• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இறுதி பகுதி -27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
குன்னூர் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது வீட்டு எஜமான் உடல்நலம் தெரிய வந்திருக்கும் குதூகலத்தை ஒவ்வொருமுறையும் பிரதிபலித்தது.


அவன் நிலை என்னவாகுமோ ஏது ஆகுமோ என்று அவள் கவலைப்பட்ட பரிசோதனை எல்லாம் முடிந்து மேலும் 20 தினங்களில் மருத்துவமனையில் ஓடி விட்டன. இன்று அவன் நல்ல நிலையை மீட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டாள்!


கம்பெனி ஆட்கள் தொழிலாளர்கள் எல்லாரும் அவரைப் பார்க்க விரும்ப ஒரே நேரத்தில் எல்லாரும் வந்து போய்விடும் என்று ஒரு சின்ன விருந்தாகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டார் பாகீரதியம்மாள். ரக்ஷனா அப்பாவை சுற்றி சுற்றி வந்தால்.


யால் அந்தமானில் இருந்து வந்து விடலாமா அவளுக்கு சொல்லி அனுப்பி இருக்கியா?


மிருதுளா முகம் வாடியது.பாகீரதியம்மாளுக்குமே சுர்ரென கோபம் எழுந்தது தேதி வந்தவுடன் அந்தப் பிசாசு பற்றிய நினைப்புதான் என்ற பற்கள் கடித்து கொண்டவர், ம்...ம் எல்லாம் சொல்லி அனுப்பிட்டேன் என்றார்.


இப்போ ரெஸ்ட் எடு. சாயந்தரம் எல்லார்கிட்டயும் பேச தெம்பு வேண்டும் அப்பவும் ரொம்ப அலட்டிக்காதே.‌‌...


மிருதுளா அலட்டிக்க விடமாட்டாம்மா. ஆஸ்பத்திரியிலே அவளுக்கு கேட்டுக்கிட்டுத் தான் மூச்சு விட்டேன்.... என்ன மிருது? என்று அவளை வம்புக்கு இழுத்தான்.


இவளால் இயல்பாய் கலந்து கொள்ள முடியவில்லை.


இவன் நன்றாகத் ஏறிய விஷயம் தெரிந்தவுடன் யாழ்க்கு தொலைபேசியில் அழைப்பு விட்டாள்.


இன்னைக்குதான் அந்தமானில் இருந்து கிளம்புறேன் இதயா தேறிட்டாராமே ஏதோ விருந்துன்னு அவர் அம்மா என்னை அழைச்சாங்க.


ம், ஆமாம்.


நல்லது அதிலேயே எங்க நிச்சயம் பத்தி கூட சொல்லலாம் இல்ல சரி ஐ அம் சோ ஹாப்பி என்று குதூகலித்தவள், "விருந்தன்னைக்கு ஷார்ப்பா அங்கே இருப்பேன். அதுக்குள்ள முடிஞ்சா குழந்தைகிட்ட பக்குவமாய் விஷயத்தை சொல்லிடு என்றால்.


மிருதுளா நொறுங்கினாள்.


இவனும் வந்தவுடன் யாழ் என்றான்.


மனதாலும் உடலாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அவளும் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் பாகீரதியம்மாள்.


எல்லாரும் கூடி விருந்து சந்தோஷமாய் போய்க்கொண்டிருந்தபோது ஆதாரமாய் நுழைந்தால் யாழ்.


ஹாய் தயா நைஸ் டு சி யு ஹேல் அண்ட் ஹெல்தி" என்று நாசுக்காய் அவனை அணைத்தவள் எல்லாம் சுத்தி இல்லாட்டி உன்னை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து இருப்பேன் என்றால் கிசுகிசுப்பாய்.


எப்படி ஐ மிஸ் யூ தெரியுமா ?
என்றாள் கொஞ்சலாய்


அம்மா என்று காரணம் காட்டி நகர்ந்து கொண்டான்.


அவள் விடாமல் நெருங்கி இந்த விழாவில் கல்யாண அறிவிப்பை செஞ்சிடலாம் இல்ல இதயா? என்றால்.


அவளை குறுகுறு என்ற பார்த்தவன், கல்யாண அறிவிப்பாக? என் மகள் கல்யாண இன்னும் 10 வருஷம் போகணும் யாழ் என்றான்.


