• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இவள் என்னவள் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
610
Location
Theni
இவள் என்னவள் - 4



சீனியர் கேர்ள்ஸ்-ஐ மனதிற்குள் திட்டிக்கொண்டே கடுகடுத்த முகத்துடன் தன் தோழிகளின் இருப்பை நோக்கிச் சென்றாள் சஞ்சனா.



முதல் முறையாக சேலை கட்டி வந்த சஞ்சனாவை தோழிகள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.. “ஏய் சஞ்சு சேலைல ரொம்ப அழகா இருக்கா..பா”



அச்சு ,“ஏண்டி இவ்வளவு அழகா டிரஸ் பண்ணிட்டு, மூஞ்சிய இப்படி உர்..ருன்னு வச்சுட்டு வர்ற”



சஞ்சு, “எல்லாம் அந்த சீனியர்ஸ் பண்ண வேலை” எனப் பற்களை நறநறத்தாள்.



திவ்யா, “என்ன உங்க மாமாவ பத்தி ஏதாவது சொல்லி வம்பிழுத்தாங்களா”



............



“உனக்கு எப்படித் தெரியும் திவ்யா?” என சந்தேகக் கண் கொண்டு கேட்டாள் அச்சு.



“இது என்ன பெரிய ரகசியம்! அவங்களுக்கு நம்ம சஞ்சு கூட வேற என்ன பிரச்சனை, எப்பவும் போல இவ மாமாவ பத்திக் கேட்டிருப்பாங்க..“



“ம்ம்... ஆமா..பா” கால்களைத் தரையில் உதைத்தாள்.



திவ்யா, “என்ன உங்க மாமாவ கூட்டிட்டு வா, பேசிப்பழகலாம்னு சொன்னாங்களா?”



அச்சு, “அப்படியாடி? ஏன்தான் இப்படி அலையுறாங்களோ தெரியல, இவங்க வீட்ல எல்லாம் தலைல தண்ணியத் தெளிச்சு விட்டிருப்பாங்களோ?”



“கடுப்பா வருதுடீ , இதுல இன்னைக்கு என்னைய டிராப் பண்ண வந்தவரைத் தூரத்தில இருந்துப் பார்த்திட்டு வேகமா வந்தாங்க”



“என்ன ஆச்சு?”



“அச்சோ.. அப்புறம் இன்ட்ரோ பண்ணிட்டியா?” திவ்யா



“இல்ல..பா, அவங்கள தூரத்தில பார்த்த உடனேயே எங்க மம்மூவ அனுப்பி வச்சிட்டேன். ஆனா அவருக்கு இந்த சீனியர்ஸ் விசயம் வேற தெரிஞ்சு போச்சு, இனி இத வச்சே என்னைய ஓட்டுவாரே...” அய்யோ என சொல்லித் தன் தலையில் கைகளை வைத்துக் கொண்டாள்.



“ஏய்... மம்மூ வந்தா எங்ககிட்ட முதல்லயே சொல்ல மாட்டியா”? இது திவ்யா.. அவ கஷ்டம் அவளுக்கு...



திவ்யாவை முறைத்துக் கொண்டு, “என்னடி சைடு கேப்ல நீயும் மம்மூ-னு சொல்ற,” அச்சு



ரொம்ப நாளாக திவ்யாவும் சிவச்சந்திரன் மீது அவள் வயதிற்கு ஏற்ற ஈர்ப்புடன் இருந்தாள். அவனை மட்டும் இல்லை, கொஞ்சம் அழகான ஆண்களைப் பார்த்தாலே போதும் மயக்கத்தில் கிடப்பாள். அவளுடைய குணம் தெரிந்ததாலேயே சஞ்சு அவளைக் கண்டு கொள்ள மாட்டாள்.



திவ்யா, ”ஏன் சஞ்சு நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”



........................



.......................



“இல்ல.. எப்படியும் உங்க மம்மூவ நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்ல, அப்புறம் ஏதோ ஒரு பொண்ணு உங்க மம்மூ-வ கரெக்ட் பண்ணப் போகுது, அது நம்ம சீனியர்ஸ், ஜீனியர்ஸ் யாரா இருந்தா என்ன..பா”?



“ஏய்.. இரு.. இரு.... சீனியர்ஸ் சரி அது என்ன நடுவுல ஜீனியர்ஸ்? ஏதோ உள்குத்து வச்சுப் பேசுற மாதிரித் தெரியுதே...”



