இவள் என்னவள் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

Author
Author
Joined
Jan 8, 2021
Messages
167
Reaction score
203
Points
43
Location
Theni
இவள் என்னவள் - 8

வீட்டிற்கு வந்தும் யோசித்துக் கொண்டே இருந்தாள் சஞ்சு. இப்ப நான் மம்மு கண்ணுக்குத் தேவதையா தெரியுறேன். இதே மாதிரி மம்முக்கு கல்யாணம் ஆனபிறகும் நான் தேவதையா இருப்பேனா? இப்போதெல்லாம் அவனின் நேசத்திற்கு முன் எதுவுமே பெரிதாக தெரியவில்லையே, இதே நேசம் எப்பவும் கிடைக்குமா...? அவளின் எண்ண அலைகள் பல திசைகளில் பாயத் தொடங்கியது.

எதுவா இருந்தாலும் சரி, எல்லோரும் என் மேல் ரொம்பவும் பாசமா இருக்காங்க. இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வைத்தவள் தான் என திடமாக நம்பினாள். சிவு மம்முக்கும் தேவி அக்கா மாதிரி குணமா ஒரு நல்ல பொண்ணு கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும்.

தேவி அக்காவோட அம்மா கூட ஏதோ அவங்க சொந்தத்தில் பொண்ணு இருக்குனு சொன்னாங்களே, ஆனா பெரியம்மாக்கிட்ட போய் எப்படிக் கேட்கிறது என்ற யோசனை இருந்தாலும், மம்முக்காக இதை பற்றிக் கேட்டு தான் ஆகணும் என்ற முடிவுக்கு வந்தாள், நாளைக்கு அவங்க ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடியே இதைப் பற்றி கேட்கணும்.

முன் தினம் யோசித்ததை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காலையில் எழுந்தவுடன் சிவுவின் அறைக்குச் சென்றாள். “மம்மு உங்க தேவதை வந்தாச்சு எழுந்திருங்க”

கண் விழிக்காமலேயே, “அப்ப தேவதையோட பரிசு கிடைக்குமா?” அவளைக் காதல் சொட்டக் கேட்க...

“பரிசா......! இது என்ன புதுசாயிருக்கு?” முதலில் அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பதைப் புரியாமல் கேட்டவள்.

“புதுசு இல்ல.......நேற்று கொடுத்த மாதிரி இன்னைக்கும்.......” எனப் பேச்சை இழுக்க

“என்னது மம்மு இன்னைக்கும்.......” பேச்சை முடிக்கும் முன் இம்முறை புரிந்தது சஞ்சுவுக்கு, ஆனால் தானாக இதைப் பற்றிச் சொல்ல சற்று தயங்கினாள்.

அவன் தனது கன்னத்தை அவளிடம் காண்பித்து, இதழ்களை குவித்துக் காண்பிக்க... அவள் கண்கள் விரிந்து இதயம் படபடவென துடிக்கத் தொடங்க... சிவுவின் செய்கையால் உண்டான நடுக்கத்தை, உணர்வை சமன்ப்படுத்த சில விநாடிகளை எடுத்துக் கொண்டாள் சஞ்சு.

“மம்மு, நீங்க சரியில்ல... முதல்ல அத்தைகிட்ட சொல்லி உங்களுக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்க சொல்லணும்”

கட்டிலில் முட்டிப் போட்டுக் கொண்டே அவள் அருகில் வந்து தன்னவளின் முகத்தைப் பார்த்தவாரே கூறினான், “பொண்ணு தயாரா இருந்தா, எனக்கும் டவுள் ஒகே தான். நான் கல்யாணத்துக்கு எப்பவோ ரெடி ஆகிட்டேன்”. சஞ்சுவை நினைவில் நிறுத்தி ஆசையாகக் கூற...

