• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இலிங்க புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி…

இலிங்கம் என்பது ஒரு குறியீடாகும். பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஒரு விதையாகும். பரப்பிரம்மம், அலிங்கம் என்று சொல்லப்படும் நாமம், ரூபம் கடந்த பொருளாகும். நிர்குணமானதாகும். முக்குணங்களின் வடிவமாகிய பிரகிருதியுடன், நிர்குணப் பிரம்மம் தொடர்பு கொள்ளும் பொழுது, வடிவமற்றதாகிய இப்பிரகிருதி வடிவுடைய இப்பிரபஞ்சமாகத் தோற்றுவிக்கப்படுகிறது. இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலமாகிய பிரகிருதி மகாதேவனுடன் தொடர்பு கொண்டு தோற்றுவிக்கப்படுகிறது.

“பரப்பிரம்மம் நிர்குனமானதாய், லிங்க வடிவையும் தாண்டி இருப்பினும், அந்தப் பரப்பிரம்மமே லிங்கம், பிரகிருதி ஆகிய அனைத்திற்கும் மூலமாய் அமைந் துள்ளது. அலிங்கம் என்பது சிவனையே குறிக்கும். அந்த அலிங்கமே சிவனோடு தொடர்புடைய லிங்கமாகி அந்த லிங்கத்தோடு தொடர்புடையது சைவம் எனப்படும்.” (லிங்கபுராணம் 1-3-)

“லிங்கம் என்ற சொல்லுக்கு தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு, தனித்து பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கி இருப்பது என்பது பொருளாகும். மகாதேவியே மாபெரும் பெண் தெய்வமாவாள். பிரகிருதியே பிரபஞ்சத்தின் விதைகளைத் தாங்கி நிற்பவள் லிங்கபுராணம் 1-19-16)

இப்புராணம் இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டது. சிவ வழிபாட்டுக்காரர்களுக்கு இப்புராணம் ஒரு கையேடாகும். இப்புராணம் சிவமூர்த்தத்தை வழிபடுவதற்குரிய வழிகளைச் சொல்வதுடன் சிவனுடைய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து வடிவங்களையும் உள்ளடக்கியதாகும். பிரபஞ்சங்களின் உற்பத்தி அழிவு மறுஉற்பத்தி ஆகிய நேரங்களில் சிவம் இந்த ஐந்து வடிவங்களில் தேவையானதை மேற்கொண்டு பிரம்மனுக்கு ஆணையிட்டுப் படைப்பைத் தொடங்குமாறு ஏவுகிறது. இது விஷ்ணுவை, சிவனுக்குக் கீழ் பணிபுரிபவராகக் காட்டுகிறது. இன்று 11,000 பாடல்களுடன் காணப்படும் மூலமாக இருந்த பழைய லிங்க புராணம் இழக்கப்பட்டதை ஈடுசெய்யும் முறையில் அமைந்துள்ளதாகும். மூல புராணத்தில் காணப்படாத பல தாந்திரீக வித்தைகள் இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளன.

பல நூல்களில் லிங்கபுராணத்தில் இருந்து இன்றுள்ள லிங்க புராணத்தில் காணப்படவில்லை. ஆதலால்தான் மூல லிங்க புராணம் இழக்கப்பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்ப இந்தப் புதிய லிங்க புராணம் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணங்களைப் படிக்கப் போகும் நாம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் வணங்கிவிட்டுத்தான் புராணங்களைப் படிக்க வேண்டும். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்பொழுது சுதா ஜாதியைச் (சத்திரியத் தகப்பனுக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவர்) சேர்ந்த லோமஹர்ஷனர் அங்கே வந்தார். பல தீர்த்தங்களில் நீராடிவிட்டு உலகைச் சுற்றி வரும் நாரதரும் எதிர்பாராதவிதமாக அங்கே வந்தார். முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து, இப்புராணங்களை எல்லாம் இயற்றிய வேதவியாசரிடம் நேரடியாகப் பாடங் கேட்கும் பாக்கியம் செய்தவர் நீங்கள். ஆகவே நாரதரும் இங்கிருக்கும் நேரத்தில் இலிங்க புராணத்தை எங்கட்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்:

பிரபஞ்சம்

ஆதியில் பரப்பிரம்மம் ஒற்றையாக இருந்தது. எங்கும் எதுவும் இல்லை. அது தன்னைத்தானே மூன்றாகப் பிரித்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவெடுத்தது. இதை அடுத்து எங்கும் நிறைந்த நீர் அதில் தோன்றி முட்டை, பிரம்மன் படைப்பைத் துவங்குதல், காலப்பிரமாணம், யுகங்களின் அளவு ஆகியவை ஏனைய புராணங்களைப் போலவே இங்கும் உள்ளன. இதில் புதிதாகக் கண்டுள்ள செய்தி வருமாறு உற்பத்தி துவங்கு முன்னர் தனது வேலைப் பளு மிகுதியாக இருப்பதால் தனக்கு உதவி செய்யுமாறு பிரம்மன் சிவனை வேண்டிக்கொண்டார். சரி என்று ஒப்புக்கொண்ட சிவன் தன்னைப் போலவே பதினோரு பேரைப் படைத்தார். இவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்த பிரம்மன் அதிர்ச்சி அடைந்து, நிறுத்துங்கள், உம்மைப் போல அழிவில்லாத சிரஞ்சீவிகளைப் படைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளவில்லை. நான் கேட்டது அழிகின்ற உடம்போடு கூடிய ஜீவராசிகளே ஆகும்’ என்று பிரம்மா சொல்ல, சிவன் படைப்புத் தொழிலில் உதவி செய்வதை நிறுத்திக் கொண்டார். என்றாலும் இவர் ஏற்கெனவே படைத்துவிட்ட பதினோரு சிரஞ்சீவிகளும் ஏகாதச ருத்திரர்கள் என்ற பெயரில் நிலைத்து விட்டனர்.

