வாழ்வைப் பற்றி மதிப்பிடுகையில் தானே தான் அந்த வலிப்புகளை முன் வந்து ஏற்றுக்கொண்டதாகவும் முந்தைய ஒரு பிறவியிலே அவன் வேறு சிலரின் உடல் உபாதைகளை உணராமல் இருந்ததனால் அவர்கள் அனுபவித்த வேதனையை விளங்கிக் கொள்ளுமுகமாகத் தானே அக்கஷ்டங்களை அனுபவிக்க விரும்பியதாகவும் உணர்ந்தான்.

அவன் கூடிய விரைவிலேயே மிக முன்னேறிய ஆத்மாவாக மாறினான். இப்போ அவன் தனது கர்மவினைப் பயனை அனுபவித்துத் தன் தலையிலிருந்து பெரும் பாரத்தை இறக்கி வைத்ததனால் அப்பாரமில்லாமல் தனது அடுத்த பிறவியானது எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்க வல்லவனாக இருக்கிறான். அவன் பணிவு என்பதைப் பற்றி அறிய விரும்பினான்.

கடந்துபோன பிறவியில் அவனுடைய பெற்றோர் வசதி படைத்தவர்களாகவும் நன்கு கற்றவர்களாகவும் இருந்ததனால் அவனுக்குத் தன் பிறப்பை எண்ணிப் பெருமையாயிருந்தது. அத்துடன் எந்நேரமும் அவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டுமென எதிர்பார்த்தான். அதனால் தனது அடுத்த பிறவியில் அவன் எளிமையான, அன்புள்ள, ஆனால் அதே நேரம் ஏனையோருக்கு உதவுவதற்கென்று தம்மை முழுமையாக அர்ப்பணித்த பெற்றோருக்கு மகனாகப் பிறக்க வேண்டுமெனத் தெரிவு செய்வான்.

சேவை செய்யும் மதபோதகர்களின் மகனாகப் பிறப்பதன் மூலம் அவன் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி அறிவான். இவ்வாறு எளிமையாகத் தொடங்கி ஒரு முழுமை பெற்ற ஆத்மாவாக ஆவான். இப்படித்தான் இந்தச் சுழற்சியானது எமது முன்னேற்றத்துக்கு உதவுகிறது. பிறவிகளின் இடையே ஆத்ம உலகில் எடுக்கும் சரியான மாற்று வழிகளின் மூலம் நம் உணர்வுகள் வளர்ந்து படிப்படியாக முன்னேறி இறைவனுக்கு இனியவர்களாக மாற முயற்சிப்போம்.

எல்ஸி, நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமானவர்களைப் பற்றியும் கேட்டிருந்தார். ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஒரு ஆதிவாசியின் கதையைப் பார்ப்போம். நாகரீகத்தின் சுவடுகள் சற்றும் புகாத பின்தங்கிய பகுதியில் தனது முழு வாழ்நாளையும் கழித்த ஒருவன் ஆத்ம உலகுக்கு வந்தான். கலாச்சாரப் பகுதிகளில் வாழ்ந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்த எம்மைப் போன்றவர்களிலும் பார்க்க அவனுக்கு இங்கே குறைந்த அளவு அதிர்ச்சியே காணப்பட்டது.

அவன் சில அதீத நம்பிக்கைகளுக்குப் பழக்கமாகியிருந்தான். அவனுடைய பிரதேசத்தில் ஆத்மாக்களே எங்கும் நிரம்பியிருப்பதாக எண்ணுவார்கள். இறைவன் எல்லாவற்றுக்கும் மேலாக இருந்து கொண்டு சூரிய சந்திரர்கள் மற்றும் ஆகாயத்தில் அனைத்தையும் ஒழுங்காக வழிநடத்திக் கொண்டிருப்பான் என நம்புவார்கள். முதலில் அவன் தன்னைப் போன்றவர்களையே சந்தித்தான்.

ஆத்மாக்களில் நல்ல விடயங்களுக்காக இருக்கும் நல்லவற்றில் அன்பு செலுத்தியும் தீயனவற்றுக்கு அஞ்சியும் வந்தவர்கள் அவனைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களையே அவன் முதலில் சந்தித்தான். அவர்கள் தங்களது பூர்வீகப் பிரதேசத்தைப் பற்றி முதலில் விளக்கமாக அறிந்து கொண்டனர்.

