• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இவள் என்னவள் - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
441
Reaction score
646
Location
Theni
இவள் என்னவள் - 9


தேவி தான் மன வேதனைக்கு உள்ளாகிப் போனாள், தன் தாயை நினைத்து.. அவரின் குணத்தால் எத்தனை பேர் சங்கடத்துக்கு உள்ளாகிறார்கள், முதலில் ஏதாவது சொல்லி அம்மாவை இங்க இருந்து கிளப்பனும், இந்த அம்மாவ, அப்பாவால மட்டும்தான் சமாளிக்க முடியும். அப்பாக்கிட்ட பேசி நாளைக்கே வர சொல்லி அம்மா வாய்க்கு நல்ல பூட்டா போட சொல்லணும், இல்லன்னா இங்க இருந்து கூட்டிட்டுப் போக சொல்லணும்.


சஞ்சு ஏன் இப்படி ஆர்வக்கோளாறா இருக்கான்னே தெரியலையே..! நாம வேற மாதிரி யோசிச்சோம், ஆனால் இவ நடந்துக்கிறதப் பார்த்தா சிவு மேல காதல் இருக்கிற மாதிரித் தெரியலையே. காதல் இருந்தா எப்படி சிவுக்குப் பொண்ணு பார்க்கிறேன்னு வந்து நிப்பா. நான் வேற சத்தம் போட்டதால சஞ்சு முகம் வேற வாடிப்போச்சு.


சஞ்சுவின் மேல் இந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் பிரியம் ஜாஸ்தி, அவங்க அன்ப புரிஞ்சுக்கிட்டு இவளும் பக்குவமா நடந்துப்பா. அதனாலேயோ என்னமோ சஞ்சுவின் மேல தனக்கும் ஒரு தனிப்பாசம் எப்பவும் உண்டு என்பதை நன்றாக உணர்ந்திருந்தாள் தேவி.


சஞ்சுவ சத்தமாகப் பேசின விஷயம் மட்டும் இவருக்குத் தெரிஞ்சுச்சு என்னைய உண்டு இல்லண்ணு பண்ணிருவாரு. பேச்சுவாக்குல கூட வாய விட்டுறாத தேவி என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


“ஏன்டீ, ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன், என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” கடுப்புடன் வந்தான் அருண்


“ம்...ம்....கனவுலயாவது உங்க கூட டூயட் பாடமுடியுமா அப்படின்னு யோசிச்சேன், அது கனவுல கூட முடியல என்ன செய்ய என் தலையழுத்து” சலித்துக் கொண்டாள் தேவி


“மாமன பக்கத்துல வச்சுக்கிட்டு ஏன்டீ கனவுல டூயட் பாடுற? இப்போ வேணா ஒரு டூயட் பாடுவோமா....” அவளது இடையைக் கிள்ளி குறும்பாகக் கேட்டான்


அருண் இடையைக் கிள்ளத் துள்ளிக் குதித்துக் கத்தத் தொடங்கினாள் வெட்கத்தில், “அடியே... ஏன்டீ இப்படிக் கத்துற, பிள்ளை தூங்கிக்கிட்டு இருக்கான்”


தன் வாயை இரண்டு கைகளாலும் பொத்தியவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு “ஏங்க நம்ம சரண்-ன நான் தூங்க வைக்க அங்கெல்லாம் எவ்வளவு படாத பாடுபடுவேன், ஆனால் இங்கு வந்ததுல இருந்து பாருங்க, எவ்வளவு சமத்தா படுக்க வச்ச உடனே தூங்குறான் பார்த்திங்களா?”


“இங்க வந்ததுல இருந்து சஞ்சு கூட செம்ம விளையாட்டு, சரண் இங்க ரொம்பவும் கம்ஃபர்டபுலா இருக்கான், இங்க அவன சுத்திலும் எப்பவும் ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க, அதனால பாதுகாப்பான உணர்வு கிடைச்சிருக்கு. அதுவும் இல்லாம அவன எல்லாருமே கேர் பண்றதால ஓவர் குஷில இருக்கான் போல...”