“இனிமே என்னோட முதல் வேலையே உங்களுக்குப் பொண்ணு பார்க்கிறதுதான் மம்மு”

“என்னது எனக்கு நீ போய் பொண்ணு பார்க்கப் போறியா?, விளங்குச்சு....போ...... கிணறு வெட்ட பூதம் கிளம்புன மாதிரி ஆயிருச்சே”

“ஏன் மம்மு, இப்படி சொல்றிங்க? ”

“ஏன் சஞ்சு, உனக்குப் பிடிச்ச பையன் எப்படி இருக்கணும்னு சொன்னியே, அதேமாதிரி எனக்குப் பிடிச்சப் பொண்ணு எப்படி இருக்கணும்னுன்கிட்ட கேக்கமாட்டியா?”

“சொல்லுங்க மம்மு, எந்த மாதிரி பொண்ணு வேணும்னு நீங்க சொல்றீங்களோ, அதே மாதிரி கண்டிப்பா உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணா பார்ப்பேன்”

“எனக்குப் பிடிச்ச பொண்ணே நீதான்டி, எனக்கு நீதான்டி செல்லம் வேணும் என மனதிற்குள் நினைத்தவன், சஞ்சு அருகில் வந்தான். எனக்கு எந்த மாதிரிப் பொண்ணு வேணும்னு சொல்றேன் கேட்டுக்கோ...

அவளது விழிகளை சுட்டிக்காட்டி இந்த விழியில் காதல் பார்வை சொட்டச் சொட்ட இருக்கணும், சஞ்சுவின் இதழ்களை தனது சுண்டு விரலால் வருடியும் வருடாமலும் எடுக்கப் பெண்ணவள் திணறிப்போனாள். அவளுக்கு என்று தனித்துவுமான தேன்சுவை ஒத்த இதழ்கள் வேண்டும், அவளைப் பார்க்கும் ஒவ்வோரு நொடியும் “இவள் என்னவள்” அப்படின்ற நினைப்பு எனக்குள்ள ஊற்று போல் பெருகணும். வேறு நினைப்பில்லாமல் அவள் நினைப்பில் வாழ வேண்டும்.

சிவு கூறுவதை கேட்க அவள் தேகம் எங்கும் ஒருவித வர்ணிக்க இயலாத உணர்வு, அதை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது என்ற நிலையை எட்டி இருந்தாள்.

என்னவளைப் பற்றி யோசித்தாலே பாரதியாரோட பாடல் வரிகள்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது,

பாரதியார் பாட்டா? என்ன பாட்டு மம்மு! என ஆச்சரியம் பொங்கக் கேட்டாள் சஞ்சு..

“காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன்- அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு

ஊறித் ததும்பும் விழிகளும்- பத்து

மாற்றுப்பொன் ணொத்தநின் மேனியும் – இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே- இங்கொர்

விண்ணவ னாகப் புரியுமே- இந்த

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா”

என ராகத்தோடு தன் கண்களை மூடிப் பாடினான் சிவு.

தமது நெஞ்சை அழுத்துவது போன்று இறுக்கம், அதேசமயம் ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட, சஞ்சு இந்த உணர்வை ஆராய முற்படவில்லை.

“மம்மு, செம்மையா பாடுறிங்க, பாட்டு அவ்வளவு தானா, இல்ல இன்னும் இருக்கா?”

“நீ பாரதியார் காதல் பாட்டு படிச்சது இல்லையா சஞ்சு” என்றான்

“எங்க... நான் பாரதியார் பாட்டே படிச்சது இல்ல, இதுல காதல் பாட்டு வேறயா“

“என்ன சஞ்சு, தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கிறப்ப பாரதியார் பாட்டு இன்னும் வாசிக்காம இருக்கியே. அந்த பாடல் பற்றி ஒரு குறிப்பு தர்ரேன். அதுக்கு முன்னாடி அந்த பாடலைப் பதிவிறக்கம் செஞ்சு தர்ரேன்”. தனது போனில் அந்த பாடலைத் தேடி அவளுக்கு அந்தப் பாடலை ஷேர் செய்தான்.