இதனை அடுத்து பிரம்மன் சனகன், சனந்தா, சனாதன ஆகிய மூன்று மகன்களையும் பெற்றார் என்று இப்புராணம் கூறுகிறது. (சனத்குமாரன் என்ற நான்காவது பிள்ளையையும் பெற்றான் என்பதை மற்ற புராணங்கள் சொல்லுகின்றன) இதன் பிறகு ஒன்பது முனிவர்கள், சுயம்பு மனு ஆகியவரின் தோற்றம் பற்றி ஏனைய புராணங்கள் போலவே இலிங்க புராணமும் பேசுகிறது.

யோகம்

யோகத்தின் இயல்பு, அதன் இலக்கணம், பயிற்சி முறை ஆகியவற்றை ஏனைய புராணங்களைப் போலவே இலிங்க புராணமும் கூறுகிறது. சிவனுக்குப் பசுபதி என்ற பெயர் உண்டு என்பதும், சிவன் கற்பித்த முறையில் யோகத்தைப் பயில்வது பாசுபத யோகம் எனப்படும். ஒவ்வொரு கல்பத்திலும் இந்த யோகத்தைக் கற்பிப்பதற்காக சிவன் யோகேஸ்வரன் என்ற பெயரில் வடிவெடுக்கிறார். இதுவரை நடை பெற்ற 28 கல்பங்களில் ஒவ்வொரு கல்பத்திற்கும் சுவேதா யோகேஸ்வரா, சுதார யோகேஸ்வரா, மதன யோகேஸ்வரா என்ற வெவ்வேறு பெயர்களுடன் சிவன் வடிவெடுக் கிறார். ஒவ்வொரு முறை இவர் வடிவெடுக்கும் பொழுதும் இவருக்கு நான்கு சீடர்கள் உள்ளனர். ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்தில் உள்ள துவாபரயுகத்தில் வேத வியாசர் என்ற பெயருடன் சிவன் வடிவெடுக்கிறார். 28 வேத வியாசர்களுள் சில பெயர்கள் வருமாறு:- சத்யா, பார்கவா, கிராது, அங்கீரா, வசிஷ்டா, அருணி ஆகியவை ஆகும்.

இலிங்கம்

லோமஹர்ஷனர் மற்ற முனிவர்களுக்குக் கூறிய இலிங்கம் பற்றிய கதை பிரம்மா, விஷ்ணு இருவரும் இலிங்கத்தின் அடி முடி தேடிய கதை முன்னரே சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள புதிய பகுதி வருமாறு: இலிங்கத்தின் இடையே தோன்றிய சிவன் படைக்கும் தெய்வ மாகிய பிரம்மனும் காக்கும் தெய்வமாகிய விஷ்ணுவும், அழிக்கும் தெய்வமாகிய நானும் ஒரே பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆவோம். நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளுதல் தேவை இல்லை. இலிங்கத்தில் இருந்துதான் அனாதியான முட்டை தோன்றிற்று' என்று கூறிவிட்டு, இலிங்கத்தில் தோன்றிய சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவருக்கும் சிவகாயத்திரி உபதேசம் செய்தார்.

பிரம்மனும், விஷ்ணுவும் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பிரம்மாவை மட்டும் விஷ்ணுவின் பிள்ளை கூறுகிறார்களே, அது ஏனென்று கேட்க, லோம ஹர்ஷனர் கூற ஆரம்பித்தார்.