“அடப் போங்கப்பா... சஞ்சு மட்டும் ஓகே சொல்லட்டும். அவங்க மம்மூ-வ எப்படி கரெக்ட் பண்றேன்னு மட்டும் பாரு”..



“இங்க பாரு சஞ்சு, நீ அமைதியா இருக்கிறதால கண்ட கண்ட நரியெல்லாம் உள்ள வருது” என்று ஆதங்கப்பட்டாள்.



“இப்ப என்னைய எதுக்கு நரின்னு சொல்ற, அவங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்குறேன்னு சஞ்சு சொல்லட்டும், நான் இனிமே இந்தப் பேச்சையே விட்டுடறேன்”.



“ஏன் சஞ்சு, இத்தனைப் பேரு போட்டி போடுற உங்க மம்மூக்கு என்னம்மா குறைச்சல்? நீயே கல்யாணம் பண்ணிக்கலாமே? ஆனா இதைக் கேட்டா, நீ மொக்கையா ஒரு காரணம் சொல்லுவ”....



சஞ்சு, “இந்த விசயத்தை இதோட விடுங்க.. கிளாஸ்க்கு நேரம் ஆச்சு..பா வாங்க போகலாம்”, இந்தப் பேச்சை அவள் இதற்கு மேல் வளர்க்க விரும்பவில்லை.



காதல் ஒன்று தான் காரணமின்றி சந்தோசத்தையும் தரும், வருத்தத்தையும் தரும். அன்று முழுவதும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான் சிவச்சந்திரன் தான் சிறுவயதில் இருந்தே பார்த்து... பார்த்து... வளர்ந்த சஞ்சு அவனுக்காகவே பிறந்து, அவனுக்காகவே வளர்ந்து, இன்று அவனுக்காகவே காத்திருப்பதாய் நினைத்து மகிழ்ந்தான். அவனுள்ளே முழுவதுமாய் சஞ்சு வேரூன்றத் தொடங்கினாள்.



தன் உயிருக்கு உயிரான சஞ்சுவின் மீதே காதல் வந்ததை எண்ணி வியந்த தருணத்தில் அவனது மனதிற்கு சஞ்சுவை உடனேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற தனது கைப்பேசியில் அவளது புகைப்படத்தைப் பார்த்து தன் மனதை தேற்றிக் கொண்டான்.



அன்று முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவன் மனம் சஞ்சுவை விட்டு நீங்க மறுத்தது. காதல் வந்தால் எத்தனை கற்பனைகள், எத்தனை இன்பங்கள், எத்தனை அற்புதங்கள் மனதில் தோன்றுகின்றன. அன்று முழுவதும் திட்டமிட்ட வேலையை சிவுவால் செய்ய இயலாமல் திண்டாடினான். சிவு தன் தந்தை சுந்தர் செய்து வந்த மோட்டார் பம்ப் தொழிலை கையில் எடுத்த பிறகு அதில் பல புதுமைகளைப் புகுத்தினான். தான் செய்யும் தொழிலை “தேவைக்காக என்று மட்டும் இல்லாமல் மக்கள் சேவைக்காகவும் தான்” என்ற உத்வேகத்தோடு செய்து வந்தான். இன்று கூட தனது கம்பெனி அலுவலர்களுடனான கூட்டத்தில் பழைய ஸ்டாக்குகளை எப்படி விற்பனை செய்வது, புது ஸ்டாக்குகளை எப்படி நவீன முறையில் வடிவமைப்பது என்பது பற்றி அலுவலர்களிடம் கலந்துரையாட திட்டமிட்டிருந்தான். ஆனால் அவன் சஞ்சுவின் நினைப்பில் உளுண்டு கொண்டு இருந்தான், பிறகு எங்கே தொழிலை பற்றியெல்லாம் நினைப்பதற்கு... தன்னிலை மறந்தவனாய் இருந்தான்...



அவனது காதல் கற்பனைகள் முடிவுக்கு வரவில்லை ஆனால் பிற்பகல் வேளை வந்தது. அன்றைய நாள் போன வேகத்தை அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே...



சஞ்சனா போன் செய்தாள், “இன்னைக்கு ஃப்ரெஸர்ஸ்டே என்பதால் கல்லூரி சீக்கிரம் முடிஞ்சுருச்சு நீங்க வர்ரீங்களா மம்மூ?” எனக் கேட்டவளிடம்...



