• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இ.க. - விடைகள் & பங்கேற்றவர் விவரம் (முடிவுகள் ஞாயிறன்றுதான்!))

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம்,

போட்டியில் பலரும் ஊக்கத்துடன் பங்கேற்றீர்கள்... மேம்போக்காகப் பார்த்தவரை அனைவரும் சரியான விடைகளை எழுதிக் ‘கலக்கி’விட்டீர்கள் என்றே தெரிகிறது... (y)(y):love::love:

போட்டிக்கான விடைகளை அனுப்பியோர்:
E-mail:

Sangeetha - Casual
Selva Sankari - ?
Vidya Narayanan - ?
Shanthini Doss - Casual
Soundarya Krish - ?
Karthika Manoharan - ?
Guhapriya - ?
Ananthi Jayakumar - ?
Kavya Jaya - Timed
Nagalakshmi - ?
Sarojini - ?
Kavichitra - Casual
Premika - ?
Nachu Annam - Casual

Inbox (SM Site):
Jeyalakshmi Gomathi - ?
Sarojini - ?

‘?’ இவர்கள் தாம் பங்கு பெற விரும்பும் ‘முறை’யை (கேஷுவலா? டைம்டா?) என்பதைக் குறிப்பிடவில்லை... (குறிப்பிட விரும்புவோம் நாளை மாலைக்குள் குறிப்பிடுக, டைம்டு மோட் என்றால் உங்கள் விடை வந்து சேர்ந்த நேரத்தைக் கொண்டே மதிப்பெண் அளிக்கப்படும், குறிப்பிடாமல் விட்டால் அது ‘கேஷுவல் மோடாக’க் கொள்ளப்படும்!)

சரியான விடைகள் கீழே:

(எவ்வளவோ பார்த்துப் பார்த்து வினாத்தாளை அமைத்தும் இரண்டு பிழைகள் ஏற்பட்டுவிட்டன! அப்பிழைகளால் ‘சரியான விடை’யைக் கண்டறிய இயலாமல் நீங்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் அதற்காக உங்களிடம் நான் இறைஞ்சுகிறேன்... பொறுத்தருள்க! இவ்வினாக்களுக்குரிய இரண்டிரண்டு (2+2 = 4) மதிப்பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும்!)

விடைக்கான காரணத்தையும் (இலக்கணக் குறிப்பு) கொடுத்துள்ளேன் (கற்க ஏதுவாய் இருக்குமென்று!)

இலக்கணத்தில் கலக்கனும்

விடைகள்

(மொத்த மதிப்பெண்கள்: 100)



பகுதி - அ: ஒற்றுப்பிழைகளைக் களைந்தெழுதுக

1. போட்டி களைகட்டத் தொடங்கியது.

(அகரவீற்று வினையெச்சத்திற்குப் பின் வல்லினம் மிகும்)

2. தளநாளைக் கொண்டாடித் திளைத்தனர்.

(2ம் வேற்றுமை உருபை அடுத்து வல்லினம் மிகும்)

3. அழைப்பைத் துண்டித்தவள் அடுத்தப் பத்தாவது நிமிடம் அவன் வீட்டிலிருந்தாள்.

(இத்தொடரில் பிழை ஏதும் இல்லை! எனவே இது பிழையான வினாவாகிறது! இதற்கான 2 மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும்!)

4. புரியாமல் எழுதுறதுப் பேர்தான் இலக்கியம்.

(பெயரெச்சத்தை அடுத்து வல்லினம் மிகாது)

5. புத்தகத்தைத் திறந்துப் படித்துச் சிரித்தான்.

(மென்றொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து / உகரவீற்று வினையெச்சத்தை அடுத்து வல்லினம் மிகாது)

6. வெப்பவியலின் ஒரு முக்கியச் சாதனை குளிர்நிலை விஞ்ஞானம்.

(பெயரெச்சம் – வல்லினம் மிகாது)

7. சிறப்பியல்பு தன்வயத்தனாதல் முதலியச் சிற்குணங்கள்.

(இதுவுமது)

8. உண்மையைப் பேசி உயர்வு பெறுக.

(2ம் வேற்றுமை உருபை அடுத்து வல்லினம் மிகும்)

9. கடைக்குச்* காய்கறி வாங்குவதற்குச் சென்றனர்.

(*இது அச்சுப்பிழை! 4ம் வேற்றுமை உருபை அடுத்து வல்லினம் மிகும்)

10. தேர்ச்சக்கரத்தைப் போலச் சுழன்றது வாழ்க்கை.

(6ம் வேற்றுமைத் தொகை [தேரினது சக்கரம்] – வல்லினம் மிகும்)

11. முகிலன் சென்னைக்குச் சென்று சேர்ந்தான்.