'முன்னொரு காலத்தில், பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந்திருந்தது. தண்ணின் மேல் படுத்திருந்த நாராயணன் பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம்முடைய கொப்பூழைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு மாபெரும் தாமரைப் பூ கொப்பூழினின்று வெளிப்பட்டது. அந்த இதழ்களின் நடுவே பிரம்மன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிலகாலம் கழித்து அந்தத்
தாமரையினின்று இறங்கி வந்து விஷ்ணுவைப் பார்த்து ஆச்சரியத்தோடு நின்றார். விஷ்ணு அவரைப் பார்த்து, நீ யார் என்று எனக்கு தெரியவில்லை, தெரிவி என்றார். அப்பொழுது பிரம்மன் நான்தான் சர்வ வல்லமை உள்ள பிரம்மன். இவ்வுலகம் முழுவதையும் படைக்கிறவன் என்று சொல்லிவிட்டு நீங்கள் யார் என்று கேட்டான். உடனே விஷ்ணு என் பெயர் விஷ்ணு. உன்னை உட்பட அனைத்தையும் படைப்பவன் நான்தான். நீ எனக்கு மகன் முறை ஆவாய் என்றார். அதைக் கேட்ட பிரம்மன், கோபம் கொண்டு நானே அனைத்துமாய் இருக்கும் பொழுது நீ எப்படி எனக்குத் தந்தையாக முடியும். வேண்டுமானால் என்னுள் புகுந்து பாருங்கள் என்றார். உடனே விஷ்ணு, பிரம்மன் வாய் வழியாகப் புகுந்து உள்ளே சென்றபொழுது, பல்வேறு உலகங்கள், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிரம்மன் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டான். அதைச் சுற்றிப் பார்க்க விஷ்ணுவுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒருவாறு யாவற்றையும் பார்த்து முடித்து, மறுபடியும் வாய்வழியே விஷ்ணு வெளியே வந்துவிட்டார். பிரம்மனைப் பார்த்து, நீ என் வயிற்றுக்குள் சென்று பார்த்து வா என்றான். அப்படியே பிரம்மன் விஷ்ணுவின் வாய்வழியே புகுந்து உள்ளே சென்றான். அங்கே தான் படைத்ததைப் போன்று பல உலகங்கள் இருந்ததைக் கண்டார். முழுவதும் சுற்றிப் பார்க்க பிரம்மனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. முடிவில் அவர் வெளியே வர நினைத்தபொழுது, வெளியே வரக்கூடிய வாயில்கள் அனைத்தையும் விஷ்ணு மூடி விட்டான். அந்நிலையில் வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் கொப்பூழ் வழியாக வெளியே வந்த பிரம்மனுக்கும், விஷ்ணு வுக்கும் பெரும் சண்டை மூண்டது. இவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இருவரும் அதிர்ச்சியுறும்படியாக அதிர்வுகள் தோன்ற இருவரும் நின்ற நிலையில் ஆட்டம் கண்டனர். பிரம்மனுக்கு இது புதிய அனுபவம் ஆதலால், ஏன் இப்படிக் கொப்பூழை ஆட்டி எனக்குத் துன்பம் தருகிறாய் என்று விஷ்ணுவிடம் கேட்டார். உடனே விஷ்ணு ஆட்ட வில்லை. சிவபெருமான் வருகிறார் என்று தெரிகிறது. அவர் வருவதால் ஏற்படுகின்ற அலைஅலையான அதிர்வுகள் நம் இருவரையும் நிலைகொள்ளாமல் ஆட்டி வந்தது என்றார். இந்த அதிர்ச்சி தாங்காத பிரம்மா, சிவன் யார் எனக் கேட்க விஷ்ணு, நாம் இருவரும் சிவனைத் தியானம் செய்வோம் என்று கூறி தியானத்தில் ஈடுபட்டபோது, சிவன் அவர்கள் எதிரே தோன்றினார். உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று சிவன் கேட்க, விஷ்ணு தங்களிடத்தில் நீங்காத பக்தி வேண்டும் என்று விடை கூறினார். தந்தேன் என்று கூறிய சிவன், பிரம்மனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பிரம்மன் "தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். இவ்வரத்தைக் கேட்டுக் கொண்ட சிவனும், அவ்வாறே ஆகுக' என ஒப்புக்கொண்டார்.

பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கியவுடன், அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் அவன் விரும்பியபடி இல்லை. படைப்பு தன் விருப்பப்படி இல்லை என்பதை அறிந்தவுடன் பிரம்மனுக்கு எல்லையில்லாத துயரம் உண்டாயிற்று. அத்துயரத்தின் வெளிப்பாடே ருத்திரன் ஆவான்.

தேவதாரு: தேவதாரு மரம் என்பது மரங்களில் சிறப்பான ஒன்று. முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் தேவதாரு மரங்கள் நிறைய வளர்ந்திருந்தன. அக்காட்டில் முனிவர்கள் பலர் தத்தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து வந்தனர். இவர்களின் தியானத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அம்முனிவர்களைப் பரீட்சை செய்ய விரும்பினார். அதனால் அழகற்ற உருவம் ஒன்றினைப் பெற்று, கரிய நிறத்துடனும் கொடிய கண்களுடனும் அவர்கள் முன் தோன்றினார். முனிவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சிவ பெருமானைத் தொடர்ந்து செல்லலாயினர். ஆனால் முனிவர்களோ அவ்வுருவத்தை ஏளனமாகவும், கடுமையான சொற்கள் கூறியும் விரட்ட, சிவபெருமானும் அவ்விடத்தி னின்று மறைந்தார். முனிவர்கள் உடனே பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூற, பிரம்மா வெகுண்டு “முட்டாள்களே! நீங்கள் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை
உணரவில்லையா? வந்தது வேறு யாருமல்லர், சிவபெருமானேதான். உங்களை சோதனை செய்யவே அப்படி ஒரு வடிவம் எடுத்து உங்கள் விருந்தினனாக வந்தார். விருந்துண்ண வந்தவர்களை அன்புடன் உணவிட வேண்டுமே தவிர, அவர்கள் அழகான வர்களா இல்லையா என்று பார்த்து உபசரிக்கக் கூடாது. உங்களுக்குச் சுதர்சனனின் கதை தெரியுமா? அதை இப் பொழுது கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, முனிவர்களுக்குக் கதை சொல்லத் துவங்கினார்.

சுதர்சன முனிவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தம் மனைவியிடம், வரும் விருந்தினர்களை எவ்வாறு அன்புடன் உபசரிக்க வேண்டும் என்றும், விருந்தினர்களை உதாசீனப் படுத்துவது சிவபெருமானை அவமானப்படுத்துவது போலாகும் என்றும், விருந்துண்ண வருபவர் ஒவ்வொருவரும் சிவபெருமான் என்றே எண்ண வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஒரு சமயம், தர்ம தேவதை சுதர்சன முனிவரையும் அவர் மனைவியையும் பரீட்சை செய்து பார்க்க விரும்பினார் பிராமண வடிவம் கொண்டு, அவர்கள் வீட்டிற்கு வந்தார் முனிவர் வீட்டில் இல்லாத பொழுதும், அவர் மனைவி தர்ம தேவதையினை நன்கு உபசரித்து அன்புடன் உணவு படைத்தார். மிகவும் மனம் மகிழ்ந்த தர்ம தேவதை அவ்விருவரும் சொர்க்கம் செல்ல ஆசி வழங்கினார்.

