உங்கள் காதல் வாழ்க்கை சந்தோசமாக மாற சில டிப்ஸ்!

#1
உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் இருவரும் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வீர்கள். ஒருவர் பிரச்சினையால் பாதிக்கப்படும்போது, இன்னொருவரிடமும் அந்தப் பாதிப்பு தெரியும். இருவரும் ஒரே குழுவாக இருந்து வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயல்வீர்கள். அப்படியில்லாமல், உங்கள் காதலனோ/காதலியோ உங்களுடைய பிரச்சினைகளை எப்போதும் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்றால், அது ஆரோக்கியமான காதலாக இருக்க முடியாது.காதல், உங்களைச் சிறந்த மனிதராக மாற்றியிருக்கும். உங்களுடைய இந்த மாற்றத்தை நீங்கள் மனதார விரும்புவீர்கள். வாழ்க்கையைச் சிறந்த கண்ணோட்டத்துடன் அணுகத் தொடங்கியிருப்பீர்கள். நேர்மறையாகவும் தன்னம்பிக்கையுடனும் சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். உங்கள் காதலன்/காதலி உடன் இருப்பதால், அன்றாட வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயங்க மாட்டீர்கள். ஒருவேளை, காதல் உங்களைச் சிறந்த மனிதராக மாற்றுவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் முன்னேறவிடாமல் தடுக்கிறது என்றால், அதை ஆரோக்கியமான காதலாகக் கருத முடியாது.காதல் உறவு மட்டுமே உங்கள் இருவரின் அடையாளமாக இருக்க முடியாது. அதனால், காதலைத் தாண்டி யோசிப்பதற்குத் தயங்கக் கூடாது. உங்கள் இருவரின் நட்பு வட்டம், பணி வாழ்க்கை, மற்ற ஆர்வங்கள் போன்ற அம்சங்களுக்கு எப்போதும்போல முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாகத்தான் காதல் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் காதலை ஆரோக்கியமான காதலில் சேர்க்க முடியாது.

 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top