“மம்மு, ஏதோ குறிப்புனு சொன்னிங்களே, அது இந்த பாடலோட விளக்கமா”

“இல்லடா.... குறிப்புனு நான் சொன்னது மிகுதியான காதல் உணர்வு, நீ சர்வசாதாரணமாக படிக்கும்போது அதில் உள்ள உணர்வ அனுபவிக்க முடியாது. அதே காதல் வந்த பிறகு படித்துப்பார், உன்னோட பாஷையில் சொன்னா உடம்பில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படும்”

சிவு கூறுவதைக் கேட்க, யார் மீதும் அவன் காதல் கொண்டு உள்ளானா என்கிற சந்தேகம் தோன்ற அதை கேட்கவும் செய்தாள்.

“மம்மு, இது எப்படி உங்களுக்குத் தெரியும். நீங்க ஏதுவும் லவ் பண்றீங்களா?” அவளது பார்வை சிவுவை ஆராய

இவ பார்வையே சரியில்ல, இவகிட்ட காதலிக்கிறேன்னு சொன்னா யாரு என்னனு கேட்பா, அதனால அந்தப் பேச்சை அப்படியே முடித்துக் கொண்டான். அவளின் பேச்சை திசைமாற்றி, “சரி போ.... இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்ல, நிறைய வேலை இருக்கு” என பேச்சை முடித்துக் கொண்டான்.

சிவு காதல் பேச்சை முடித்துக்கொண்டு தயாராகி அலுவலகம் சென்றுவிட்டான். சஞ்சு அவள் அத்தைக்கு உதவியாக அடுப்படியில் உதவி செய்து கொண்டு இருந்தாள்.

“என்ன சஞ்சு, காலேஜ் போகாம... இங்க என்ன பண்ணுற?” ரூபாவதி

“இல்ல பெரியம்மா, இப்ப எனக்கு செமஸ்டர் லீவு தான்”

“ஒஹோ, அதான் உங்க அத்தைக்கு உதவி செய்ய வந்துட்டியா. அப்படியே கொஞ்சம் சமையல் வேலையெல்லாம் பழகிக்கோ” என மெல்லமாய் சீண்டினாள்.

“ஆமா பெரியம்மா, உங்களுக்கு குடிக்க என்ன கொண்டு வர “

“எனக்கு பில்டர் காபி வேணுமே, ஆமா பில்டர் காபி போட தெரியுமா? “

“ம்ம்ம்.... எனக்கு பில்டர் காபி போட தெரியுமே, நான் கொண்டு வர்ரேன் பெரியம்மா”, பத்மாவதியின் கண் அசைவாள் சஞ்சு நாசுக்காக கழண்டாள்.

ரூபாவதி, “ஏங்க சம்மந்தி, இப்பவே எல்லா வேலைகளையும் இவளுக்கு சொல்லிக் கொடுத்துட்டீங்க போல, ஒழுங்கா படிப்பாளா மாட்டாளா?”

“அதெல்லாம் நல்லா படிப்பா சம்மந்தி, இந்த வேலை எல்லாம் நான் சொல்லிக் கொடுக்கல, அவளாவே கத்துக்கிட்டது சம்மந்தி”

“என்னது அவளாவா? எப்படி கத்துக்கிட்டா?”

“ஆமா சம்மந்தி, நான் சமையல் வேலைகளை செய்றப்ப பக்கத்துல இருந்து பார்ப்பா அவ்வளவு தான்” பத்மாவதி

காலடி ஒசை கேட்டு இருவரும் திரும்பி பார்த்தார்கள், தேவி வந்து கொண்டிருந்தாள்.