“உங்க மகன் மட்டும் இல்ல, நானும் இங்க வந்த பிறகுதான் மன நிறைவோட இருக்கேன், நீங்க மனசு வச்சா இந்த சந்தோஷத்த எங்களுக்கு நிரந்தரமாவே கொடுக்க முடியும்” என மெதுவாகக் கொக்கி போட்டாள்


“அது என்னடி சாக்கு கிடைக்கும் போதெல்லாம், இந்தியா வர்ரதப்பத்தி பேசாட்டி உனக்கு தூக்கமே வராதா?. என்னோட ஜாப் மேல உனக்கு என்ன அவ்வளவு காண்டு, பொதுவா எல்லாருமே வெளிநாட்டு மோகத்தோடு இருக்காங்க, வெளிநாட்டுல இருக்கிறதப் பெருமையாவும் நினைக்கிறாங்க. நீ மட்டும் ஏன் வெளிநாட்டு வாழ்க்கை புடிக்கலனு சொல்லறடி..!”


“அங்க தனியாப் பிள்ளைய வச்சுக்கிட்டு கஷ்டப்படுறது நான் தான, உங்களுக்கு என்ன? காலையில கிளம்பிப் போனா இராத்திரிக்கு தான் வர்ரீங்க. நாள் முழுக்க யாரும் இல்லாம வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிற கொடுமை எனக்கு தான தெரியும், இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது” என முகம் சுழித்தாள் .


“அந்த தனிமையைப் போக்கதான் வீக்கென்ட் டிரிப் போறோமே நம்ம….”


“ஆமா வாரக் கடைசியில வர்ற ஒரு நாளுக்காக நான் வாரம் மொத்தமும் உங்களுக்காக காத்து இருக்கணுமா? இரண்டு நாள் நீங்க தனியா வீட்டிலிருந்து பாருங்க அப்பதான் தெரியும் உங்களுக்குத் தனிமை எவ்வளவு கொடுமையான விசயம்னு”.


“ஏய் தேவிமா, கோவப்படாதடி...... நீயே என்னையப் புரிஞ்சுக்காட்டி அப்புறம் யார் என்னைய புரிஞ்சுப்பாங்க.... இனிமே உனக்கு இந்த கஷ்டம் இல்லாத அளவுக்குப் பாத்துக்கிறேன்” அவளது முகவாயை புடித்துக் கொஞ்சினான்.


“இப்படியே பேசிப்பேசி ஆள கவுக்கப் பாக்காதீங்க, நாளைக்கு மோகன் அப்பா வரட்டும் நான் அவர்கிட்ட நம்ம பஞ்சாயத்த வச்சுக்கிறேன்” என மிரட்டவே செய்தாள்


“என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா என நகைத்தவன், ஆள் ஆளுக்கு என்ன வச்சு செய்றீங்க?, ஏற்கனவே மாமாக்கு நான் வெளிநாடு போனது புடிக்கல, நீ வேற பஞ்சாயத்தக் கூட்டிட்டா அதோட கண்டிப்பா எனக்கும் சரி என்னோட வெளிநாடு ஆசைக்கும் சரி சங்கு தான்”


“அப்புறம் என்ன பண்ண சொல்றீங்க? நான் சொன்னா எப்படியும் நீங்க கேக்க மாட்டீங்க, மோகன் அப்பாக்கு மட்டும்தான் நீங்க கொஞ்சம் கட்டுப்படுவீங்க“


“கொஞ்சம் யோசிக்க டைம் குடுடா, உனக்காக ஏதாவது பண்றேன்”, என மன்றாடிக் கேட்டுக்கொண்டான்


“ம்ம்ம்ம்.... நீங்க மெதுவா யோசிங்க சாமி, ஒண்ணும் பிரச்சனை இல்ல, இப்ப நான் போய் சஞ்சுவ பார்த்துட்டு வந்துடறேன், நீங்க பிள்ளை உசும்பாம பார்த்துக்கோங்க”


“எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்கப் போறேன், சரண நீயே பக்கத்தில் இருந்து பார்த்துக்கோ” அருண்


“இல்ல சஞ்சுக்கிட்ட நான் பேசனும், நீங்க நல்லா தூங்குங்க நான் வேணா அம்மாவ வந்து பார்த்துக்க சொல்றேன்” எனத் தனது நமட்டுச் சிரிப்பினை உதிர்த்தாள்


“ஐயோ... உங்க அம்மாவா, நானே என் பிள்ளையப் பார்த்துக்குறேன். அவங்கள மட்டும் வர சொல்லாதடீ.... ப்ளீஸ்” என இரு கைகளையும் கூப்பினான்


“பரவில்லையே..! மோகன் அப்பாக்கு அப்புறம் என்னோட அம்மாக்கு தான் பயப்பிடுறீங்க போல”


“யாருக்கு பயம், எனக்கா? மாமா மேல எப்பவும் மரியாதை மட்டும் தான், அதுக்கு பேரு பயம் இல்ல. அப்புறம் உங்க அம்மா பார்த்து பயமா?“ உதாசினமாக கூறினான்


“எங்க அம்மா சின்ன வயசுல சொல்லிக் கொடுத்துருக்காங்க துச்சனைக் கண்டால் தூர விலகு அப்படின்னு, அதை இப்பவும், எப்பவும் நான் கடைபிடிக்கிறேன்” அருண்


“அப்ப நீங்க எதுக்கும் பயப்பட மாட்டிங்க, இதை நான் நம்பணும்?”