இக்கதையினை பிரம்மன் கூறக்கேட்ட முனிவர்கள், தாம் சிவபெருமானை அவமதித்ததை நினைத்து வருந்தி, அவர் மனம் மகிழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் சுவேதாவின் கதையைக் கூறத் தொடங்கினார்.

சுவேதா முனிவரின் கதை: முன்னொரு காலத்தில் சுவேதா என்ற முனிவர் சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டிருந்தார். எந்நேரமும் சிவபெருமானையே வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையைவிட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. யமதேவன் சுவேதா முனிவர் முன் தோன்றினான். யமனைக் கண்டு சுவேதா முனிவர் சிறிதும் மனம் கலங்கவில்லை. சிவபெருமானை வணங்கினால், இறப்பினால் எத்துன்பமும் ஏற்படாது என்று நினைத்து, சிவனை வழிபடத் துவங்கினார். யமதேவன் சுவேதா முனிவரைப் பார்த்து, "உன்னுடைய நேரம் இப்பூமியில் முடிந்து விட்டது. இனி நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும், சிவனை வணங்குவதால் எப்பயனும் இல்லை, வா. சீக்கிரம் போக வேண்டும்” என்றான். அவரைக் கெகாண்டு செல்வதற்காக எல்லா ஆயத்தங்களும் செய்யும் பொழுது, சிவபெருமான் பார்வதி, நந்தி மற்றும் சிவகணங்களுடன் அங்கு வந்தார். சிவனுடைய பார்வை பெற்றவுடன் யமதேவன் மயக்கமுற்று வீழ்ந்து மரணமடைந்தான். சுவேத முனிவர் காப்பாற்றப் பெற்றார்.

இக்கதையைக் கூறி முடித்த பிரம்மா, முனிவர்களைப் பார்த்து, சிவபெருமானை வணங்குவதால் ஏற்படும் பயனைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? உடனே சென்று சிவ பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். முனிவர்களும் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு வருடம் கடுமையான தவத்திற்குப் பிறகு அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார். கடுமையான விழிகளும், சாம்பலை உடல் மீது பூசிக்கொண்டு, அழகற்ற உருவத்துடன் தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டில் இங்கும் அங்கும் உலாவினார். முனிவர்களும் இம்முறை சிவபெருமானைத் தெரிந்து கொண்டு தம் மனைவியருடன் மலர்களால் அர்ச்சித்தனர். சிவபெருமான் மனமகிழ்ந்து அம்முனிவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறினார். அவற்றுள், சாம்பல் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் அவர்கட்கு அறிவுரை கூறினர்.

ததீசி கதை: ததீசி என்ற பிராமணனும், கபா என்ற அரசனும் நண்பர்களாய் இருந்தனர். கபா சத்திரியனாகவும், ததீசி பிராமணனாகவும் பிறந்திருந்தாலும், இருவரும் இணையற்ற அன்பு பூண்டு வாழ்ந்து வந்தனர். ஒருமுறை பிராமணன் உயர்ந்தவனா, சத்திரியன் உயர்ந்தவனா என்ற வாதம் இவர்களுக்குள் தோன்றி அந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறிவிட்டது. ததீசி என்ற பிராமணன் தான் பிராமணன் என்ற கர்வம் கொண்டு, தான் யாரை வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தான். கபாவைப் பொறுத்தமட்டில், முன்னொரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவி செய்த காரணத்தினால் இந்திரனிடத்து இருந்த வஜ்ராயுதம் கபாவுக்குப் பரிசாகக் கிடைத்தது. அந்த ஆயுதத்தைக் கொண்டு எதிரே இருந்த பிராமணன் மண்டையில் அரசன் அடித்தான். பிராமணன் உடம்பு இரண்டாகப் பிளந்தது. ஆனால் அவன் சாவதற்கு முன் தன்னைக் காப்பாற்றும்படி சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டு இறந்தான். இறந்தவர்களை எழுப்பும், மிருத்த சஞ்சீவினி என்ற மந்திரம் சுக்ராச்சாரியார் ஒருவருக்கே தெரியும். பிராமணன் சாகுமுன், சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டபடியால் அங்கு தோன்றிய அசுரகுரு இரண்டாகப் பிளந்து கிடந்த பிராமணன் உடம்பை ஒன்றாக ஆக்கி அதற்கு உயிரும் கொடுத்தார். அம்மட்டோடு இல்லாமல், பிராமணரே! மிருத்த சஞ்சீவினி மந்திரத்தை சிவனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். நீயும் சிவனை நோக்கித் தவம் செய்து இம்மந்திரத்தைக் கற்றுக் கொள்வாயாக’ என்று கூறினான். சுக்ராச்சாரியாரின் அறிவுரையைக் கேட்ட ததீசி சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவன் எதிர்ப்பட்டவுடன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மூன்று வரங்கள் பெற்றுக் கொண்டான். அவையாவன: முதல் வரத்தின்படி ததீசா பெரும் செல்வனாக ஆயினான், இரண்டாவது வரத்தின்படி ததீசாவின் எலும்புகள் வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றன. மூன்றாவது வரத்தின்படி யாரும் தன்னைக் கொல்ல முடியாத சக்தியையும் பெற்றான்.