பெற்றாரின் கண்டிப்பான வழி காட்டலாலும் புத்தகங்களின் மூலமும் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமில்லை என நம்பும் எம்மைப் போன்றவர்களிலும் பார்க்க அவர்களால் மிக விரைவில் பூவுலகிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக இருந்தது. அவன் தனது பழைய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டான். அவர்களுக்கு மழை வேண்டுமென்று தெரிய வந்தபோது மற்றைய ஆத்மாக்களுடன் சேர்ந்து வழிமண்டலத்தின் சுழற்சியில் மாற்றங்களை உண்டாக்கி அவர்களுடைய பிரதேசத்தில் மழை பொழியச் செய்தான்.

நாகரீகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள சமூகத்தில் பிறப்பவர்களிலும் பார்க்க இந்த ஆதிவாசிகள் மிகக்குறைந்த பிறவிகளே எடுப்பார்கள். சில சமயங்களில் அவர்கள் பிறவிகளின் இடையே பல ஆயிரம் வருடங்கள் துயில் கொள்வதனால் அந்த நேரத்தில் பூவுலகில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களைப் பற்றிக் கொஞ்சமும் அறியாமலிருப்பார்கள்.

இதனால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் அந்த நேரத்தில் பிறப்பவர்களிலும் பார்க்கப் பின் தங்கியவர்களாய் இருந்தாலும் இறைவனும் மனிதனும் கைகோத்துக் கொண்டு உலகில் ஒன்றாக நடந்த அந்தக் காலத்தை அவர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பதால் ஆத்மீகத்தில் முன்னேறியவர்களாகவே இருப்பார்கள்.

"ஏன் முன்னைய பிறவிகளோ அல்லது ஆத்ம உலகமோ அவை உண்மையாக இருந்தும் கூட மனிதருக்கு நினைவில் நிற்பதில்லை? ஏனெனில், குழந்தைப்பருவம் முதலே அனைவரும் எமக்கு, 'உண்மைக்குப் புறம்பான விஷயங்களைப் பற்றிப் பிதற்ற வேண்டாம்' எனக் கண்டித்து வளர்த்தது தான் காரணமாகும். பின்னர் விரைவில் 'நாகரீகக்கூண்டில்' அடைக்கப்படுகிறோம்.

சிறுவயதில் கிரேக்க, ரோமானியர்களின் தொன்மைக்காலப் புராண வரலாறுகளில் உலகிலே பண்டைய காலங்களில் இருந்த விசித்திரமான உயிரினங்களைப் பற்றிப் படித்தாலும் தமக்கும் அதே போன்ற மங்கிய நினைவுகள் இருக்கின்றன என அவர்கள் சொல்லுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த மறக்க வைக்கும் தன்மையானது வலிந்து புகுத்தப்படும் ஒன்றென்றாலும் சிலநேரங்களில் தேவையானதும் கூடத்தான். முந்தைய எமது பிறவிகளிலே நடந்த திகிலூட்டக் கூடிய சம்பவங்கள் எமது வெளிமனத்துக்கு நினைவு வந்தால் அவை இப்பிறவியில் தேவையற்ற மனவேதனைகளை உண்டாக்கலாம். அவர்கள் பிறருக்குச் செய்த சில தீய செயல்களின் பலன்களைக் களைவதற்காகத் தாங்களாகவே முன்வந்து இப்பிறவியினை எடுத்திருக்கலாம். ஆனால் தாங்கள் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பங்களுக்கான காரணங்களை மிகத்தெளிவாக நினைவு கொள்வதென்பது தாங்க முடியாத சுமையாக இருக்கும்."

அடுத்தநாள் ஆர்தர் ஃபோர்ட் இன்னொரு நாகரீகமற்றவனைப் பற்றிச் சொன்னார்: அவன் காட்டுத் தர்பாரைத் தவிர கிறிஸ்தவ மதத்தையோ அல்லது வேறு எந்த வகையான ஒழுங்கு முறையான வழிபாடுகளையோ அறியாதவன்.