(4ம் வேற்றுமை உருபை அடுத்து வல்லினம் மிகும்)

12. அவள் பார்த்திபனை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

(’எதிர்பார்த்து’ இடையில் வல்லினம் மிகாது)

13. வானம்பாடிப் பறவை குளிர்மழைத்துளியை உண்டு பசியாறும்.

(இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்)

14. இதில் இல்பொருளுவமை உள்ளதாக அவர் உரைக் கூறுவார்.

(2ம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது)

15. பாட்டாளியுட்படப் பல தொழிலாளர் பரவலாக இருந்தனர்.

(அகவீற்று வினையெச்சத்தை அடுத்து வல்லினம் மிகும்)

பகுதி - ஆ: எழுத்துப்பிழைகளைக் களைந்தெழுதுக.



16. பத்மினி அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்தால்ள்.

(’ள்’ என்பதே பெண்பால் விகுதி!)

17. குமரன் விளையாடிக் கலைளைத்துப் போனான்.

(களை – சோர்வு / கலை – அறிவியல், நுண்கலை முதலியன)

18. கருப்புசாமி கரடுமுரடான பாதையில் சென்றுகொண்டிருந்தான்.

19. அக்கரையில் வண்ணமயமான இரத்தினங்கள் தெரிந்தன.

20. தினைமாவைக் கிளறிக்கொண்டிருந்த கிழவி திரும்பிப் பார்த்தாள்.

(கிழவி என்பதே சரியான சொல். ‘கிழமை’ என்றால் உரிமை என்று பண்டைய தமிழில் பொருள்! ‘கிளவி’ என்றால் ’சொல்’ என்று பொருள்!)

21. நெற்களஞ்சியத்தின் சுவற்றிரில் மஞ்சள் பூசியிருந்தனர்.

(’சுவர்’ என்பதே சொல். ‘சுவரில்’ என்றே வரும். பலரும் ‘சுவற்றில்’ என்று பிழையாக எழுதுகின்றனர்!)

22. நன்னன் உளியால் உரளைலைக் கொத்தித் துளைத்துக்கொண்டிருந்தான்.

23. சமணர் கொல்லாமை ஊணுனுண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தினர்.

(ஊன் – மாமிச உணவு / ஊண் – உணவு)

24. சந்திப்பிழைகளைக் கலைளைய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

(கலை – அறிவியல், நுண்கலை முதலியன / களை – நீக்கு)

25. திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்பதே.

(பாசுரம் – இசைப்பாடல்)

26. குலசேகரன் மணிகளை மாலையாகக் கோர்த்தான்.

(கோவை, கோத்தான், கோத்தாள் என்பதே சரியான வடிவம். ‘ர்’ வரக்கூடாது!)

27. ‘குசுடுதுபுறு’ என்ற வல்லினக் குற்றியலுகரங்களை அடுத்து ஒற்று மிகும்.

(இனம் – ஓரியல்பினவற்றின் தொகுதி / இணம் – கொத்து, கூட்டு)

28. ஒருவரின் உறுருவத்தைக் கொண்டு அவரை எள்ளக் கூடாது.

(உரு – வடிவு / உறு – படு, அடை)

29. அவள் அந்த ஒற்றையடிப் பாதையில் நல்லிள்ளிரவின் இருளைக் கூட மதியாமல் நடந்தாள்.

(நல்லிரவு – நல்ல+இரவு / நள்ளிரவு – நள்+இரவு; நள் - நடு)

30. சோமு என்ன பன்னண்ணப் போகிறான் என்று அவள் கவலைப்பட்டாள்.




பகுதி - இ: ஒற்று / எழுத்து / தொடரமைப்புப் பிழைகளைக் களைந்தெழுதுக.

31. பத்தி - 1:

”ஆம் தேவி! நான் கடலுக்கப்பால் உள்ள செண்பகத்1 தீவில் வசிப்பவன். இரத்திண2 வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்” என்று மலமல3வென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப் போல் மறுமொழிக்4 கூறினான் இரத்தின வியாபாரி.

அவனுடைய படப்5படப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்றுப்6 பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “எந்தத் தீவு என்று சொன்னீர்?” என்றாள். “செண்பகத் தீவு!”

”செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே! அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ?”

”செண்பகத் தீவின் பூர்வீ7க அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்”

இவ்விதம் சொன்னபோதுக்8 குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஸ்9டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்! ஆனால் இவள் யார்? இவ்வளவு முகக்10 காந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை...? அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று.