இவ்வரங்களைப் பெற்ற ததீசி கபாவிடம் சென்று அவனை எட்டி உதைத்தான். உடனே கபா தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தை ததீசியின் மார்பை நோக்கி அடித்தார். ஆனால் என்ன அதிசயம்! வஜ்ராயுதம் இரும்பில் பட்டுத் தெறித்தது போல், கணிரென்ற சப்தத்துடன் கீழே விழக் கண்டான். ததீசியிடம் தன் கைவரிசை செல்லாது என்பதை அறிந்த கபா, விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். விஷ்ணு தோன்றியவுடன், ததீசியை வெல்வதற்குரிய ஆயுதம் ஒன்று வேண்டும் என்று கபா கேட்டவுடன், விஷ்ணு ததீசி சிவனிடம் பெற்ற வரங்கள் காரணமாக அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான் ஏழை பிராமண வடிவத்தில் சென்று ததீசியிடம் ஏதாவது செய்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் பிச்சை ஏற்கப் போகும் பிராமண வடிவத்தில் ததீசியிடம் வந்தான் விஷ்ணு. இவருடைய சூழ்ச்சியை எளிதாக அறிந்து கொண்ட ததீசி, “பிராமண வடிவத்தில் வருகின்ற விஷ்ணுவே வருக உம்மையும் உம்முடைய வேஷத்தையும் என்னால் கண்டு கொள்ள முடியாதென நினைத்தீரா? அல்லது பிராமண வடிவத்தில் வரும் தாம் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன் என்று நினைத்தீரா.”

“விஷ்ணுவே! உம்முடைய உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமெனக் கோரும், பார்க்கலாம் என்றான். உடனே விஷ்ணு, ததீசி, நான் கடாவைக் கூட்டிக் கொண்டு இங்கு வருகிறேன். அவனைக் கண்டவுடன், எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல் என்று சொல்லி விட்டுப் போன விஷ்ணு, உடனடியாக கடாவை அழைத்துக் கொண்டு ததீசியின் முன் வந்து நின்றான். ததீசி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நான் ஒரு சிவபக்தன், என்னை யாராலும், எந்த ஆயுதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றான். இதைக் கேட்ட விஷ்ணு கோபம் அடைந்து சுதர்சன சக்ரத்தை விட அது ததீசியை ஒன்றும் செய்யாமல் பூமியில் விழுந்தது. இந்த நிலையில் ததீசி 'விஷ்ணுவே! ஏன் சும்மர் இருக்கிறீர். உம்முடைய பிரம்மாஸ்திரம் விட்டுப் பாரும். விஷ்ணு பிரம்மாஸ்திரம் விட அதுவும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது மற்ற தேவர்கள் எல்லாம் துணைக்கு வந்து, ததீசியின் மேல் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகித்தனர். அவை அனைத்தும் ததீசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாகச் சலித்துப் போன ததீசி கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து தேவர்கள் மேல் விட்டான். அந்தத் துரும்பு சிவனின் பல திரிசூலங்களாக மாறி, தேவர்களை விரட்டத் துவங்கியது.
 
sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
தங்களுடைய அஸ்திரங்கள் அனைத்தும் ஒன்றும் செய்ய முடியாத போது, விஷ்ணு தன்னைப் போலவே தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான விஷ்ணுக்களை உண்டாக்கினார். ததீசி அவை அனைத்தையும் ஒரு நொடியில் எரித்து விட்டான். வேறு வழியில்லாமல் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகில் உள்ள சராசரங்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதைக் காட்டினார். இதனைக் கண்டு பயப்படாத ததீசி, "விஷ்ணுவே! இந்த மாயையைக் கண்டு பயப்படுகிற முட்டாள் என்று என்னை நினைத்தாயா? இப்பொழுது நீ என்னைப் பார். உன்னுள் அடங்கி இருக்கிற அனைத்தும் என்னுள்ளும் இருப்பதைக் காண்பாய். ஆகவே இந்த முட்டாள்தனமான விளையாட்டுக்களை எல்லாம் விட்டு விட்டு தைரியம் இருந்தால் என்னுடன் போர்புரிய வா” என்று அழைத்தான்.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்ட பிரம்மா, தான் தலையிட்டு “விஷ்ணுவே, சிவபக்தனாகிய இவனை உம்மால் வெல்ல முடியாது. இருவரும் சமாதானமாகப் போய் விடுங்கள்” என்று கூறி அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த, பின்னர் சத்திரியனாகிய கபா சிவபக்தனாகிய ததீசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நந்தியின் கதை: இக்கதை முன்னமே சிவபுராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (நந்தி தோற்றம் பற்றிச் சிறு மாறுபாடு உள்ளது. சிவபுராணத்தில், நந்தி, கலப்பையின் கொழு முனையில் குழந்தையாக வந்தது என்றும், லிங்க புராணத்தில் ஷிலதா வளர்த்த யாக குண்ட அக்னியில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது).

லிங்க புராணத்தில் இதனை அடுத்து யுகங்கள் பற்றி விரிவாகவும், பதினான்கு லோகங்கள், ஏழு துவீபங்கள் பற்றியும், சூரியன் பன்னிரண்டு மாதங்களில் வெவ்வேறு பெயருடன் சஞ்சரிப்பதையும் விரிவாகப் பேசுகின்றது. (இவை பற்றி முன்னருள்ள பல புராணங்களில் கூறியுள்ளமையால் இங்கே இவற்றை விவரிக்கவில்லை).