"ஹோய், கமான், ஜோக்ஸ் அபார்ட், நம்ம கல்யாண அறிப்பை சொன்னேன்பா. குழந்தை கிட்ட கூட விஷயத்தை பக்குவமா சொல்லிடச் சொல்லி...


இரு....இரு நம்ம கல்யாண அறிவிப்பா? நீ தான் ஜோக் பண்றே. ஐ'ம் ஆல் ரெடி மேரிட் யாழ் என்றவன் அந்தப் பக்கமாய் போன மிருதுளாவை கைப்பிடித்து இழுத்து, "மை ஒய்ப் மிஸஸ் மிருதுளா இதயா" என்றான்.


யாழ் அவனை முறைத்தாள்.'என்னாச்சு இவனுக்கு? முதுகில் தானே அடி என்றாள். மூளை கலங்கிவிட்டதா?"


ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் மிருதுளா.


சட்டென முறைப்பை தழைத்துக் கொண்டு" நான் வந்து உன் கூட இருக்கலைனு கோபமா? எனக்கு என்ன உரிமை இருந்தது சொல்லு. ஆனா, டாக்டர்கள் திட்ட விடாம உன் நிலை பற்றி..."


தெரியும். யு.எஸ். டாக்டர் கிட்ட ஈமெயில் என் ரிப்போர்ட் கேட்ட வரை உன் அக்கறை தெரியும்.


அவன் குரலில் ஒரு வேளை கேலியா என்று ஒரு நொடி ஆழப் பார்த்தவள், எப்படி தெரியும்? என்றாள்.


ஒரு பேஷண்ட்டோ ரிப்போர்ட்டை யார் கேட்டாலும் கொடுத்துட மாட்டாங்க. உன் அண்ணன் நண்பர்னா கூட, நான் அவர் பேஷண்ட். அதனால, ரிப்போர்ட்டை அனுப்பும் முன் என் அனுமதி கேட்டார்.


ம், ரிப்போர்ட் அனுப்பினார். ஆனா, உன்னால் லாயக்கில்லாதவன், வாழ் நாள் பூரா படுக்கையில் தான்.


ஆமாம், அப்படித்தான் ரிப்போர்ட் அனுப்பினார்.ஆனா நீ இப்படி...


திடகாத்திரமாக இருக்கேன்.


சென்னையில் பெரிய டாக்டரும் அப்படித்தான் சொன்னார். இல்ல, மிருதுளா?


மிருதுளா தலையாட்டினாள்.


ஆமாம், அவர் 'இதயா உயிரோட இருந்தாப் போதும். ஒரு ஆயாவா இருந்தது நான் பார்த்துக்கறேன் னு இவ சொன்னதையும் சொன்னார்.


அப்படியா என்பது போல் மிருதுளாவே விழித்துப் பார்த்தால்.


ஏன் நான் பார்த்துக்க மாட்டேனா?


ஓ! ஆள் போட்டுட்டு நீ அடுத்து வேற தீவுகளுக்கு சுற்றிப் பார்க்க போயிடுவே. போன் போட்டு டாக்டர் டாக்டரா விசாரிப்ப... நல்லா பார்த்துப்ப.


இதயா, இந்த நிமிஷம் வரை அவளுக்கு உங்க மேல உரிமை இருக்கு. எனக்கு அது இல்லை.


ஆனா டாக்டர்கிட்ட என்னை கல்யாணம் செஞ்சுக்கப் போறவனு சொல்ல முடிஞ்சது, இல்ல?


அது உண்மை தானே.


தாம்பத்தியத்துக்கு லாயக்கில்லாதவன்ன உடனே ஒரு போன் கூட கிடையாது இல்ல?


அப்ப என்னை சோதிக்கத்தான் டாக்டரை தப்பான ரிப்போர்ட் அனுப்ப சொன்னீங்களா?


இல்ல, அது கடவுள் செஞ்ச சோதனை... உனக்கு காதல் இருக்கான்னு பார்க்கவும், எனக்கு மனிதாபிமானமும் நேசமும் இருக்கான்னு பார்க்கவும் கடவுள் செஞ்ச சோதனை புரியலை? என்னை மாதிரியே 'ராவ்'னு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆயிருந்தார். டாக்டர் யு.எஸ். போற அவரத்துல இதயா ரிப்போர்ட்டை அனுப்பறதா சொன்னார்... நீ அதுக்குள்ள என் தொடர்பை அப்படிப்பட்டவளுக்கு என்னோட அனுப்ப வேண்டாம்னு
சொல்லிட்டேன்...