“கண்டிப்பா சஞ்சு, இதோ கிளம்பிட்டேன்”



“மம்மூ காலேஜ் உள்ளே வர வேண்டாம், காலேஜ் காம்பவுண்ட்டுக்கு வெளியவே வலது பக்கமா காரை திருப்பி வைங்க நான் வந்துடுறேன்”



“ஏன் சஞ்சு, உள்ளே வந்தா சீனியர்ஸ் என்னைத் தூக்கிட்டு போயிருவாங்களா என்ன”?



“கண்டிப்பா செய்வாங்க மம்மூ, உங்க மேல அவ்வளவு கிருக்கு, நீங்க வேற ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்கல்ல மம்மூ”, என சொல்லி விட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டாள்..ஸ்ஸ்ஸ்...



“அப்புறம் என்ன சஞ்சு தூக்கிட்டுதான் போகட்டுமே ”மறுபக்க ஃபோனில் அவளை காண்டாக்கினான்



ஓட்ட ஆரம்பிச்சாட்டாரா! என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு..



“நீங்க என்னோட மம்மூ மாதிரி பேச மாட்ரீங்க” என சொல்லிப் பொய்க் கோபம் காட்டினாள் அவனிடம்..



சிரித்துக் கொண்டே “சரி விடு கோவப்படாத, சீனியர்ஸ்க்குப் பதிலா நீ வேணா தூக்கிட்டுப் போ,” ...



“நான் எதுக்கு தூக்கணும்? நான் கூப்பிட்டாலே நீங்கதான் வந்திருவீங்களே மம்மூ”



“அதுவும் சரிதான், நான் கிளம்பிட்டேன், கொஞ்ச நேரம் தான் நான் வந்துருவேன்” என்று காரை ஸ்டார்ட் செய்தான்.



மம்மூ, “போன் பேசிக்கிட்டே கார் ஓட்டக்கூடாது ஜாக்கிரதையா வாங்க பை...பை”....



சிறிது நேரத்தில் சிவு கல்லூரிக்கு வந்து சேர்ந்தான், அவனைக் கண்டவுடன் ஓடி வந்த சஞ்சு “ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க மம்மூ, வேகமா காரை ஓட்டிட்டு வந்தீங்களா”?



"என் சஞ்சுக் குட்டிய காக்க வைக்கக்கூடாது பாரு... அதான்”



”சரி காலேஜ் சீக்கிரம் முடிஞ்சிருச்சுல்ல வா எங்கயாவது அவுட்டிங் போய்ட்டு அப்புறமா வீட்டுக்குப் போகலாமா” என்று சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினான்.



“அப்ப ஷாப்பிங் போவோமா மம்மூ?”



“அதென்னமா எப்பவும் ஷாப்பிங் தானா? கோயம்புத்தூர்ல பிக்னிக் ஸ்பாட் எங்கேயும் போக இடமே இல்லாத மாதிரி..”



“சிட்டில இருக்கிற எல்லா பிக்னிக் ஸ்பாட்டும் போயாச்சு மம்மூ, புதுசா எங்க போறது?” என்றாள் சலிப்புடன்.



“அடிப்பாவி கோயம்புத்தூர்ல இருக்கிற இடம் எல்லாம் உனக்கு அலுத்துப் போச்சா? அப்படின்னா ஊட்டிக்கு வேணா போவோமா?”



“அதுவும் நிறைய தடவைப் பார்த்த பிளேஸ்தான், பட் அந்த கிளைமேட்க்காக வேணா போகலாம். ஸ்கூல் பிக்னிக் எதையுமே நான் மிஸ் பண்ணதில்லை மம்மூ, கோயம்புத்தூர், ஊட்டில முக்கியமான இடங்கள் பெரும்பாலும் எல்லாமே போயிருக்கேன். நான் பிக்னிக் போகலைனு சொன்னாலும் அத்தை என்னைய விடாப்பிடியா அனுப்பி வச்சிருவாங்க”



“நீ தான் உங்க அத்தையோட செல்லமாச்சே, அடுத்த தடவை ஆல் இந்தியா டூர் போவோம்” அவளிடம் பேசிக் கொண்டே ஸ்டியரிங்கில் கைகளால் தாளம் போட்டுக் கொண்டே காரை டிரைவ் செய்தான்



“கண்டிப்பா மம்மூ, செமஸ்டர் லீவ்ல நிச்சயமா போறோம்”.