(இவற்றை அடுத்து வரும் துருவ நட்சத்திரம் பற்றிய கதையும், தட்சன் பற்றிய கதையும் முன்னரே கூறப்பட்ட தா.கவின் இங்கே விவரிக்கப்படவில்லை)

பராசர முனிவர் கதை: முன்னொரு காலத்தில் கல்மஷ பாதன் என்ற அரசனும், ருத்ரா என்ற அசுரனும் அடுத்தடுத்த இடங்களில் வாழ்ந்து வந்தனர். வசிட்டன் மகன் சக்த்ரியும், அவன் சகோதரர்களும் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர். ருத்ரா என்ற அசுரன் அழகிய அப்பிள்ளைகளைப் பிடித்துச் சாப்பிட வேண்டும் எனப் பலகாலமாக நினைத்து வந்தான். ஆனால் அவன் அசுரன் என்ற காரணத்தால் வசிட்ட குமாரர்கள் அவனை நெருங்குவதே இல்லை. இதற்காக ருத்திரா ஒரு சூழ்ச்சி செய்தான். அரசனாகிய கல்மஷபாதனுடைய உடம்புக்குள் இந்த அசுரன் புகுந்து கொண்டான். அரசனிடத்தில் அடிக்கடி வந்து போகும் பழக்கமுள்ள வசிட்ட குமாரர்கள் இப்பொழுது தாங்கள் பார்க்க வரும் அரசன் கல்மஷபாதன் பழைய கல்மஷ பாதன் அல்லன். அவ்வுடம்பினுள் ருத்ரா என்ற அசுரன் ஒளிந் திருக்கிறான் என்பதை அறியாத அக்குமாரர்கள் அப்பாவித் தனமாக அரசனிடம் வர, அவனுள் இருந்த ருத்ரா என்ற அசுரன் அவர்கள் நூறு பேரையும் பிடித்துத் தின்றுவிட்டான்.

இச்செய்தி அறிந்த வசிட்டனும், அவன் மனைவி அருந்ததியும் தாங்க முடியாத புத்திர சோகத்தால் உணர்வு இழந்தனர். செய்வதறியாத அவ்விருவரும் ஒரு மலையில் ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அவ்வாறே செய்தனர்.

இவ்வளவு நல்ல ஒரு முனிவரும், கற்புக்கரசியான அருந்ததியும் அநியாயமாக சாவதை பூமிதேவியே ஏற்கவில்லை. எனவே கீழே விழுகின்ற இருவரையும், பூமி தேவி தாங்கிப் பிடித்து அவர்களை நிறுத்தி, அவர்கள் செய்வது தவறு அவர்களால் இவ்வுலகத்திற்கும் பல அரசர்களுக்கும் நற்காரியங்கள் பல நிகழ வேண்டி இருத்தலின் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவறு என அறிவுரை வழங்கினாள் பூமி தேவி. அதே நேரத்தில் தின்னப்பட்ட வசிட்டனின் மூத்த மகன் சக்திரியின் மனைவியாகிய அத்ரிஷ் யந்தி ஓடிவந்து, மாமனை
வணங்கி உங்கள் பெயரனை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் என்னை அனாதையாக விட்டுவிட்டு நீங்கள் இறப்பது சரியன்று. இந்தப் பிள்ளையை வளர்த்து ஆளாக்கிப் பெரியவனாக ஆக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா என்று கூறியவுடன் வசிட்டனும், அவன் மனைவியும் தங்கள் இடத்திற்கே திரும்பி விட்டனர். உரிய காலத்தில் அத்ரிஷ்யந்தி ஆண் குழந்தை பெற்றாள். அக்குழந்தையே பிற்காலத்தில், பராசரன் என்ற பெயருடன் மிக்க புகழுடன் வாழ்ந்தது.

நாளாவட்டத்தில் வளர்ந்து இளைஞனான பராசரன், தன் தாயைப் பார்த்து, எல்லோருக்கும் தந்தை இருக்கிறார்கள். எனக்கு மட்டும் இல்லையே ஏன் என்று கேட்டபொழுது, தாய் அத்ரிஷ்யந்தி நடந்தவற்றைக் கூறினாள். உடனே அந்த சிறிய குழந்தையாகிய பராசரன், நான் சிவனைக் குறித்துத் தவம் செய்யப் போகிறேன். சிவனிடம் வரங்கள் பெற்று, ராட்சசர்கள் வாழும் மூன்று உலகங்களையும் அழித்து விடுவேன் என்று கூறினான்.

இதை அறிந்த வசிட்டர் அவனை அழைத்து, "பராசரா! இத்தகைய கொடுமைகள் உலகத்தில் எப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒருவன் தவறிழைக்க, அதனால் யாதொரு குற்றமும் செய்யாத அனைவரையும் அழிப்பேன் என்று கூறுவது தவறாகும். சிவனை நினைத்துத் தவம் செய்து ஆற்றலைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆற்றலைத் தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட பராசரன் சிவனை நினைத்துத் தவம் செய்தான்.