நாகம் தீண்டியதனால் தான் அவன் இறந்திருந்தான். அவன் இறப்பைக் கடந்து இங்கே வருகையில் அவனுக்கு ஒன்பது வயதாகியிருந்தது. எந்தவிதமான சுகாதாரமோ, நாகரீகமோ இல்லாத ஒருவனாக அவன் இருந்தான். அவனது இதற்கு முந்தைய பிறவிக்கும் இந்தப் பிறவிக்கும் இடையில் பல ஆயிரம் வருட இடைவெளியிருந்ததும் தனது முன்னேற்றத்துக்கு ஆத்ம உலகில் அவன் ஒரு முயற்சியும் எடுக்காததும் காரணங்களாக இருக்கலாம்.

பலநூறு வருடங்கள் துயில் கொண்டதனாலும் இங்கிருக்கும் ஏனைய ஆத்மாக்களைப் பற்றிச் சற்றும் அக்கறைப்படாமல் இருந்ததனாலும் அவன் கடைசியில் பூவுலகில் மீண்டும் பிறப்பதாகத் தீர்மானித்த பொழுது அவன் தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்துப் போட்ட மீனைப் போல இருந்தான். அவன் உண்பதற்காகவும் உறங்குவதற்காகவுமே உயிர் வாழ்ந்தான்.

அவன் பூவுலகில் செய்த ஒரேயொரு வேலை என்னவென்றால் அடி வாங்குதலையும் பேச்சு வாங்குதலையும் தவிர்த்தது தான். அவன் அறியாமையில் வாழ்ந்திருந்தான். அதே முறையில் இறந்தான். அதனால் அப்பிறவியில் சற்றும் கூட முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் பூவுலக வாழ்க்கையைத் தொடர்வதில் ஒரு அர்த்தமுமில்லை. இங்கே அன்பான ஆத்மாக்கள் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாலும் அவன் தொடர்ந்து உறங்கினான்.

விழிப்பான நேரங்களில் தன்னைப் பற்றியும் தனது சந்தோஷங்களைப் பற்றியும் மட்டுமே எண்ணினான். அவனுக்கு சந்தோஷமான விஷயங்கள் மிகச்சிலவே (மிருங்கங்களைச் சித்திரவதை செய்வதைத் தவிர). அரவம் தீண்டி இறந்ததும் கூட அவனுடைய கர்மவினைப் பயனே. மனிதரிலும் பரிணாம வளர்ச்சி குன்றிய மிருகங்களுக்கு அவன் செய்த கொடுமைகளுக்கான பயனே.

"இப்படிப்பட்ட ஆத்மாவானது பூவுலகில் இருப்பதிலும் பார்க்க இங்கே மிகச் சோர்வடைந்தே காணப்படும். ஏனெனில் ஆத்மீக வளர்ச்சிக்குரிய பொறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறிய சந்தர்ப்பங்களே உள்ளன. ஆனால் இன்று நாகரிக உலகில் உண்ணுவதற்கு ஏராளமான உணவும் நிறைவேற்றுவதற்குரிய கடமைகள் ஏராளமாக இருந்தும் அதை விடுத்துக் கலவரங்களை உண்டாக்கிப் பேரழிவுப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களிலும் பார்க்க இப் பையனின் நிலைமை ஒன்றும் மோசமானதல்ல எனலாம்.

அப்படிப்பட்டவர்கள் அவர்களின் அடுத்த பிறவிகளில் இப்பையன் பிறந்த மாதிரியான சூழ்நிலைகளில் பிறக்க வாய்ப்புகள் இருக்கலாம். இப்பையனும் சிலவேளைகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இதேபோல அழிவுப்பாதையில் போயிருந்து இப்போ தனது கர்மவினைகளைக் களைவதற்குப் பிறவியெடுக்க விரும்பாமலிருக்கலாம். வளர்ச்சி, முன்னேற்றம், அன்பு, ஆக்கபூர்வமான நடவடிக்கை, அத்துடன் மற்றையோரைப் பற்றி நினைத்தல் இவைதான் சொர்க்க வாசலுக்குரிய திறவுகோலாகும்.

அன்பைக் கட்டியெழுப்பாமல், ஏனையோரைக் கட்டாயப்படுத்தல், ஆத்திரமுற்று அழிவுக்கு வழிகோலல் இவையெல்லாம் ஆத்மா உலகிலும், பின்வரும் பிறவிகளிலும் கடுமையான எதிர் விளைவுகளை உண்டாக்கும்".
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top