“நான் எப்ப அப்படி சொன்னேன், அதெல்லாம் நல்லாவே பயப்படுவேன்”


“ஒ.... எதுக்கு பயப்படுவீங்க?” இடுப்பில் கை வைத்து நின்றாள்


“வேற எதுக்கு சாத்...சாத்... நான் தொட்டுத் தாலி கட்டின என் பொண்டாட்டிக்கு தான் பயப்படவேன், அதுல உனக்கு ஏதும் சந்தேகம் இருக்கா”


“ஆமா... ஆமா சொன்னாங்க, அப்படியே பொண்டாட்டிக்கு பயந்தவரு, போங்க போய் வேலையப் பாருங்க“ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள் தேவி.


சஞ்சுவின் அறைக்குச் சென்றாள் தேவி, “என்ன பண்ற சஞ்சு?”


“ஒண்ணும் இல்ல அக்கா, துணி அலமாரியை சுத்தம் பண்ணி துணிகளை எல்லாம் மடிச்சு வைக்கிறேன், சரண் தூங்கிட்டானா? அக்கா”


“ஆமாடா சஞ்சு.... இங்க வந்ததுல இருந்து சரண் நல்லா தூங்குறான், உனக்கு எதுவும் உதவி பண்ணவா சஞ்சு” என வாஞ்சையாகக் கேட்டாள்.


“இல்ல அக்கா இதோப் பாருங்க வேலை முடிஞ்சுருச்சு” தேவியை பார்த்துச் சிரித்த முகமாகச் சொன்னவளை, களைந்த கூந்தலிலும் செதுக்கிய அழகாய்ப் பார்த்த பெண்ணவளுக்கும் ரசிக்கத் தான் தோன்றியது.


“இங்கவா உன்கூட கொஞ்சம் பேசணும்” அவளை இழுத்துத் தன் பக்கமாக உட்கார வைத்தாள் தேவி.


தேவியின் அருகில் அமர்ந்து “சொல்லுங்க அக்கா, ஏதும் பிரச்சனையா?”


“என் மேல கோபம் இல்லையே சஞ்சு?”


“கோபமா! எதுக்கு அக்கா. உங்க மேல கோபப்பட என்ன இருக்கு, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லையே” என உரைத்தாள் சஞ்சு


“இல்லம்மா நீ கோபப்பட்டாக் கூட பரவாயில்லை, காலையில் உன்ன சத்தமா பேசினதுக்கு என்ன மன்னிச்சிருடா”


தேவி அறிந்தவரை சஞ்சுவை இதுவரைக்கும் வீட்டில் யாரும் அதிர்ந்து கூட பேசியதுயில்லை, அப்பிடியிருக்கத் தனது அம்மாவின் வாயை அடைக்க முடியாமல், சஞ்சுவிடம் அதிர்ந்து பேசி அவள் பேச்சை நிறுத்தினாள், ஆனால் சஞ்சுவின் வாடிய முகம் தேவியை குற்றவுணர்வில் தள்ளியது.


“ஐயோ... அதெல்லாம் ஒண்ணும் இல்ல அக்கா, நீங்க போய் மன்னிப்பு கேக்குற அளவுக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அதுவும் இல்லாம நான் ஏதும் தப்பு பண்ணா அதைக் கண்டிக்க உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு அக்கா” என கூறினாள் சஞ்சு


“நீ சும்மா சொல்ற சஞ்சு, உன் முகம் வாடிப்போனத நான் தான் பார்த்தேனே”


“அதுவாக்கா, மம்முக்கு பொண்ணு
இருக்குன்னு பெரியம்மா சொன்னாங்க, அதான் விசாரிச்சேன். நீங்க வேண்டாம்னு சொல்லிட்டீங்களா, அதான் கொஞ்சம் பீல் ஆயிட்டேன்”