இவன் தவத்தில் மகிழ்ந்த சிவன், மிக அற்புதமான பல வரங்களைத் தந்தார். தவத்திலிருந்து மீண்ட பராசரன் தன் தந்தையைக் கொன்ற ருத்ரன் என்ற அரக்கனைத் தேடி அலைந்தான். அவன் கிடைக்காததால் கண்ணில்பட்ட அரக்கர்கள் அனைவரையும் எரித்துக் கொன்றான். இதை அறிந்த வசிட்டர், பராசரனை அழைத்து, உன் அழிவு வேலையை இத்துடன் நிறுத்து. உன் தந்தை ஒர் அரக்கனால் கொல்லப்பட்டான் என்றால் அது உன் தந்தையின் தலை யெழுத்து. அதற்காகக் கண்ணில்பட்ட அரக்கர்களை எல்லாம் அழிப்பது நியாயமில்லை. அரக்கர்களும் கடவுளால் படைக்கப் பட்டவர்களே. அரக்கர்கள், மனிதர்கள் ஆகிய இருவரும் இப் பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். இவ்விருவரிடையேயும் ஒரு வகையான சமநிலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஒன்று அதிகமாகும் போது, யாரோ ஒருவர் மூலமாக அது அழிக்கப்படும். இப்பொழுது நீ இந்தச் சமநிலையைக் குலைக்கும் முறையில் அதிகமான அரக்கர்களைக் கொன்று விட்டாய். ஆகவே இத்துடன் அழிவு வேலையை நிறுத்திக் கொள் என்றார்.

இந்த அறிவுரையைக் கேட்ட பராசரன் வேதசாஸ்திரங்கள் பயின்று மிகப் பெரிய அறிஞனாக மாறினான். புராண சம்ஹிதை விஷ்ணுபுராணம் இரண்டையும் இயற்றிய பெருமை பராசரனைச் சேரும். இந்தப் பராசர முனிவனின் மகனே கிருஷ்ண துவைபாயரான வேதவியாசன் ஆவான்.

அந்தகன்: ஹிரண்யக்ஷா என்ற அரக்கனின் மகன் அந்தகன். அந்தகன் கடுமையான தவம் இயற்றி, தன்னை யாரும் கொல்ல முடியாது என்ற வரத்தினை பிரம்மனிடம் பெற்றான். இவ்வரத்தினைப் பெற்றதனால், மூன்று உலகங்களையும் வென்று, தேவர்களை அவ்வுலகத்தினின்று விரட்டினான். இந்திரனும் மற்ற தேவர்களும், விஷ்ணுவுடன் சேர்ந்து மந்தார மலைக்குச் சென்றனர். அந்தகன் தேவர்களைத் துரத்திக் கொண்டு மந்தாரமலைக்குச் சென்றான்.

சிவபிரானைப் பார்த்த தேவர்கள், அந்தகன் செய்யும் கொடுமைகளைக் கூறி, தாங்கள் எங்கு சென்றாலும் அந்தகன் அங்கு வந்து தங்களைத் துரத்துவதாகவும், சிவபெருமான் மட்டுமே தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியும் என்றும் கூறினர். சிவபெருமானும் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, அந்தகனைக் கொல்லச் சென்றார். அந்தகன் தனியாக இல்லாமல்,

கோடிக்கணக்கான அரக்கர்களைத் தன்னுடன் வைத்திருந்தான். அவர்கள் அனைவரையும் எரித்துவிட்டு, அவன் மார்பைக் குத்தி, அதை நேரே விண்ணில் தூக்கினார். அசுரன் சூலாயுதத்தில் குத்தப்பட்டு, விண்ணில் தொங்குவது கண்டு, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மூவுலகினரும், சிவபெருமானை வழிபட ஆரம்பித்தனர்.

அந்தகனைப் பொறுத்தவரை, சிவபெருமானின் சூலாயுதத்தால் குத்தப்பட்ட நொடிப்பொழுதிலிருந்து, அவனுடைய கெட்ட எண்ணங்கள் அனைத்தும் அவன் மனத்திலிருந்து விலகிவிட்டன. அவன் சிவனை தியானிக்க ஆரம்பித்தான். அவன் தியானத்தில் மனம் மிக மகிழ்ந்த சிவபெருமான் அந்தகனை நோக்கி, “ஹிரண்யாக்ஷாவின் மகனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதைக் கேட்ட அந்தகனும், "ஐயனே! நான் என்றென்றும், எப்பொழுதும் உன்னை நினைத்து, உனக்கு நன்றியுடைய வனாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் உன்னுடனேயே நான் இருக்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்ள, சிவனும் 'அப்படியே ஆகட்டும்’ என்றார். அந்தகனைத் தன் சூலாயுதத்தினின்று விடுவித்து சிவ கணங்களின் தலைவனாக்கினார்.

ஹிரண்யகசிபுவும் நரசிம்ம அவதாரமும்

(இக்கதை ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.) ஹிரண்யகசிபுவைக் கொன்ற பின்பும், விஷ்ணு தன் நரசிம்ம அவதாரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நரசிம்மம் உலகத்தில் அங்கும் இங்கும் ஒடி, எல்லாவற்றையும் அழித்துவிட ஆயத்தமானது. தேவர்கள், பிரம்மனின் உதவி யுடன், மந்தரமலைக்குச் சென்று சிவபிரானை வேண்டினர். சிவனும் தான் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினார்.

சிவபெருமான் தன் உடம்பினின்று வீரபத்ரன் என்ற தேவதையைத் தோற்றுவித்தார். சிவபிரானைப் போலவே மூன்று கண்களும், பல ஆயுதங்களைக் கையில் ஏந்தியும் இருந்தார். சிவபெருமானை வணங்கி, என்ன செய்யவேண்டும் எனக் கேட்டான். சிவபெருமானும் அவரிடம் "வீரபத்ரனே ! நரசிம்மம் ஒன்று இங்கு உலவிக் கொண்டு, பெரும் துன்பத்தை விளைவிக்கிறது. அது வேறு யாருமல்ல, விஷ்ணுவேதான். முதலில் நீ சமாதானமாக அந்த அவதாரத்தை விட்டுவிடச் சொல். அவ்வாறு செய்வதற்கு மறுத்தால், கொன்று விடு” எனக் கூறினார்.

