• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இலக்கணத்தில் கலக்கனும்!! - போட்டி அறிமுகம் & விதிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் மக்களே...

நம்ம ‘தள நாள்’ (அதாங்க, ‘சைட் டே’!) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியா உங்களுக்கெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப புடிச்ச்ச்ச்ச்ச, உங்கள் எலும்பின் எலும்பான, உசிருக்குசிரான இலக்கணத்துல ஒரு போட்டி- (ஏ... ஏ... ஓடாதீங்க... ஓடாதீங்க... நில்லுங்க...) நடத்தலாம்னு தென்றல் விரும்பினாங்க (ஹி ஹி! நான்தான் அவங்கள நொச்சு பண்ணி இத நடத்துறேன்!)

சரி, கைல இருக்குற தக்காளி முட்டையலாம் போட்டுட்டுக் கையக் கழுவிட்டு வாங்க...

போட்டி ரொம்ப எளிது!
IMG_20200125_072309.jpg
(”நீங்க நம்புலேனாலும் அதேன் நெசம்!”)

நம்ம தளத்துல நான் முன்னாடி எழுதின ‘கற்க கற்கண்டாய்’ இலக்கணப் பாடங்களை நல்லாப் படிச்சுப்பீங்களாம்...

அதுலேர்ந்து நான் கேள்விகள் செட் பண்ணுவேனாம்...

போட்டி அன்னிக்குக் காலைல கேள்விகளை வெளியிடுவோமாம்...

நீங்க அன்னிக்கு இரவுக்குள்ள விடைகளை எனக்கு தனியா (செய்தி / மின்னஞ்சல்ல) அனுப்புவீங்களாம்...

ஜெயிக்குறவங்களுக்குப் பரிசு தருவோமாம்...

(சரியான விடைகளுக்கான மதிப்பெண், விரைவாக அனுப்புவதற்கான மதிப்பெண் இரண்டும் சேர்த்து வெற்றியாளர் முடிவுசெய்யப் பெறுவர்!)

தயாரா?

இங்க ஒரு மாதிரி வினாத்தாள் தருகிறேன், பிரபரேஷனுக்கு யூஸ் பண்ணிக்கோங்க:

விதிமுறைகள்:
1. வினாத்தாளில் மொத்தம் மூன்று பகுதிகள் இருக்கும்.
பகுதி - அ: ஒற்றுப்பிழைகள்
பகுதி - ஆ: சொற்பிழைகள்
பகுதி - இ: தொடரமைப்புப் பிழைகள்

2. சரியான விடைகளுக்கு 1 மதிப்பெண் (தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது)

3. எல்லா வினாக்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சரியான விடை மட்டுமே இருக்கும்படியே அமைக்கப்பட்டிருக்கும் (எனவே, இருவேறு நபர்களின் விடைகளை மதிப்பெண்ணிடுதலுக்கிடையே குழப்பம் வருவதற்கான வாய்ப்பு இருக்காது!)

****மாதிரி வினாத்தாள்****

பகுதி - அ: கீழ்காணும் தொடர்களில் உள்ள ஒற்றுப்பிழைகளை நீக்கி எழுதுக (ஒரு தொடரில் ஒரு பிழை மட்டுமே இருக்கும்!)

1. முகிலன் சென்னைக்கு சென்று சேர்ந்தான் (விடை: ‘சென்னைக்கு*ச்* சென்று’ - வல்லினம் மிகும்!)
2. சென்னைக் கல்லூரி / சென்னைகல்லூரி - எது சரி? காரணத்தோடு உரைக்க.

பகுதி - ஆ: கீழ்காணும் தொடர்களில் உள்ள எழுத்துப்பிழைகளை நீக்கி எழுதுக (ஒரு தொடரில் ஒரு பிழை மட்டுமே இருக்கும்!)
3. மரத்தை அறத்தால் வெட்டினார்கள் (விடை: ‘அரத்தால்’)
4. மணதில் உறுதி வேண்டும் என்றார் பாரதியார் (விடை: ‘மனதில்’)

பகுதி - இ: கீழ்காணும் தொடர்களில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக (ஒரு தொடரில் பல பிழைகள் இருக்கலாம், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மதிப்பெண்!)
5. கண்ணன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தனர், அப்போது அவை ஓடத் தொடங்கியது. (விடை: ‘மேய்த்துக்கொண்டிருந்தான்’ (கண்ணன் - ஒருமை), ‘அவை ஓடத் தொடங்கின’ (அவை - பன்மை)!) (இரண்டு பிழைகள் - 2 மதிப்பெண்!)

****
 
Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
வணக்கம் மக்களே...

நம்ம ‘தள நாள்’ (அதாங்க, ‘சைட் டே’!) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியா உங்களுக்கெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப புடிச்ச்ச்ச்ச்ச, உங்கள் எலும்பின் எலும்பான, உசிருக்குசிரான இலக்கணத்துல ஒரு போட்டி- (ஏ... ஏ... ஓடாதீங்க... ஓடாதீங்க... நில்லுங்க...) நடத்தலாம்னு தென்றல் விரும்பினாங்க (ஹி ஹி! நான்தான் அவங்கள நொச்சு பண்ணி இத நடத்துறேன்!)