“நீங்க, அத்தை, அப்பா எல்லாருமே சேர்ந்து போனால் ரொம்ப சந்தோசம் என்றவள், நீங்க ரொம்ப ஸ்டைலா டிரைவ் பண்றீங்க மம்மூ என அடுத்த பேச்சிற்குத் தாவினாள்."



“பொதுவா ட்ரைவிங் மாதிரி விசயங்கள் எல்லாம் ஆண்களுக்கு கொஞ்சம் சுலபமா வரும்”



“அப்போ பெண்களுக்கு ட்ரைவிங் வராதுனு சொல்றீங்களா மம்மூ?” என லேசாக முறைத்தாள்..



“அய்யோ.. நான் அப்படி சொல்லல, பெண்கள் ஆண்களை விட பல மடங்கு திறமைசாலிகள்தான், ஆனா பெண்கள் வண்டி ஓட்றப்போ அதிகமா விபத்துக்கள் நடக்குதே”



“அப்போ ஆண்கள் வண்டி ஓட்றப்போ விபத்துக்கள் நடக்காதா மம்மூ?”



“கண்டிப்பா வரும்மா.. ஆனால் ஆண்களுக்கு, பெண்களை விட ரோடு சென்ஸ் அதிகம் சஞ்சு, பெண்கள் ட்ரைவ் பண்ணும்போது கவனக்குறைவால் நடக்கும் விபத்துக்கள் அதிகம்”



“ஏன் மம்மூ இப்ப உள்ள பெண்கள் ஆண்களுக்கு இணையா விமானமே இயக்குறாங்க... நீங்க இப்ப்டி சொல்றீங்க..”



“விமானம் ஓட்றப்போ டிராபிக் ஜாம் ஆகாதே” என சொல்லி நக்கலாய் சிரித்தான். சஞ்சு கோபத்தில் அமைதியாக இருக்க,



அவளின் முகவாட்டத்தை உணர்ந்து பக்குவமாக பேச்சைத் தொடர்ந்தான்



“அம்மா தாயே நான் பெண்களை குறை சொல்லல, நான் சும்மா உன்னைய வம்பிழுக்க தான் அப்படி சொன்னேன். அது மட்டும் இல்ல நீயும் ரொம்ப நல்லா டிரைவ் பண்றடா”



“அப்படி வாங்க வழிக்கு என நகைத்தவள், இந்தக் கலவரத்துல என்னைய ஷாப்பிங் கூட்டிட்டுப் போக மறந்துடாதீங்க மம்மூ”



“உன் கட்டளையே, என் பாக்கியம்” என்றவன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டான்



“மம்மூ........”



“உங்களுக்கும், அத்தைக்கும் இன்னைக்கு நான்தான் டிரெஸ் செலக்ட் பண்ணுவேன்... ஆமாம் எனக்கு சல்வார் எடுக்கவா? இல்ல சேலை எடுக்கவா?”


"உனக்குப் புடவை ரொம்ப அழகா இருக்கு, நீ புடவையே எடுத்துக்கோ சஞ்சு” பார்வையால் அவளின் அழகை ஆரத்தழுவினான்



“ஆமா மம்மூ, சீனியர்ஸ் கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க”



“ஓ.... அந்த சீனியர் கேர்ள்ஸ்சா?” எதார்த்தாமாய் கேட்டவனை



“நோ மம்மூ சீனியர் பாய்ஸ்” என்று அவன் கற்பனைக்கு எண்ட் கார்டு போட்டாள்



“எ....ன்ன.... பாய்.....சா?" என திக்கித் திணறி கேட்டவன், பதிலுக்காக காத்திருக்க முடியாமல் தவித்தான்.



அவனின் அவசரம் புரிந்தவளாக “ஆமா மம்மூ எப்பவும் பின்னாடியே வருவாங்க, நான்தான் கண்டுக்கவே மாட்டேன். இன்னைக்கு என்னன்னு தெரியல எல்லாருக்கும் தைரியம் வந்துடுச்சு போல, ப்ரொபோஸ் பண்ணாங்க“



“என்னது பன்மையா... எத்தனை பேர்”?



“பின்னாடி சுத்துறவங்களைப்பத்தி கேக்குறீங்களா, இல்லை இன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணவங்களைப்பத்தி கேக்குறீங்களா மம்மூ?"



.........



“என்ன மம்மூ அமைதியா இருக்கீங்க?”



“அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீ சொல்லு... ப்ரொபோஸ் பண்ணவங்க எத்தனை பேர்.” சஞ்சு விஷயத்தில் தன்னை யாரும் முந்திக் கொண்டு சென்று விடுவார்களோ என்ற நடுக்கம் மனதிற்குள் இருக்கத்தான் செய்தது



“இன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணவங்க, ஒரு ஆறு பேர்..... இல்ல இல்ல ஏழு பேர் தான் மம்மூ”



“என்ன ஏழு பேரா?” என அதிர்ந்தவன் காரை நிறுத்திவிட்டு அவள் பக்கமாக திரும்பினான்



“நீ என்ன சொன்ன”?



“நோ தான். முதல்ல நான் காதல உணர ஆரம்பிக்கனும், நான் உணராமல் இருக்குற வரைக்கும் யார் வந்து காதல சொன்னாலும் நோ தான். அது மட்டும் இல்ல மம்மூ என்னோட காதல் ஃபார்முலா என்ன ஆகுறது?”



சஞ்சுவின் பதிலில் ஆசுவாசமடைந்தான், “நீ தெளிவு தான் சஞ்சு”, இருவரும் பேசிக்கொண்டே ஷாப்பிங்மால் வந்து இறங்கினார்கள். கடைக்கு உள்ளே போனவள் மென்ஸ்வியர் பக்கம் சென்றாள்



“மென்ஸ்வியர்ல புடவை எல்லாம் இருக்காது, சஞ்சு இந்தப் பக்கம் வா...மா...”



“மம்மூ உங்களுக்கு டிரஸ் முதலில் வாங்கிக்கலாம் அப்புறம் எனக்கும் அத்தைக்கும் எடுக்கலாம்”.



“எனக்கு இப்ப வேணாம் உனக்கும், அம்மாவுக்கும் எடு”



“பேசாம வாங்க மம்மூ, உங்களுக்கு முதல்ல டிரஸ் வாங்கிக்கலாம்” எனச் சொல்லி, அவனுக்கான உடைகளை அளவு, நிறப்பொருத்தம் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாள்



கடை ஊழியன், “மேடம் ஒரு தடவை டிரையல் பாக்க சொல்லிருங்க, வீட்டுக்கு கொண்டு போயிட்டு அளவு பத்தலைனா , மாற்றித்தர மாட்டோம் இது கடையோட விதிமுறை மேடம்”

இந்த வார்த்தை சஞ்சுவை சீண்ட,



“எனக்கு சைஸ் தெரியும், பார்த்தாலே போதும், என்ன மம்மூ?



“என்கிட்ட ஏன் கேக்குற, நீ தான் பேசாமல் வர சொன்னியே.. நீயே செலக்ட் பண்ணு”



ஷாப்பிங் முடித்து கிளம்பினார்கள். “ஏன் சஞ்சு பெண்கள் புடவை எடுக்கத்தான் நேரமாகும்னு சொல்லுவாங்க, ஆனால் நீயோ புடவை கொஞ்ச நேரத்தில் எடுத்துட்ட ஆனால் எனக்கு எடுக்க மட்டும் ரொம்ப நேரம் ஆச்சு, கிட்டத்தட்ட கடையவே புரட்டிப் போட்டுட்ட....”?





“உங்களுக்கு டிரஸ் எடுக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு மம்மூ, உங்களுக்கு இன்னும் நிறைய டிரஸ் வாங்கனும்னு ஆசை, ஆனா உங்கள பார்த்தா பாவமா இருந்துச்சு அதான் கம்மியா வாங்கினேன்”.



“உன்னோட கருணைக்கு ரொம்ப நன்றிம்மா”.. வீட்டிற்கு வந்து வாங்கிய துணிகளை கடைபரப்பிய சஞ்சு. உணவை முடித்துத் தூங்கச் சென்றாள்.



சிவு தனக்கு வந்த காதலை தன் தாயிடம் கூறி அதன் விளைவு எப்படிப் பட்டதாக இருக்குமோ என தயக்கத்துடன் தன் தாயுடன் தனிமையில் உரையாட முடிவு செய்தான். சிவு தன் தாயிடம் சென்று தனியே பேசவேண்டும் என்று அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் தோட்டத்திற்குச் சென்றான்.



“அம்மா உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றான் தயக்கத்துடன்



“அது முக்கியமானதுனு நீ தனியா கூப்பிட்டப்பவே தெரியுதுடா, சொல்லு என்ன விஷயம்? ”



“அம்மா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?”



“என்னப்பா... அப்படி என்ன விஷயம் ?