வீரபத்ரன் உடனே, நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம், “விஷ்ணுவே! நீரே இந்த உலகத்தைக் காப்பவர். இவ்வுலகைக் காக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் பல அவதாரங்கள் எடுத்துள்ளிர்கள். அவ்வாறு இருக்க, இப்பொழுது ஏன் நரசிம்ம அவதாரத்தை மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள். இது உலகையே அழித்து விடும் அபாயத்தைக் கொடுக்கிறது” என்று அமைதியுடன் கூறினார்.

இதைக் கேட்ட விஷ்ணு கோபத்துடன், “எனக்கு புத்திமதிகள் சொல்வதற்கு நீ யார்? நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ, நான் இவ்வுலகை அழிக்கப் போகிறேன். நான் எல்லாவற்றிற்கும் தலைவனாவேன். இவ்வுலகை உண்டாக்கிய பிரம்மா, என்னிலிருந்து பிறந்தவன், ஆதலால் இவ்விடத்தை விட்டு அகன்றுவிடு” என்று வீரபத்ரனிடம் கூறினார்.

வீரபத்ரன் உடனே, நீ சிவபெருமானை மறந்து விட்டாயா? அவரே அழிக்கும் கடவுள். அவரே எல்லாவற்றிற்கும் முதன்மையானவர். நீ பழைய நிலைக்கு வரவில்லையெனில் சிவன் உன்னை அழித்து விடுவார். நானே வீரபத்திரன். தக்கன் யாகத்தில் உன் தலையை வெட்டியவன் நான் என்பதை மறந்துவிட்டாயா எனக்கூறி தன் உருவத்தை மாற்றிக் கொண்டார். மாறும் பறவையைச் சேர்ந்த வடிவம் (சரப மூர்த்தி) எடுத்து, நரசிம்மத்தைத் தாக்கி வானில் எறிந்தார். கீழே விழுந்தவுடன் மீண்டும், மீண்டும் தூக்கி எறிந்தார். உடனே விஷ்ணு தன் நினைவு வரப்பெற்று சிவபெருமானை நூற்றிஎட்டு பெயர்கள் கூறி, வழிபட்டார். வீரபத்திரனும்
நரசிம்மத்தின் தலையை வெட்டி வீழ்த்தினார். விஷ்ணு சிவனுடன் கலந்தார். நரசிம்மத்தின் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு, நரசிம்மத்தின் கபாலத்தைத் தன் கபால மாலையோடு இணைத்துக் கழுத்தில் அணிந்து கொண்டார்.

ஜலந்தரன் கதை: இந்த அரக்கனின் தோற்றம் பற்றி இலிங்க புராணத்தில் சொல்லப்படவில்லை. பத்ம புராணத்தில் இது விரிவாகக் காணப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

இந்த ஜலந்தரன், இந்திரன் முதலிய அனைத்து தேவர்களையும் வென்று இறுதியாக விஷ்ணுவிடம் சென்று, உன்னிடம் போர் புரிய வந்துள்ளேன் என்றான். நீண்ட சண்டைக்குப் பிறகு விஷ்ணு ஜலந்தரனிடம் தோற்றுவிட்டார். அவரை வென்ற எக்களிப்பில் ஜலந்தரன் பெரிதும் கர்வம் அடைந்தவனாய், விஷ்ணுவே என்னிடம் தோற்றுவிட்டதால் நான்தான் இனி அனைத்திற்கும் தலைவன் என்று தருக்கித் திரிய ஆரம்பித்தான். உலகை ஒருமுறை சுற்றிப்பார்த்த அவன் அனைவரும் எனக்குக் கீழ்ப்படிந்து விட்டனர். எஞ்சி இருப்பவர் சிவன் ஒருவரே ஆவார். அவரையும் போரில் வென்றுவிட்டால், அனைத்திற்கும் தலைவன் நானே என்ற புகழ் நிலைத்துவிடும். இவ்வாறு நினைத்து சிவனிடம் சென்று, 'உம்மிடம் சண்டையிட வந்துள்ளேன். சண்டைக்கு வருக! என்று அழைத்தார். சிவன் அலட்டிக் கொள்ளாமல் தமது கட்டைவிரலை சமுத்திரத்திற்குள் நுழைத்து இப்படியும் அப்படியும் ஆட்ட, கடலுக்குள் இருந்து சுதர்சன சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே, சிவன் ஜலந்தராசுரனே! சக்கரத்தை எடுத்து முடிந்தால் உன் தோளின் மீது வை பார்க்கலாம். இதை நீ செய்துவிட்டால் உன்னுடன் போர் செய்ய நான் தயார் என்றார். துக்குதற்கு அரிதான சக்கரத்தை வெகுபாடுபட்டு ஜலந்தரன் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டவுடன் அந்தச் சக்கரம் அவன் தலையை உடம்பில் இருந்து நீக்கியது.

இதனை அடுத்து சிவனுடைய ஆயிரம் திருநாமங்கள், தட்சன் செய்த யாகம், பார்வதி தவம், சிவ-பார்வதி திருமணம், கார்த்திகேயன் பிறப்பு உபமன்யுவின் கதை ஆகியவை இலிங்க புராணத்தில் ஒரளவு விரிவாகவும் அதே நேரம் அடக்கமாகவும் கூறப்பட்டுள்ளன.

முடிவுரை

லோமஹர்ஷனர், இலிங்க புராணத்தைப் படிப்பதால் அதிக புண்ணியம் ஏற்படும் என்று கூறி முடித்தார்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top