“அட என்ன தேவி, அதுக்குள்ள எழுந்திருச்சிட்ட?” என்றார் பத்மாவதி

“ஆமாங்க அத்தை, வெயில் ரூமுக்குள்ள எட்டிப் பார்த்த பிறகு எப்படித் தூக்கம் வரும்”

“ஏம்மா... ஜன்னல் திரைச்சிலையை மூடியிருக்கலாமே” பத்மாவதி

“இல்ல அத்தை , பயணக் களைப்பு இருந்ததால அலுப்புல அப்படியே தூங்கிட்டோம்”

“இப்ப என்னமா? அப்புறமா சாப்பிட்ட பிறகு திரும்ப தூங்கிட்டாப் போச்சு, அக்ஷ்ரன் குட்டி என்ன பண்றான்?”

“அவனும், இரவு தாமதமாதான் படுத்தான், அதான் இன்னும் தூங்குறான்”

சஞ்சு காபி கொண்டு வரவும், அனைவரும் காபியை ருசித்தனர்.

சஞ்சுவோ தாமாக எதுவும் கேட்டாள் பெரியம்மா எதுவும் தவறாக நினைப்பாரோ என சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டு இருந்தாள்.

அனைவருக்கும் அடுத்த சில நிமிடங்கள் மௌனமாக கடந்தது.

“எங்க சிவுவ காணாம், ஆபிஸ் போயிட்டானா அத்தை ?” என்றாள் தேவி

“ம்.... அவன் எப்பவும் போல சீக்கிரமா கிளம்பிட்டான், சாயங்காலம் சீக்கிரம் வர்ரதா சொன்னான்” என்றார் பத்மாவதி

“ஏங்க சம்மந்தி, சிவுக்கு கல்யாண வயசு வந்துருச்சு, சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வைக்கலாமே , பொண்ணு ஏதும் பார்த்து வச்சுருக்கீங்களா? ”

பத்மாவதியை முந்திக்கொண்டு சஞ்சு, “ஆமா பெரியம்மா, உங்க தங்கச்சி பொண்ணு இருக்காங்கனு சொன்னிங்க, பொண்ணு அழகா இருப்பாங்களா? என்ன படிச்சிருக்காங்க?” அதி முக்கியமான கேள்வியை கேட்டாள், பொண்ணுக்கு வயசு என்னாகுது? என மடமடவென்று கேட்க ஆரம்பித்தாள்.

அவளது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த அவளது அத்தையோ, சிவு உன் பாடு ரொம்ப மோசம்டா, நீ என்னதான் பண்ணப் போறியோ தெரியல, சஞ்சுவ மனசுல நினைச்சுக்கிட்டு நீ இருக்க, ஆனா இவ என்னடான்னா உனக்குப் பொண்ணு பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கா, இவள எப்ப லவ் பண்ணி, எப்படிக் கல்யாணம் பண்ணப் போறியோ? என்று எண்ணித் தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

ரூபாவதி, ”ஏன் சஞ்சு, பொண்ணு உனக்கு பிடிச்சாப் போதுமா, சிவு தம்பிக்கு பிடிக்க வேண்டாமா”

“எனக்குப் பிடிச்சாலே போதும், மம்மு மறுக்கமாட்டாங்க, அதோட மம்முக்கு எப்படிப்பட்ட பொண்ணு பிடிக்கும்னு எனக்குத் தெரியுமே பெரியம்மா”

“உன்ன வீட்டில வச்சுக்கிட்டு எப்படி ஆம்பளப் பிள்ளைக்கு கல்யாணம் பண்றது” எனக் குறை கூறினாளேத் தவிர, விரைவில் தனது தங்கை மகளை இந்த வீட்டிற்கு மருமகளாக்க நினைத்தார். இவ்வளவு சொத்தையும் தனது மகளும், தங்கை மகளும் ஆள வேண்டும் என மனக்கோட்டைக் கட்டினார். இன்னும் சில வருஷத்தில இந்தப் பொம்பளையும் பரலோகம் போய் சேர்ந்துரும், இந்த சஞ்சுவும் சீக்கிரம் வீட்டை விட்டு போயிருவா, அப்புறம் இந்த வீட்டுக்கு எஜமானி நான் தான் எனத் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தார் ரூபாவதி.

