• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience உங்களில் யார் அப்பி ஸ்டைல் கவிதை பப்பி.....?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
SM site காதலர் தின திருவிழா…..???

Date : February 14.

Place: SM site


காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நம்ம லேடி T.R அப்பி ஸ்டைல் கவிதை போட்டி…..


உங்களில் யார் அப்பி ஸ்டைல் கவிதை பப்பி….?


பிரியாணியை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் எழுத்தாணிகளே....!

உடல் மண்ணுக்கு ,உயிர் ரொமான்ஸ்க்கு எனும் காதல் கிறுக்கர்களே...!

உள்ளுக்குள் 500 ரெமோக்களை அசால்ட்டாக அடக்கி வைத்திருக்கும் காதல் அம்பிகளே...!??????

தயார் ஆகுங்கள் 11th February kkaaga.... கவிதையுடன்......

யாரு அப்பி ஸ்டைல் பப்பின்னு பேரு வச்சாச்சு…..

ஜட்ஜ் அப்போ யாரு…..???

SM சைட்டோட ஓபனிங் பேட்ஸ் மேன் …., ஸ்டார் ரைட்டர் , போஸ்ட் பண்ணற ஒவ்வொரு த்ரட்டையும் திருவிழாவாக கொண்டாட வைக்கும் ,

காதல் கண்ணி….?

காமெடி மன்னி……???

தேடல் போட்டியின் வின்னி….✍✍✍

நம்ம டார்லிங் வநி….?

வநிஷா தான் செலக்ட் பண்ண போறாங்க அடுத்த அப்பி ஸ்டைல் கவிதை எழுதும் பப்பிய…..


யாருலாம் கலந்துக்கலாம்….?

வீட்டுக்காரருக்கு சோறு போட்டத விட , SM சைட்டில் அதிகமா கமென்ட் போட்டீங்களா….?


• சைட்டில் சவுண்டு விட்டு ரவுண்ட் கட்டும் முரட்டு சிங்கிளா…?


• சைட் பக்கம் சண்டை போட மட்டும் வருவீங்களா….…?


• அப்பப்ப வந்து attendance மட்டும் போடுவீங்களா…?


• எதுவுமே கிடையாது, சும்மா சைட்ட சைட் அடிக்க மட்டும் வருவீங்களா….?



நீங்க எல்லாரும் கலந்துக்கலாம் போட்டியில……


போட்டின்னு வந்துட்டா , terms and conditions இல்லாமலா,

அப்பி சொல்றது போல அடுக்கு மொழியில ,அழகா இருக்கணும் கவிதை….


• உங்க கவிதைல content கண்டிப்பா வேண்டாங்க…… ஆனா காதல் இருக்கனுங்க.......?

• படிக்கிறவங்க கலகலப்பாய் இருந்தா போதும்……

• ஜட்ஜம்மா ரொம்ப பிஸிம்மா….


• அதனால் பாட்டு மேல பாட்டு படிச்ச மாதிரி ….

• அப்பி ஸ்டைலில்ல டப்பி டப்பியா எழுதி தள்ளிடாதீங்க ,

• அப்புறம் வநிஷா டார்லிங் தள்ளாடி போயிடுவாங்க…?

• அவங்க விரும்பி கேட்டதுக்கு இணங்க உங்க valentine kku ஒரே ஒரு போஸ்ட் போடுங்க…?

• ஒன்றுக்கும் மேற்பட்ட valentines இருந்தாலும் , அதாவது original character , novel character nnu யாருக்காக வேண்டுமானாலும் கவிதையை அருவி போல கொட்டலாம்…. ஆனா ஒரே போஸ்ட்டுல மொத்த அன்பையும்??? ஜிலு ஜிலு அருவியாக கொட்டுங்க....

• நாங்க அம்புட்டையும் அணை கட்டி கலை பாசனத்திற்கு திறந்து விடறோம்….


சரி போட்டியில் ஜெயிக்கிறவங்களுக்கு பரிசு என்ன…?

இது ஜாலிக்காக நடத்துற போட்டி டாலி….

அப்புறம் எல்லார்க்கும் பரிசு கொடுத்தா எங்க கஜானா காலி….

அதுக்காக யாரும் பண்ண கூடாது கேலி….

மவனே…. கேலி பண்ணினா ,முடிஞ்சிடும் சொலி….

கண்டிப்பா வெறும் கையோட அனுப்ப மாட்டோம்…. வாய் நிறைய புன்னகையோடு அனுப்புவோம்…

ஜெயிக்கிறவங்க வநிஷா டாலி கூட ஜாலி chat பண்ணலாம்…

நம்பி வாங்க சந்தோஷமா போங்க…..?????

படிச்சிட்டு அப்படியே போயிடாதிங்க….. இவளோ நேரம் டமாரம் போட்ட என் கிட்ட பேர் கொடுத்துட்டு போங்க…..
உங்களுக்குன்னு தனியா exclusive திரி கொடுப்போம்….


எக்ஸ்க்ளூசிவ் திரி , நீங்க சரவெடி பட்டாச கொளுத்தி போட 11th February அன்னைக்கு திறக்கப்படும்….


எல்லா பப்பீசும் வந்து டைமிங் அண்ட் ரைமிங்கோட திரிய பிரிச்சி மேஞ்சூட்டு போங்க… உங்க காதலையும் அன்பையும் அப்படியே அள்ளிட்டு வந்து கவிதையா கொட்டுங்க darlings....


எல்லாரும் அதுல தொபுக்கடீர்ன்னு குதிக்க காத்துட்டு இருக்கோம்....????




SM team...??
 




Last edited:
Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top