“உனக்கு விசாரிக்க வேற ஆளே கிடைக்கலயா சஞ்சு? அவங்களப் பத்தித் தெரிஞ்சும், நல்லா விசாரிச்ச எங்க அம்மாகிட்டப் போய்” என சங்கடப்பட்டாள் தேவி


“ஏன் அக்கா? நான் ஏதும் தப்பாக் கேட்டுட்டேனா, பெரியம்மா உதவி செய்ய மாட்டாங்களா?” எனத் தவறு செய்த குழந்தைப் போல கேட்டாள்


அவளது முகபாவனை சிறு குழந்தையாய் இருக்க.. தேவி “ஐயோ, உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியலையே, சரிவிடு பொண்ணுதான பார்க்கணும் நான் நல்ல பொண்ணா பார்த்து சொன்னா உனக்கு ஒகே வா”


சிவுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தில் தேவி உதவ வந்தாள் என அறிந்தவுடன் “ம்.... சரிங்க அக்கா, மம்முக்கு ரொம்ப நல்ல பொண்ணா, மம்முக்கு பிடிச்ச பொண்ணாப் பார்க்கணும் அக்கா. மம்மு தனக்கு வரப்போற பொண்ணு எப்படி இருக்கணும்னு ஒரு கனவே வச்சிருக்கார் அக்கா,” என சொல்லி முகம் மலர்ந்தாள் சஞ்சு.


தான் சந்தேக்கித்தது போல் இல்லாமல், சஞ்சு இவ்வளவு சந்தோஷப்படுறா. ஒருவேளை நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனோ என தேவி யோசித்துக் கடைசியாக சஞ்சுவிடமே தனது சந்தேகத்தைக் கேட்டு விட்டாள்.


“பொண்ணு தாராளமா பார்க்கலாம் சஞ்சு, ஆனா ஒரு விஷயம் எனக்குப் புரியல. சிவுக்கு கல்யாணம் பண்ண நீ ஏன் இவ்வளவு ஆசைப்படுற?”


“மம்முக்கு அல்ரெடி எங்க காலேஜ்ல பொண்ணுங்க எல்லாரும் ஜொள்ளோ ஜொள்ளு விட்டு திரியறாங்க, என்கிட்டயே மம்முவ அறிமுகப்படுத்தச் சொல்லி ஒரு கூட்டமே சுத்துது அக்கா, அதுமட்டுமில்ல நீங்களும், அருண் மாமாவும் எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க, அதுமாதிரி சிவு மம்முக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவரும் சந்தோஷமா இருப்பாருல்ல”


“சோ... கல்யாணம் பண்ணா உங்க மம்மு சந்தோஷமா இருப்பாங்கன்னு நீ நினைக்கிற அப்படிதான?”


“ஆமா அக்கா, காதல் வந்த பிறகுதான் வாழ்க்கை முழுமை ஆகுதுன்னு, ஒரு புக்குல படிச்சேன், அத வச்சுதான் மம்முக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கலாம் அப்படின்னு யோசிச்சேன்”


“உனக்கு ஒண்ணு தெரியுமா சஞ்சு, கல்யாணம் ஆன பிறகு தான் வாழ்க்கையே ஆரம்பிக்குது, நம்ம வாழ்க்கையில் வர மிகபெரிய சந்தோஷம், கஷ்டம் எல்லாமே கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் சஞ்சு. வாழ்க்கையில இன்பம், துன்பம் கலந்தே இருக்குனு சொல்வாங்கள்ல அந்த வகையில வேணா முழுமை ஆகுதுனு சொல்லலாம்” தன் வார்த்தைகளால் பீடிகை போட்டாள்.


“நீங்க ஏதோ சொல்றீங்க, அதுல உள்ள தாட்பரியம் முழுசா எனக்குப் புரியல அக்கா”


“பரவயில்லடா, உனக்கு சொல்லிக் கொடுக்கத்தான நான் இருக்கேன்,னால் அதுக்குப் பதிலா நீ எனக்கு என்ன செய்வ?”


“உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க அக்கா” ஐயமாய் புருவம் உயர்த்திக் கேட்டாள்


“நீ பருப்பு பாயசம் எப்படி செஞ்சன்னு சொல்லிக்கொடு போதும். அதோட சுவை இப்போ நினைச்சாலும், சாப்பிடத் தோணுது” என நாக்கை நீட்டி சப்புக் கொட்டினாள்.