இதை அறியாத பத்மாவதி, “இப்ப தான் சம்மந்தி தொழில் நடத்த ஆரம்பிச்சுருக்கான், கொஞ்சம் வருஷம் போகட்டும். தொழில்ல நிறைய சாதிக்கணும்னு நினைக்கிறான், இப்ப புதுசா மும்பைல இருக்கிற ஒரு கார் ஸ்பேர்ஸ் கம்பெனிக்கு இங்கு ஒரு பிராஞ்சு வேற ஆரம்பிக்கப் போறான், அதுனால கொஞ்சம் அவன் போக்குலேயே போகட்டும், ஒரு வருஷம் கழிச்சு சிவு கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கலாமே சம்மந்தி" பேச்சை முடித்தாள்

“ஏன் அத்தை, மம்மு கல்யாணம் பண்ண ஆசைப்படுறாங்க, நீங்க என்னடானா வேண்டாம்னு சொல்லுறீங்க” சஞ்சு

“சஞ்சு நீ சும்மா இரு, எப்ப கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு பெரியவங்க அவங்களுக்கு தெரியாதா” என்று அதட்டலுடன் முடித்தாள் தேவி

இந்தப் பேச்சு மேலும் தொடர்ந்தாள் தன் அம்மா அவரின் தங்கை மகளை சிவுக்கு பேசி முடித்தே விடுவார். சித்தியின் குணமோ, அவர் மகளின் நடத்தையோ அவ்வளவு சரியாக இல்லை என்பது தேவி அரிந்த விஷயமே.

“ஏன் சம்மந்தி, மூத்த தலைமுறை ஆண் இல்லாத வீடு, என் மருமகனோ வெளிநாட்டுல இருக்காரு, நம்ம வீட்டுல விஷேசம் ஏதும் வைச்சா சிவு தம்பி தான் அனைத்தையும் பார்க்கணுமா சம்மந்தி, சஞ்சுவோட அப்பா அப்பவாச்சும் வருவாரா, இல்ல பிஸினஸ்னு ஒடிருவாறா?”

“என்ன சம்மந்தி அப்படி சொல்லிட்டீங்க, அண்ணா கண்காணிப்பில் தான் நாங்க இருக்கோம். அவர் மும்பையில் இருந்தாலும் எங்களோட தேவைகளை அவர்தான் பூர்த்தி பண்றாரு. அருண் வர்ரேன்னு சொன்னவுடனேயே அவரோட எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உடனே ஊருக்கு வாரேன்னு சொல்லிட்டாரு”

“அப்புறம் உன்னோட அண்ணன் மாதிரியா பூர்விக சொத்தை முழுசும் குடிச்சே அழிக்கிறதுக்கு” என்றாள் தேவி

ரூபாவதி முகம் வாடிவிட்டது, அடச்சே... இவங்கள மட்டம் தட்டாலாம்னு நினைச்சா, நானும் பெத்து வச்சுருக்கேன் பாரு, இந்த தேவி என்னயவே அசிங்கபடுத்துறா என்று உள்ளூறப் புளூங்கினார்.

இவர்கள் பேச்சின் இடையே பூஜை அறையைக் கடந்து சென்ற சஞ்சு, என் மம்முவுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிற அந்தப் பொண்ணு எங்க இருந்தாலும் சீக்கிரமா என் மம்முவுக்கு காட்டு கடவுளே...!

-------------------------------

Shakthi R

Well-known member
Joined
Feb 4, 2019
Messages
6,701
Reaction score
18,847
Points
113
Location
Madurai
Hey start pannanum dear. கூடிய விரைவில் படிசுடுறேன்
 
Soniyaravi

Active member
Joined
May 5, 2021
Messages
164
Reaction score
156
Points
43
Location
Tanjai

Nice episode friend
 
Rishaba

Author
Author
Joined
Jan 8, 2021
Messages
167
Reaction score
203
Points
43
Location
Theni
Chinna ponnu ariyama panuthu.....😍😂 manichu vidunga pa...
 
Advertisements

Latest Episodes

Advertisements