சரி, கைல இருக்குற தக்காளி முட்டையலாம் போட்டுட்டுக் கையக் கழுவிட்டு வாங்க...

போட்டி ரொம்ப எளிது!
View attachment 21305
(”நீங்க நம்புலேனாலும் அதேன் நெசம்!”)

நம்ம தளத்துல நான் முன்னாடி எழுதின ‘கற்க கற்கண்டாய்’ இலக்கணப் பாடங்களை நல்லாப் படிச்சுப்பீங்களாம்...

அதுலேர்ந்து நான் கேள்விகள் செட் பண்ணுவேனாம்...

போட்டி அன்னிக்குக் காலைல கேள்விகளை வெளியிடுவோமாம்...

நீங்க அன்னிக்கு இரவுக்குள்ள விடைகளை எனக்கு தனியா (செய்தி / மின்னஞ்சல்ல) அனுப்புவீங்களாம்...

ஜெயிக்குறவங்களுக்குப் பரிசு தருவோமாம்...

(சரியான விடைகளுக்கான மதிப்பெண், விரைவாக அனுப்புவதற்கான மதிப்பெண் இரண்டும் சேர்த்து வெற்றியாளர் முடிவுசெய்யப் பெறுவர்!)

தயாரா?

இங்க ஒரு மாதிரி வினாத்தாள் தருகிறேன், பிரபரேஷனுக்குப் யூஸ் பண்ணிக்கோங்க:

விதிமுறைகள்:
1. வினாத்தாளில் மொத்தம் மூன்று பகுதிகள் இருக்கும்.
பகுதி - அ: ஒற்றுப்பிழைகள்
பகுதி - ஆ: சொற்பிழைகள்
பகுதி - இ: தொடரமைப்புப் பிழைகள்

2. சரியான விடைகளுக்கு 1 மதிப்பெண் (தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது)

3. எல்லா வினாக்களும் குறிப்பிட்ட ஒரு சரியான விடை மட்டுமே இருக்கும்படியே அமைக்கப்பட்டிருக்கும் (எனவே, இருவேறு நபர்களின் விடைகள், மதிப்பெண்ணிடுதலுக்கிடையே குழப்பம் வருவதற்கான வாய்ப்பு இருக்காது!)

****மாதிரி வினாத்தாள்****

பகுதி - அ: கீழ்காணும் தொடர்களில் உள்ள ஒற்றுப்பிழைகளை நீக்கி எழுதுக (ஒரு தொடரில் ஒரு பிழை மட்டுமே இருக்கும்!)

1. முகிலன் சென்னைக்கு சென்று சேர்ந்தான் (விடை: ‘சென்னைக்கு*ச்* சென்று’ - வல்லினம் மிகும்!)
2. சென்னைக் கல்லூரி / சென்னைகல்லூரி - எது சரி? காரணத்தோடு உரைக்க.

பகுதி - ஆ: கீழ்காணும் தொடர்களில் உள்ள எழுத்துப்பிழைகளை நீக்கி எழுதுக (ஒரு தொடரில் ஒரு பிழை மட்டுமே இருக்கும்!)
3. மரத்தை அறத்தால் வெட்டினார்கள் (விடை: ‘அரத்தால்’)
4. மணதில் உறுதி வேண்டும் என்றார் பாரதியார் (விடை: ‘மனதில்’)

பகுதி - இ: கீழ்காணும் தொடர்களில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக (ஒரு தொடரில் பல பிழைகள் இருக்கலாம், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மதிப்பெண்!)
5. கண்ணன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தனர், அப்போது அவை ஓடத் தொடங்கியது. (விடை: ‘மேய்த்துக்கொண்டிருந்தான்’ (கண்ணன் - ஒருமை), ‘அவை ஓடத் தொடங்கின’ (அவை - பன்மை)!) (இரண்டு பிழைகள் - 2 மதிப்பெண்!)

****
எங்க பதிலால் உங்க தமிழ மறக்காம இருந்தா சரி ண்ணா
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
தாங்களும், தங்களுடைய எழுத்துக்களும் இப்போது தான் எமக்கு அறிமுகம்.... தமிழின் மீதான பற்றினால் கலந்துக் கொள்ள ஆர்வம். தங்களுடைய 'கற்க கற்கண்டாய் ' வாசிக்க வழிகாட்டவும்.
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இதென்னடா தமிழுக்கு வந்த சோதனை ??? தப்பே இல்லை ஆனாலும் தப்பு கண்டுபிடிக்கிற ஆளுங்க தப்பு இருந்தா கண்டுபிடிக்க மாட்டோமா ????? ஆனா தப்பை தப்பா கண்டுபிடிக்க போறோமா இல்லை சரியா கண்டுபிடிக்க போறோமானு தான் தெரியல ????. ஆசிரியரே எதுக்கும் தவறுகளை எளிதாகவே கொடுங்க ???.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top