“ரொம்ப சிம்பிள் அக்கா, பருப்பு பாயசம் செய்யுற மாதிரி செஞ்சு அதில் கொஞ்சம் கசகசா, தேங்காய் சேர்த்தா போதும், பாயசம் ரெடி”


“அவ்வளவு தானா! ஆனா இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, பாயசத்தில் தேங்காய் ஒகே, அது என்ன கசகசா சேர்ப்பாங்களா என்ன?”


“ஆமாகா, கசகசா உடம்புக்கு ரொம்ப நல்லது, அதனால அத்தை அவங்க சமையல்ல அப்ப அப்ப கொஞ்சம் கசகசா சேர்த்துப்பாங்க”


இந்த நேரத்தை தனக்கும் தனது சந்தேகத்துக்கும் பயன்படுத்த முடிவுச் செய்தாள் தேவி, இருவரின் பேச்சும் சுவாரஸ்யமாக சென்று கொண்டு இருக்க தேவி ஆரம்பித்தாள்.


“ஏன் சஞ்சு, சின்ன வயசுல இருந்து சிவு கூடவே இருந்திருக்க, இடையில் அவன் லண்டன் போனப்போ கூட நீ எவ்வளவு கஷ்டப்பட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும். நேற்றுக்கூட சிவுகூட கோவில் போயிட்டு வந்த, ஆனா சிவுக்கு கல்யாணம் ஆன பிறகு இந்த மாதிரி தனியா நீ சிவுகூட எங்கேயும் போக முடியாது தெரியுமா?”


“அக்கா, எப்படி சொல்றதுன்னே தெரியல, இத நான் சொல்றது கூட தப்பா இருக்கலாம். இந்த மாதிரி ஏதாவது சில விஷயங்கள் நினைக்கும் போது பயமாவும், நெஞ்சு இடுக்கில் ஏதோ ஒருவித அழுத்தமும் வருது, எனக்கு ஏன் இப்படி இருக்குனு கூட தெரியல?, அதேமாதிரி ஏன் மம்முக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறேன்னு கூட எனக்குத் தெரியாது, எங்க காலேஜ்ல மம்மு மேல அவ்வளவு கிறுக்கா சுத்துறாங்க, அவ்வளவு ஏன் என்னோட பிரெண்டுகூட மம்முவ சைட் அடிக்கிறா. ஒருவேளை அவங்க கிட்டு இருந்து காப்பாத்த நினைக்கிறேனா அப்படின்னு கூட எனக்குத் தெரியல அக்கா” தன் மனதிற்குள் வைத்திருந்த விஷயங்களை மூச்சு விடாமல் கொட்டித் தீர்த்தாள் சஞ்சு.


சஞ்சுவின் உணர்வை புரிந்துக் கொண்டாள் தேவி, சிறுவயதில் இருந்து ஒன்றாகவே வளரும்போது தனக்குள் தோன்றும் உணர்வை புரிந்துக் கொள்வதும் சரி, கண்டறிவதும் சரி கடினமே!


“என்னக்கா, அமைதியா ஏதோ யோசிக்கிற மாதிரி தெரியுது, உங்களுக்கு நான் சொன்னது ஏதும் தப்பாத் தெரியுதா?”


“சீ...சீ..சி அப்படி எல்லாம் இல்ல சஞ்சு. நீ எதுக்கும் வருத்தப்படாத, நீ ஏதும் தப்பா சொல்லலமா, உண்மைய சொல்லணும்னா இப்போதான் நீ கரெக்டா பேசியிருக்க, உன்னோட மம்முக்கு எப்படி, எந்த பொண்ணு வேணும்னு தெரிஞ்சுக்கிட்டு பொண்ணு பார்ப்போம், அப்புறம் அந்தப் பொண்ண பார்த்துக் கல்யாணத்தை எல்லோரும் சேர்ந்து நடத்தி வைப்போம், ஓகேவா சஞ்சு” என சொன்ன தேவியின் முகம் சந்தேகம் அற்று, தெளிந்த நீரோடையாய் இருந்தது.


தேவியின் விருப்பப்படி அனைத்தும் நடக்குமா? சிவுவின் மனதைக் கவர, அவன் மனம் கவர்ந்தவள் வருவாளா? ……
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அருண் - தேவி pair கியூட் ல... 😍

ஆமா சஞ்சுக்கு மனசுல இருக்கறது புரில...

எப்படி புரியுமோ... எப்போ புரியுமோ.... 🙄
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top