அப்படின்னா...‌‌


அதுவரை அவளிடம் மெல்லியக் குரல் பேசி வந்தவன், பிரெண்ட்ஸ் என்று எல்லோரையும் பெரிய குரலில் அழைத்தான்.


எல்லோரும் நிசப்தமானார்கள்.


இது நான் உயிர் பிழைத்து வந்ததுக்கு என் அம்மா உங்களுக்கு கொடுக்கும் விருந்து. கடவுள் அருள், உங்க எல்லோர் பிரார்த்தனை, என் அம்மா, குழந்தையின் அன்பு இதல்லாம் என்னை மீட்டெடுத்தது. இந்த நேரத்தில் நான் மேலே குறிப்பிட்ட எல்லாருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன் என்றான் உணர்ச்சி மேலிட.


அம்மா பேரை விட்டுட்டுப்பா. அம்மா தான் உன்னை அப்படி கவனிச்சுக்கிட்டாங்க என்று ரக்ஷனா கத்தினாள்.


சிரித்தபடி மிருதுளாவை இழுத்து இடைப்பற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டான்.


மகளிடம் திரும்பியவன், எனக்கு நானே நன்றி சொல்லிக்க வேண்டாம் ரக்ஷு என்றவன் மெல்லிய குரலில்"ஒரு மனைவி கணவன்கிட்ட எதிர்ப்பார்க்கிறது நன்றி கிடையாது. அது என்னன்னு எனக்கு தெரியும். அன்பும் காதலும். அதை ஆயுளுக்கும் குறையாம அவளுக்கு நான் தருவேன் என்றபடி மிருதுளாவின் கண்களை நேருக்கு நேர் நோக்கினான். இந்த செகண்ட் ஹேண்டுக்கும் கீழானவனை ஏத்துக்க உனக்கு சம்மதமா?


இதை சற்றும் எதிர்பார்க்காத மிருதுளா, கண்கள் பனிக்க அப்படியே அவன் தோள் மீது சரிந்து துவண்டாள்.


அதைப் பார்க்க சகிக்காத யாழ் காலை உதைத்து விட்டு விர்ரென்று அங்கிருந்து வெளியேறினால்.


எங்களை பிடிச்ச கெட்டகாலம் விலகிச்சு. இனி என் குழந்தைங்க நல்லா வாழுணும். எல்லோரும் மனமார வாழ்த்துங்க. இருந்து சாப்பிட்டு போங்க என்று பாகீரதியம்மாள் கை கூப்பினார்.


படபடவென்று எல்லாரும் கை தட்டினார்கள்.


ரக்ஷனா ஓடி வந்து அவர்கள் இருவரையும் கட்டிக் கொண்டாள்.


பாகீரதியம்மாள் பனித்த தன் கண்களை துடைத்துக் கொண்டார்.


Hi guys oru valiya kastapatu ennaoda story complete pannitean . Romba romba kutty kitty Oda potu Papa (me) va thittama porumaiya padichu nega ellarum support pannathuku romba thanks . Eppadiya unga support love irutha ennala mudiga varakum ungaluku story eluthrean.

Pathi Peru ku ennaoda story ending pidikama irukum so konjam adjust pannikoga.


*┈┉┅━❀•முற்றும்❀━┅┉┈*
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒரு வழியா பதினோரு வருஷம் கழிச்சு இருதய ராசாவுக்கு பல்ப் எரிஞ்சுதா, தஸீன் டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த ஸ்டோரி நல்ல அருமையான அழகான ஒரு குடும்ப நாவல்
ராமனுடன் காட்டுக்கு போய் பதினாலு வருஷம் கஷ்டப்பட்டு பொறுமையா இருந்த சீதாதேவியைப் போல இதயாவைக் காதலித்து பதினோரு வருஷம் பொறுமையாக இருந்த மிருதுளாவுக்கு கடைசியில அவள் விரும்பிய வாழ்க்கை கிடைத்து விட்டது
பொறுமையா இருந்ததில் மிருதுளா அந்த பூமாதேவியையும் மிஞ்சிட்டாள்
முதல் நாவலை வெற்றிகரமாக முடித்ததற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள், தஸீன் பாத்திமா டியர்
மீண்டும் இதே போல அடுத்ததொரு அழகிய நாவலை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top