ஆர்வமாய் தான் சொல்லப் போகும் விஷயத்தை எதிர்நோக்கி இருந்த தன் தாயிடம், வந்து... அம்மா... வந்து...



ம்.. சொல்லேன்டா... மகன் தடுமாறுவதைக் கண்டு அகத்தின் சிரித்தார்



அம்மா நம்ம சஞ்சு இருக்கால்ல....... இல்ல...... நான் சஞ்சுவ...



சஞ்சுவ நீ காதலிக்கிற அதானே..



அம்மா உங்களுக்கு எப்படி தெரியும்....!!!



தெரியும்டா. கொஞ்ச நாளா சந்தேகமா இருந்துச்சு, இன்னைக்கு காலைல நீ சஞ்சுவ பார்த்த பார்வையில் முடிவு ஆயிருச்சு



“எப்படி அம்மா உங்களுக்கு தெரியும்..!” என ஆச்சரியம் ததும்ப கேட்டான்



“நான் உன்னோட அம்மாடா, உன்னை புரிஞ்சுக்க என்னால முடியாதா என்ன?”



“அம்மா நீங்க உண்மையில கிரேட்....”



“ரொம்ப நன்றிம்மா, ஆனால் இந்த விஷயம் சஞ்சுவுக்கு தெரிய வேண்டாம்”



“எதுக்குடா இரண்டு பேருக்கும் சீக்கிரமா திருமணத்தை முடிச்சா எனக்கும் சந்தோசம் தானடா “



“கண்டிப்பா செய்றேன் அம்மா. அதுக்கு முன்னாடி சஞ்சு மனசுல இடம் பிடிக்கணும், அவளை கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும் அம்மா”.



“அவ முதல்ல படிப்ப முடிக்கட்டும், அவளோட மனசுலயும் என் மேல காதல் வரணும், அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருப்போமே”



“சரிப்பா உன் விருப்பம். ஆனால் நீ என்னோட ஆசையையும், உங்க மாமாவோட ஆசையையும் நிறைவேற்றிட்ட, அப்படியே சீக்கிரமா இந்த வீட்டுல மாங்கல்ய சத்தம் கேக்கணும், அதுக்கும் ஏற்பாடு பண்ணிருப்பா“ எனக் கோரிக்கை வைத்தாள்



என்ன அம்மா சொல்றீங்க, மாமாவுக்கு எப்படி இதைப் பற்றித் தெரியும்?



உங்க மாமாவுக்கு நீ லவ் பண்ணற விஷயம் தெரியாது? ஆனா அண்ணாவுக்கு உனக்கும், சஞ்சுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஆசை.



எங்கு தனது காதலுக்கு அம்மா சம்மதிக்க மாட்டார்களோ எனத் தவித்த சிவுக்கு, தனது தாயும், மோகன் மாமாவும் ஓத்துக்கொண்டதில் ஆயாசமாக உணர்ந்தான்.

-------------------------------------------------​
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
610
Location
Theni
Sorry chellus.....epi wait panengala theriyala,suppose wait pani iruntha enai maneyungal....🥰🥰
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
Ipo periyavangalam ok..... Namba sanju oda kadhal formula ku namba sivu uzhaikanum athu than baakki all the best da👍

Sivukum sanjukum demand aathigama iruke🤣🤣🤣

Sanju en sivuva kalyanam panna maatanu solra athe kadhal formula va illa vera ethavatha🤔
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
610
Location
Theni
Oru reason iruku
Ipo periyavangalam ok..... Namba sanju oda kadhal formula ku namba sivu uzhaikanum athu than baakki all the best da👍

Sivukum sanjukum demand aathigama iruke🤣🤣🤣

Sanju en sivuva kalyanam panna maatanu solra athe kadhal formula va illa vera ethavatha🤔
Sivu uzhaikerano illayo....... avangala naan dan sethuvaika romba uzhaikeran🤭😍😍
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
சிவு love பண்ணுற பொண்ணு கிட்ட propose பண்ணாம அம்மா கிட்ட சொள்ளுரயே இது நியாயமா?
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
610
Location
Theni
இது ஒரு நல்ல கேள்வி ....சிவுக்கிட்ட சொல்லிறேன்😁😁
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
சஞ்சு மனசுல என்ன இருக்கு?

அவங்க frds போட்டிக்கு வர மாட்டாங்க அப்டினு சொன்னாங்க...

சிவு அம்மா, மாமா க்கு ஓகே... இப்போ சஞ்சு ட்ட தான் ஓகே வாங்கணும்.... ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top