1 – வல்லினம் மிகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2 – இரத்தினம்

3 – மளமளவென்று

4 – வல்லினம் மிகாது. 2ம் வேற்றுமைத் தொகை.

5 – ’படபடப்பு’ - இடையில் வல்லினம் மிகாது (இரட்டைக்கிளவி)

6 – வல்லினம் மிகும். வன்றொடர்க் குற்றியலுகர உகரவீற்று வினையெச்சம்

7 – ’பூர்விகம்’ என்பதே சரியான வடிவம் (இவ்வாறே ‘நாகரிகம்’ போன்ற வடமொழிச் சொற்கள் பிறவும் ‘நாகரீகம்’ என்று பிழையாக ஆளப்படுகின்றன!)

8 – வல்லினம் மிகாது – உகரவீற்று வினையெச்சம்

9 – ’பிரஷ்டன்’ என்பதே சரியான வடிவம் (இச்சொல்லைக் கிரந்த எழுத்து நீக்கி எழுதுவதானால் ‘பிரட்டன்’ என்று எழுத வேண்டும். ‘ஸ்’ வரும் சொற்களை ‘சு’ போட்டு எழுத வேண்டும் (எ-டு: சரஸ்வதி – சரசுவதி)

10 – வல்லினம் மிகாது (’காந்தி’ வடமொழிச் சொல்)







32. பத்தி - 2:

திருக்கயிலாய மலையில் வீடு பேர1டைந்த ஆதிநாதராகிய விடப தேவருடைய பரிவாரத் தெய்வங்களில் கோமுக யட்சர் முதன்மையானவர் என்று சமன2 சமய நூல்கள் கூறுகின்றது3. கோமுக யட்சன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யட்சன் என்பது பொருள். கோமுக யட்சன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப்படுகின்றன4. சைவ சமயத்தவர் சிவபெருமானுடையப்5 பரிவாரத் தெய்வங்களில் நந்திதேவரை முதன்மையாக கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமணரின் கோமுக யட்சனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்தி வாகனச் சேவை சிறந்ததாகக் கருதப்படுகிறது. அன்றியும், சமணர்களில் நந்திக்கன6ம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் ’நந்தி’ என்னும் பெயரைச் சூட்டிக்கொல்7வர். அச்சநந்தி, ஆரிய நந்தி, பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்தச்8 சத்தியஞான தரிசினிகள் என்பவர் மெய்கண்டாருக்குச்9 சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களின் பண்டையத்10 தொடர்பு அறியப்படும்.

1 – பேறு – வரம், பாக்கியம் / பேர் – நாமம்

2 – சமணம்

3 – ’நூல்கள்’ பன்மை, எனவே ‘கூறுகின்றன’ என்ற பன்மை வினைமுற்று வரவேண்டும்.

4 – ‘உருவம்’ என்ற ஒருமை எழுவாய்க்கேற்ப ‘அமைக்கப்படுகின்றது’ என்ற ஒருமை வினைமுற்று வரவேண்டும்.

5 – 6ம் வேற்றுமை விரி, வல்லினம் மிகாது

6 – கணம் – கூட்டம், தொகுதி / கனம் – எடைமிக்க

7 – கொள்வர் – அடைவர், பெறுவர் / கொல்வர் – உயிரைப் பறிப்பர்

8 – பெயரெச்சம் – வல்லினம் மிகாது

9 – 4ம் வேற்றுமை – வல்லினம் மிகும்

10 – வல்லினம் மிகும்.


--------------------
மேலுள்ள விடையை வோர்டு கோப்பாகக் காண / பதிவிறக்க இவ்விணைப்பைச் சொடுக்குக:
https://drive.google.com/open?id=1z5DKSSW0M1Ix60JQoLjFGqCNneV4NbnB

-------------------
நன்றி

அன்புடன்
விசய் :):cool:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Annaaa entha mode potta enna nadakum.. naan oruthi thaan timed mode kuduthen naa.. enakenna doubt varuthu naa oru velai casual mode ku maathuna mark athigama varumo. ?? Naan anupunathu 2 mani so.. casual mode thaan nallathu appadina athuve eduthukollumaaru thaalmaiyudan kettukolgiren @Vijayanarasimhan ???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்ன mode என்பதை எங்கு தெரிவிக்க வேண்டும் ஆசிரியரே
இங்கேயே சொல்லலாம்... ??
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஆசிரியரே நான் நீங்கள் சொன்ன நேரம் தாண்டி தான் அனுப்பினேன். அதனால் அது causal mode-ல் இருக்கட்டும்.( தவறுகளை தவறாகவே கண்டுபிடித்து இருப்பதால் எந்த modeஆ இருந்தாலும் சரி ????).
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top