• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இறைப்பற்று என்றால் என்ன?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Divya suge

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2018
Messages
291
Reaction score
864
Location
Tindivanam
#இறைப்பற்று_என்றால்_என்ன_?? ( என்னையா கேனத்தனமான ஓர் கேள்வி என்றாலும், அதை மேலோட்டமாகவே கடந்து செல்கிறோம் என்ற மெய்யை உணர்வே இப்பதிவு !! )

இறைப்பற்று என்றால் மேலோட்டமாக நமது பதில் இறைவன் மீது நமக்குள்ள பற்று என்றும், அந்த பற்றி வளர்க்க ? மேலும்மேலும் இறுக பிடிக்க ? அவரவர் தோன்றுவதை செய்துகொண்டு இருக்கிறோம் !!

உதாரணமாக
வேதம் படிப்பது, திருமுறை பாடுவது, அனுச்டங்கம் செய்வது, தீட்ச்சை பெற்று பூஜிப்பது, வணங்குவது, மந்திர ஜெபம் செய்வது ? தியானம் இருப்பது ? ஆலயபிரவேசம் ?? என்று

ஆளுக்கு ஓர் வழியில் இறைவனை பற்றுவது என்றும் !!

இப்படி இருந்தால் தான் அந்த பற்றும் பயன் தரும் என்றும் ??

அப்படி செய்தால் தான் இறைவனை இன்னும் இறுக்கமாக பற்ற முடியும் ?? இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் ??

நம் கருதல் யாவும் இறைவனை பற்றி இருப்பதை ? இன்னுமின்னும் நெருங்குவதை ?? கலப்பதை ?? ஓர் குறியாக கொண்டு பயணிக்கிறது இறைநாடிய பயணம் ??!!

ஆனால்
இக்கருத்தில் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள்

ஏதோ இறைவன் உங்களை எல்லாம் உதறிவிட்டு இருப்பதாக ??

நீங்கள் பற்றும்படியே உங்களை விட்டு இருப்பவனாக ??

அதிலும் லேசாக பற்றுவது ? அழுத்தமாக பற்றுவது ? என்றும் !!??

எங்கோ தூரமாக இருப்பவனை நெருங்குவது போலவும் !!

நீங்களே பாவித்துகொண்டே இருக்கிறீர்கள் !!

#உண்மையில் #இறைப்பற்று என்பது ??

நீங்கள் இறைவனை பற்றுவது இல்லை ??????????

உங்களை எப்படியெல்லாம் பற்றியிருக்கான் என்று உணர்ந்து !!?? கலந்தே இருப்பவனை நினைந்து !!?? அனுபவிப்பதே ஆகும் !!

உங்களை தேடி ஓடி நாடி வந்து பற்றும்படி கூட விடாதவனே இறைவன் !!

அவன் இன்றி ஏதுமில்லாத போது !!
பற்று என்ற ஒன்றை நீங்களாக உருவாகி அவனை பற்ற ?? அவனின்றி உங்களால் முடியுமா ??

அவன் புவியின் ஈர்ப்பை உங்கள் பற்றி கொண்டு இருப்பதாலேயே நீங்கள் இந்த பூமியின் மீது ஓடுகிறீர்கள், ஆடுகிறீர்கள், குதிக்கிறீர்கள் !!

உங்களை எப்படி பற்றி இடைவிடாது !!
இமைக்கின்ற பொழுது கூட நீங்காது !!
நீங்களே மறந்தாலும் உங்களுள் கலந்தே இருந்து !!

உங்களை உங்களாக காட்டி !! வழிநடத்தி !! காத்து !! மறைத்து !!

உங்களால் / உங்களுக்காவும் அழிக்க / அளிக்க வேண்டியதை செய்து !!

அருளி அரவணைத்து பற்றிக்கொண்டு இருப்பதாலேயே இருக்கும் நாம் ???????

இறைப்பற்றை உணர்வோமோ ?? அனுபவிப்போமோ ??

இப்படி அனுபவிக்க தொடங்க எதிலும் என்னோடு எதுவுமாகி பிரபஞ்சத்தையே ஆள்பவன் இருக்க !!?? என்று துணிவும், தைரியமும், தெரியவேண்டியத்தை தெரியவும், எதற்கும் எத்தகைகன் இருக்கிறான் என்ற பரவசம் உங்களை அவனுள் கரைவிக்கும் !!

இதுவே #இறைப்பற்று என்று அறியாத இவனுள் அறிவித்தவன் திருவடி போற்றி !!

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

நன்றி
திரு.குமாரசூரியர் அங்கமுத்து.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top